மண் மூடிய இடத்திலிருந்து
சிலிர்த்து
மெல்லத் துளிர்க்கத் தொடங்கி
செடியென விடியல் தேடத்துவங்குகின்றன
என் கனவுச்செடிகள்....
பூக்களரும்பும் வேளை
தேனீக்களாய் சிலர்,
காய் கனியும் தருணங்களில்
என் கனவுப்பறிக்கும் கண்களுடன் சிலர்,
என நேற்றுப்பார்த்த கீரைக்காரியில் துவங்கி,
தொலைக்காட்சித் தொடர்களின்
வில்லிகளின் முகங்கள் வரை
பறவை முகங்களாய்
நீளும் என் பட்டியல்....
பழம்தின்று இட்ட எச்சத்திலிருந்து
மீண்டும் முளைக்குமென்
கனவுச்செடி...
வளர்ந்தப்பின் தட்டிப்பறிக்கப்படலாம்
என் எல்லாக்கனவுகளும்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.