மண் மூடிய இடத்திலிருந்து
சிலிர்த்து
மெல்லத் துளிர்க்கத் தொடங்கி
செடியென விடியல் தேடத்துவங்குகின்றன
என் கனவுச்செடிகள்....
பூக்களரும்பும் வேளை
தேனீக்களாய் சிலர்,
காய் கனியும் தருணங்களில்
என் கனவுப்பறிக்கும் கண்களுடன் சிலர்,
என நேற்றுப்பார்த்த கீரைக்காரியில் துவங்கி,
தொலைக்காட்சித் தொடர்களின்
வில்லிகளின் முகங்கள் வரை
பறவை முகங்களாய்
நீளும் என் பட்டியல்....
பழம்தின்று இட்ட எச்சத்திலிருந்து
மீண்டும் முளைக்குமென்
கனவுச்செடி...
வளர்ந்தப்பின் தட்டிப்பறிக்கப்படலாம்
என் எல்லாக்கனவுகளும்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
6 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
மொட்டுக்கள் விரியட்டும்
ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன்..
அதே ஸ்ரீமதி..
வழ்த்துகள்.
தொலைக்காட்சி தொடர்னாலே வில்லிகளின் முகம்தான். நன்று.
வாங்க ஸ்ரீ... ரொம்ப நாள் ஆச்சு! மேலும் பல படைப்புகளை எதிர் நோக்குகிறேன்.
:))
தொடர்ந்து எழுது.. :)
கரையோரம் நின்று காத்திருக்கிறேன், உங்கள் அடுத்த கவிதைக்காக....
Post a Comment