படுத்தியதில் பிடித்தது...

உன்னை
எப்படி அழைப்பது என்பதில்
தொடங்கியதென்
முதல் குழப்பமும்
பின் காதலும்...
பளு தூக்கும்
குழந்தையெனத் திணறுகிறேன்
உன் காதல் உணர்ந்த
கணம் முதல்...
கன்னம் தர
மறுத்துவிட்டாள்
தற்கொலை செய்துக்கொண்டன,
முத்தங்கள் அனைத்தும்
இதழ்களில்...
ரோஜாச்செடி வளர்ப்பதெப்படி?
என ஆராய்கிறாய்
மரம் வெட்டினால்
அச்சச்சோ என்கிறாய்
என் இதயத்தை மட்டும்
பிடுங்கிக்கொண்டு சிரிக்கிறாய்...
படித்ததில்
பிடித்தது என்ன?
என்று கேட்கிறாய்...
உன் கண்களைக்கண்டதும்
அனைத்தும் மறந்த எனக்கு,
நீ படுத்தியதில்
பிடித்தது கேட்டிருந்தால்
சொல்லியிருப்பேன்...
கண்களை மூடிக்கொள்
காதில் ரகசியம் சொல்வேன்
என
நீ சொல்லியவையெல்லாம்
இன்றுவரை
நீ மட்டுமே அறிந்த
ரகசியங்கள்...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

13 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Maddy said...

அம்பூட்டு ரகசியம் கேட்ட காது யானை காது ஆயிருக்குமே!

Giridharan said...

Nice one ;)

Giridharan said...

Welcome back Madam!!!

Punitha Muniandy said...

sema..love tht feel :)

Thamizhmaangani said...

அனைத்தும் அருமை!! keep going!:)

//கண்களை மூடிக்கொள் காதில் ரகசியம் சொல்வேன்என நீ சொல்லியவையெல்லாம்இன்றுவரை நீ மட்டுமே அறிந்த ரகசியங்கள்...//

பின்னிட்டீங்க போங்க:)
கவிதைக்கு ஏற்ற படங்களும் சூப்பர்!

கார்க்கி said...

//திணறுக்கிறேன்//

//எங்கிறாய்//

பையன் ரொம்ப தொல்லை பண்றானோ??

Jawid Raiz said...

அருமை :)

சமுத்ரா said...

good.continue

Karthik said...

paduthiyathil pidithatha? whatay!

Karthik said...

paduthiyathil pidithatha? whatay!

கீதா said...

நிறைய படுத்தட்டும், நிறையக் கவிதைகள் கிடைக்குமே... எல்லாமே அழகு.

RaGhaV said...

:-))

ஷீ-நிசி said...

படித்ததில்
பிடித்தது என்ன?
என்று கேட்கிறாய்...
உன் கண்களைக்கண்டதும்
அனைத்தும் மறந்த எனக்கு,
நீ படுத்தியதில்
பிடித்தது கேட்டிருந்தால்
சொல்லியிருப்பேன்...////

ரசித்த வரிகள்! வாழ்த்துக்கள்!

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது