
ஒவ்வொரு முறை
உனைக் காணும்போதும்
என் காதல்
உன்னை இட்டு
தன்னை நிரப்பிக்கொள்கிறது....

கொடுத்த முத்தத்தின்
ஈரத்தை
இதழ்களாலேயே
துடைக்கும் வித்தை
எங்கு கற்றாய்?

எனக்கென இப்போது
என் தனிமைக்கூட இல்லை
அங்கும் வந்தமர்ந்துக்கொள்கிறது
உன் நினைவுள்...

ஆளரவமற்ற சாலையில்
மரங்கள் உதிர்த்தப் பூக்கள் போன்றது
உன்னிடம் சொல்லாத
என் காதல்...
உன்னிடம் சொல்லாத
என் காதல்
காற்று வெளியில் பயணித்து
எங்கோ சேர்கின்றன
முடிவிலியாய்...

எனக்கு மகிழ்ச்சியே
உன்னிடம் வெளிப்படுத்தாத
என் காதல்
முடிவிலியாய் வாழ்வதில்...
வாடகைக்கல்ல
விற்பனைக்கு என்னிதயம்...
விலை உன்னிதயம்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
14 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
நல்லதொரு வெளிப்பாடு... அருமை.
முடிவிலி
ஒரு கவிதையின்
முடிவிலி...
தொடருங்கள்...
முடிவே இல்லாத காதலுக்கு..
முடிவிலி எனும் பெயர் சரியே..
அருமையான கவிதைகள்.. ஆழமான வார்த்தைகள்..
:) வாழ்த்துக்கள்..!!
கவிதையுடன் படங்கள் அருமை. ஒவ்வொரு மெளனத்தின் வெற்றியும் காதலின் வலிகளாய்..!!
வாடகைக்கல்ல
விற்பனைக்கு என்னிதயம்...
விலை உன்னிதயம்...//
இது தான் எனக்கு ரொம்ப பிடித்தது.
Super!! Arumai..Arumai!!
Nice...
wow..!
அத்தனையும் பட்டாசு.. :-)
முடிவிலி ....//
Super.
நாலு வரியில் நச்சென்று காதல் பாடம் எடுத்து விட்டீர்கள்.
நாலு வரிக் கவிதையில் நச்சென்று மனதில் காதல் விதையை பதிய வைத்து விட்டுடீர்கள்.
]எனக்கென இப்போதுஎன் தனிமைக்கூட இல்லைஅங்கும் வந்தமர்ந்துக்கொள்கிறதுஉன் நினைவுள்... அருமையான வரிகள் வாழ்த்துக்கள். . .
எனக்கென இப்போதுஎன் தனிமைக்கூட இல்லைஅங்கும் வந்தமர்ந்துக்கொள்கிறதுஉன் நினைவுள்... அருமையான வரிகள் வாழ்த்துக்கள். . .
//ஆளரவமற்ற சாலையில்
மரங்கள் உதிர்த்தப் பூக்கள் போன்றது
உன்னிடம் சொல்லாத
என் காதல்...//
ச்சொ சுவ்வீட்
Post a Comment