எங்கெங்கும் கடவுள்கள்...

முடிமேல் மயிலிறகு தரித்தவன்
கண்ணன் என
அடையாளம் காட்டப்பட்டான்..
கைகளில் தங்க காசு எனில்
லக்ஷ்மி...
வீணையுடனிருப்பவள் வாணி...
பாம்பின் மேலெனின்
ரங்கநாதர்...
மீசை இருந்தால்
கண்மூடிக்கொண்டு சொல்வேன்
பார்த்தசாரதி என..
என் தெரு போக்கிரி பிள்ளையாருக்கு
வெவ்வேறு பெயர்களில்
ஊரெங்கும், தெருவெங்கும்
கோவில்கள்...
எனினும் கோவில்கள்
கட்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன...
தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

23 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

தமிழ் அமுதன் said...

//கட்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன...
தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்..//


good..!

LK said...

நல்லா இருக்கு .என்ன சொல்ல வரீங்க ??

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு..

இனியவள் புனிதா said...

நல்லாருக்கு :)

Karthik said...

Good one. :-)

V.Radhakrishnan said...

:) நன்றாக இருக்கிறது. போராடுவது மனித குணம்.

RaGhaV said...

//தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு//
நெத்தியடி..!

மிக மிக அருமையான கவிதை.. :-)

கார்க்கி said...

//Karthik said...
Good one. :-)//

எனக்கு மட்டும் வேற வழி இருக்கா என்ன?

நல்லா இருக்குங்க

Rajalakshmi Pakkirisamy said...

Good One

Ŝ₤Ω..™ said...
This comment has been removed by the author.
Ŝ₤Ω..™ said...

எல்லாரும் சொல்லறாங்க அப்போ நல்லா தான் இருக்கும்.. :) எனக்கு தான் ஒன்னும் புரியல.. :(

Karthik said...

@கார்க்கி

பப்ளிக் பப்ளிக்!! :))

வி.என்.தங்கமணி, said...
This comment has been removed by the author.
வி.என்.தங்கமணி, said...

அறிவுத் தெளிவில்லாததால்
சண்டை தவிர்க்க முடியாததுதான்.
இது தொடர்பான என்பதிவையும்
பாருங்கள்.
www.vnthangamani.blogspot.com

logu.. said...

//கட்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன...
தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்..//


Nallrukkunga.

Karthik Raja said...

alagana kavithy

அகில் பூங்குன்றன் said...

//தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி//

Super

தமிழ் பிரியன் said...

ஜூனியர் அப்டேட்ஸ் ப்ளீஸ்.. :)

அன்பரசன் said...

nice..

Saravana Kumar MSK said...

:)

நாணல் said...

:)

Dharmalakshmi@Ranjani said...

தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்...
Sooper....Aweaome lines...

Also Thanks to Jhanani akka.. she tagged you in her blog & I visited urs...

VELU.G said...

//தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்...
//

உண்மை தான்

அருமை

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது