குதிரு....


குறுவையும்,பொன்னியும்,
தாளடியும்,சம்பாவும்
எலி, எறும்பு,
கரையான், பூச்சிகளுக்கும்...
அம்மாவுடனான சண்டை,
அண்ணனுடன் கண்ணாமூச்சி ஆடவும்,
என எல்லாமுமாகவும்...
சுற்றி வந்தும் கட்டிக்கொள்ளவோ
எட்டித்தொடவோ முடியாமல்
அடி முடி எட்டா
என் அந்நாளைய கடவுளாகவும் இருந்து...
மழைப் பொய்த்து போனதில்
நிலம் சோம்பல் ஆனதில்
நெல் தங்காமல் சில நாள்
எள், சோளம் காத்து...
பின் மழை பெய்து கெடுத்ததில்
பல நாள் தள்ளாடி...
சரிந்து விழுந்து கரைந்தது...
காலங்கள் ஓடி போனதில்...
கண்ணாமூச்சி ஆட்டங்கள் மறந்து, மறைந்ததில்...
சோஃபா மறைத்தவிடத்தில்
மறையாமல் நிற்கிறது வடுவாய்
காரையாலான என் வீட்டு குதிரின்
மேடான இடம் மட்டும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

18 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அசத்தலானக் கவிதை அருமை . - பகிர்வுக்கு நன்றி

Karthik said...

Good one. :-)

கக்கு - மாணிக்கம் said...

நல்ல சிந்தனை
--

sakthi said...

வெகு நாட்களுக்கு பின் அருமையான கவிதையுடன் வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்!!!

கார்க்கி said...

ஜோசியக்காரன் அப்பவே சொன்னா.. சுக்ர திசை முடியுது சார். இனி கஷ்ட காலம்தான்னு.. நம்பினேனா?

சங்கவி said...

//நிலம் சோம்பல் ஆனதில்
நெல் தங்காமல் சில நாள்
எள், சோளம் காத்து...
பின் மழை பெய்து கெடுத்ததில்
பல நாள் தள்ளாடி...//

அழகு....

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம் பழைய நினைவுகளா?. நல்லாயிருக்கு ஸ்ரீமதி. :) அடிக்கடி பதிவெழுது

logu.. said...

enna madam romba nala kanom?

ketta velainu solveenga..
ana seirathelam vetti velai..

paravalla... joopppara iruku.

தமிழ் அமுதன் said...

good one!

தமிழ் பிரியன் said...

உங்க ஊர்ல எங்க குதிரு இருந்தது?... பட் நைஸ்! தமிழ் மொழியில் நிறைய வார்த்தைகள் தெரிந்து வச்சு இருக்கீங்க.. :)

ஆயில்யன் said...

குதிரு,களத்துமேடு வயல் ஆறு குளம் நீர் இப்படி எல்லாம் இன்னும் கொஞ்ச காலத்துல பொக்கிஷ தமிழ் வார்த்தைகளாகிவிடும்!

:(

குடுகுடுப்பை said...

neengalum kiramam???

RaGhaV said...

Wow..! wat an wonderful comeback.. :-)

இனியவள் புனிதா said...

:-(

ஸ்ரீமதி said...

நன்றி சங்கர் :),கார்த்திக். மாணிக்கம், சக்தி, கார்க்கி(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்)சங்கவி(?!) ஆதவன் அண்ணா,லோகு, தமிழ் அமுதன் பிரியன் அண்ணாக்கள்(பாட்டி வீட்ல இருந்தது), ஆயில்யன் அண்ணா(உண்மை), குடுகுடுப்பை அண்ணா (ஆமாம் :)), ராகவ், புனிதா அக்கா

நாணல் said...

:(

தமிழ்தோட்டம் said...

அருமையான கவி வரிகள்


தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

கீதா மதிவாணன் said...

இறந்தகாலத்தின் நீட்சி அழகிய கவிதையாக! அற்புதம் ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது