GOவா - 1
2 days ago

உன் மூர்க்கத்தனங்களும், கோபங்களும்
என்மேலான உனது வெறுமைகளும்
பல வண்ணக்குழம்புகளை
என்மீது வாரி இறைக்கின்றன...
வண்ணக் கலவைகளிடம்
விடுபட இயலா என் கோபங்கள்
மேலும் வண்ணங்களைப் பெருக்கி..
என் கண்களிலும், கன்னங்களிலும்,
நினைவுகளிலும், நிசப்தங்களிலும்
சுழித்து ஓடச்செய்யும் ஆறாக
உருமாற்றம் அடைகிறது...
சில நேரங்கள் வண்ணங்கள்
என்னுள்ளும்...
பல பொழுதுகள் நான் அதனுள்ளும்
பதுங்கும் சமயங்களில் நினைத்துக்கொள்கிறேன்..
உனக்கான விருப்ப வானவில்
எனக்குப்பிடித்த
இரு வண்ணங்களில்
ஏதேனும் ஒன்றாக தான் இருக்குமென...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Tuesday, March 23, 2010
|
கனவு காண:
கவிதை,
கவிதை மாதிரி
|
21 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
நல்லா இருக்கு ஸ்ரீமதி...
Smartness!
மூர்க்கத்தனத்தையும், கோபத்தையும் வண்ணக் குழம்புகளாக கற்பனை செய்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அருமையான கவிதை.
//உனக்கான விருப்ப வானவில்
எனக்குப்பிடித்த
இரு வண்ணங்களில்
ஏதேனும் ஒன்றாக தான் இருக்குமென...//
நல்ல வரிகள்.
அருமை.
/உனக்கான விருப்ப வானவில்
எனக்குப்பிடித்த
இரு வண்ணங்களில்
ஏதேனும் ஒன்றாக தான் இருக்குமென/
வாவ்...
படத்தை தேர்வு செய்த கைகளுக்கு தங்க காப்பு போடலாம்..
//எனக்குப்பிடித்த இரு வண்ணங்களில்
ஏதேனும் ஒன்றாக தான் இருக்குமென//
ஹ்ம்ம்ம் :-)
எனக்குப்பிடித்த இரு வண்ணங்களில்
ஏதேனும் ஒன்றாக தான் இருக்குமென//
அதென்ன கலருங்க அம்மணி??
:)))))
good one. :)
வண்ண வண்ண வண்ணமாய்.. :-))
நல்லா இருக்கு ஸ்ரீ..
கவிதை கொண்டுள்ள உணர்வைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
சில நேரங்கள் வண்ணங்கள்
என்னுள்ளும்...
பல பொழுதுகள் நான் அதனுள்ளும்///
adadaa!!!
attakaasamaana varigal!!!
Gud one :)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
nice!!!
எங்கே ஸ்ரீ, ஆளையே காணோம்..?? ரொம்ப பிஸியா??
Manasu eppavum nallathuthan ninaikku..
so sweeet.
Nice:)
என்ன ஆச்சுங்க! ரொம்ப நாளா காணும்? மாதவன் நல்லா இருக்காரா? சீக்கிரம் எழுத ஆரம்பிங்க!!
உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
Post a Comment