உறங்கும் உணர்வுகள் (அ) உறக்கம் கலைக்கும் கனவுகள்


காலண்டர் தேதிகள் கிழிக்க
கட்டாயம் மறுக்கின்றேன்,
நெட்டிமுறித்துத் தள்ளும்
நினைவுகள் கலைக்கின்றேன்,
பூக்களையோ, புகைப்படங்களையோ
வாழ்த்தட்டைகளையோ,
பார்க்கவும் மறுக்கின்றேன்,
நெடிதுயர்ந்து வளர்ந்துவிட்ட உன்
பிம்பங்கள் ஏற்படுத்தும்
மனக்கிளர்ச்சிக்கு மருந்தின்றி
கீறிக்கிழிக்கும் முட்கள் கொண்டு
ரணமாக்கும் இந்த நாட்களை
அடியோடு வெறுத்து,
ஓரிடத்தில் சிலையாகும் உறுதிப்பூண்டு,
பின்பும் தோல்வியுற்று..............
.
.
.
போதும்...
எனினும் கேட்பதில்லை,
தாண்டிச்செல்கின்றன காலங்கள்...
அதனாலேயே வந்துவிட்டதென எண்ணிக்கொள்கிறேன்,
எல்லாவற்றையும் போல
இக்காதலர் தினமும்...
உன் ஞாபகம் சிறிதும் எனக்கில்லை
என உரக்கக்கூவிக்கொள்கிறேன்
என் மனதுக்குள் மட்டும்..

P.S: This is my 143rd post. Enjoy folks.. :-)))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

21 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

143 பதிவுக்கு வாழ்த்துக்கள்!

பிப்-14 எப்படியெல்லாம் ஃபீல் பண்ண வைக்குது

கவிதை மனதுக்குள்ளேயே மறைத்திட்ட சோக நினைவுகளை தட்டி எழுப்பும் ரகம் !

தமிழ் பிரியன் said...

Sign board is super!

கார்க்கி said...

:((((

சென்ஷி said...

:)

Complan Surya said...

simply

super

Complan Surya said...

போதும்...எனினும் கேட்பதில்லை,தாண்டிச்செல்கின்றன காலங்கள்...அதனாலேயே வந்துவிட்டதென எண்ணிக்கொள்கிறேன்,எல்லாவற்றையும் போலஇக்காதலர் தினமும்...உன் ஞாபகம் சிறிதும் எனக்கில்லைஎன உரக்கக்கூவிக்கொள்கிறேன் என் மனதுக்குள் மட்டும்..

rumba alagana varigal...piditha varigalum kooda

varthigal unarugalodu vilaiyadukindran..

Valthukal.

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...

Sign board is super!///

இதயம் படம் போட்டு அதுல அம்பு கிழிச்சுக்கிட்டு வர்ற மாதிரி டிசைன் செஞ்சு திரிஞ்சுக்கிட்டிருந்த குரூப்ல இருந்த பயபுள்ள தானே ஐயா நீர்?

Sangkavi said...

//உன் ஞாபகம் சிறிதும் எனக்கில்லை
என உரக்கக்கூவிக்கொள்கிறேன்
என் மனதுக்குள் மட்டும்..//

ஆமாங்க..... நானும் இதே போல் தான் உரக்க சொல்லிக்கொள்கிறேன்...

YUVARAJ S said...

good ones!

chek by scribbles at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

Keep reading.

ரௌத்ரன் said...

//This is my 143rd post//

:)

வாழ்த்துக்கள்...

நாய்க்குட்டி மனசு said...

143 ஆவது பதிவா? எப்படித்தான் எழுதுறீங்க? வாழ்த்துக்கள்.

நாணல் said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமா... :))

Karthik said...

:( s.u.p.e.r.b.

143? vazhthukkal..:))))

Karthik said...

rendu thalaippu? enna kodumai saravanakumar msk anna? :)))

சி. கருணாகரசு said...

நல்லாயிருக்குங்க.

அண்ணாமலையான் said...

என்ன பன்றது , நாம நெறய இப்டிதான்,, இல்ல இல்லன்னு பொய் சொல்லிக்கிட்டு திரியறோம்

புனிதா||Punitha said...

nice da :-))

RaGhaV said...

நல்லாயிருக்கு..
சோகமாயிருக்கு..
பயமுறுத்துது..
அழமா பாதிக்குது..
அருமையான கவிதை.. :-))

மஹாராஜா said...

hmmm.....nalla irukku thangachi...
niraya munnetram..... all the best.

annana nabagam irukka?

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

bhuvan said...

really nice and lovely

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது