மீண்டும்... மீண்டும்...

"த்தா இந்த எடம் தான் எறங்கு"

என் பரபரப்பு அவளையும் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். வேக வேகமாக தன் தோள் பையை எடுத்துக்கொண்டு குதித்தாள். ஆம் குதித்தாள் என்பதுதான் சரி. அந்த இடத்தில் நிறைய நேரம் ரயில் நிற்காது என அவளும் யூகித்திருக்க வேணும்.

"ம்ம் வா"

வேகமாக அவளை இழுத்துக்கொண்டு நடந்தேன். எல்லோரையும் வேடிக்கைப்பார்த்தபடி வந்தாள். சிவப்பு நிற உடையில் ஆண்களும், பெண்களும் நடந்தபடி, சிரித்தபடி, உட்கார்ந்தபடி, எங்களை திரும்பிப்பார்த்தபடி, திரும்பிப்பார்த்தவர்கள் திரும்பிக்கொண்டபடி இருந்தனர். இது அவளுக்கு ஆச்சர்யத்தை அளித்திருக்க வேண்டுமென கண்களைப் பார்த்துக்கண்டறிந்தேன். மெல்லிய செறுமல் கேட்டது அவளிடமிருந்து.

"ந்தா நாம எங்க வந்துருக்கோம்?"

பதில் சொல்லாமல் நான் சிரித்தது அவளுக்கு கோவம் மூட்டியதை உணர்ந்தேன். என் கைகளிலிருந்து வேகமாக அவள் கைகளை விடுவித்துக் கொண்டாள்.

"என்னாச்சு இப்போ?"

"நாம எங்க வந்துருக்கோம்ன்னு சொல்லு"

"எதுக்கு?"

அவளிடம் பதில் இல்லை என்பது நன்றாக விளங்கியது.

"ம்ம்ம் சொல்லு... நாம எங்க வந்துருக்கோம்? இல்ல... நீ என்ன எங்க கூட்டியாந்திருக்க? அதச்சொல்லு"

"எம்மேல உனக்கு நம்பிக்க இல்லயா?"

"உன்ன நம்பி தானே என் குடும்பத்தையே விட்டுட்டு வந்துருக்கேன். அப்பறம் என்ன?"

"சரி வா போலாம்"

"சொல்லமாட்ட?"

"அட! சொல்றேன் வா"

இந்த முறை நான் முன்னெச்சரிக்கையாய் இருப்பது அவசியம். அவள் நடையில் தளர்ச்சி தெரிந்தது.

'இவ வேற நேரங்காலம் தெரியாம அடம் பண்ணிக்கிட்டு'

"என்னா? வீட்டு ஞாபகமா?"

'எவ்ளோ அழுத்தம் பதில் சொல்லாம வரா?'

"இப்போ உனக்கு என்ன தெரியனும்? நாம எங்க இருக்கோம்னா?"

"ஆமா"

"இத பாரு... இப்போ மணி மதியம் 12:00. 2:00 மணி வரைக்கும் பொருத்துக்க. உனக்கே தெரிஞ்சிடும்"

கொஞ்சம் பழக்கப்பட்ட இடம் என்பதால் அவ்வளவு பதட்டம் என்னுள் இல்லை. அவனது ஹாஸ்டல் தேடுவதொன்றும் எனக்கு பெரிய வேலையாய் இருக்கவில்லை.

"நீ இங்கனயே இரு வரேன்"

"த்தா எங்க போற?"

"இங்கன ப்ரெண்டு ஒருத்த இருக்கான். அவன் நமக்கு ஹெல்ப் பண்ணுவான். ரெண்டு நிமிசத்துல வரேன் இரு."

டீக்கடை அண்ணாச்சி தாண்டி பாலாஜியின் ஹாஸ்டல். இருப்பான் இந்நேரம்.

"டேய் முருகா... எப்பிடி டா இருக்க? எப்ப வந்த? சொல்லிருந்தா ஸ்டேஷனுக்கு நானே வந்துருப்பேன்ல?"

"இல்லடா திடீர்ன்னு கிளம்பற மாதிரி ஆயிடிச்சி.."

"ஏன் மச்சி? வேல எதும் கிடைச்சிடிச்சா என்ன?"

என் மௌனம் அவனை சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்.

"சொல்லுடா... என்ன ஆச்சு? என்ன ப்ராப்ளம்? அந்த வீட்ல இருந்து எதாவது தொல்ல பண்ணாங்களா? இல்ல அந்த கோமதி எதாவது சொல்லுதா? சொல்லுடா..."

"அதெல்லாம் இல்லடா. அந்த புள்ள எங்க என்ன நெனைக்க போவுது? நல்லா கழுத்து நெறைய நகையோட போன வருசம் திருவிழாக்கு வந்தத நீ தான் பாத்தல்ல?"

"ஆமாண்டா அதான் உனக்கும் சொன்னேன்.. அவள மறந்துட்டு புது வாழ்க்க ஆரம்பின்னு"

"அதுக்கு தாண்டா இங்கன வந்தேன்"

"என்னடா? வேல எதாவது தேடியா? இல்ல பணம் எதாவது?"

"இல்ல மச்சி... அதுவந்து..."

"சொல்லு"

"என்னய என்ன கிறுக்குப்பயன்னு நினைச்சிட்டாளா மச்சி அவ? அவ இல்லேன்னா இன்னொருத்தி..."

"சரிடா... இப்போ என்ன?"

"அதா மச்சி அவ சித்தி பொண்ணு இருக்கால்ல? அந்த போஸ்ட்காரு புள்ள... லதா"

"ஆமா.. அதுக்கென்ன?" அவன் குரலின் பதட்டம் என்னை உலுக்கியது.

"சொல்லுடா... என்ன பண்ண?"

"ச்சீ..ச்சீ.. நா ஒன்னும் பண்ணல... கூட்டியாந்துட்டேன்.. ரெசிஸ்டர் ஆபிஸ் எப்ப தொறக்கும்?"

-அன்புடன்,
ஸ்ரீமதி.

19 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

தமிழ் பிரியன் said...

Murder veri kathai ... ;-))

Complan Surya said...

vanthena nangnunu kutividuven..
ama choliputen.avlo tension aitu enku padichitu..

so nice.
thirilinga..
supera erunchunga..

Valaga valamudan..

கோபிநாத் said...

அப்போ ஒரு பெண்ணை காதலிக்க முன்னாடி அதுக்கு தங்கச்சி..சித்தி பெண்ணு..சித்தப்பா பெண்ணு...பெரியப்பபா பெண்ணு இப்படி எல்லாம் பார்த்தா காதலிக்கிறவனுங்கு நல்லதுன்னு சொல்றிங்க..குட் குட் குட் ;-))

கார்க்கி said...

அடடா.. கொஞ்சம் ,இல்ல இல்ல, சில அவ்ருஷம் முன்பு இந்த கதையை படிச்சிருந்தா என் வரலாறே மாறியிருக்கும்..ப்ச்..

henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

எம்.எம்.அப்துல்லா said...

:)

Maddy said...

அட! இந்த புள்ளக்கு இங்கண ஒரு பாஷா நல்ல வரும் போல!

சரி புள்ள! கதை நடக்கறது மதியம் பன்னண்டு தானா? அப்போ ரெசிதர்
ஆபீஸ் தொறந்து தான இருக்கும்??

☀நான் ஆதவன்☀ said...

//"ச்சீ..ச்சீ.. நா ஒன்னும் பண்ணல... கூட்டியாந்துட்டேன்.. ரெசிஸ்டர் ஆபிஸ் எப்ப தொறக்கும்?"//

இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :))

☀நான் ஆதவன்☀ said...

//henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
//

யாருப்பா அது? இடம் தெரியாம காமெடி பண்றது? :)

RaGhaV said...

//நா ஒன்னும் பண்ணல... கூட்டியாந்துட்டேன்//
சூப்பர் ஐடியா.. :-) இது ரொம்ப உதவியா இருக்கும் ஸ்ரீமதி.. ;-))

அது சரி.. கா.க.ம என்னாச்சு..?? :-)

RaGhaV said...

// கார்க்கி said...
அடடா.. கொஞ்சம் ,இல்ல இல்ல, சில அவ்ருஷம் முன்பு இந்த கதையை படிச்சிருந்தா என் வரலாறே மாறியிருக்கும்..ப்ச்.. //

இப்ப கூட ஒன்னியும் கெட்டுபோகல சகா.. Confidence.. :-))

Karthik said...

த்ரிஷா இல்லைனா திவ்யா.. கான்பிடன்ஸ் இருக்கிற பாய்ஸா இருப்பாங்க போல.. :)

@கார்க்கி : இங்கயுமா தேவதாஸ்? (நன்றி ஸ்ரீமதி) :)

தாரணி பிரியா said...

கொலைவெறி கதை :)

செகண்ட் டைம் படிக்கும்போதுதான் //இந்த முறை நான் முன்னெச்சரிக்கையாய் இருப்பது அவசியம்.// இந்த லைன் சரியா புரிஞ்சது :)

கார்க்கி said...

/சரி புள்ள! கதை நடக்கறது மதியம் பன்னண்டு தானா? அப்போ ரெசிதர்
ஆபீஸ் தொறந்து தான இருக்கும்//

அதொ தொறந்துதான் இருக்கும் பாஸ்> ஆனா அவனுக்கு தெரியாதே.. அவங்க குடும்பத்திலே யாரும் ரெஜிஸ்டர் ஆஃபிஸ் வாசற்படிய கூட மிதிச்சது இல்லையாம். விட்டா , வந்த உடனே எப்ப கல்யானம் நடக்கும், ஒரு மாசம் முன்னாடி நோட்டிஸ் கொடுக்கனும் எல்லாம் கேட்பீங்க போல? உலகம் மாறிடுச்சு. அட்லீஸ் பதிவுலகமாவது மாறிடுச்சு. இப்போ போய் லாஜிக் எல்லாம் கேட்டுட்டு :))))))

கார்க்கி said...

@ராகவ்,

புது தெம்பு வந்துடுச்சு சகா. ஃபிப் 14 வருது. அதுக்குள்ள....
ஃப்ரெஷ்ஷா ஒரு காதல் கதையோ கவிதையோ சந்தோஷமா எழுடஹ்றேன் சகா

டம்பி மேவீ said...

"கார்க்கி said...

அடடா.. கொஞ்சம் ,இல்ல இல்ல, சில அவ்ருஷம் முன்பு இந்த கதையை படிச்சிருந்தா என் வரலாறே மாறியிருக்கும்..ப்ச்.."

கார்கி , இந்த கதையை பொண்ணுங்க படிச்சு இருந்த உங்களுக்கும் கஷ்டம் தானுங்க

டம்பி மேவீ said...

பிப்ரவரி மாசம் வந்துட்டாலே ..இந்த அங்கிள்களின் தொல்லை தாங்க முடியாதே ...வயசு ஆகிருச்சுல என்னை மாதிரி சின்ன பசங்களுக்கு வழி விடுங்கப்பா

ரௌத்ரன் said...

:))

SanjaiGandhi™ said...

இப்போ கதையும் எழுத ஆரம்பிச்சிட்டியா? கலி முத்திப் போச்சிடா காந்தி.. :)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது