
உதட்டுக்கும், தொண்டைக்குமாய்
அலைப்பாயும்
ஈராயிரம் வார்த்தைகள்..
தொலைந்து பின் மீண்டும்
முளைக்கும் பார்வைப்பயிர்கள்...
சில்லென சிலிர்த்து விழிக்கும்
உன் சிருங்காரங்கள்...
பேச்சுக்களினூடே
எண்ண மறக்கும்
சிலவாயிரம் முத்தங்கள்...
வலிகளில்லா
வருடும் நோக்கத்திலான
உனது ஊடல்கள்...
போலவே,
இன்னும் சில பல கோபங்கள்...
எனக்கான உன் தாபங்கள்...
எல்லாம் வீணாகின்றன...
சீக்கிரம் முடித்துவிடு
உன் கோரத்தாண்டவமாடும்
இரண்டரை மணிநேர
மௌன யுத்தத்தை...
-o0O0o-
தமிழ்மணத்தில் இதுவரை முதல்கட்ட வாக்கெடுப்பில்
என் கவிதைக்கு ஓட்டுப் போட்ட எல்லாருக்கும் எனது நன்றிகள். இரண்டாம்கட்ட வாக்கெடுப்பில் ஓட்டுப்போடவிருப்பவர்களுக்கும் எனது நன்றிகள்.
ஓட்டுப்போட...-அன்புடன்,
ஸ்ரீமதி.
17 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
அழகான கவிதை..........
hmm good one..
நல்லா இருக்கு ஸ்ரீ.. :)
beautiful image too.. :)
என்னமோ சொல்றீங்க..!
புரியுது ஆனா புரியலை!!!!!
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
//வலிகளில்லா
வருடும் நோக்கத்திலான
உனது ஊடல்கள்...
போலவே,
இன்னும் சில பல கோபங்கள்...
எனக்கான உன் தாபங்கள்...
எல்லாம் வீணாகின்றன...
சீக்கிரம் முடித்துவிடு
உன் கோரத்தாண்டவமாடும்
இரண்டரை மணிநேர
மௌன யுத்தத்தை...//
அழகு.....
ம்ம்ம்ம்ம்
தமிழ்மண லிஸ்ட்டில் என் பதிவும் இருந்தது எனக்கே தெரியாது. நண்பர் ஒருவர் அழைத்து சொன்னார். அவருக்கு முதலில் பதிவில் நன்றி சொல்லனும்... உங்களுக்கும் வாழ்த்துகள் :))
நல்லாயிருக்கு..;))
nice :-)
பிண்றாளே எங்க தங்க(ம்)ச்சி.. :)
மிக அழகான கவிதை வாழ்த்துக்கள்...
அருமையான கவிதை ஸ்ரீமதி.. :-))
இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. :-))
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
நல்லாயிருக்கு..;))
Post a Comment