காதலும் கற்று மற(?!)-4

காதலும் கற்று மற(?!)- 1 , 2 , 3 .

"எங்க மேடம் காலங்கார்தால, அதுவும் எங்கிட்ட கூட சொல்லாம, எங்க கிளம்பிட்ட?"

"போயிட்டு வந்து சொல்லவா?"

"ஏன் இப்ப சொல்லக்கூடாதா?"

"ம்ஹீம்"

"ஏதோ பண்ணு", சிரித்துக்கொண்டே விடைபெற்றாள் சத்யா.


-o0O0o-

காலை மணி 7:30. மிக அமைதியான கல்லூரி மைதானம். இதுவரைப் பார்த்திராத வானம். 'ம்ம்ம் ஹாஸ்டல் வந்ததில இருந்து நல்லா தூங்க கத்துக்கிட்டேன். எவ்ளோ நல்லா இருக்கு இன்னைக்கு க்ளைமேட்? சொன்னபடி வருவானா?', நினைவுகளில் ஆழ்ந்தாள். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என முடிவு செய்து, சத்யாவை சந்திக்க தினேஷிடம் சொல்லி அனுப்பியிருந்தாள். அவன் சொல்லியிருப்பானா? அப்படியே சொல்லியிருந்தாளலும் சத்யா வர சம்மதிப்பானா? என பலக்கேள்விகள் அவளுள், சத்யா வருகையை காணும் வரை.

"ஹாய்"

"ஹாய்"

"சத்யா"

"சொல்லுங்க"

"பாக்கனும்னு சொன்னீங்கன்னு தினேஷ் சொன்னான். எனக்கு முதல்ல நம்பிக்கையே இல்ல. சும்மா கலாய்க்கிறான்னு நினைச்சேன். பட் இங்கவந்து பார்த்தா. வாட் எ சர்ப்ரைஸ்?"

"ம்ம்ம் நாந்தான் வர சொன்னேன். தேங்க்ஸ் வந்ததுக்கு. சாரி டிஸ்ட்ரப் பண்றதுக்கு"

"Thats ok. சொல்லுங்க என்ன விஷயம்?"

"உங்களுக்கு தெரியாததில்ல. நீங்க யார்? என்ன? எப்படிப்பட்டவர்? இப்படி எந்த விஷயமும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உங்க பேர் மட்டும் தான். உங்களுக்கும் அப்படிதான்னு நினைக்கிறேன். எது எப்படி இருந்தாலும் எனக்கு இந்த காதல், கத்தரிக்காயில் எல்லாம் இஷ்டம் இல்ல. அப்படி ஒரு எண்ணம் இருந்தா தயவு செய்து மாத்திக்கோங்க. இத சொல்லத்தான் நான் கூப்பிட்டேன். வந்ததுக்கு தேங்க்ஸ்".

"நல்லா பேசறீங்க"

"சத்யா... நான்...."

"நான் இன்னும் முடிக்கல. நான் உங்கள லவ் பண்றேன்னு என்னைக்காவது உங்கக்கிட்ட வந்து சொன்னேனா? சொல்லுங்க."

"இல்ல"

"அப்பறம் எப்படி இப்படி என்ன பத்தி ஒரு முடிவுக்கு வந்தீங்க?"

"ஆனா, உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம்.."

"அவங்க ஆயிரம் சொல்வாங்க. அதுக்கெல்லாம் நான் என்ன பண்ண முடியும்?"

-o0O0o-

"என்னடா சொல்ற? அந்த பொண்ணதான் கல்யாணம் பண்ணிப்பேன். என்னமோ உயிருக்குயிரா காதலிக்கிறேன்னு எங்ககிட்ட சொல்லிட்டு அவகிட்ட அப்படியே உல்டாவா சொல்லிட்டு வந்துருக்கியே, ஏண்டா? இல்ல நீ சும்மா விளையாடுறியா?"

"ம்ம்ம் நிஜமாவே காதலிக்கிறேன். ஆனா, அவ கோவமா கேட்ட அந்த சமயத்துல சொல்லிருந்தேன்னா அவளுக்கு என் மேல நிச்சயம் வெறுப்பு வந்திருக்கும். அதோட இல்லாம காதலே பிடிக்காதுன்னு சொல்றவகிட்ட போய் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு சொல்லக்கூடாது மச்சி. அதெல்லாம் டைம் பாத்துதான் சொல்லனும்."

"எங்கேயிருந்துடா வருது? காதல்னா மட்டும் இவ்ளோ யோசனைகள்? இத கொஞ்சம் படிப்பிலையும் காட்டினா நல்லா தான் இருக்கும்..ம்ஹீம்ம்ம்"

-o0O0o-

"நிஜமாவா சொல்ற? அவன் அப்படியா சொன்னான்?"

"ஆமா மிருது... கடைசி வரைக்கும் அவன் என்ன காதலிக்கறதாகவோ, குறைந்தபட்சம் சைட்டடிக்கறதாகவோ கூட ஒத்துக்கல. எனக்கு ஒன்னுமே புரியல"

"எனக்கெல்லாம் புரிஞ்சிடிச்சி. படத்துல எல்லாம் ஹீரோயின லவ் பண்ண முதல்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ கரெக்ட் பண்ணுவாங்கல்ல? அதுமாதிரி தான் அவன் உன்ன அப்ரோச் பண்ணிருக்கான்"

"அப்படியா சொல்ற? சரி அப்போ அந்த ஹீரோயின் யாரு?"

"உனக்கு ரொம்ப வேண்டியவங்க தான்"

"யாரு அந்த வனிதாவா?"

"இல்ல"

"ம்ம்ம் கண்கொட்டாம அவனையே பாத்துட்டு இருப்பாளே அந்த ரூபா. அவளா?"

"இல்ல"

"வேற... ம்ம்ம்ம்"

"பிசாசே. உங்கூடவே சுத்துறேனே என் பேர சொல்லமாட்ட?"

"ச்சீ ச்சீ. அவனுக்கு ரசனை இல்லயா என்ன? உன்ன போயா சுத்துவான்?", கேட்டுவிட்டு கலகலவென சிரித்தவளை முறைத்தாள் மிருதுளா. எது எப்படியோ அவன் தன்னை விட்டுவிட்டான் என நிம்மதி அடைந்ததில் நாட்கள் சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் சென்றன.

-o0O0o-

"நீ ஏன் சத்யா கல்சுரல்ஸ் ஒன்னுத்துலையும் பார்ட்டிசிப்பேட் பண்ணல?"

"ம்ம் போ. க்ளாஸ் கட்டாகும்"

"அடிப்பாவி. அதுக்காகத்தான் இங்க பாதி பேர் அதுல கலந்ததே"

"ம்ம்ம் பாக்கலாம்"

"நீ என்னத்த பாக்குறது? சீக்கிரம் எதுல சேரரன்னு பேர் குடு. டேட் முடிய போகுது. இல்லேன்னா உன் பேர நானே எதுலயாவது சேத்துடுவேன்"

"ஹே அப்படியெல்லாம் ஒன்னும் செஞ்சிடாத. நானே பேர் தரேன் ஓகே."

"ம்ம்ம்"
-o0O0o-
"நீங்க எதுல பார்ட்டிசிப்பேட் பண்ணீருக்கீங்க?", வெகு அருகில் அவன் குரல். அன்று பேசிய பிறகு அவன் இவள் கண்ணில்படவே இல்லை. நிம்மதியாகவே உணர்ந்தாள். இன்று அவனே வந்து பேசியது ஆச்சரியமாக இருந்தது. வெகு நாள் கழித்து பேசுவதால் வெறுப்பை உமிழத்தோன்றவில்லை. வெறுப்பின் நெருப்பும் கொஞ்சம் தணிந்திருந்தது அவளுள் என்பதே உண்மை.

"இல்ல நான் எதுலையும் பார்ட்டிசிப்பேட் பண்ணல"

"எப்படி விட்டாங்க உங்க டிபார்ட்மெண்ட்ல?"

"மெஹந்தில..."

"ஓ போடறீங்களா?"

"இல்ல. என் கைல போடறாங்க"

"ஹா ஹா ஹா", அவன் பெரிதாக சிரித்தது, அவளுள் கோவத்தைத் தூண்டியது. அவள் முக மாற்றம் கண்டவன் சிரிப்பதை நிறுத்தினான்.

"சாரி சத்யா"

"ம்ம்ம் பரவால்ல"

"ம்ம் உங்க கைக்கு மெஹந்தி நல்லாவே இருக்கும். All the best"

"Thanks"

அவன் எதிலும் பங்கு கொண்டானா எனக்கேட்க மறந்த தன்னைத் தானே திட்டிக்கொண்டாள். எனினும் அவன் சிரித்ததை நினைத்து தான் இப்போது தனிமையில் சிரிக்கிறோம் என்பதை எப்படியோ மறந்துவிட்டிருந்தாள்.

"ஏய் என்ன தனியா சிரிக்கற?"

"ஒன்னுமில்ல சத்யா கிண்டல் பண்ணான். அத நினைச்சுதான் சிரிக்கிறேன்."

"சாதாரணமா அவன் கிண்டல் பண்ணா, திமிர் பிடிச்சவன்னு திட்டுவ. இன்னைக்கென்ன அதிசயமா சிரிக்கிற? சம்திங்க் ராங்க்"

"லூஸ் அதெல்லாம் ஒன்னுமில்ல. போய் வேலைய பாரு"

"சரிங்க மேடம்"

மிருதுளா சொன்னது சரியென்றே தோன்றினாலும். அவன் தன்னை காதலிக்கவில்லை எனத்தெரிந்ததால் தான், தான் இவ்வாறிருப்பதாக சொல்லிக்கொண்டாள். அதுவும் நிலைக்கப்போவதில்லை என பாவம் அவள் முன்னமே அறிந்திருக்கவாய்ப்பில்லை..

-தொடரும்..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

20 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

காதலை ஏன் கற்று மறக்கனும்!?

சொல்லுங்க...?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
காதலை ஏன் கற்று மறக்கனும்!?

சொல்லுங்க...?
//

ஆதலினால் காதல் செய்வீர்...! தொடந்து காதல் செய்வீர்...!

மணி said...

கதை நல்லா தான் போகுது காதலை சொல்றதுல இம்புட்டு டெக்னிக்கா. படார்னு உடைச்சா சடார்னு பிகர் கிடைக்கும்.

RaGhaV said...

//"பிசாசே. உங்கூடவே சுத்துறேனே என் பேர சொல்லமாட்ட?"//

//இத கொஞ்சம் படிப்பிலையும் காட்டினா நல்லா தான் இருக்கும்..ம்ஹீம்ம்ம்//

//"ஒன்னுமில்ல சத்யா கிண்டல் பண்ணான். அத நினைச்சுதான் சிரிக்கிறேன்."//

நச் தருணங்கள்.. :-))

கணேஷ் said...

தூள்! இங்கேயுமா?

கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு வேற பேர் கெடைக்கவே இல்லையா? :)

கார்க்கி said...

//பிசாசே. உங்கூடவே சுத்துறேனே என் பேர சொல்லமாட்//

:))))))


சத்யா(பெண்) விடம் நீ ஏன் எதிலும் கலந்துக்கலன்னு ஆரம்பிக்கிற பகுதி யார் யார் இடையே நடக்குது என்பது சற்று குழப்புகிறது. ஓரளவு கெஸ் பண்ணினாலும் குறைந்தபட்சம் பேரையாவது போட்டிருக்கலாம். கதையெழுதற உங்களுக்கு எல்லாம் தெரியும். எங்களுக்கு எப்படி தெரியும்?

Karthik said...

இடையில பரிட்சை எல்லாம் வந்து போச்சா... நான் மறுபடி முதல்ல இருந்து படிக்கிறேன்.

//பிசாசே. உங்கூடவே சுத்துறேனே என் பேர சொல்லமாட்//

:))))))

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம்ம்

//"பிசாசே. உங்கூடவே சுத்துறேனே என் பேர சொல்லமாட்ட?"//

:)))))

நல்லா தான் போகுது. அப்புறம்? :)

நாணல் said...

///ஆனா, அவ கோவமா கேட்ட அந்த சமயத்துல சொல்லிருந்தேன்னா அவளுக்கு என் மேல நிச்சயம் வெறுப்பு வந்திருக்கும். அதோட இல்லாம காதலே பிடிக்காதுன்னு சொல்றவகிட்ட போய் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு சொல்லக்கூடாது மச்சி. அதெல்லாம் டைம் பாத்துதான் சொல்லனும்."///

ஓ.. இப்படி ஒரு நுணுக்கமிருக்கா..தெரியாம போச்சே... ;)... சரி ப்ரவாயில்லை இப்ப நோட் பண்ணிக்கறேன்....

Saravana Kumar MSK said...

கலக்கல். அடுத்த பகுதியை எப்போ போடுவ?
:)

Mohan Kumar said...

ஸ்ரீ,

2009 வருட சிறந்த பாடல்கள், பாடியவர், இசை அமைப்பாளர் எல்லாம் தொகுத்து என் blog-ல் எழுத் போறேன். உங்களுக்கு பாடல்களில் நிறைய ஆர்வம் உண்டு என்பதால் உங்க inputs-ம் வாங்க எண்ணுகிறேன் உங்க மெயில் முகவரி வேண்டும். எனக்கு snehamohankumar@yahoo.coin க்கு தெரிவியுங்கள் ப்ளீஸ்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

பிரசன்னா said...

என்னா டெக்னிக்கா மூவ் பன்றாயிங்க.. இது எல்லாம் தெரியாம பச்ச மன்னா இருந்துட்டனே..

புனிதா||Punitha said...

Happy Holiday Sri... Misses u :-))

பித்தனின் வாக்கு said...

இம்ம் கதை நல்லா போகுது. நல்ல கற்பனை. தொடருங்கள். நன்றி.

RaGhaV said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்ரீ.. :-)))

சிங்கக்குட்டி said...

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "அம்மாவின் வாசனை" இடுகையை படித்தேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸ்ரீமதி.

Complan Surya said...

mmmmmmmm.

so nice..

epothan unga blog padikka ella

vasika armbithu erukenga..

so cute..enna pola....

nala eruku..

kayal said...

Srimathi, please post the rest of the story ! Can't wait :)

sultan23 said...

Srimathi, please post the rest of the story ! Can't wait :)
Srimathi, please post the rest of the story ! Can't wait :)

sultan23 said...

Srimathi, please post the rest of the story ! Can't wait :)
Srimathi, please post the rest of the story ! Can't wait :)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது