காதலும் கற்று மற(?!)-3

காதலும் கற்று மற(?!)- 1 , 2 .

சத்யாவை கவரும் விதமாக அவன் அதீதமாக எதுவும் செய்யவில்லை என்றாலும், அவன் அவளை தொடர்வதும், சீண்டுவதும், அவளின் கோபங்களையும், செய்கைகளையும் அவளின் சிறுசிறு முகச்சுழிப்புகளையும் தன் நண்பர்காளுடன் சிலாகிக்கத் தவறுவதே இல்லை. அன்றும் அவளின் குறும்புத்தனமான செய்கை இவனை கவருவதாக இருந்தது. அது கல்லூரியின் கலையரங்கம் என்பதையும் மறந்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் அது நடந்தது,....

சுனில், சத்யாவுடன் படிப்பவன் இவளின் குறும்புகளை ரசிப்பவன். அன்று கேட்டேவிட்டான்.

"Hey Sathya, Can you plz gimme ur mom's mobile number?"

"What for?"

"ம்ம்ம் எப்படியும் நீ இந்த நாலு வருஷம் படிப்ப முடிச்சதும் உங்க வீட்ல கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணுவானங்க, அப்போ எதுக்கு உங்க அம்மா கஷ்டப்பட்டு மாப்பிள்ளைத் தேடனும்? இப்போவே நான் சொல்லி வெச்சிட்டா, அப்போ அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்குமே அதான்..", சொல்லிவிட்டு கண்ணடித்து சிரித்தான். அவன் சொன்னது உண்மையில்லை என சத்யாவிற்கும் தெரியும், எனவே எதுவும் பேசாது மௌனம் காத்தாள். ஆனால், அங்கு நடந்ததோ வேறு, தானிருந்த இருக்கையிலிருந்து வேகமாக எழுந்த சத்யா, கொத்தாக சுனிலின் சட்டையைப் பிடித்தான். நிலைமையின் தீவிரம் உணர்ந்த தினேஷ் அவனைத் தடுத்தான். எனினும் கோபம் குறையாத சத்யா, அவனை எரித்துவிடுவது போல் பார்த்து, அவனைத் தன் கைப்பிடியிலிருந்து விடுவித்தான். இது எதையும் எதிர்ப்பாரா சத்யா அச்சடித்த பதுமைப் போல் நின்றாள். அதனால் இது நேரம் வரை தன்னுடன் நின்ற மிருதுளா, அவளை அகன்று சென்றதையும் அவள் கவனித்தாளில்லை.

-o0O0o-

"கொஞ்சமாவது அறிவு இருக்கறவன் எவனும் இப்படி ஒரு காரியம் பண்ணமாட்டான்", தினேஷ் கொதித்துக்கொண்டிருந்தான்.

"என்னமோ தெரியலடா. அவ எனக்கே சொந்தம்ன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். இதுக்கு நடுவில யார் வந்தாலும் நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது", சத்யாவிடமிருந்து வந்த வார்த்தைகள் அனைவரையும் கொஞ்சம் அதிர வைத்தது.

"இவன் என்னடா சொல்றான்?", கேட்டுக்கொண்டே கணேஷ், தினேஷிடம் திரும்பினான்.

"என்ன நொன்னடா சொல்றான்? அன்னைக்கு சொல்ல சொல்ல கேட்காம அவன ஏத்திவிட்டுட்டு இப்போ கேள்வி கேட்கறியா?"

"டேய் அவன் ஏதோ சும்மா சைட் அடிக்கறன்னு நாங்க எல்லாம் நினைச்சோம் டா. ஆனா அவன் இவ்ளோ சீரியஸா இருப்பான்னு நினைக்கவே இல்ல."

"ஏண்டா அந்த பொண்ணு என்ன நினைக்கும்ன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தியாடா நீ?"

-o0O0o-

"மிருதுளாவ பாத்தீங்களா?", கிட்டத்தட்ட எதிர்ப்படும் எல்லோரிடமும் விசாரித்துவிட்டிருந்தாள். 'இல்லை' என்ற பதில் பழகிவிட்டிருந்தது.

'எங்க போயிருப்பா?', யோசித்தவாறு நடந்தவளுக்கு அவர்கள் அடிக்கடி உட்கார்ந்து பேசும் விளையாட்டு மைதானத்தின் வேப்பமரம் மறந்து போனது ஆச்சர்யம் தான்.

"ஹே மிருதுளா தானே தேடற? அவ அங்க உக்காந்துருக்கா பாரு", தோழி காட்டிய இடத்தில் கன்னத்தில் கைவைத்து, பாதி முகம் மறைத்தபடி உட்கார்ந்திருந்தவள் மிருதுளா என இவள் அருகில் சென்று தான் தெரிந்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது.

"என்ன ஆச்சு மிருது? நான் உன்ன எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா? ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்க? அதுவும் எங்கிட்ட கூட சொல்லாம?"

"ஒன்னுமில்ல.. வா சாப்ட போலாம். லேட் ஆகிடிச்சு"

"இல்ல நீ ஏதோ சோகமா இருக்க, ஆனா சொல்லமாட்டேங்கிற"

"அதெல்லாம் இல்ல வா"

"சொல்லு ப்ளீஸ்"

"ஒன்னுமில்லடி ஒரு சின்ன வருத்தம் அவ்ளோ தான்."

"என்னன்னு சொல்லு"

"நான் தான் அந்த சத்யாவ முதல்ல பார்த்தேன். அவன் எனக்கில்லன்னு ஆச்சு.. சரி சுனிலாவது கிடைப்பான்னு நினைச்சேன். அதுவும் இல்ல. அதான் சோகம்."

நிஜமாகவே மிருதுளா சொன்ன காரணத்திற்கு சிரிப்பதா, அழுவதா எனக் குழம்பினாள் சத்யா.

-o0O0o-

"நல்லா யோசிச்சுட்டேண்டா.. அவ இத பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்ல. நான் அவள லவ் பண்றேன். அவளும் என்ன லவ் பண்ணனும்ன்னு நான் ஒன்னும் கட்டாயப்படுத்தலையே.. "

"ஆனா, நீ அவள டிஸ்ட்ரப் பண்றடா"

"அதுக்கு நான் பொறுப்பில்ல"

"அதுக்கு மட்டுமில்ல. நீ மொத்தமாவே பொறுப்பில்லாம தான் நடந்துக்கற", கோபமாக கத்திவிட்டு சென்றான் தினேஷ்.

தான் செய்வது சரி என்றே நம்பிக்கொண்டிருந்தான் சத்யா. அது போன்று ஒரு சம்பவத்தை அவன் எதிர்க்கொள்ளும் வரை...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

9 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

சின்ன அம்மிணி said...

ரொம்ப அவசரமா கதை போகறமாதிரி இருக்கு

நாணல் said...

//"ம்ம்ம் எப்படியும் நீ இந்த நாலு வருஷம் படிப்ப முடிச்சதும் உங்க வீட்ல கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணுவானங்க, அப்போ எதுக்கு உங்க அம்மா கஷ்டப்பட்டு மாப்பிள்ளைத் தேடனும்? இப்போவே நான் சொல்லி வெச்சிட்டா, அப்போ அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்குமே அதான்..", சொல்லிவிட்டு கண்ணடித்து சிரித்தான். //

இந்த யுத்தி நல்லா இருக்கே.. நோட் பண்ணிக்கறேன்... ;)

கார்க்கி said...

//அவள் கவனித்தாளில்லை.//

நீங்க கவிதாயினிதான். ஆனா கதைல கூட இப்படியா?

என்னமோ போங்க. ஆனா சுனிலிடம் சொல்லி வைங்க. அவ்ளோதான் சொல்லுவேன்

RaGhaV said...

Superb Flow..!

அருமையா இருக்கு ஸ்ரீ.. :-)

continue.. continue..

☀நான் ஆதவன்☀ said...

//"நான் தான் அந்த சத்யாவ முதல்ல பார்த்தேன். அவன் எனக்கில்லன்னு ஆச்சு.. சரி சுனிலாவது கிடைப்பான்னு நினைச்சேன். அதுவும் இல்ல. அதான் சோகம்."//

பசங்க ரேஞ்சுக்கு தான் பொண்ணுங்களும் ஃபீல் பண்ணுறாங்க போல :)

☀நான் ஆதவன்☀ said...

//சின்ன அம்மிணி said...

ரொம்ப அவசரமா கதை போகறமாதிரி இருக்கு//

அதே அதே!

" உழவன் " " Uzhavan " said...

//அச்சடித்த பதுமைப் போல் நின்றாள்.//
 
அது என்னங்க அச்சடித்த பதுமை ???
 
//
"நான் தான் அந்த சத்யாவ முதல்ல பார்த்தேன். அவன் எனக்கில்லன்னு ஆச்சு.. சரி சுனிலாவது கிடைப்பான்னு நினைச்சேன். அதுவும் இல்ல. அதான் சோகம்."//
 
நான் சிரிச்சேன் :-)

Karthik said...

superbly paced.. way to go! :) :)

Complan Surya said...

so cute mam..

rumba rumba pidichu eruku..

algana varigal..

etho konmun nadkirthu pola oru unnaru..

enta satya ponu character rumba pidichu eruku..

valga valamudan..

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது