சம்பவங்கள்

"கொஞ்சம் நகந்துக்கோங்களேன்", சிரித்துக்கொண்டே என்னருகில் வந்து நின்றார். "ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் உள்ள வந்துடுங்க", என்றேன். ஒரு கையில் குழந்தையை இறுகிப்பிடித்தவாறு, இன்னொரு குழந்தையை என்னருகில் நிற்கவைத்தார்.

மாலை கல்லூரி, பள்ளி, அலுவலகம் முடியும் சமயங்களில் பேருந்தின் நெரிசல் அந்த நாளையே கசப்பாக உணரச்செய்யும். எப்படி இவர் இவ்வளவு தூரம் இந்த குழந்தைகளோடு செல்லப்போகிறார் என வருத்தமாக இருந்தது. என் கையில் இருக்கும் லஞ்ச் பாக்ஸ் பல நேரங்களில் பிறர் மடியில் தஞ்சம் புகுந்திருக்கும். வாங்குபவரின் முகங்களில் தான் எத்தனை எத்தனை பாவங்கள்? சிலர் சிரிப்புடனும், சிலர் சலிப்புடனும், சிலர் கவனிக்காதது போலவும், சிலர் கோவத்துடனும் பெற்றுக்கொள்வர். அவர்களின் கவலை அவர்களுக்கு. இதில் குழந்தையுடன் போவோரை யார் கவனிக்கப்போகிறார்கள்?

நான் நின்ற கம்பிக்கருகில் உட்கார்ந்திருந்தவர், நின்றிருந்தவரின் குழந்தையை வாங்கிக்கொண்டார். எனினும் கைக்குழந்தையுடன் நிற்பது சிரமம் தான்.

"Excuse me", என நினைவுகளைக் கலைத்தது பின்னிருக்கைக்குரல்.

"அவங்கள இங்க வந்து உக்காந்துக்க சொல்லுங்க", சிரித்துக்கொண்டே எழுந்துக்கொண்டார். ஏனோ மனதுக்கு நிம்மதியாக இருந்தது. என் கால்களில் ஏறி பின்னிருக்கை சென்று நன்றியையும், சாரியையும் முறையே அவரிடமும், என்னிடமும், பின் ஆளுக்கொரு புன்னகையும் பரிசாக அளித்தார். அடுத்து வந்த நிறுத்தங்களில் பலர் என் காலிலும், என்னருகே நின்ற பெண்ணின் காலிலும் ஏறி பயணம் செய்து, இனிதே அவரவர் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டனர். எனினும், பயணத்தில் ஏதோ ஓர் இறுக்கம் கலைந்தது போலிருந்தது. அனைவரும் அவ்விரு குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தோம். பல மணி நேர ரயில் பயணங்களைப் போலவே, சில நேர டவுன் பஸ் பயணங்களும் சில சமயங்களில் சிறப்பாக அமைந்து ஆச்சரியப்படுத்துகின்றன.

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

"Early முகூர்த்தம் வேற சீக்கிரம் போகனும்", வேகமாக நடந்தபடி பேசியதில் கொஞ்சம் மூச்சு வாங்கியது. எனினும் இதை அடிக்கடி என்னிடம் சொல்வதனால் என்னைக் கொஞ்சம் துரிதப்படுத்தலாம் என்று நினைத்ததாலோ என்னவோ அம்மா இதை அறுபதாவது முறையாகக் கூறினார்.

"பஸ் நம்பர் கரெக்டா கேட்டுண்டியா? என்னவோ இங்க வந்தா உன்ன நம்ப வேண்டியதா இருக்கு. ஊர்லயே கல்யாணத்த வெச்சிருக்கலாம். எங்க சொன்னா கேட்டாதானே? பஸ் நம்பர் என்ன?"

"266, 166, PP66"

"என்ன இவ்ளோ நம்பர் சொல்ற? இத்தன நம்பரா வெப்பா ஒரு பஸ்க்கு? இல்ல இத்தன பஸ் ஏறி இறங்கி போகனுமா?? இதெல்லாம் அவங்க சொல்லவே இல்லயே? பத்திரிக்கையிலேயும் வேற பஸ் ஸ்டாப் பத்தி தெளிவா போடல"

"இல்லம்மா. இந்த நம்பர் உள்ள பஸ் எல்லாம் போகும். எது கிடைச்சாலும் போகலாம்"

அதை அதிஷ்டம் என்பதா? துரதிஷ்டம் என்பதா எனத்தெரியவில்லை. 266 நின்றிருந்தது. கும்பல் கொஞ்சமல்ல அதிகமாகவே இருந்தது. முகூர்த்த நாள் என தனக்குத் தானே காரணம் சொல்லிக்கொண்டாள் அம்மா. அடுத்த பஸ்ஸில் போகலாமா என கேட்க நினைத்து அறுபத்து ஓராவது முறையாக அவள் அந்த புகழ்வாய்ந்த வசனத்தை சொல்வதோ, நான் கேட்பதோ கூடாது என நினைத்ததால் வார்த்தைகளை விழுங்கினேன்.

எல்லா Speed breakers மற்றும் ஒவ்வொரு ப்ரேக்கிற்கும் என் மீது சாய்ந்த உயரம் குறைவான, சற்று என்னைவிட வலுவான அந்த பெண்ணை மானசீகமாக மன்னித்தேன். எனினும், இதனால் செருப்பறுந்து போகுமென சிறிதும் நான் நினைக்கவில்லை.

"ஏன் ஒரு மாதிரி நடக்கற?"

"செருப்பு அறுந்து போச்சு", அழுகை வந்தது எனக்கு.

"இப்போ தானே ரெண்டு வாரத்துக்கு முன்னே வாங்கின? அதுக்குள்ள பிச்சிட்டியா? ஒரு பொருளையும் உருப்படியா வெச்சிக்காதே. கல்யாண வீட்டுக்கு போகும் போது இப்படி தான் வருவியா?"

அறுந்து போனாலும் அதை இழுத்துக்கொண்டே நடந்துவிடலாம் என்ற என் நம்பிக்கை அம்மா வார்த்தைகளின் முன் தோற்று போனது.

"உன் பொண்ணா? என்ன படிக்கறா? நல்லா இருக்கா. கால் சரியில்லையோ? அவ தாத்தா மாதிரி? கஷ்டம் தான். பாத்து இருந்துக்கோ. இந்த காலத்துல நல்லா இருக்கற பொண்ணுங்களுக்கே...."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மதினி. பஸ்ல வரும்போது அவ செருப்பு பிஞ்சு போச்சு அதான்".

அம்மா இந்த கதையை இன்னும் நான்கு பேரிடம் சொல்லியிருந்தால் சென்சுரி அடித்திருப்பாள். எல்லாருக்கும் ஒரு அவஸ்தையான புன்னகை பரிசளித்து கடைகளோ, அல்லது தைய்ப்பவரையோ தேடினேன். தேவையில்லாமல் செருப்புடன் நடப்பவர்கள் மீதும், புது செருப்பைக் காட்ட வந்த தங்கையின் மீதும் கோபம் வந்தது. வரும் வழி எல்லாம் சாப்பாட்டின் பெருமை சொன்னாள் அம்மா.

"நீ தான் எவ்ளோ கூப்பிட்டும் வரல, ஏன் உம்முன்னு இருக்க?"

செருப்புத்தைப்பவர் கண்களில் பட வேண்டும் வீடு சேர்வதற்குள் என வேண்டினேன். பசித்தது.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

18 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயி்ருக்கு ஸ்ரீமதி. நிகழ்வுகளை அழகாக சுவை குறையாமல் சொல்லியிருக்க

☀நான் ஆதவன்☀ said...

//"266, 166, PP66"//

எந்த ஊரு பஸ் இதெல்லாம்?

RaGhaV said...

:-)))

வி.என்.தங்கமணி, said...

அற்புதமான எழுத்துத் திறமை இருக்கு.
கொஞ்சம் கணமான விஷயத்தைக் கையிலெடுங்கள்.
வாழ்க வளமுடன்.

புனிதா||Punitha said...

பாவம்தான் ஸ்ரீ...நல்லவேளை நமக்கு அந்த அவஸ்த்தை வந்ததில்லை. காரிலேயே எக்ஸ்ட்ரா செருப்பு வச்சிருப்போம்ல.. :-)

கார்க்கி said...

கிகிகிகிகிகி

//நிகழ்வுகளை அழகாக சுவை //

செருப்பு பிஞ்சது அழகா? சுவையா? ஆவ்வ்வ்

ஸ்ரீமதி said...

// ☀நான் ஆதவன்☀ said...
நல்லாயி்ருக்கு ஸ்ரீமதி. நிகழ்வுகளை அழகாக சுவை குறையாமல் சொல்லியிருக்க//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

//☀நான் ஆதவன்☀ said...
//"266, 166, PP66"//

எந்த ஊரு பஸ் இதெல்லாம்?//

இந்த ஊர் பஸ் தான் :)))

ஸ்ரீமதி said...

// RaGhaV said...
:-)))//

:)))))))))))))

ஸ்ரீமதி said...

//வி.என்.தங்கமணி, said...
அற்புதமான எழுத்துத் திறமை இருக்கு.
கொஞ்சம் கணமான விஷயத்தைக் கையிலெடுங்கள்.
வாழ்க வளமுடன்.//

கண்டிப்பாக எழுத முயற்சிக்கிறேன். நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

//புனிதா||Punitha said...
பாவம்தான் ஸ்ரீ...நல்லவேளை நமக்கு அந்த அவஸ்த்தை வந்ததில்லை. காரிலேயே எக்ஸ்ட்ரா செருப்பு வச்சிருப்போம்ல.. :-)//

என்னக்கா பண்றது? சில சமயம் இப்படி ஆகிடுது.. :((

ஸ்ரீமதி said...

//கார்க்கி said...
கிகிகிகிகிகி

//நிகழ்வுகளை அழகாக சுவை //

செருப்பு பிஞ்சது அழகா? சுவையா? ஆவ்வ்வ்//

அண்ணா முதல் நிகழ்ச்சிய சொல்லிருப்பாருன்னு நினைக்கிறேன். :))

பிரசன்ன குமார் said...

//சிலர் சிரிப்புடனும், சிலர் சலிப்புடனும், சிலர் கவனிக்காதது போலவும், சிலர் கோவத்துடனும் பெற்றுக்கொள்வர்//

'வாங்கிக்க முடியாது போப்பா' என்று திட்டு (பல்பு) கூட வாங்கி இருக்கேன் :) நல்ல பதிவு..

ஸ்ரீமதி said...

//பிரசன்ன குமார் said...
//சிலர் சிரிப்புடனும், சிலர் சலிப்புடனும், சிலர் கவனிக்காதது போலவும், சிலர் கோவத்துடனும் பெற்றுக்கொள்வர்//

'வாங்கிக்க முடியாது போப்பா' என்று திட்டு (பல்பு) கூட வாங்கி இருக்கேன் :) நல்ல பதிவு..//

அச்சச்சோ அப்படியா? :)) நன்றி முதல் வருகைக்கு :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லாயிருந்தது.

ஆனா இதெல்லாம் முன்னாடி நடந்ததா? இப்போதான் வண்டியில் டிராப் பண்ண டிரைவர் இருப்பாரே.. :-))

Pradeep said...

மிகவும் நேர்த்தியான எழுத்து . . .
அதுவும் அந்த.. "பசித்தது" touching end. :)

ஸ்ரீமதி said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்லாயிருந்தது.

ஆனா இதெல்லாம் முன்னாடி நடந்ததா? இப்போதான் வண்டியில் டிராப் பண்ண டிரைவர் இருப்பாரே.. :-))//

நன்றி அண்ணா. :)) என்னது டிரைவரா?? சரிதான் :))))

ஸ்ரீமதி said...

//Pradeep said...
மிகவும் நேர்த்தியான எழுத்து . . .
அதுவும் அந்த.. "பசித்தது" touching end. :)//

நிஜமாவே பசித்தது ப்ரதீப் அதான்.. ;)) நன்றி வருகைக்கு :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது