இருத்தலின் விதி


கீச்சுக்குரலென ஆரம்பித்து
பெருங்குரலெடுத்து அழத்தொடங்கியிருந்தது,
மழை...
எங்கோ உள்ளங்கையில்...
சிறிது வானம்
சேகரித்திருக்கும் குழந்தை..
நீலக்குடையின் வெளியில் கை நீட்டி...
இங்கு இனி,
வாகன ஓட்டிகளின்
மனிதாபிமானங்கள் கேள்விக்குள்ளாகும்
சேறடித்தது செல்லும்போது...
விழும் துளிகளை கொஞ்சம் ஏந்தி
சொட்டு நீர் பாசனம் செய்யும்...
மண்ணுக்கு மரம்...
காக்கைக்கும், நரிக்கும்
கல்யாணம் செய்விக்க
கிழக்கில் உதிக்கும்...
துளியோடு கதிரவன்...
முகவரிகள் மாறிப்போகும்
தெருக்களுக்கு...
குடையோடு நடப்பவர்கள்
கனவான்களாவார்கள்...
சூடான பாப்கார்ன்களுடன்
மாலைப்பொழுதுகள் கழியும்..
மழையை சபித்தபடி....
இருத்தலின் இருப்பை உறுதிப்படுத்தும்
வேகம் இங்கெப்போதும்...
ஒவ்வொரு கண்களிலும்....
வெறும் மானுட இனம்....
திட்டிக்கொண்டே திரும்பிக்கொண்டேன்...
எனது திருப்பம் வந்ததும்
சரியாக,
மழையில் நனைந்துவிடாதபடி....
உலகை உய்விக்க
மழை வேண்டுமாம்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

24 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

இருத்தலின் விதி - நிதர்சன உலகிலிருந்து...!

நல்லா இருக்கு பாஸ்!

வி.என்.தங்கமணி, said...

அற்புதமுங்க, இனிமையும்,எளிமையும் ஆழமும்.
நன்றி. இவன் வி.என் தங்கமணி www.vnthangamani.blogspot.com

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமையா இருக்கு ஸ்ரீமதி!

கலக்கிட்டேள் போங்கோ!

RaGhaV said...

மழையில் மொத்தமாய் நனையவிடுகிறது.. :-)
அருமையான நடை..
Situational..!
நல்லாயிருக்கு ஸ்ரீ.. :-)

புனிதா||Punitha said...

அசத்தல் சிஸ்டர்..சொல்லிக் கொடுத்த மாதிரியே எழுதியிருக்கே :-))

SanjaiGandhi™ said...

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.

Karthik said...

ரொம்ப நல்லா இருக்கு. :)

Karthik said...

//இங்கு இனி,
வாகன ஓட்டிகளின்
மனிதாபிமானங்கள் கேள்விக்குள்ளாகும்
சேறடித்தது செல்லும்போது...

//காக்கைக்கும், நரிக்கும்
கல்யாணம் செய்விக்க
கிழக்கில் உதிக்கும்...
துளியோடு கதிரவன்...

//குடையோடு நடப்பவர்கள்
கனவான்களாவார்கள்...

S.U.P.E.R.B.

Karthik said...

உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. என் வலைப்பூவுக்கும் வாங்கோ! ;)

ஸ்ரீமதி said...

//ஆயில்யன் said...
இருத்தலின் விதி - நிதர்சன உலகிலிருந்து...!

நல்லா இருக்கு பாஸ்!//

நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

//வி.என்.தங்கமணி, said...
அற்புதமுங்க, இனிமையும்,எளிமையும் ஆழமும்.
நன்றி. இவன் வி.என் தங்கமணி www.vnthangamani.blogspot.com//

நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அருமையா இருக்கு ஸ்ரீமதி!

கலக்கிட்டேள் போங்கோ!//

நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

// RaGhaV said...
மழையில் மொத்தமாய் நனையவிடுகிறது.. :-)
அருமையான நடை..
Situational..!
நல்லாயிருக்கு ஸ்ரீ.. :-)//

நன்றி ராகவ். :))

ஸ்ரீமதி said...

// புனிதா||Punitha said...
அசத்தல் சிஸ்டர்..சொல்லிக் கொடுத்த மாதிரியே எழுதியிருக்கே :-))//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் அக்கா.. :)

ஸ்ரீமதி said...

//SanjaiGandhi™ said...
:)//

என்ன சிரிப்பு சின்ன புள்ளத்தனமா?? ;))

ஸ்ரீமதி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.//

:)))))))))வந்தேனே...

ஸ்ரீமதி said...

//Karthik said...
ரொம்ப நல்லா இருக்கு. :)//

நன்றி கார்த்திக் :))

ஸ்ரீமதி said...

// Karthik said...
//இங்கு இனி,
வாகன ஓட்டிகளின்
மனிதாபிமானங்கள் கேள்விக்குள்ளாகும்
சேறடித்தது செல்லும்போது...

//காக்கைக்கும், நரிக்கும்
கல்யாணம் செய்விக்க
கிழக்கில் உதிக்கும்...
துளியோடு கதிரவன்...

//குடையோடு நடப்பவர்கள்
கனவான்களாவார்கள்...

S.U.P.E.R.B.//

தாங்க்ஸ் :)))

ஸ்ரீமதி said...

//Karthik said...
உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. என் வலைப்பூவுக்கும் வாங்கோ! ;)//

நீயுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))

Vishnu... said...

அருமை பதிவு தங்கையே
எழுத்துநடை மிக அருமை ..

--
பிரியமுடன்
விஷ்ணு ..

திருப்பூர் மணி Tirupur mani said...

கவிதை..! ம்..ம் ...! சூப்பர் !

butterfly Surya said...

அருமையா இருக்கு ஸ்ரீ... வாழ்த்துகள்..

சுரேகா.. said...

இருத்தலின் விதி
இதயம் முழுக்க
ஆக்கிரமித்து
எப்போதும்
அசை போட வைக்கிறது..!

அருமையான படைப்பு!

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது