தலைப்பு யோசிச்சு நொந்துட்டேன்...

ஏற்கனவே தீபாவளி வாழ்த்துகள் பதிவு போட்டதுக்கே இது ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்துருக்க வேண்டிய பதிவுன்னு பல்ப் வாங்கியாச்சு.. இப்ப மறுபடியும் அதேதான்... கூடவே ஒரு விருதும்... அழைத்த ஆதவன் அண்ணாவுக்கு நன்றிகள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகள். :-))

1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

"தன் பெருமை தானறியாதவள்.." இதத்தவிர சொல்ல 1ம் இல்ல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :-))

2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

எல்லா தீபாவளியுமே எனக்கு மறக்கமுடியாதது தான். தனியா எதுவும் இல்ல.

3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

என் அம்மா, அப்பா இருந்த ஊர்ல.. ;-))

4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

இரவு பத்து மணி வரைக்கும் எவ்ளோ நேரம்(?!) வேணும்னாலும் இங்க தீபாவளி கொண்டாடலாம்....

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

வாங்கினது சரவணால, தச்சது வீட்டு பக்கத்துல இருந்த டைலர்கிட்ட...

6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

நிறைய செஞ்சாங்க அதெல்லாம் சொன்னா பதிவு பத்தாது.. அப்பறம் கண்ணுப்பட்டுடும்... ;-))

7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

ஃபோன்தான் இப்போல்லாம்..

8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

ரெண்டும் இல்ல.. வெடி வெடிப்பேன்...

9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இந்த தொடர்பதிவோட நோக்கமே இதுதான்னு நினைக்கிறேன்... இதுவரைக்கும் உருப்படியா எதுவும் செய்யாத எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. :-((

10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

கார்க்கி- http://www.karkibava.com/
கார்த்திக்- http://rainbowstreet-karthik.blogspot.com/
ஆதி அண்ணா- http://www.aathi-thamira.com/
நர்சிம் அண்ணா- http://www.narsim.in/

அடுத்து விருது வழங்கும் விழா.. ;-))

எனக்கு விருது கொடுத்த நான் ஆதவன் அண்ணாவுக்கு நன்றிகளும், நான் விருதை பகிரப்போகிற நால்வரும்...


கார்க்கி.
கார்த்திக்.
ஆதி அண்ணா.
நர்சிம் அண்ணா. (இவருக்கு முதல் முதல்ல விருது குடுக்கறது நான் தான்னு நினைக்கிறேன்.. பெருமையும் கூட...)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

35 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

☀நான் ஆதவன்☀ said...

//"தலைப்பு யோசிச்சு நொந்துட்டேன்..."//

ஹிஹி இதுக்கெல்லாம் அசரலாமா :)

☀நான் ஆதவன்☀ said...

//"தன் பெருமை தானறியாதவள்.." இதத்தவிர சொல்ல 1ம் இல்ல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :-))//

இந்த ஒன்னே போதும் தாயீ :)

கோவி.கண்ணன் said...

//9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?
//

கஷ்டப்பட்டு பலகாரங்கள் யாராவது செய்திருப்பார்கள், அதை சுவைத்து உதவி செய்தேன் என்று சொல்லி இருக்கலாம்.
:)

☀நான் ஆதவன்☀ said...

//2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

எல்லா தீபாவளியுமே எனக்கு மறக்கமுடியாதது தான். தனியா எதுவும் இல்ல.//

எந்த தீபாவளியா மறக்க முடியாததுன்னு கேட்டாங்க? ஏதாவது சம்பவம்னு தானே கேட்டுருக்காங்க?

☀நான் ஆதவன்☀ said...

//3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

என் அம்மா, அப்பா இருந்த ஊர்ல.. ;-))//

உங்க அம்மா அப்பா எந்த ஊர்ல கொண்டாடுனாங்கன்னு கேட்டா நீ கொண்டாடின ஊருன்னு சொல்லுவாங்களா? என்ன் கொடுமை இது? யாருமே எந்த ஊருன்னு சொல்ல மாட்டாங்களா?

☀நான் ஆதவன்☀ said...

//இரவு பத்து மணி வரைக்கும் எவ்ளோ நேரம்(?!) வேணும்னாலும் இங்க தீபாவளி கொண்டாடலாம்....//

அட! அது எந்த ஊரு? (மறுபடியும் வாழைப்பழ காமெடி மாதிரியா?)

ஜீவன் said...

//என் அம்மா, அப்பா இருந்த ஊர்ல.. ;-))//


அவங்க எந்த ஊருல இருந்தாங்க ?

(நான் இருந்த ஊருலன்னு சொல்ல கூடாது) ;;)

☀நான் ஆதவன்☀ said...

//வாங்கினது சரவணால, தச்சது வீட்டு பக்கத்துல இருந்த டைலர்கிட்ட...
//

ரைட்டு

☀நான் ஆதவன்☀ said...

//நிறைய செஞ்சாங்க அதெல்லாம் சொன்னா பதிவு பத்தாது.. அப்பறம் கண்ணுப்பட்டுடும்... ;-))//

அம்புட்டா???????சொல்லி எங்க வயிற்றெரிச்சலை கொட்டாம இருந்ததுக்கு நன்றி

☀நான் ஆதவன்☀ said...

//எனக்கு விருது கொடுத்த நான் ஆதவன் அண்ணாவுக்கு நன்றிகளும், //

ஓக்கே டன் :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

ரெண்டும் இல்ல.. வெடி வெடிப்பேன்...//

இந்த கேள்விக்கு பதில் ஆறாவது கேள்விக்கான பதிலில் இப்படி இருந்திருக்கனும்.

6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

நிறைய செஞ்சாங்க அதெல்லாம் சொன்னா பதிவு பத்தாது.. அப்பறம் கண்ணுப்பட்டு-டும்... ;-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

"தன் பெருமை தானறியாதவள்.." இதத்தவிர சொல்ல 1ம் இல்ல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :-)) //

தாங்க முடியலையே தங்கச்சி :)))))))))))))))

பிரபாகர் said...

// இதுவரைக்கும் உருப்படியா எதுவும் செய்யாத எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. :-((
//
உண்மையை ஒத்துக்கறது நல்லாருக்குங்க... நிறைய தகவல்கள்... நன்றிங்க....

RaGhaV said...

அட, ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்..

வாழ்த்துக்கள் ஸ்ரீ.. :-)

பித்தனின் வாக்கு said...

// ரெண்டும் இல்ல.. வெடி வெடிப்பேன்...//
அய்யே மனித வெடிகுண்டா? கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா. உங்களின் பதிவுகள் அனைத்தும் சரவெடிதான். நன்றி.

ஆயில்யன் said...

மீ த கம்மிங்க் 2 கும்மி ஒன்லி !

ஆயில்யன் said...

தலைப்பு யோசிச்சே நெந்த நீங்க ஒவ்வொரு பதிலுக்கும் எம்புட்டு யோசிப்பாங்க உங்க ரசிக கண்மணிகள்ன்னு ஏன் தங்கச்சி ஃபீல்பண்ணல???? :)

ஆயில்யன் said...

//1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

"தன் பெருமை தானறியாதவள்.." இதத்தவிர சொல்ல 1ம் இல்ல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :-))//

முரண்

பெருமைன்னு சொல்றீங்க !
1ம்மில்லன்னு சொல்றீங்க?

உடம்பு சரியில்லயா தங்கச்சி?

ஆயில்யன் said...

//2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

எல்லா தீபாவளியுமே எனக்கு மறக்கமுடியாதது தான். தனியா எதுவும் இல்ல./

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும் நீங்களா 1 யோசிச்சுக்கிட்டு சொல்லப்பிடாது! ஒ.கேய் :))))))

ஆயில்யன் said...

//2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

என் அம்மா, அப்பா இருந்த ஊர்ல.. ;-))//

வெரி பிரில்லியண்ட் கேர்ள் குட் :)

ஆயில்யன் said...

//. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

வாங்கினது சரவணால, தச்சது வீட்டு பக்கத்துல இருந்த டைலர்கிட்ட.../

தைச்ச பிறகு டைலர் கம்பெனியை மூடிட்டாரா? :)

கானா பிரபா said...

உங்க அப்பா அம்மா இருந்த ஊரு, நின்ற ஊருன்னு எல்லாம் சொத்து சேர்த்து வச்சிருக்கீங்களா பாஸ் பேஷ் பேஷ்

ஆயில்யன் said...

//உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

நிறைய செஞ்சாங்க அதெல்லாம் சொன்னா பதிவு பத்தாது.. அப்பறம் கண்ணுப்பட்டுடும்... ;-))//

நிறைய செஞ்சாங்க நான் உக்காந்து தின்னுக்கிட்டிருந்தேன்னு சொல்லும்போதே பாதி கண்ணு பட்டிருக்கும் :))))

ஆயில்யன் said...

//உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

ஃபோன்தான் இப்போல்லாம்../

அப்ப முன்னெல்லாம் ஒவ்வொரு ப்ரெண்ட்ஸ் வீடா தேடிப்போய் வாழ்த்து சொல்லிட்டுவந்தீங்களா?

ஆயில்யன் said...

//கானா பிரபா said...

உங்க அப்பா அம்மா இருந்த ஊரு, நின்ற ஊருன்னு எல்லாம் சொத்து சேர்த்து வச்சிருக்கீங்களா பாஸ் பேஷ் பேஷ்//

சைடு கேப்ல ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

கானா பிரபா said...

6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

நிறைய செஞ்சாங்க அதெல்லாம் சொன்னா பதிவு பத்தாது.//

ஓ அதைத்தான் வெடியா கூட பயன்படுத்தினீங்கன்னு பக்கத்து வீட்டுல சொன்னாப்ல

ஆயில்யன் said...

//தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

ரெண்டும் இல்ல.. வெடி வெடிப்பேன்...//

வெடிப்பேன் சொல்லி சிவகாசி விஜய் ஸ்டைல்ல ஒரு பில்ட் அப் கொடுத்திருக்கலாம்ல என்ன இப்படி சடார்ன்னு சொல்லிட்டீங்க!

ப்ரியமானவள் said...

பெண்களே.. இதுவும் சரிதானே

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

Karthik said...

எல்லா பதிலுக்கும் கும்மி அடிக்கலாம் போலிருக்கே!! ஏற்கனவே அடிச்சிட்டாங்க.. நான் ரிப்பீட்டிக்கிறேன்.. :))

//ஆயில்யன் said...

//. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

வாங்கினது சரவணால, தச்சது வீட்டு பக்கத்துல இருந்த டைலர்கிட்ட.../

தைச்ச பிறகு டைலர் கம்பெனியை மூடிட்டாரா? :)//

R.O.F.L.....:)))))))

ரிப்பீட்டேய்ய்ய்..

Karthik said...

மீ த தர்ட்டி.. விருதுக்கு நன்றி.. :)

கார்க்கி said...

நெம்ப நன்றி.... ஆனாலும் இன்னும் என்னென்ன சினானிம் வார்த்தைகள் கண்டுபுடிச்சு விருதுகள் கொடுக்க போறாங்களோ..

தொடர்பதிவுக்கு அழைத்த ஆட்களுக்கே விருதும் கொடுத்து வாயடைச்சிட்டியே நீ ஏன் அரசியல்ல சேரக் கூடாது? இளைஞர் பாசறை? கனிமொழி? அட ராகுல் காந்தி?

சரி சரி.. வெயிட் பண்ணு.. இப்போதைக்கு தளபதி அரசியல் ஐடியா இல்லையாம் :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

இப்போதான் அன்பே சிவம் முரளி எனக்கு இந்த விருதைத்தந்தார். அதைப்பார்த்துவிட்டு இங்கே வருகிறேன்.. நீங்களும்.!

உங்கள் அன்புக்கு நன்றி ஸ்ரீமதி.!

அப்புறம் தீபாவளி முடிஞ்சு இவ்வளவு நாட்களுக்குப்பின்னர் இதை எழுதியோடு அல்லாமல் இப்படி மற்றவர்களையும் கோர்த்துவிட்டிருக்கீங்களே.. என்ன அநியாயம் இது.?

நர்சிம் said...

தொடர அழைத்ததற்கும் விருதிற்கும் நன்றி..தொடர்கிறேன்.(எதுக்கு வம்பு..)

நிஜமா நல்லவன் said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...

1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

"தன் பெருமை தானறியாதவள்.." இதத்தவிர சொல்ல 1ம் இல்ல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :-)) //

தாங்க முடியலையே தங்கச்சி :)))))))))))))))/


Repeattttttttttttttt....!

ஸ்ரீமதி said...

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றிகள். :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது