காதலும் கற்று மற(?!)-2

காதலும் கற்று மற(?!)-1

"ரொம்ப திமிர் பிடிச்சவண்டி"

"ஹேய் இந்த சப்பாத்திய பாரேன் கீழ போட்டதும் உடைஞ்சிடிச்சு..."

"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீ என்ன பண்ணிட்டு இருக்க?"

"ஆமாண்டி யாருன்னே சொல்லாம காலைல இருந்து திட்டிட்டு இருக்க. யார்ன்னு கேட்டாலும் சொல்லமாட்ட.. இதுல நான் வந்து என்னத்த சொல்றது?"

"அவன் தான் அந்த சீனியர்.."

"அவன் என்ன சொன்னான்?"

"பிசாசே... பக்கத்துல தானே இருந்த? என்னமோ தெரியாதவ மாதிரி கேட்கற?"

"நிஜமாவே கவனிக்கல... சாரி டி... அவன் எவ்ளோ நல்லா இருந்தான்? ம்ம்ம் என்னை தான் பாக்கவேமாட்டேங்கறான்"

"ச்சீ ஜொள்ளு.."

"சரி சொல்லு.. அவன் அப்படி என்ன சொன்னான்?"

"அடுத்து நடக்க போற Thanks Giving Party-க்கு நான் புடவை கட்டிக்கிட்டு வரணுமாம்... நான் என்ன ட்ரெஸ் போடனும்னு முடிவு பண்ண இவன் யாரு... ரொம்ப திமிர் அவனுக்கு... எனக்கு கொஞ்சம் கூட அவன பிடிக்கல..."

"அப்ப சரி"

"என்னடி?"

"கூடிய சீக்கிரம் உனக்கு அவன பிடிச்சிடும்..."

"Will you plz stop this non-sense?"

"Calm down... சாதாரணமா சொல்ற மாதிரி தானே அவன் சொன்னான்? கட்றதா இருந்தா கட்டிக்கோ இல்லேன்னா விட்டடுடு.. என்ன சொல்ற?"

முறைத்துவிட்டு வேகமாக நடந்துசென்றுவிட்டாள்.

-oO0Oo-

"டேய் அந்த ஜீனியர் பொண்ணுக்கிட்ட அவ்ளோ நேரம் என்னடா பேசிட்டு இருந்த?", காலையிலிருந்து ஏதோ ஒரு நகைப்புடன் இருந்தவனை சீண்டிப்பார்த்தான் கணேஷ்.

"நீ சும்மா இருக்கமாட்டியா?"

"இந்த தினேஷ் எப்பவும் இப்படிதான் இவனும் பேசமாட்டான், நம்மளையும் பேசவிடமாட்டான். இவனும் பார்க்கமாட்டான், நம்மளையும் பார்க்கவிடமாட்டான்... நீ சொல்லு சத்யா"

"ம்ம்ம் அவள புடவை கட்டிட்டு வர சொன்னேன்... பார்ட்டி அன்னைக்கு"

"டேய் ஏன்டா?", கிட்டத்தட்ட அதிர்ந்த குரலில் வழியில் செல்லும் இருவர் திரும்பிப்பார்க்க போதுமான அளவு கத்தினான் தினேஷ்.

"ம்ம்ம் சும்மா தோனிச்சு... புடவ கட்டினா அவ இன்னும் அழகா இருப்பான்னு நினைச்சேன்... சொன்னேன்"

"அந்த பொண்ணு தப்பா நினைச்சிக்கிட்டா?"

"அது அவ இஷ்டம்... பிடிக்கலைன்னா கட்டிட்டு வரமாட்டா, பிடிச்சா கட்டிட்டு வருவா"

"எதடா?", என கணேஷ் கேட்பதை விசிலடித்தே ரசித்தவாறு பல்சரிடம் ஓடினான்.

-oO0Oo-

"ம்ம்ம் நல்லாதான் இருக்க", காலையிலிருந்து தன் முதல் புடவை அனுபத்துடன் கண்ணாடியிடம் தஞ்சம் புகுந்தவளை தன் பங்கிற்கு வம்பிழுத்தாள் மிருதுளா.

"ம்ம்ம் போதும் போதும்.. என்ன கிண்டல் பண்ணது.. நீ போய் ரெடியாகு..", கோவம் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் அவள் பேச்சை ரசிக்கவே செய்தாள்.

-oO0Oo-

"இன்னைக்கு எல்லார் பார்வையும் உன் மேல தான்..."

"கேட்டேனா?"

"சொல்ல வேண்டியது என் கடமை இல்லயா? முக்கியமா அந்த சீனியர் உன்னையே தான் பாக்கறான்"

"மிருதுளா..."

"ஓகே.. ஓகே"

-oO0Oo-

"எங்க போன இவ்ளோ நேரம்?"

"கோவிச்சிக்காதமா.. இன்னைக்கு சீனியர்ஸ்க்கு நாம தானே எல்லா Food items சர்வ் பண்ணனும் அதான் அந்த பக்கம் போய் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வந்தேன்"

"பொய் சொல்லாத"

"சரி விடு... சாப்டு பார்த்துட்டு வந்தேன் போதுமா? அப்பறம் இன்னொரு விஷயம்"

"என்னது?"

"அவன் பேரு எனக்கு தெரியுமே"

"எவன் பேரு?"

"ம்ம்ம் உன்ன ரொம்ப உரிமையா புடவ கட்டிட்டு வர சொன்னானே அவன் பேரு... கேட்டா நீ ரொம்ப ஆச்சரியபடுவ"

"என்ன பேரு?"

"சத்யா"

"சொல்லு"

"இல்லடி.. அவன் பேரும் சத்யா தான்."

"என்னது? நிஜமாவா சொல்ற?"

"நிஜமா தான். பட் முழு பேரு தெரியாது."

-oO0Oo-

"ம்ம்ம் தேங்க்ஸ்"

"எதுக்கு?"

"நான் சொன்னதும் புடவ கட்டிட்டு வந்ததுக்கு"

"சீனியர்ங்கறதுனால செஞ்சேன். மத்தபடி இத அட்வான்டேஜா எடுத்துக்க வேண்டாம்"

"ம்ம்ம்ம் அப்படின்னா?"

"அப்படின்னா... இனிமே நீங்க சொல்றதெல்லாம் செய்வேன்னோ, அல்லது வேற எப்படியுமோ நினைச்சிக்க வேண்டாம்"

"வேற எப்படி?"

"இப்படி கேள்வி கேட்கறத முதல்ல நிறுத்துங்க"

"அதெப்படிங்க முடியும்? நீங்க ஏதோ சொல்லவரீங்க, அது எனக்கு புரியல. புரிஞ்சிக்க கேள்வி கேட்கத்தானே வேணும்?"

"ம்ம்ம் உங்க ஃப்ரெண்ட்ஸ் இத சாக்கா வெச்சு, நீங்களோ, நானோ போகும் போதெல்லாம் "சத்யா, சத்யா"ன்னு கத்தறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல"

"உங்க பேர் என்ன?"

"சத்யா"

"வாட்?"

"ஏன்?"

"Nice to meet you"

"What?"

"என் பேரும் சத்யா'ங்க"

-oO0Oo-

"நான் ஏதோ இருக்கும்னு நினைச்சேன்டா.. பட் இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்ல"

"கொஞ்சம் புரியற மாதிரி பேசறியா?"

"அதில்ல மச்சி.. அந்த பொண்ண பாத்ததுமே எனக்குள்ள ஏதோ ஆச்சு.. ஆனா, இப்போ அந்த பொண்ணு பேரும் என் பேரும் ஒன்னுன்னு தெரிஞ்சதும்... எனக்கு அது கன்ஃபார்ம் ஆகிடிச்சு"

"எது?"

"அதாண்டா L..O..V..E" , அவன் நிறுத்தி சொன்னவிதம் அழகாக இருந்தாலும் அந்த வார்த்தை தினேஷுக்கு பிடிக்காததால் முகம் சுழித்தான்.

"நீயெல்லாம் படிச்சவன் தானே? எங்கேயாவது பேர் ஒன்னா இருந்தா உடனே காதல்ன்னு யாராவது பேத்துவாங்களா?", சூடாக வந்துவிழுந்த வார்த்தையில் கொஞ்சம் தடுமாறிதான் போனான் சத்யா. அதன் பிறகு அவளைப்பற்றி அவனிடம் பேசாது தவிர்த்தாலும், அவளுக்காக இவனெடுக்கும் பிரயத்தனங்கள் தினேஷிற்கு தெரியாமலில்லை.

அன்றும் அப்படித்தான்.....

-தொடரும்..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

17 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

சின்ன அம்மிணி said...

ஒகே. நல்லாத்தான் போயிட்டு இருக்கு :)

☀நான் ஆதவன்☀ said...

//சின்ன அம்மிணி said...

ஒகே. நல்லாத்தான் போயிட்டு இருக்கு :)//

ரிப்பீட்டே :)

சின்ன அம்மணி இந்த தொடரையும் படிக்கிறீங்களா :)

கார்க்கி said...

அந்த புடவை கட்டிக்கிட்டு வர சொன்ன மேட்டரு.. உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல..

திசம்பர் வேற வந்துடுச்சு.. இனிமேல் இந்த கதையை நன படிக்க மாட்டேம்ப்பா.. ஏன்னு எஸ்.கே வந்து சொல்லுவாரு

பூங்குன்றன்.வே said...

கதை கலக்கலா ஆரம்பம் ஆகுதுங்க. வார்த்தைகள் சுருக்கமாகவும், நன்றாக புரியும்படியும் உள்ளது. இப்படியே கதைய கொண்டு போனால் நல்ல படைப்பாக அமையும். வாழ்த்துக்கள்.

Jawahar said...

உரையாடல்கள் ரொம்ப இயற்கையா இருக்கு. என்னென்னமோ ஞாபகம் வருது. தலைப்பைப் படிச்சிட்டு நான் நினைச்சது,

'எதுக்காக மறக்கணும்?'

http://kgjawarlal.wordpress.com

சின்ன அம்மிணி said...

//சின்ன அம்மணி இந்த தொடரையும் படிக்கிறீங்களா ://

நல்லா இருக்க எதையும் விடறதில்லீங்க ஆதவன்.

கார்க்கி said...

// சின்ன அம்மிணி said...
//சின்ன அம்மணி இந்த தொடரையும் படிக்கிறீங்களா ://

நல்லா இருக்க எதையும் விடறதில்லீங்க ஆதவன்//

அம்மிணி அதனாலதான் கேட்கறாரு இதயுமா படிகறீங்கண்னு :))

மணி said...

ஆஹா ரெண்டு பேரும் ஒன்னா. வெரிகுட்

நாணல் said...

:) நல்லா போயிட்டிருக்கு ஸ்ரீமா... அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க...

laavanyaa said...

கடை ஊழியனுக்கும் புரியற உங்க எளிமையான நடை ரொம்ப அருமை...

மேன்மேலும் தங்கள் படைப்புகள் தொடரட்டும்....

-உங்கள் விசிறி

இவன் said...

Nice one... Pakkathula irundhu pakkura madhiri irukku... If possible ovaru scenelayum konjam surroundingsa explain panningana Vaali padathula vara madhiri appadiyea oru college padam manasula ottipom....

Nice going

Divyapriya said...

hmm nallaa irukku...
title paathaa kadhai ipdi irukkumonnu thonudhu...paappom :)

சின்ன அம்மிணி said...

//கார்க்கி said...

நல்லா இருக்க எதையும் விடறதில்லீங்க ஆதவன்//

அம்மிணி அதனாலதான் கேட்கறாரு இதயுமா படிகறீங்கண்னு :)//

ஸ்ரீமதி, இத இன்னும் நீங்க படிக்கலயா :)

Karthik said...

hey nice one...:) :)

☀நான் ஆதவன்☀ said...

//சின்ன அம்மிணி said...

//கார்க்கி said...

நல்லா இருக்க எதையும் விடறதில்லீங்க ஆதவன்//

அம்மிணி அதனாலதான் கேட்கறாரு இதயுமா படிகறீங்கண்னு :)//

ஸ்ரீமதி, இத இன்னும் நீங்க படிக்கலயா :)//

ஹி ஹி

புனிதா||Punitha said...

ஓ தொடரா...சுபம் போட்டப்பிறகு வந்து மொத்தமா படிக்கிறேன் :-))

ஆயில்யன் said...

// புனிதா||Punitha said...

ஓ தொடரா...சுபம் போட்டப்பிறகு வந்து மொத்தமா படிக்கிறேன் :-))//

சுகமான சுபமாக இருக்கும்போது மீ 2

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது