காதலும் கற்று மற(?!)-1

"All Girls are My Sisters, Except 'U' ".

படித்துக்கொண்டே வந்த தினேஷ் மோதிக்கொண்டான் அவன் மீது.

"டேய் என்னடா இது? என் மேல வந்து மோதற அதுக்கு..."

"ம்ம்ம் சொல்வ டா... என்னதிது? காலேஜ்க்கு வர லட்சணமா இது? ஒரு ஃபார்மல் போட்டுட்டு வரமாட்ட?"

"ஃபார்மலா? அப்படின்னா?", தினேஷ் சூடானான்.

"ஓகே.. ஓகே கோவிச்சுக்காதடா... இன்னைக்கு Freshers Day function தானே? ப்ரபோஸர்ஸ் யாரும் நம்மல கண்டுக்கமாட்டாங்கடா... அதோட இல்லாம நிறைய கேர்ள்ஸ் வருவாங்க.. அவங்க முன்னாடி போய் டை எல்லாம் கட்டிக்கிட்டு சேல்ஸ்மேன் மாதிரி நிக்க சொல்றியா? இப்படி ரகளையா ட்ரெஸ் பண்ணாதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்.. அதான் இப்படி.... எப்புடி?"

"எதாவது பண்ணித்தொலை", இடத்தை விட்டகன்றான் தினேஷ். விசிலடித்தபடியே புது மாணவர்களை வரவேற்க வாசல் நோக்கிச்சென்றான் சத்யா.

-o0O0o-

"ஹாய்! அம் மிருதுளா. நீங்க?"

"ஹாய்! அம் சத்யா."

"முழு பேரே சத்யா தானா?"

"ஏன்?"

"இல்ல. சாதாரணமா பசங்களுக்கு தான் சத்யான்னு வெப்பாங்க அதான் கேட்டேன்".

"ம்ம்ம்... சத்ய நாராயணி.. தான் முழு பேர்..."

"அப்பா... ரொம்ப பெரிசா இருக்கு. நான் சத்யான்னே கூப்பிடுறேன்".

-o0O0o-

"அந்த 'U' யாருங்கறது தான் அங்க பிரச்சனை".

"என்ன சொல்ற?"

"நீ பாக்கவே இல்லயா??"

"எத?"

"அப்போ நீ காலைல இருந்து அந்த ஸ்டேஜ தவிர வேற எதையுமே பாக்கலையா?"

"நீ என்ன பேசறன்னே புரியல".

"நம்ம சீனியர் ஒருத்தன் காலைல இருந்து இங்கயும், அங்கயும் அலைஞ்சிட்டு இருக்கான். அவன் T-shirt-ல "All girls are my sisters except 'U' "-ன்னு போட்டிருக்கு. அதுல தான் அந்த 'U' யாருங்கறது தான் பிரச்சனைன்னு சொன்னேன். ஏன்னா நான் படிச்சா என்னையும், நீ படிச்சா உன்னையுமில்ல பாயிண்ட் பண்ணும்?"

"ரொம்ப முக்கியமா இப்ப?"

"அப்போ நீ அவன கவனிக்கலன்னு கவலப்படற"

"ச்சே ச்சே இல்ல...."

"அப்போ நீ அவன் உன்ன கவனிக்கனும்ன்னு ஆசைப்படற"

"கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?"

-o0O0o-

இதுவரை குடும்பம் பிரிந்து வந்திராத நிலையும், தனிமையும் முதல் முதலாக சத்யா உணர்ந்தாள். ஹாஸ்டலில் அவளை விட்டு கிளம்பும்போது, இவள் கையில் விழுந்த அம்மாவின் கண்ணீர்த்துளி இன்னும் பிசுபிசுத்தது.

"ஏய்! என்ன சோகமா உட்கார்ந்திருக்க? அங்க பாரு, எங்க வீட்டுல என்ன கொண்டுவந்து இங்க தள்ளினத ஒரு விழாவா கொண்டாடிட்டு போறாங்க... ம்ம்ம்"

-o0O0o-

"ஹேய் இன்னைக்கு சீனியர்ஸ் நம்ம கிளாஸ்க்கு வராங்க", கிட்டத்தட்ட குதித்தபடி ஓடிவந்தாள் மிருதுளா. பொறியியல் படிப்பிற்கென்று இந்த பிரபலமான கல்லூரியில் சேர்ந்து அதற்குள் நான்கு வாரங்கள் ஓடியிருந்தன. விடுதியின் சமையலும் பழகி போயிருந்தது. சீனியர்கள் பற்றி மட்டும் புரியாத புதிராயிருந்தது. காரணம் அவர்கள் யாரும் இவர்களைத் தேடி இதுவரை வரவில்லை. முதல்நாள் விழாவின் போது பார்த்தது. இன்று எதற்கு இங்கு வரவேண்டுமென நினைத்தாள்.

"அவனும் வராண்டி..."

"எவன்?"

"சீனியர மரியாதை இல்லாம பேசாத".

"யாரு?"

"ம்ம்ம் Except 'U' பார்ட்டி..."

நிஜமாகவே மறந்திருந்தாள். ஆனால் வாழ் நாள் முழுவதும் அவனை மறக்காதபடி செய்வானென அவள் எதிர்ப்பார்க்கவில்லை....

-தொடரும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

14 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

தமிழ் பிரியன் said...

ஹைய்யா.. தொடர்கதை.. ம்ம் நடக்கட்டும்.

Pradeep said...

mmmh intresting.... அடுத்த அத்தியாயம் எப்பொழுது ?

RaGhaV said...

WOW..! ஆரம்பமே அழகாயிருக்கு.. :-)
சீக்கிரமா அடுத்த பதிவ எழுதுங்க.. :-)

சங்கர் said...

ஆரம்பமே நல்லாருக்கு, தொடருங்க,

ஆதிமூலகிருஷ்ணன் said...

தொடர்னாவே எனக்கு புடிக்காது.. ம் பாப்போம்.!

கணேஷ் said...

சூப்பர் லைன். பார்க்கலாம், எப்படி கொண்டு போகிறீர்கள் என்று :)

சின்ன அம்மிணி said...

நீங்களும் தொடர் எழுத ஆரம்பிச்சாச்சா. படிச்சர்றேன் :)

பிரசன்ன குமார் said...

//இதுவரை குடும்பம் பிரிந்து வந்திராத நிலையும், தனிமையும் முதல் முதலாக சத்யா உணர்ந்தாள். ஹாஸ்டலில் அவளை விட்டு கிளம்பும்போது, இவள் கையில் விழுந்த அம்மாவின் கண்ணீர்த்துளி இன்னும் பிசுபிசுத்தது.//



நானும் உணர்ந்து இருக்கிறேன் :) Am easily able to connect with the story..

நானும் வார இதழ்களில் வரும் தொடர் கதைகளை படிப்பதில்லை (இரண்டு வாரம் புத்தகம் வாங்க வில்லை என்றால் follow பண்ண முடியாது, அதனாலும்).. ப்ளாகில் அந்த பிரச்சினை இல்ல :)So continue..

மணி said...

நல்லா இருக்கு கதை , ஆனா கொஞ்சம் குழப்பமா இருகே

//
"எதாவது பண்ணித்தொலை", இடத்தை விட்டகன்றான் தினேஷ். விசிலடித்தபடியே புது மாணவர்களை வரவேற்க வாசல் நோக்கிச்சென்றான் சத்யா//
இங்கே சத்யா ஆண் என்று காட்டப்படுகிறது.

//"இல்ல. சாதாரணமா பசங்களுக்கு தான் சத்யான்னு வெப்பாங்க அதான் கேட்டேன்".

"ம்ம்ம்... சத்ய நாராயணி.. தான் முழு பேர்..."
//
இங்கே பெண்ணாகிவிட்டார் கொஞ்சம் விளக்குங்களேன்

கார்க்கி said...

@மணி,

இருவரின் பெயரும் சத்யான்னு வரும் சகா.. சரிதானே ஸ்ரீமதி?

Naveen said...

வணக்கம் ஸ்ரீமதி ,
உங்கள் எழுத்தை வெகு நாளாய் வாசித்து வருகிறேன்...
ஆரம்பம் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்..

☀நான் ஆதவன்☀ said...

ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் தொடர்பதிவா? :-)

கலக்கு ஸ்ரீமதி.

நாணல் said...

:) மீண்டும் கல்லூரி வாழ்க்கைக்கு போன மாதிரி இருந்தது...

Karthik said...

ஏரியா மாறி வந்துட்டேனோன்னு நினைச்சேன். :))

நல்லா இருக்கு, நெக்ஸ்ட் பார்ட் படிக்கப் போறேன்.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது