டல்லரசு
1 day ago

பட்டாம்பூச்சிகள் பிடிக்கும் கனவை
பாதியில் கலைத்து
லட்சம் பட்டாம்பூச்சிகளை என்னுள்
பறக்கவிட்டவள்...
வெள்ளை உடையணியா
காலெனும் இறக்கை
முளைத்த தேவதை,
நடைப்பழகும் நர்த்தனம்...
கள்ளச் சிரிப்பினில்
கவனம் சிதைத்திடுவாள்...
வார்த்தைகளற்ற மொழியில்
கோடிக்கவிதை அவளுள்,
அவளால் என்னுள்....
வானம் தூவும்
முதல் துளி அவள்
மழலை மொழி....
கைக்கடங்கும் உலகம்...
எனினும் தினம்
நான் அவளைச் சுற்றும்
அதிசயம் நிகழ்த்துபவள்...
காற்றுக்குமிழிக்கும் மூச்சுவாங்க வைக்கும்
சிரிப்புக்கு சொந்தக்காரி...
இரவும், பகலும் என்னுடன்
இமை போல் இருப்பாள்..
எனினும், இடையில் பிரிந்து
கொஞ்சம் வருத்துவாள்...
வந்துவிடுவாள் என அறிவேன்,
இருந்தும் காத்திருக்கிறேன்
குழந்தைப்பருவமும்,
குதிரை விளையாட்டும்
அவளால் மீண்டும் பெற....
Thursday, October 29, 2009
|
கனவு காண:
கவிதை,
கவிதை மாதிரி
|
22 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
படிக்க மென்மையா இருக்கு..
அற்புதமான வரிகள்.. :-)
ம்ம்
காலங்கள் மாறும்;
காட்சிகள் மாறும்;
கவிதைகளும் மாறும் ! :)
அழகு புகைப்படம்!
ம்ம்ம்ம் :)))
போட்டோ சுட்டதா? அழகா இருக்கு ஸ்ரீ.
சூப்பர்ப்.. :)
mmmmm....... :))
//இடையில் பிரிந்து
கொஞ்சம் வருத்துவாள்...//
ஃப்ளோல இந்த வரிகள் நல்லா இருந்தது..!
Pleasure reading !!
//Karthik said...
சூப்பர்ப்.//
டேய்..டேய்.. உன் போதைக்கு நாங்க ஊறுகாயா???????
:)
//பட்டாம்பூச்சிகள் பிடிக்கும் கனவை
பாதியில் கலைத்து
லட்சம் பட்டாம்பூச்சிகளை என்னுள்
பறக்கவிட்டவள்..
//
முதல் வரியிலேயே நீங்க ”பாஸ்” ஆகிட்டீங்க.
Good one..
அழகு.!
படமும் கவிதையும் அருமை ;))
//வந்துவிடுவாள் என அறிவேன்,
இருந்தும் காத்திருக்கிறேன்
குழந்தைப்பருவமும்,
குதிரை விளையாட்டும்
அவளால் மீண்டும் பெற....
//
:) Good one.. .Good Picture too
கவிதை நல்லா இருக்கு . வாழ்த்துக்கள் கடைசி நாலு வரிகளுக்கு !!!!
கவிதையின் ஒவ்வொரு வரியும் மனசுக்குள் மழையைத் தூவிச் செல்கிறது..படத்தேர்வு அருமை ஸ்ரீ
:-)
மிக அற்புதம். அந்த சிரிப்பும், மழலைக்கும் ஆயிரம் கவிதைகள் எழுதினாலும் முற்றுப் பெறாது. மிகச் சிறப்பான கவிதை. எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
நல்லா இருக்கு ஸ்ரீ.
'குழந்தைப் பருவம் மீண்டும் பெற..' - வேறொன்றையும் பெற வேண்டும் :)
அனுஜன்யா
குழந்தை புகைப்படமும்
குழந்தை கவிதையும் நல்லா இருக்கு
அப்புறமா வாழ்த்துக்களும்....
:)
கவிதை சூப்பர்.. இப்ப உங்களுக்கு பாராட்டுகள் சொல்லணுமா? வாழ்த்துகள் சொல்லணுமா? :))))
அருமையான வரிகள்.
ஸ்ரீ... பட்டாம் பூச்சி பிடித்த நாட்களை மறந்து இன்று எதை விரும்பியோ விரும்பாமலோ எதையோ துரத்தி கொண்டிருக்கிறோம்.
பெயருடனாவது இருக்கட்டுமே என்று தான் வைத்திருக்கிறேன்.
அருமையான கவிதை.
வாழ்த்துகள்..
Romba Arumayaa iruku..
Post a Comment