இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.....

வாழ்த்து சொல்வதுன்னு முடிவு பண்ணியாச்சு.. தீபாவளி முடிஞ்சாலும் விட்டுடுவோமா?? அதான் வந்துட்டேன்... எல்லோருக்கும் என் தாமதமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். :-))

என்னதான் பொங்கலுக்கும் புது ட்ரெஸ் எடுத்துக்கிட்டாலும், கரும்பு சாப்பிட்டாலும் இந்த தீபாவளிக்கு மட்டும் ஏதோ ஒரு சிறப்பு இருக்குங்கறது உண்மை தான். தீபாவளி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியும், அந்தந்த இடங்களுக்கு தனித்தனி தாத்பரியங்களும், அததுக்கு தனித்தனி கதைகள் சொல்லப்பட்டாலும் தீபாவளின்னாலே நமக்கு பலகாரம் தான்.. ஹி ஹி ஹி ;-)). இதை கொண்டாடும் விதங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமில்ல, வயதுக்கு வயதும் மாறுபடுது....

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அதைப் பத்தின பேச்சுகள் தொடங்கிடும் பள்ளிப்பருவங்களில்... கூடவே ஒரு நாள் லீவ் என்பதும் சந்தோஷத்த இரட்டிப்பாக்கும்... மாம்பழ கலர் பட்டுப்பாவாடையும், பச்சையோ அரக்குக் கலரோ பார்டரோடு, அந்த பார்டருக்கு மேட்சான சட்டை, அதுக்கு கைல பஃப் வெச்சு தச்சி, ஓரங்கள்ல மஞ்சள் கொஞ்சம் வெச்சு, நாம போட்டுக்கறதுக்காக ரெடியா இருக்கற அந்த பட்டுப்பாவாடைய, நாளுக்கு மூனு முறையாவது பீரோவ திறந்து பார்த்து, கசங்காம மடிச்சு வெச்சு, தொட்டு தொட்டு பார்த்துக்கறது ஒரு சுகம்னா, முதல் நாள் முழுவதும் ஊரெல்லாம் அலைஞ்சு மருதாணி இலைத்தேடி, சாயங்காலம் வாசல் உரல்ல கை சிவக்க, உரல் மணக்க, புளி, கொட்டைப்பாக்கு வெச்சு அம்மா அரைக்க, தண்ணி நிறைய ஊத்தினா நிறைய மருதாணி வரும்ன்னு நினைப்போட பக்கத்துல உட்கார்ந்து பாத்துக்கிட்டே இராத்திரி எப்போ வரும், நம்ம கை எப்போ சிவக்கும்ன்னு காத்திருக்கறதும் ஒரு சுகம்...

மருதாணி வெச்சு கையெல்லாம் குளிர்ல விறைத்தாலும் பிடிவாதமா இரவு முழுக்க வெச்சிருந்து காலைல யார் கை அதிகம் சிவந்திருக்குன்னு சண்டைப்போட்டுக்கிறதும் சுகம் தான்.. :-))

தீபாவளியும் அமாவாசையும் ஏன் தான் சேர்ந்து வருதோன்னு திட்டிக்கிட்டே, விடியகாலை அம்மா எழுப்ப "அம்மா ப்ளீஸ் ஃபைவ் மினிட்ஸ் மா" என்பதற்குள் அண்ணன் பட்டாசு வெடிக்க ஆரம்பித்திருப்பான். நம் பங்கு போய்விடும் என பாதித் தூக்கம் போயிருக்கும். மஞ்சள், மிளகு, வத்தல் மிளகாய் போட்டு காய்ச்சிய சூடான எண்ணெய் தலையில் சுர்ர்ர்ர்ர்ரெனும் போது மீதி தூக்கமும் பறந்திருக்கும்...

குளித்து புது ட்ரெஸ் போட போகிறோம் என்கிற ஆவல் கண்ணில் விழும் சீகைக்காயையும் பொருட்ப்படுத்தாது... வெடிவெடித்து, சாமிகும்பிட்டு, வெடிவெடித்து
கோவிலுக்கு சென்று , வெடிவெடித்து, பலகாரம் கொஞ்சம் சாப்பிட்டு (அது என்னவோ தீபாவளி அன்னைக்கு பலகாரம் சாப்பிடவே பிடிக்காது.), பாவாடையில் கொஞ்சம் பட்டாசால் ஓட்டை போட்டு, அது தெரியாமல் மறைத்து, தெரிந்த பின் முழித்து... அடுத்த நாள் திரும்ப ஸ்கூல் எனும் போது காய்ச்சலில் இரவு கழிந்து... அப்பப்பா...

இப்படி கொண்டாட ஆரம்பித்த தீபாவளி தான் வளர, வளர நமக்கு நாமே திட்டம் போல "அம்மா நானே ட்ரெஸ் செலெக்ட் பண்றேன்"-ல தொடங்கி, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ அந்த சுடிதாரை போட்டிருந்து, உடனே நைட்டியோ அல்லது நைட் ட்ரெஸ்கோ மாறி "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" பார்த்து, கொஞ்சம் வெடித்து என மாறி...

அடுத்த ஓரிரு வருடங்களில் ஹைதையிலோ, மைசூரிலோ அல்லது பெங்களூரிலோ ட்ரைனிங்க் அல்லது வேலைகளுக்கு இடையில் 10 மணிவரைத் தூங்கி, " அம்மா ஹாப்பி தீவாளி மா, பட்டாசு வாங்கியாச்சா, ம்ம் முறுக்கு எனக்கும் கொஞ்சம் எடுத்து வை.. வந்து சாப்பிடுவேன்.. ஓகே பை மா" என்பதோடு முடியும்...

"புது ட்ரெஸ் எடுத்துக்கோயேன்"

"போ மா போன வாரம் தானே வாங்கினேன்."

"அத தான் சொல்ல சொல்ல கேட்காம போட்டுட்டியே.. இப்போ வாங்கிக்கோ".

"அம்மா இந்த சுடிதார் பாரேன் குந்தன் வொர்க்கோட, அழகா இருக்கு, ஜஸ்ட் 5000 தான், ப்ளீஸ் மா வாங்கிக்கிறேன்... " என போத்தீஸின் வாசலில் முடியும் தீபாவளிகளும்,

"இது தான் உன் தீபாவளி புடவை, பட்டாசெல்லாம் வாங்கியாச்சு, சாஸ்த்திரத்துக்கு வெடிச்சிட்டு வா" வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமே முடியும் தீபாவளிகளும் உண்டு.. :-)))

எப்படி இருப்பினும் தீபாவளி தீபாவளி தான்... ஒவ்வொரு முறை கேட்கும், சொல்லப்படும் நரகாசுரன் கதை அழகு தான்... :-)))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

24 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

R.Gopi said...

ஸ்ரீம‌தி....

தீபாவ‌ளி ப‌திவு லேட்டா வந்தாலும், லேட்ட‌ஸ்டா வந்திருக்கு....

பதிவு படிக்க ஆரம்பிச்சது மாதிரிதான் இருக்கு... ஆனால், படபடவென்று 10,000 வாலா போல, வெடிக்க ஆரம்பித்து முடிந்தது...

நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்...

(என் குறிப்பு : லேட்டா வந்தாலும், என் தீபாவளி சிறப்பு பதிவிற்கு வந்து பரிசு பெற்று சென்றமைக்கு என் நன்றி...)

நாடோடி இலக்கியன் said...

நல்ல சுவாரஸ்யம் ஸ்ரீமதி.

போன வாரத்தில் போஸ்ட் செய்திருக்கலாம்.

ஆயில்யன் said...

//வெடிவெடித்து, பலகாரம் கொஞ்சம் சாப்பிட்டு (அது என்னவோ தீபாவளி அன்னைக்கு பலகாரம் சாப்பிடவே பிடிக்காது.),//

நம்பிட்டேன்!

ஆயில்யன் said...

//எப்படி இருப்பினும் தீபாவளி தீபாவளி தான்... ஒவ்வொரு முறை கேட்கும், சொல்லப்படும் நரகாசுரன் கதை அழகு தான்... :-)))//

ரசித்தேன்!

ஆயில்யன் said...

//சாயங்காலம் வாசல் உரல்ல கை சிவக்க, உரல் மணக்க, புளி, கொட்டைப்பாக்கு வெச்சு அம்மா அரைக்க, தண்ணி நிறைய ஊத்தினா நிறைய மருதாணி வரும்ன்னு நினைப்போட பக்கத்துல உட்கார்ந்து பாத்துக்கிட்டே இராத்திரி எப்போ வரும், நம்ம கை எப்போ சிவக்கும்ன்னு காத்திருக்கறதும் ஒரு சுகம்..//

நினைத்துப் பார்க்கிறேன் !

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலை தீபாவளி வாழ்த்துக்கள் மேடம்

ரசிச்சு ருசிச்சு எழுதியிருக்கீங்க பதிவு.

butterfly Surya said...

{தலை} தீபாவளி வாழ்த்துகள்..

ஸ்ரீ.. தீபாவளிக்கு ஊருக்கு போயிட்டு வந்தாச்சா..??

கார்ல்ஸ்பெர்க் said...

//நம் பங்கு போய்விடும் என பாதித் தூக்கம் போயிருக்கும்//

//வெடிவெடித்து, சாமிகும்பிட்டு, வெடிவெடித்து
கோவிலுக்கு சென்று , வெடிவெடித்து, பலகாரம் கொஞ்சம் சாப்பிட்டு//

//பாவாடையில் கொஞ்சம் பட்டாசால் ஓட்டை போட்டு, அது தெரியாமல் மறைத்து, தெரிந்த பின் முழித்து//

- :)))

//அடுத்த ஓரிரு வருடங்களில் ஹைதையிலோ, மைசூரிலோ அல்லது பெங்களூரிலோ ட்ரைனிங்க் அல்லது வேலைகளுக்கு இடையில் 10 மணிவரைத் தூங்கி, " அம்மா ஹாப்பி தீவாளி மா, பட்டாசு வாங்கியாச்சா, ம்ம் முறுக்கு எனக்கும் கொஞ்சம் எடுத்து வை.. வந்து சாப்பிடுவேன்.. ஓகே பை மா" என்பதோடு முடியும்//

- மிகச் சரியான வார்த்தைகள்..

☀நான் ஆதவன்☀ said...

தலை தீபாவளி வாழ்த்துகள் ஸ்ரீ :) நல்லா அனுபவிச்சு தான் எழுதியிருக்க. ஆனா ரெண்டு வாரத்துக்கு முன்ன வந்திருக்க வேண்டியது.

☀நான் ஆதவன்☀ said...

//"இது தான் உன் தீபாவளி புடவை, பட்டாசெல்லாம் வாங்கியாச்சு, சாஸ்த்திரத்துக்கு வெடிச்சிட்டு வா" வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமே முடியும் தீபாவளிகளும் உண்டு.. :-)))//

இந்த தீபாவளி இப்படி இல்லையே? :)

அனுஜன்யா said...

ஹாப்பி தலை தீபாவளி வாழ்த்துகள். அடுத்த தீபாவளிக்கு ஒரு 'வாலும்' பிறந்திருக்கும் :)

அனுஜன்யா

Saravana Kumar MSK said...

//அனுஜன்யா said...
ஹாப்பி தலை தீபாவளி வாழ்த்துகள். அடுத்த தீபாவளிக்கு ஒரு 'வாலும்' பிறந்திருக்கும் :)//

Rippeettu.. :)))

சின்ன அம்மிணி said...

தீபாவளி வாழ்த்துக்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்க வீட்டுல என்ன பலகாரம்!?

தல(தலை) தீபாவளி, வருசை(வரிசை) எல்லாம் பலமா வந்திருக்குமே!

வாழ்க வளமுடன்!

கார்க்கி said...

//ஜஸ்ட் 5000 தான்,//

ஆவ்வ்வ்.. நீங்களாம் அவங்களா மேட்ட்ட்ட்டம்?

புனிதா||Punitha said...

சுவாரஸ்யமான அனுபவம்.. :-)

தாரணி பிரியா said...

தலை தீபாவளி பதிவா இருக்குமுன்னு வந்தேன். நல்ல ரசிச்சு கொண்டாடி இருக்கிங்க. நான் அதை ரசிச்சு படிச்சேன்

RaGhaV said...

Belated தலை தீபாவளி வாழ்த்துக்கள்.. :-))

ஸ்ரீமதி said...

கோபி அண்ணா நன்றி. :))

இலக்கியன் அண்ணா நன்றி. நானும் நினைச்சேன். ஆனா அப்போ எழுத நேரம் கிடைக்கல.. :((

நன்றி ஆயில்யன் அண்ணா. :))

நன்றி அமித்து அம்மா. சும்மாவா தீபாவளி எல்லாம் அவ்ளோ கொண்டாட்டமா இருக்கும் எங்களுக்கு.. இப்போ, "நாளைக்கு தீபாவளி".. "என்னது தீபாவளி வந்துடுச்சா? சொல்லவே இல்ல?" இந்த ரேஞ்ச்ல தான் இருக்கு.. :))

நன்றி சூர்யா அண்ணா. :)) ரொம்ப பிஸியா ஆளே பார்க்க முடியறதில்ல? :)) ஊருக்கு போயிட்டு வந்துட்டேன் அண்ணா. :))

நன்றி அருண். :)) எவ்ளோ நல்ல பேரு அத விட்டுட்டு வெச்சிருக்கற பேர பாரு கார்ல்ஸ்பெர்க்காம் டைப்பவே நாலு மணி நேரமாகுது. :P

நன்றி ஆதவன் அண்ணா. :))இந்த தீபாவளி அப்படி இல்ல.. பட் இன் ஃபூச்சர் மே பி... ஹி ஹி ஹி ;))

நன்றி அனுஜன்யா அண்ணா. எப்பவாவது வர வேண்டியது... இப்படி ஒரு குண்ட தூக்கிப்போட்டுட்டு போயிட வேண்டியது... அண்ணிகிட்டயே சொல்றேன் இருங்க... ;)))

இதுல ரிப்பீட்டு வேற... நன்றி சரவணா. :))

நன்றி அம்மணி அக்கா. உங்களுக்கும் என் வாழ்த்துகள். :))

ஜோதி அண்ணா நிறைய பண்ணாங்க. தூக்க முடியாம தூக்கிட்டு வந்தேன்.. ;))

எவங்களாஆ மேடம்?? கார்க்கி கிர்ர்ர்ர்ர்...

நன்றி புனிதா அக்கா. :))

நன்றி தாரணி அக்கா. :)))

நன்றி ராகவ். உங்களுக்கும் என் தாமதமான தீபாவளி நல் வாழ்த்துகள். ஹோப் யூ என்ஜாய்ட் எ லாட். :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸ்பெஷலான இந்த தீபாவளி எப்படின்னு சொல்லவேயில்லையே.. வாழ்த்துகள் ஸ்ரீமதி.

Karthik said...

:))))

ராத்திரி மறுபடி படிக்கலாம்னு இருக்கேன். எங்க ஹாஸ்டல்ல கொசுத் தொல்லை ஜாஸ்தியாயிடுச்சு. :)))))

Madhavan said...

hai
very frankly 2 say i don't no how 2 write "kavithai" i just write what i see in my life every day.

na kirkunathaum "kavithai" nu accept panna unga periya manasuku romba thannnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnsssssssssssssssssssssssssss.

innum neraya eruku konjam wait pannunga en sister publish pannuva.!!

ennaku blog ezuthura alavuku knowledge ella so inntha blog la ennoda "kirukala" publish panna en sis.. request panren


once again thanks 2 all and my sister

Rajalakshmi Pakkirisamy said...

:) :) :)

அபி அப்பா said...

தல தீபாவளி வாழ்த்துக்கள்!

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது