விளையும் பயிர்...

வற்றிப்போன ஆறுகளின்
மேல் புதிய பாலம்
நம்பிக்கை!


கவிதை சத்தியமா என்னோடதில்ல... பின்ன யாரோடது? கண்டுபிடிங்க... பதிவோட கடைசில சொல்றேன். ;-))


'என் புருஷனும்(sorry for the language :-( ) கச்சேரிக்கு போறான்'னு நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் நாலு மாசம் ஆச்சு. இதுவரைக்கும் உருப்படியா எதாவது எழுதினேனா தெரியல... இதுல நிறைய எழுதனும்ன்னு நினைச்சு பாதியோட நின்ற பதிவுகள் இன்னும் ட்ராஃப்ட்ல தூங்குது... அதுக்கு எப்போ மோட்சம்ன்னு தெரியல...

சிறுகதை பட்டறைக்கு போலைன்னாலும் நர்சிம் அண்ணாவோட இந்த பதிவ படிச்சதுனால புனைவு எழுதவும் பயமா இருக்கு... நாம எதாவது எழுதி நக்கீரர்கள் நெற்றிக்கண்ண தொறந்துட்டா என்ன பண்றது?? ;-))

சரி கவிதைங்கற பேர்ல வழக்கம் போல மொக்கை போடலாம்னா, 'மறுபடியும் போஸ்ட் மார்டனிஸமா?? அவ்வ்வ்வ்வ்'-ன்னு கார்த்திக் அழறான்.

பதிவே போட வேண்டாம்ன்னு முடிவு பண்ணா கார்க்கி இப்படி போட்டு கொல்றாரு.

ஹ்ம்ம்ம் தீபாவளி வாழ்த்து பதிவு மட்டும் போட்டுட்டு, அத ஷெட்யூல் பண்ணி வெச்சிட்டு எஸ் ஆகலாம்ன்னு கணினி முன்னாடி உட்கார்ந்தா ஃபோன்...

"ம்... சொல்லு" (தெரிஞ்சவங்களா இருந்தா, ஹலோ கிடையாது..)

"எப்படி இருக்க?"

"என்ன திடீர்ன்னு?"

"ஹி ஹி ஹி... சும்மா தான்"

"ம் இருக்கேன்..."

"உன் ப்ளாக் எல்லாம் எப்படி போகுது?" இந்த கேள்விக்கப்பறம் தான் எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்தது. ஏன்னா இவங்க சாதாரணமா என் ப்ளாக் பத்தி கவலைப்படாதவர், அதுவும் இல்லாம நான் இதுல நேரம் ரொம்ப செலவழிக்கறதா என் அம்மாகிட்ட போட்டுக்கொடுத்த புண்ணியவான்.

"என்ன விஷயம் சொல்லு?"

"எனக்கு ஒரு கவிதை தோணிச்சு, நீதான் ப்ளாக் வெச்சிருக்கியே? அதுல போடேன் ப்ளீஸ்...."

"என்ன???????"

"சொல்லவா?"

"இத போட்டேதான் ஆகனுமா?"

"நான் ஈவினிக் வந்து பார்ப்பேன். அது உன் ப்ளாக்ல இருக்கனும். எழுதிக்கிட்டியா?"

"டேய் நிஜமாவே போடனுமா?"

"ஆமாம். Bye".

பிசாசு... எவ்ளோவோ சொன்னேன் கேட்கல.. அதான் இங்க போட்டுட்டேன். வர்ட்டா? அது யார்ன்னு இன்னும் சொல்லனுமா?? வேற யார்? என் கூட பொறந்த பாசமலர் 'மாதவன்' தான் அது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இன்னும் வேற நிறைய கவிதை இருக்கு... அப்பப்ப சொல்றேன்னு சொல்லிருக்கான். நான் ப்ளாக மூடிடலாம்ன்னு ப்ளான்ல இருக்கேன்.. ;-)))))

டிஸ்கி: நான் இத போடலேன்னா அவனே ப்ளாக் ஆரம்பிக்கும் அபாயம் இருக்கு.

டிஸ்கி1: பாரேன் அவனும் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டான். க்ரேட்!!( நான் எனக்கு சொன்னேன்.)

டிஸ்கி2: தலைப்பு இன்னுமா புரியல?

டிஸ்கி3: டிஸ்கி 2 இருக்கறதால இது டிஸ்கி 3-ஆ போச்சு... ஹி ஹி ஹி :-D.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

32 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

கார்க்கி said...

உனக்கு கவிதை எழுதற திறமை எப்படி வந்துச்சுன்னு இப்பதான் தெரியுது.. ரைட்டு

மாதவன், மின்னலே போல சூப்பர் ஓப்பனிங்.. அப்படியே புது பிளாக் ஆரம்பிச்சு, பல கவிதைகள் எழுதி,ஸ்ரீயவிட நல்ல கவிஞர்ன்னு பேரு வாங்கி, உயிர்மையில் எல்லாம் வந்து ஃபேமஸாகி... ஸப்பா முடியல..

வாழ்த்துகள் மாதவன்..

தமிழ் பிரியன் said...

Me the 2 nd

கோபிநாத் said...

வாழ்த்து சொல்ல பயமாக தான் இருக்கு இருந்தாலும் வாழ்த்துகள் மாதவன் :)

கோபிநாத் said...

\\நான் ப்ளாக மூடிடலாம்ன்னு ப்ளான்ல இருக்கேன்.. ;-)))))
\\

எப்போ..!? எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?எப்போ..!?

தமிழ் பிரியன் said...

Vaazththukkal madhavan anna .

தமிழ் பிரியன் said...

//"gopi said.... " eppo? Eppo ? // Repeeeeaaaattteeeeee

ஜீவன் said...

;;))

RaGhaV said...

//இன்னும் வேற நிறைய கவிதை இருக்கு...//

அப்படி போடு அரிவாள..

வாழ்த்துக்கள் மாதவன்.. :-)))

ஆயில்யன் said...

எண்ட மாதவா?!!!!!!!!!!

ஆயில்யன் said...

// தமிழ் பிரியன் said...

Vaazththukkal madhavan anna .///

என்னது அண்ணாவா? ஐயகோ என் காதில ஈயத்தை காச்சி ஊத்திறீகளே டமில்பிரியன்!!!!

☀நான் ஆதவன்☀ said...

//மாதவன், மின்னலே போல சூப்பர் ஓப்பனிங்.. அப்படியே புது பிளாக் ஆரம்பிச்சு, பல கவிதைகள் எழுதி,ஸ்ரீயவிட நல்ல கவிஞர்ன்னு பேரு வாங்கி, உயிர்மையில் எல்லாம் வந்து ஃபேமஸாகி... ஸப்பா முடியல..

வாழ்த்துகள் மாதவன்.//

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடபோறாங்க மாதவா... உசார் :)

☀நான் ஆதவன்☀ said...

//டிஸ்கி1: பாரேன் அவனும் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டான். க்ரேட்!!( நான் எனக்கு சொன்னேன்.)//


ஆகா செட்டு சேர்ந்துட்டாங்களேப்பா செட்டு சேர்ந்துட்டாங்களே...

☀நான் ஆதவன்☀ said...

//டிஸ்கி3: டிஸ்கி 2 இருக்கறதால இது டிஸ்கி 3-ஆ போச்சு... ஹி ஹி ஹி :-D.//

ஜாக்கிரதை.... (நான் எனக்கு சொன்னேன் ஸ்ரீ)

புனிதா||Punitha said...

:-)

Karthik said...

//கார்க்கி said...
உனக்கு கவிதை எழுதற திறமை எப்படி வந்துச்சுன்னு இப்பதான் தெரியுது.. ரைட்டு

மாதவன், மின்னலே போல சூப்பர் ஓப்பனிங்.. அப்படியே புது பிளாக் ஆரம்பிச்சு, பல கவிதைகள் எழுதி,ஸ்ரீயவிட நல்ல கவிஞர்ன்னு பேரு வாங்கி, உயிர்மையில் எல்லாம் வந்து ஃபேமஸாகி... ஸப்பா முடியல..

வாழ்த்துகள் மாதவன்..//

ரிப்பீட்டேய்ய்ய்...

முதல் வார்த்தையை மட்டும் 'உங்களுக்கு'னு மாத்திக்கவும்.. :)

Karthik said...

கவிதை மட்டுமில்லை.. தங்கமணிகள் இம்சை பத்தி நிறைய எழுதுறாங்க.. தங்கைகள் இம்சை பத்தியும் எழுதவேண்டியிருக்கு, நிறைய.. சீக்கிரம் ப்ளாக் ஆரம்பிக்க சொல்லுங்க. :))

கானா பிரபா said...

எந்தா இது மாதவா

R.Gopi said...

ஆஹா... சோடி சேந்துட்டாங்கய்யா... சோடி...

எனிவே...மாதவனுக்கு வாழ்த்துக்கள்...

ஸ்ரீமதி... தீபாவளி பதிவு எழுதியிருக்கிறேன்... பதிவின் முடிவில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கு...

வாங்க... வந்து அந்த சஸ்பென்ஸ் என்னன்னு பாருங்க.... மறுக்காதீங்கோ..

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...
http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அட!

இப்படியும் எழுதுங்க.

இரா.சிவக்குமரன் said...

சரிதான்!!!???

சின்ன அம்மிணி said...

தலை தீபாவளி வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

:)

கார்க்கி said...

பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லுங்க மேடம்.. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்..

பித்தனின் வாக்கு said...

இம்ம் உங்களுக்காக உங்க ஆத்ம திருப்திக்காக நீங்க என்ன நினைக்கிறிர்களே அதை நீங்கள் எழுதுங்கள். அடுத்தவர்கள் என்ன நினப்பார்கள் என்று எழுதினால் நாங்கள் உங்களைப் புரிந்து கொள்ள முடியாது அல்லவா. மன்னிக்கவும், நீங்க எனக்கு சீனியர். நான் அறிவுரை கூற முடியாது.

நான் சமையல் பதிவுகளில் பல வித்தியாசமான வகைகளை கூறி இருக்கின்றேன். நேரம் கிடைக்கும் போது படித்து செய்து பார்க்கவும். நன்றி.

jackiesekar said...

இதுல நிறைய எழுதனும்ன்னு நினைச்சு பாதியோட நின்ற பதிவுகள் இன்னும் ட்ராஃப்ட்ல தூங்குது... அதுக்கு எப்போ மோட்சம்ன்னு தெரியல...//

எனக்கும் அது போஙல் நிறைய நண்பா..

நாணல் said...

:))

நாணல் said...

:))))

கவிக்கிழவன் said...

முத்து

Dinesh C said...

Onnum solradhukillai!

kavidhani nandru!

ஸ்ரீமதி said...

கார்க்கி எனக்கு அப்பறம் தானே எழுத ஆரம்பிச்சிருக்கான்.. அப்பறம் எப்படி எனக்கு அவன்கிட்ட இருந்து வந்ததுன்னு சொல்றீங்க?? ;))

தமிழ் அண்ணா வாட் ஈஸ் திஸ்? :))

பயப்படாதீங்க கோபி. :)) ஆச தோச அப்பளம் வட... இப்போ கிடையாது உங்களுக்கு விடுதலை.. ;))

நன்றி ஜீவன் அண்ணா :))

நன்றி ராகவ். :)))

நன்றி ஆயிஸ் அண்ணா. :))

நன்றி ஆதவன் அண்ணா. :))

புனிதா அக்கா என்ன வெறும் ஸ்மைலி மட்டும்?? :))

கார்த்திக் நீ எழுதேன்... அவன எழுத சொன்னா அது சிந்துபாத் கத மாதிரி ஆகிடும்... ;)))

நல்லா கேளுங்க கானா அண்ணா. :))

நன்றி கோபி :))

நன்றி ஜோதி அண்ணா :)) எழுதிட்டா போச்சு.. படிக்க நீங்க ரெடின்னா.. :))

சிவாண்ணா என்ன ஆச்சு?? :)))

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துகள் அம்மணி அக்கா. :))

நிஜம்ஸ் அண்ணா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

இங்க சீனியர், ஜீனியர் எல்லாம் கிடையாது பித்தன். நல்லது யார் சொன்னாலும் கேட்டுப்பேன் :)). நன்றி.:))

அப்போ நீங்களும் எழுதுங்க சேகர் :))

யக்கா என்ன சிரிப்பு?? :)) நன்றி நாணல் அக்கா. :))

கவிக்கிழவன், தினேஷ் நன்றிகள் :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

மாதவன், மின்னலே போல சூப்பர் ஓப்பனிங்.. அப்படியே புது பிளாக் ஆரம்பிச்சு, பல கவிதைகள் எழுதி,ஸ்ரீயவிட நல்ல கவிஞர்ன்னு பேரு வாங்கி, உயிர்மையில் எல்லாம் வந்து ஃபேமஸாகி... ஸப்பா முடியல..

வாழ்த்துகள் மாதவன்..

Madhavan said...

hai
very frankly 2 say i don't no how 2 write "kavithai" i just write what i see in my life every day.

na kirkunathaum "kavithai" nu accept panna unga periya manasuku romba thannnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnsssssssssssssssssssssssssss.

innum neraya eruku konjam wait pannunga en sister publish pannuva.!!

ennaku blog ezuthura alavuku knowledge ella so inntha blog la ennoda "kirukala" publish panna en sis.. request panren


once again thanks 2 all and my sister

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது