ஏழ் பிறவிக்கும்....


தாவணிகளை எட்டித்தொட்ட
நாட்களில் துவங்கியது...
குழந்தைப் பருவம் முழுவதும்
உதிர்ந்திராத காலம்...
மனதில் கிளந்தெழுந்த
ஆவலுடன் முதல் நாள்
எனத் தொடங்கி,
திருநீற்றுத் தீற்றலுடன்,
கொஞ்சம் குங்குமமும்
எனக்கான பிராத்தனைகளும்
என வளர்ந்து...
தேர்வுகளும், சில நமக்கான
பரிட்சைகளும் என
முற்றுப்பெற்றன மூன்றாண்டுகளும்...
இனியும் தொடரும் என
உறுதியளித்தாய்...
பணி நிமித்தம் பிரியமாட்டோம்
என சூளுரைத்தாய்...
ஆயிற்று வருடங்கள் மூன்று...
ஏதோ ஒரு நிறுவனத்தின்
பொருளாதாரத்தை
உயர்த்த நானும்,
குடும்பத்தின் வாழ்க்கைத்தரம்
உயர்த்த நீயும் என
சராசரிகளாகிக் கொண்டிருந்தோம்....
தகவல் தொழில் நுட்பங்கள் எதுவும்
கைக்கொடுக்கவில்லை நமக்கு,
உன்னிடம் பகிரவும்,
என்னிடம் பகர்க்கவும்
பலவுண்டு நம்மிடம்....
சந்திப்புகள் கைக்கூடிய நேரத்தில்...
கணத்தில் பார்வைகளில்
பெற்றுக்கொண்டாய் உனக்கான
என் வார்த்தைகளை...
அப்படியே நானும்...
பெண்களின் நட்பு
பிறந்தகம் வரைக்கும்தானாம்..
தூற்றுபவர்கள் தூற்றட்டும்...
இருந்துவிட்டு போகட்டும்,
ஏழ் பிறவிக்கும் நம் நட்பு....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

28 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

புதுகைத் தென்றல் said...

அருமை ஸ்ரீமதி

வாழ்த்துக்கள்

Raghav said...

அருமை அருமை !!

தலைப்பைப் பார்த்தவுடன் உறவினைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.. எற்றைக்கும் ஏழேல் பிறவிக்கும், கண்ணா உன் உறவு வேண்டும் என்ற ஆண்டாள் வரிகள் ஞாபகம் வருகிறது.

ஆயில்யன் said...

நட்பின் பெருமை அருமை!

//பெண்களின் நட்பு பிறந்தகம் வரைக்கும்தானாம்..//

பெண்களுக்கு மட்டும் உரித்தான சோகமன்று ! - பகிர்ந்துக்கொள்கிறோம் எங்களின் சோகங்களும் இது போலவே என்று ...!

ஆயில்யன் said...

போட்டோ நல்ல செலக்‌ஷன் ! காலேஜ்ல டிராயிங்க் கிளாஸ்ல டிராயிங்க் டேபிளை சுத்திக்கிட்டு 4 பேர் நின்னுக்கிட்டு ஊர்கதை பேசியது ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது :(((

கார்க்கி said...

அருமை..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல கவிதை ஸ்ரீமா !

//பெண்களின் நட்பு பிறந்தகம் வரைக்கும்தானாம்..//

எதைத்தான் பொதுவில் வைத்தார்கள், நாம் தொடங்கி வைக்கும் நட்பினை மட்டும் பொதுவில் வைக்க :(

இழப்பிற்கென்றே ஒரு பிறப்பு

சந்தனமுல்லை said...

hmmm...:(

R.Gopi said...

//னக்கான பிராத்தனைகளும்
என வளர்ந்து...//

இது என்ன‌??

//பணி நிமித்தம் பிரியமாட்டோம்
என சூலுரைத்தாய்...//

"சூளுரைத்தாய்" என்ப‌தே ச‌ரி...

//ஏதோ ஒரு நிறுவனத்தின்
பொருளாதாரத்தை
உயர்த்த நானும்,
குடும்பத்தின் வாழ்க்கைத்தரம்
உயர்த்த நீயும் என
சராசரிகளாகிக் கொண்டிருந்தோம்....//

வாவ்... சூப்ப‌ரா எழுதி இருக்கீங்க‌ ஸ்ரீம‌தி ...

//உன்னிடம் பகிரவும்,
என்னிடம் பகர்க்கவும்
பலவுண்டு நம்மிடம்....//

நெடு நாட்க‌ளுக்கு பார்க்கும் போது, க‌ண்க‌ள் மட்டுமே பேசி... வார்த்தை எதுவுமின்றி நாம் ஊமையாவோம்...

//சந்திப்புகள் கைக்கூடிய நேரத்தில்...
கணத்தில் பார்வைகளில்
பெற்றுக்கொண்டாய் உனக்கான
என் வார்த்தைகளை...
அப்படியே நானும்...//

ப‌டிக்கும் போது காட்சி ம‌ன‌க்க‌ண்ணில் விரிகிற‌து ஸ்ரீம‌தி...

//பெண்களின் நட்பு
பிறந்தகம் வரைக்கும்தானாம்..
தூற்றுபவர்கள் தூற்றட்டும்...
இருந்துவிட்டு போகட்டும்,
ஏழ் பிறவிக்கும் நம் நட்பு//

ம்ம்... ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌ ஸ்ரீம‌தி... வாழ்த்துக்க‌ள்...

☀நான் ஆதவன்☀ said...

இந்த பதிவுல மொத்தம் மூனு கவிதை இருக்கே ஸ்ரீமதி. மூனுமே அழகா இருக்கு :)

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு ஸ்ரீ!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

னக்கான பிராத்தனைகளும்//

அப்படின்னா என்ன தாயி!?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

என சூலுரைத்தாய்//

இது என்ன சூல்?

வசூலா?

இப்ப எதும் தேர்தல் வரலையே?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பெண்களின் நட்பு
பிறந்தகம் வரைக்கும்தானாம்..
//

யார் சொன்னது?

:(

சிந்தனை நன்று!

ராமலக்ஷ்மி said...

வெகு அருமை.

//பெண்களின் நட்பு
பிறந்தகம் வரைக்கும்தானாம்..//

:(!

சிலபேருடன் இன்னும் தொடர்கிறது நட்பென்றாலும் //தகவல் தொழில் நுட்பங்கள் எதுவும்கைக்கொடுக்கவில்லை// சிலபேர் இருக்குமிடம் தெரிந்திடக் கூட:(!

//இருந்துவிட்டு போகட்டும்,ஏழ் பிறவிக்கும் நம் நட்பு....//

இருக்கவேண்டும், என் வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

பிரியமுடன்...வசந்த் said...

நல்லாருக்குங்க..

சின்ன அம்மிணி said...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னமாதிரி எழுத்துப்பிழையை மட்டும் சரிசெஞ்சாச்சுன்னா அருமை.

சுரேகா.. said...

நீங்க எதை எழுதினாலும் ஹிட்டுதான்..!
:)

அதேபோல்..

ஹிட்டாத்தான் எழுதுறீங்க!

வாழ்த்துக்கள் !

நாணல் said...

ஹ்ம்ம் பலதையும் நாம இழக்க வேண்டியிருக்கு...அதுல இதுவும் ஒன்னு... :((

கவிதை அழகு...

//உன்னிடம் பகிரவும்,
என்னிடம் பகர்க்கவும்
பலவுண்டு நம்மிடம்....//

அருமை..

ஸ்ரீமதி said...

நன்றி புதுகைத் தென்றல் அக்கா. :))

நன்றி ராகவ் அண்ணா.(கொஞ்சமாவது பாசுரங்களுக்கு ரிலேட்டடா இருந்தாதான் இந்த பக்கம் வருவீங்களா?? :)))

நன்றி ஆயில்யன் அண்ணா. (பழைய ஞாபகங்கள கிளறிட்டேனா??)

நன்றி கார்க்கி.

நன்றி அமித்து அம்மா. (உண்மை தான்).

நன்றி சந்தன முல்லை அக்கா.

நன்றி கோபி அண்ணா. (சாரி எடிட்டிங்க்ல 'எ' போயிடிச்சு.. :(( ).

நன்றி ஆதவன் அண்ணா. (அதான் அம்மா கிட்ட ரெகமெண்ட் பண்றேன்னு சொல்லிட்டேன்ல? அப்பறம் என்ன? :)) ).

நன்றி அருணா அக்கா. (எங்க போயிட்டீங்க?).

நன்றி ஜோதி அண்ணா. (அவ்வ்வ்வ்வ் :)) ).

நன்றி லஷ்மிம்மா. (முதல் வருகை? சந்தோஷமா இருக்கு.. :)) ).

நன்றி கோபி.(சென்ஷி அண்ணா எங்க?:) ).

நன்றி வசந்த். :))

நன்றி அம்மணி அக்கா. (சரி செஞ்சுட்டேன்.. இப்ப அருமையான்னு பார்த்து சொல்லுங்க.. ;))) ).

நன்றி சுரேகா அண்ணா. (அப்படியா? :)) எப்படி எழுதினாலும் நீங்க வரதில்லையே.. :(( ).

நன்றி நாணல் அக்கா.

பித்தனின் வாக்கு said...

//பெண்களின் நட்பு
பிறந்தகம் வரைக்கும்தானாம்.//
யார் சொன்னது. நல்ல நட்பு எப்போதும் தொடரலாம். காலம் முழுவதும் கை கொடுக்கும் நட்பு. காலத்தின் கோலத்தால் புதுப் புது உறவுகளால்,நட்புகளால் பழைய நட்பை சிதைப்பது நாம் தான் தவிர பிறர் அல்ல.
//இருந்துவிட்டு போகட்டும்,ஏழ் பிறவிக்கும் நம் நட்பு.//
எனக்கு இருக்க வேண்டும் என
பித்தன்.

Karthik said...

S.U.P.E.R.B. O.N.E.

//சராசரிகளாகிக் கொண்டிருந்தோம்....

this is what i fear most in life..

ரௌத்ரன் said...

ஏழ் பிறவியா....?

நீங்க ரொம்ப நல்லவங்க ;))

ஆமா..இந்த போட்டோவுல உள்ள அக்காலாம் யாருங்க? ;)

புனிதா||Punitha said...

hmmmm

ஆரூரன் விசுவநாதன் said...

//உன்னிடம் பகிரவும்,
என்னிடம் பகர்க்கவும்
பலவுண்டு நம்மிடம்....
சந்திப்புகள் கைக்கூடிய நேரத்தில்...
கணத்தில் பார்வைகளில்
பெற்றுக்கொண்டாய் உனக்கான
என் வார்த்தைகளை...
அப்படியே நானும்...//

வாய்விட்டு பேசுவதைவிட சில நேரங்களில் இந்தப் பார்வை பலவற்றையும் சொல்லும்.

வாழ்த்துக்கள்

RaGhaV said...

//னக்கான பிராத்தனைகளும்//
இதுவே பொருத்தமா இருந்ததுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. :-))

மிக மிக அற்புதமான கவிதை..
அதுவும் கரு.. பின்னல்..
நல்லா இருக்கு ஸ்ரீ.. :-)))

butterfly Surya said...

அருமை ஸ்ரீ..

அமி அம்மா..? cool plz..

தமிழன்-கறுப்பி... said...

சரி சரி..

நல்லாருங்க தோழிகளே...

:)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது