சினிமாவும், நானும்...


பதிவுக்கு தலைப்பு 'சினிமாவும், நானும்'-ஐ விட 'தியேட்டரும், நானும்' பொருத்தமா இருக்கும்... ஏன்னா வீட்ல சினிமா பார்க்கிற பழக்கம் இல்ல.. "யாரு பாப்பா மூனு மணி நேரத்த இதுக்காக வேஸ்ட் பண்ணுவா?"-ன்னு அப்பா பார்க்கமாட்டார். முறையே, அம்மாவுக்கு சமையல்கட்டு, அண்ணாவுக்கு கிரிக்கெட்டு, எனக்கு ரேடியோவில் பாட்டு. சினிமாங்கறதுக்கும் எங்களுக்கும் அப்போ ரொம்ப தூரம், இப்பவும் தான். சினிமா பிடிக்காது என்பதாலோ என்னவோ அதோடு தொடர்புடைய பாப்கார்ன்னும் பிடிக்காது.. ;-)))

டிவி ரொம்பவே பரிச்சயமாகாத பால்யத்தில், என் பாட்டி வீட்ல BPL Black & White டிவி இருந்தது. ஒரு விடுமுறைக்கு ஊருக்கு போன போது அதுல 'படகோட்டி' படம் பார்த்ததா ஞாபகம். படம் பார்க்கும் போது நிறைய கேள்வி கேட்டதால என் தாத்தா "இனி கேள்வி கேட்கமாட்டேன், பேசாம படம் பார்ப்பேன்னு சொல்லு படம் போடறேன்"-னு டிவிய ஆஃப் பண்ணிட்டார். அதோட சரி நிறுத்திட்டேன்... படம் பார்க்கறத இல்ல... கேள்வி கேட்கறத.. அப்பறம் சுதந்திர தினத்துக்கு ஒவ்வொரு வருஷமும் மறக்காம போடற 'ரோஜா' படம் பார்ப்பேன். ரொம்ப நாள் அது எதுக்கு போடறாங்கன்னே தெரியாது. எல்லாரும் பார்க்கிறாங்க சரி நாமலும் பார்க்கலாம்ன்னு தான் பார்த்தேன்.

முதல் முதல்ல எங்க வீட்டுக்கு டிவி வந்த போது நான் 9வது படிச்சிட்டு இருந்தேன். அம்மா பயங்கர எதிர்ப்பு, ஏன்னா அண்ணா அப்போ பத்தாவது, அடுத்த வருஷம் அவளும் பப்ளிக் எக்ஸாம் எழுதனும் வேண்டாம்னாங்க... நாங்க தான் நிறைய பொய் சொல்லி சமாளிச்சு டிவி வாங்கினோம்... வாங்கிட்டோமே ஒழிய அத பார்க்க யாருக்கும் நேரம் இல்ல. ஏன்னா அப்பா அலோவ் பண்ண டைம் எங்களுக்கு ஒத்து வரல... நாங்க கேட்ட டைம் அப்பா ஒத்துக்கல... இப்படியே போச்சு.. புது டிவிய தொடைக்கறது மட்டுமே என் வேலையா இருந்தது அப்போ... :-(( (என்னடா இது சினிமா, தியேட்டர்ன்னு சொல்லிட்டு அத பத்தி ஒன்னும் சொல்லாம இருக்கேனேன்னு பார்க்கறீங்களா? இனிதான் சப்ஜெக்டே வருது.)

இப்படியே வளர்ந்ததுனால சினிமா மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்ல. ஆனா அதுக்கப்பறம் நான் வந்த இடம் காலேஜ்... அதுவும் முதல் நாளே எனக்கு ஏழரை ஆரம்பிச்சாச்சு என் சீனியர் ரூபத்துல... வழக்கமான பேர் என்ன?, ஊர் என்ன? கேள்விகளுக்கு பிறகு பொழுதுபோக்கென்ன கேள்விக்கான என்னுடைய புத்தகம் என்ற பதில் அந்த அக்காவுக்கு பிடிக்கல... "ஹே!! இங்க பாருங்கடி படிப்ஸ... நான் கேட்டது பொழுது போக என்ன செய்வ?".. 'போக்குவதற்கல்ல பொழுது; ஆக்குவதற்கே பொழுது'-ன்னு தேவையில்லாம வைரமுத்து கவிதை எல்லாம் வேற ஞாபகத்துக்கு வந்து தொலைஞ்சது... அவங்களே நாலு சாய்ஸ் குடுத்து இதுல ஒன்னு சொல்லுன்னாங்க அதில் சினிமா மட்டும்தான் சொல்ற மாதிரி இருந்தது... :-( சரின்னு நானும் கஷ்ட்ட்ட்ட்டப்பட்டு சினிமான்னேன்... ஏன் இத மொதல்லயே சொல்லலன்னு அவங்க கோவமாகி, நான் பார்க்கறதில்லன்னு கத சொல்ல வேண்டியதாகி... அப்பறம் வந்த பல மொக்கைப்படங்களுக்கு என்னையும் அவங்க கம்பெல் பண்ணி கூட்டிக்கிட்டு போனது தனிக்கதை...

அது தவிர ஃப்ரெண்ட்ஸோட போயி எங்க காலேஜ் செகரட்டரிக்கிட்டயே மாட்டிக்கிட்டது, இன்டர்வியூன்னு பொய் சொல்லி படத்துக்கு போயிட்டு வந்தது, யுனிவர்சிட்டி எக்ஸாம்க்கு முதல் நாள் படம் பார்த்தது, கிளாஸ் ஃபுல்லா கட்டடிச்சிட்டு 'மொழி' படத்துக்கு போயிட்டு 100 ரூபா ஃபைன் கட்டினது (டிக்கெட் 50 ரூபா), அழுது அடம்பிடிச்சி அம்மாவ 'குஷி' படத்துக்கு கூட்டிட்டு போகச் சொல்லி, அதுல வந்த ஒரு பாட்டுக்காக அம்மா என்ன இன்னமும் திட்டினது, கடைசியா எங்கூட வேலை செய்த பெண், வேலைவிட்டு போனதுக்கு ட்ரீட் குடுத்து படத்துக்கும் கூட்டிட்டு போனபோது நான் என் ஐடி கார்ட் காமிச்சிட்டு உள்ள போக ட்ரை பண்ண எல்லாரும் சிரிச்சி, நான் வழிஞ்சி என என் தியேட்டர் அனுபவங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு இருந்தாலும் ரொம்பவே சுவாரஸ்யமானவை.


டிஸ்கி: ஏனோ தெரியல எனக்கு கொஞ்சநாளா கொசுவத்தி பதிவு போடனும்ன்னு ஆசையா இருந்தது. அதான் இப்படி கொஞ்சம் பொருத்தருள்க. எனினும் இது போன்ற பதிவு இனித் தொடராது எனக்கூறிக்கொ(ல்)ள்கிறேன். ;-)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

28 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Karthik said...

me the first! :)

Karthik said...

ஹா..ஹா. :)))))

RaGhaV said...

இதைவைதே ஒரு கவிதை எழுதிபோட்டிருக்கலாம்.. :-)

//படத்துக்கும் கூட்டிட்டு போனபோது நான் என் ஐடி கார்ட் காமிச்சிட்டு உள்ள போக ட்ரை பண்ண//

Super Comedy.. :-)

Saravana Kumar MSK said...

//கடைசியா எங்கூட வேலை செய்த பெண், வேலைவிட்டு போனதுக்கு ட்ரீட் குடுத்து படத்துக்கும் கூட்டிட்டு போனபோது நான் என் ஐடி கார்ட் காமிச்சிட்டு உள்ள போக ட்ரை பண்ண எல்லாரும் சிரிச்சி, நான் வழிஞ்சி//

உச்சக்கட்டம், ஸ்ரீ.. செமையா சிரிச்சேன்.. :))))))))

G3 said...

:)))))))))))))))))))))

[வழக்கமாய் பதிவு புரியாமல் போடும் ஸ்மைலி அல்ல இது என்பதை தெளிவாக கூறிக்கொ(ல்)ள்கிறேன். ;-)]

ஆயில்யன் said...

//இனி கேள்வி கேட்கமாட்டேன், பேசாம படம் பார்ப்பேன்னு சொல்லு படம் போடறேன்"-னு டிவிய ஆஃப் பண்ணிட்டார்/

அடி ஆத்தி...!

பாவம் வயசான காலத்துல அவரையும் டென்ஷனாக்கிட்டீயாப்பா! :)))

ஆயில்யன் said...

//நான் 9வது படிச்சிட்டு இருந்தேன். அம்மா பயங்கர எதிர்ப்பு//


ம்ம் அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு எங்க இந்த புள்ள படிச்சு என்னாத்த செய்யப்போவுது அப்படின்னு பூடகமா சொல்லிப்பார்த்திருப்பாங்க புரிஞ்சுகிடல அதான் எதிர்த்துட்டாங்க போல....!

ஆயில்யன் said...

//ஏன்னா அண்ணா அப்போ பத்தாவது, அடுத்த வருஷம் அவளும் பப்ளிக் எக்ஸாம் எழுதனும் வேண்டாம்னாங்க...///

மாதவன் கன்பார்மா பாஸ் ஆகிடுவாரு ஆனா நீங்க தேறமாட்டீங்க அப்படின்னு ஒரு தீர்க்கதரிசனம் பாருங்க ! அம்மா தி கிரேட் :)))

ஆயில்யன் said...

//.(என்னடா இது சினிமா, தியேட்டர்ன்னு சொல்லிட்டு அத பத்தி ஒன்னும் சொல்லாம இருக்கேனேன்னு பார்க்கறீங்களா? இனிதான் சப்ஜெக்டே வருது.) //

ம்ஹுக்கும் பாதி பேரு எப்பவோ போயிட்டாங்க அட்லீஸ்ட் இந்த மேட்ட்ரை டிஸ்கியா டாப்புல போட்டிருக்கலாம்ல :(((

ஆயில்யன் said...

//இப்படியே வளர்ந்ததுனால சினிமா மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்ல///

ஆமாம் டிவி பார்த்திருந்தாமட்டும் அப்படியே காந்தம் மாதிரி வைச்சு ஈர்த்திருக்குமாக்கும் சினிமா? !:))

ஆயில்யன் said...

//யுனிவர்சிட்டி எக்ஸாம்க்கு முதல் நாள் படம் பார்த்தது, கிளாஸ் ஃபுல்லா கட்டடிச்சிட்டு 'மொழி' படத்துக்கு போயிட்டு 100 ரூபா ஃபைன் கட்டினது//

என்னாது....?? என்னமோ 1990 ஸ்டோரி சொல்லிக்கிட்டிருக்கீங்களேன்னு கேட்டா டக்குன்னு 2007 படம் உள்ளாற வந்து போவுது ஒழுங்கா டைம்லைன் பார்த்து சொல்லணும்!!!

ஆயில்யன் said...

//ஏனோ தெரியல எனக்கு கொஞ்சநாளா கொசுவத்தி பதிவு போடனும்ன்னு ஆசையா இருந்தது.///

ஒ அப்ப சரி !
கண்டினியூ தங்கச்சி கண்டினியூ!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நா அவ்வளவா படம்பாக்குறதில்லை..னு சொல்லவேண்டிய ஒற்றை வரியை என்னாமா எழுதிருக்கிங்க.. அவ்வ்..

Mageshwaran S said...

// நான் என் ஐடி கார்ட் காமிச்சிட்டு உள்ள போக ட்ரை பண்ண //

I did this once... :)

Muthusamy Palaniappan said...

suparu

ரௌத்ரன் said...

//ஏனோ தெரியல எனக்கு கொஞ்சநாளா கொசுவத்தி பதிவு போடனும்ன்னு ஆசையா இருந்தது.//

பதிவா..அய்யோ நான் இல்ல..எஸ்கேப்.

:))

நிஜமா நல்லவன் said...

:))))

இரா.சிவக்குமரன் said...

/// இது போன்ற பதிவு இனித் தொடராது எனக்கூறிக்கொ(ல்)ள்கிறேன். ;-)///

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு?!
:)

பித்தன் said...

கொசுவத்தி நல்லாதான் இருந்தது, எனக்கும் சினிமா பிடிக்காது, ஆனா பாப்கார்ன் பிடிக்கும். ஏன்னா அதுதான் கம்மியான காசுல ஒரு ஒரு நாள் ஆட்டம்(கிரிகெட்) முடியறவரை வரும். அதுவும் வறுத்த கடலையும்தான் மாட்ச் பாக்க நல்ல காம்பினேசன். ஆமா பிளாக்ல டிக்கட் வாங்குனத ஏன் எழுதலை.

பித்தன் said...

கரையேரக் கனவுகளில் இது திரையோரக் கனவுகளா. சரி. குசி படப்பாடலில் திட்டு வாங்கியது, இதுபோல எங்க அக்கா பெண்ணு கட்டபொம்மன் படத்திற்கு திட்டு வாங்கினா.
வீட்டுக்கு வீடு வாசப்படி, ஆன படந்தான் திருந்த மாட்டிங்குது, அடுத்த தடவை திட்டினா நேரா இயக்குனருக்கு லைன போட்டுக் குடுக்கனும்.

கோபிநாத் said...

\\ G3 said...
:)))))))))))))))))))))

[வழக்கமாய் பதிவு புரியாமல் போடும் ஸ்மைலி அல்ல இது என்பதை தெளிவாக கூறிக்கொ(ல்)ள்கிறேன். ;-)]
\\

இந்த பின்னூட்டம் நல்லாயிருக்கு ;))

புனிதா||Punitha said...

உன்னுடைய சினிமா கொலை சுவாரஸ்யமாய் இருந்தது தங்கச்சி :-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))

நல்லாத்தான் இருக்கு, ஆமா இப்போ லேட்டஸ்ட்டா ஏதாச்சும் புது படம் பார்த்து இருப்பீங்களே. அத சொல்லவே இல்ல :)))))))))))

நாணல் said...

//ஆயில்யன் said...
//யுனிவர்சிட்டி எக்ஸாம்க்கு முதல் நாள் படம் பார்த்தது, கிளாஸ் ஃபுல்லா கட்டடிச்சிட்டு 'மொழி' படத்துக்கு போயிட்டு 100 ரூபா ஃபைன் கட்டினது//

என்னாது....?? என்னமோ 1990 ஸ்டோரி சொல்லிக்கிட்டிருக்கீங்களேன்னு கேட்டா டக்குன்னு 2007 படம் உள்ளாற வந்து போவுது ஒழுங்கா டைம்லைன் பார்த்து சொல்லணும்!!!//

repeattu... :))

சினிமா டிக்கெட்டைக் காமிச்சு ஆபீஸ்ல நுழைய முயற்சிக்கலையே.. ;)

யாழினி said...

எதாவது எழுதியே ஆகனும்னு எழுதினிங்களா ஸ்ரீ,,,, :(

☀நான் ஆதவன்☀ said...

//டிஸ்கி: ஏனோ தெரியல எனக்கு கொஞ்சநாளா கொசுவத்தி பதிவு போடனும்ன்னு ஆசையா இருந்தது. அதான் இப்படி கொஞ்சம் பொருத்தருள்க.//

ஆசைப்பட்டா யோசிக்காம இந்த மாதிரி கொசுவத்தி சுத்தலாம் தாராளமா. நல்லா தான் இருக்கு :)

// எனினும் இது போன்ற பதிவு இனித் தொடராது எனக்கூறிக்கொ(ல்)ள்கிறேன். ;-)//

ஓ! :(

R.Gopi said...

//டிஸ்கி: ஏனோ தெரியல எனக்கு கொஞ்சநாளா கொசுவத்தி பதிவு போடனும்ன்னு ஆசையா இருந்தது. அதான் இப்படி கொஞ்சம் பொருத்தருள்க. எனினும் இது போன்ற பதிவு இனித் தொடராது எனக்கூறிக்கொ(ல்)ள்கிறேன். ;‍)//

ஸ்ரீமதி...

பதிவு நல்லா இருந்தது... அதைவிட இந்த டிஸ்கி... சூப்பர்......அதுவும் அந்த கூறிக்கொ(ல்)ள்கிறேன்...ம்ம்ம்... பின்னுது....

வாழ்த்துக்கள்....

ஆமாம்... சமீபத்துல என்ன படம் பார்த்தீங்க???

ரகுநாதன் said...

//அழுது அடம்பிடிச்சி அம்மாவ 'குஷி' படத்துக்கு கூட்டிட்டு போகச் சொல்லி, அதுல வந்த ஒரு பாட்டுக்காக அம்மா என்ன இன்னமும் திட்டினது//

ஹி ஹி ஹி ஹா ஹா ஹா :)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது