விடுபட்டவை...


கற்கள் பொதிந்த
என் காட்டுப் பயணத்தின்
பாதை நெடுகிலும்
ஆவாரம்பூக்கள்...
கிளைத்தெழுந்து நிற்கும்
அவற்றின் வேர்களுக்கப்பால்
மறைத்துவைத்துள்ளேன்
உயிர்த்தெழுந்த
உனக்கான
என் காதலை...
என்றேனும் உறக்கத்தின் விழிப்பில்
என்னினைவிருந்தால்
குருதிகள் தோய்ந்த
அந்நிலத்தின் தீக்கங்குகளுக்கிடையில்
தேடிப்பார்....
விழிப்புற்ற மிருகத்தின்
பெருமூச்சுகளுக்கிடையில்
அதன் நாக்கின் அடியில்
நான்காக மடிந்திருக்கும்
என்னுலகத்தை...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

33 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Suja said...

பிரமாதம் !!!

ஆயில்யன் said...

அட்டகாசம் :)

TKB காந்தி said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ. ஆனா ’தீக்கங்குகள்’ன்னா என்னான்னு தெரியல.

கவிக்கிழவன் said...

கனவுகள் பிடிச்சிருகு
தலைவிதி என்ன செய்வது
நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டிய விசயம்தான்

Muthusamy P said...

nalla irukku...aanaa ore kaadhal vaasam intha karaigalil athaan konjam nalla illa...vera ethaavathu kidaikkumaa intha karaigalil?

nanri

கார்க்கி said...

பிடிச்சிருக்கு

கார்ல்ஸ்பெர்க் said...

:))

கலையரசன் said...

ஜூப்பரப்பு....டக்கராக்கீது!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

புரிஞ்சாமாதிரி இருக்குது..

G3 said...

// ஆயில்யன் said...

அட்டகாசம் :)//

பாஸ் சொன்னா கரிக்கிட்டா தான் இருக்கும் :)

வெ.இராதாகிருஷ்ணன் said...

//விழிப்புற்ற மிருகத்தின்
பெருமூச்சுகளுக்கிடையில்
அதன் நாக்கின் அடியில்
நான்காக மடிந்திருக்கும்
என்னுலகத்தை...//

இந்த வரிகள் கவிதைக்கு மிகவும் முரணாக அமைந்திருக்கிறது.

ஆவாரம்பூக்கள் கருகிப் போயிருக்க வேண்டும்! (படம் காட்டுவது வேறு) ஆனால் அவை பூத்து குலுங்கின்றன என்பதே சற்று முரண்பாடான சிந்தனை எனினும் எரிந்து போன காதலெனினும் மறைந்து போன காதலில்லை என்பது புலப்படுகிறது.

வேர்களுக்கு அப்பால் மறைத்து வைக்கப்பட்ட காதல் எரிக்கப்பட்டு இருக்கிறது என்பது சரியே. ஆனால் விழிப்புற்ற மிருகம் என விளித்து எழுதப்பட்ட விதம் சரியானதாகப் படவில்லை.

Dr.Rudhran said...

மடிந்திருக்கும்
என்னுலகத்தை...good

நர்சிம் said...

நன்றாக இருக்கிறது வார்த்தைகள்.

Karthik said...

வாவ், ஃபென்டாஸ்டிக்!

(புரிஞ்சிருக்குமே, ஒரு மெயில் அனுப்பிச்சிடுங்க ப்ளீஸ்! அவ்வ்!)

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;))

RaGhaV said...

நல்லா இருக்கு ஸ்ரீ..
ஆனா சோகம் அதிகமாகவே இருக்கு..
படிக்க படிக்க பயமாகவும் இருக்கு..
:-)

சின்ன அம்மிணி said...

//என்றேனும் உறக்கத்தின் விழிப்பில்
என்னினைவிருந்தால் //

பூவே வாய்பேசும்போது காற்றே ஓடாமல் நில்லு பாட்டுல வரும் வரிகளை ஞாபகப்படுத்துது.

என் நினைவு தோன்றினால்
துளி நீரைச்சிந்திடு

புனிதா||Punitha said...

பிரமாதம் & அட்டகாசம் :)))

அனுஜன்யா said...

என்ன இது டெர்ரர் கவிதை!

:)))

அனுஜன்யா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஒரு நாளைக்கு எத்தனை கவிதைகள் எழுதிவிய...!?

Anbarasan said...

அருமை

☀நான் ஆதவன்☀ said...

கலக்குற ஸ்ரீமதி :)

தாரணி பிரியா said...

ரொம்ப டெரரா இருக்கு ஸ்ரீமதி

SanjaiGandhi said...

சூப்பர்..

நிஜமா நல்லவன் said...

சூப்பர்!

நிஜமா நல்லவன் said...

அட்டகாசம் :)

நிஜமா நல்லவன் said...

பிரமாதம் !

நிஜமா நல்லவன் said...

கலக்கல்!

R.Gopi said...

கவிதை மாதிரியே ரொம்ப நல்லா இருக்கே ஸ்ரீமதி... இன்னும் கவிதைன்னா, ரொம்ப நன்னா இருக்கும் போல இருக்கே...

//என்னினைவிருந்தால் குருதிகள் தோய்ந்த
அந்நிலத்தின் தீக்கங்குகளுக்கிடையில் தேடிப்பார்....
விழிப்புற்ற மிருகத்தின் பெருமூச்சுகளுக்கிடையில்
அதன் நாக்கின் அடியில்
நான்காக மடிந்திருக்கும் என்னுலகத்தை...//

இங்க‌ ப‌டிக்க‌ற‌ப்போ ரொம்ப‌ டெர்ர‌ரா இருக்கே ஸ்ரீம‌தி...

எனிவே... ந‌ல்லா இருக்கு....வாழ்த்துக்கள்...

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க.ஆவாரம்பூக்களை ரொம்ப சிலரே நினைக்கிறார்கள்.ஆனால்,சிலாகிக்கும்படி நினைக்கிறார்கள்.

அகில் பூங்குன்றன் said...

//அதன் நாக்கின் அடியில்
நான்காக மடிந்திருக்கும்
என்னுலகத்தை...
///
புரியலைங்க....

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது