பிரிவெல்லாம் பிரிவல்ல

பிரிந்துவிட்டோம்
பிரிந்து விட்ட பிரிவு
நம்மை வந்து
கட்டிக்கொண்டப்பின்...
உன்னுடனான
பேருந்து பயணங்கள்
பிடிப்பதில்லை
நிறுத்தங்கள் பிரிப்பதால்...
ரயில் நிலைய
சந்திப்புகள் வேண்டாம்
தண்டவளங்கள் உணர்த்தும்
நம்மின் பிரிவை

பிரிவென்னை
கொல்லவில்லை
பார்த்தும் பார்க்காமல் சென்ற
உன் கண்களை
நேற்று சந்திக்கும் வரை

வெளிச்ச நாற்றுகளிலும்
இருளின் சுருள்
பிரித்தறிந்தேன்
நம் பிரிவறிந்த போது

கொட்டத்தொடங்கிய மழை
இன்று
குத்தத் தொடங்கியது
குடைக் கம்பியென...
பிரிவின் மழைக்காலமும்
கொடுமையே...

நூலருந்த பட்டம்
என்னிதயம்
பிரிவி்ன் போது...

மாலையாகிவிட்ட
மல்லிகைகள்
சொல்லிக்கொண்டன
பிரிவெல்லாம்
பிரிவல்லவென்று

-அன்புடன்,
ஸ்ரீமதி.

28 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

இரா.சிவக்குமரன் said...

பய புள்ள என்னமா பீல் பண்ணுது!

பிரியமுடன்...வசந்த் said...

//நூலருந்த பட்டம்
என்னிததயம்
பிரிவி்ன் போது...//

yes

என்னாது இது எல்லாமே ஃபீலிங்க்ஸ் ஆ இருக்கு....

ஆயில்யன் said...

;)

கார்ல்ஸ்பெர்க் said...

//கொட்டத்தொடங்கிய மழை
இன்று
குத்தத் தொடங்கியது
குடைக் கம்பியென...
பிரிவின் மழைக்காலமும்
கொடுமையே//

-உண்மையான வார்த்தைகள்.. அனுபவித்துள்ளேன், மிகச் சமீபத்தில் :(

G3 said...

//மாலையாகிவிட்ட
மல்லிகைகள்
சொல்லிக்கொண்டன
பிரிவெல்லாம்
பிரிவல்லவென்று//


:))))))))))))))))))))))

G3 said...

// இரா.சிவக்குமரன் said...

பய புள்ள என்னமா பீல் பண்ணுது!//

Repeatae :D

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உன்னுடனான
பேருந்து பயணங்கள்
பிடிப்பதில்லை
நிறுத்தங்கள் பிரிப்பதால்...
//


:)))
அவ்வ்வ்வ்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

இரா.சிவக்குமரன் said...
பய புள்ள என்னமா பீல் பண்ணுது//

ரிப்பீட்டு.!

ஆஃபிஸ்க்குதானே போயிருக்கார். சாய்ந்திரம் வந்துருவார். அதுக்குள்ள இத்தனை ஃபீலிங்ஸா?

புனிதா||Punitha said...

;-)))

நிஜமா நல்லவன் said...

:))

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

உன்னுடனான பேருந்து பயணங்கள் பிடிப்பதில்லை
நிறுத்தங்கள் பிரிப்பதால்...

super

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உன்னுடனான
பேருந்து பயணங்கள்
பிடிப்பதில்லை
நிறுத்தங்கள் பிரிப்பதால்...//


அப்ப காருல போங்க தாயி!

ஒரே கம்பெனியில ஜாயிண்ட் பண்ணுங்க.

நாணல் said...

என்ன மா ஒரே ஃபீலிங்ஸ்... ;)

//உன்னுடனான பேருந்து பயணங்கள் பிடிப்பதில்லை
நிறுத்தங்கள் பிரிப்பதால்...//

idhu suuper...

//பிரிவென்னை
கொல்லவில்லை
பார்த்தும் பார்க்காமல் சென்ற
உன் கண்களை
நேற்று சந்திக்கும் வரை//

idhu soopero sooper... :)

வியா (Viyaa) said...

kavithai miga alagu..
naan rasitha varigal
"பிரிவென்னை
கொல்லவில்லை
பார்த்தும் பார்க்காமல் சென்ற
உன் கண்களை
நேற்று சந்திக்கும் வரை"

சின்ன அம்மிணி said...

//இரா.சிவக்குமரன் said...

பய புள்ள என்னமா பீல் பண்ணுது!
//

ரிப்பீட்டிக்கரேன்.

ஆகாய நதி said...

super sri... :))

சந்தான சங்கர் said...

அழைப்பிதல்

நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
நாள் : உங்கள் நாள்
நேரம்: உங்களின் நேரம்

வரவேற்பு : கவிதைகள்

அன்புடன்,
சந்தான சங்கர்.

(மொய் எழுதவேண்டாம்
மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
;) ///

ivaru en sirikkuraru???

Karthik said...

எனக்கு கடைசி கவிதைதான் ரொம்ம்ம்ப பிடிச்சது. :)

TKB காந்தி said...

:)

RaGhaV said...

அட..

தேன்துளிகள்..!

சூப்பர் ஸ்ரீ.. :-))))

Divyapriya said...

// மாலையாகிவிட்ட
மல்லிகைகள்
சொல்லிக்கொண்டன
பிரிவெல்லாம்
பிரிவல்லவென்று//

wowwwwwwwwwwww!!! too good...

ஸ்ரீமதி said...

நன்றி சிவாண்ணா.. :)) (உங்க ஒரு கமெண்ட்டு தான் பதிவு ஃபுல்லா :)))

நன்றி வசந்த்.

நன்றி ஆயில்யன் அண்ணா.

நன்றி அருண்.

நன்றி G3 அக்கா.

நன்றி ஜோதி அண்ணா.

நன்றி ஆதி அண்ணா. அவ்வ்வ்வ் ஃபீல் பண்ணக்கூடாதா?? :))

நன்றி புனிதா அக்கா.

நன்றி நிஜம்ஸ் அண்ணா.

நன்றி அமித்து அம்மா.

நன்றி நாணல் அக்கா.

நன்றி வியா.

நன்றி சின்ன அம்மணி அக்கா.

நன்றி ஆகாய நதி அக்கா.

நன்றி சங்கர்.

நன்றி தமிழ் அண்ணா. (அவரு சிரிக்கிறது இருக்கட்டும்.. நீங்க ஒன்னும் சொல்லாம போறீங்களே?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

நன்றி கார்த்திக். (நினைச்சேன் :)))

நன்றி TKB காந்தி.

நன்றி ராகவ் :))

நன்றி திவ்யப்ரியா அக்கா. :))

வெ.இராதாகிருஷ்ணன் said...

நல்லதொரு ரசனையான கவிதை.

மழையை குத்தும் குடை கம்பியாய் வர்ணித்த விதம் அழகு.

பிரிந்தாலும் பிரியாத மனது என கவிதையில் ஏக்கத்தை அழகாக தெளித்து இருக்கிறீர்கள்.

அனுஜன்யா said...

ஊருக்குப் போய் விட்டாரா? புகைப்படங்களும் பொருத்தம்.

அனுஜன்யா

PITTHAN said...

ALWAYS I PUT MY IDEAS FOR YOUR BLOGS, BUT ITS NOT COMMING IN ARTICLES. IF YOU DONT LIKE I WILL STOP SAY IT AND JUST READ IT

JACK and JILLU said...

பிரிவென்னை
கொல்லவில்லை
பார்த்தும் பார்க்காமல் சென்ற
உன் கண்களை
நேற்று சந்திக்கும் வரை
.
.
.
.
பிரிவுத்துயர் உணர்த்தும் அழகிய வரிகள்... நல்ல கவிதைத்தோரணம். வாழ்த்துக்கள் ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது