காத்திருக்கலாம்...

வற்றிய மேகங்கள் பொழிய,
வானம் நிலவொடு மகிழ,
இரவை சூரியன் விழுங்க,
இமைகள் இரண்டும் தீண்ட,
எனை நீங்கா
உன்னின் நினைவுகள்
எனைத் தொடர
காத்திருக்கலாம்.....

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~


காத்திருக்கும் நேரம்,

கண்கள் யோசிக்கும்
கவிதை நீ...!
கவனங்களைத் திருடும்
காற்றும் நீ...!
கணங்களில் கடக்கும்
யுகமும் நீ...!
கவிதைகள் மட்டும் படைக்கும்
மொழியும் நீ...!
மொழிகள் யாசிக்கும்
மௌனம் நீ...!
கண்கள் காணத்துடிக்கும்
கனவும் நீ...!
அக்கனவைப் பறிக்கும்
விழிப்பும் நீ...!

  • எப்பவோ எழுதி Draft-ல இருந்தது. கவிதை வேணும்ன்னு அடம்பிடிச்சு கேட்டவங்களுக்காக(இது தேவையா??) போட்டது.. ;-))
-அன்புடன்,
ஸ்ரீமதி.

31 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

கார்க்கி said...

//கவிதை வேணும்ன்னு அடம்பிடிச்சு கேட்டவங்களுக்காக(இது தேவையா??) போட்டது.. ;-)//


கேட்டவங்க ”தலையிலே” போட்டது...

கார்க்கி said...

நாங்க கவிதைதானே கேட்டோம்.

இதுல நன்றி வேற.. சாப்பிடற நேரத்தில போய் படிச்சேன் பாரு.. இதுக்கு பொக்கிஷம் படத்தையே பார்த்திருந்திருகக்லாம்.. நல்லா இரு தாயீ..

இன்னும் பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து கவிதை எழுதி, எங்களையெல்லாம் ....

ஆயில்யன் said...

வாவ்!

புனிதா||Punitha said...

:-))

G3 said...

//கவிதைகள் மட்டும் படைக்கும்
மொழியும் நீ...!
மொழிகள் யாசிக்கும்
மௌனம் நீ...!//

Superu :))))

துபாய் ராஜா said...

நல்லாத்தான் இருக்கு ஸ்ரீ...

அடிக்கடி போடுங்கள் கவிதைகளை....

கார்ல்ஸ்பெர்க் said...

Present Madam!!!

- கவிதைக்கு எப்பவுமே Attendance மட்டும் தான்.. இதெல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு அறிவு இல்லீங்க :)

அதிரை அபூபக்கர் said...

காத்திருக்கும்..கவிதை அருமை....

சின்ன அம்மிணி said...

காத்திருக்கும் நேரம் நீ ன்னு யாரையோ நினைச்சு போட்ட மாதிரி இருக்கு :)

Maddy said...

கவிதை வேணும்ன்னு அடம்பிடிச்சு கேட்டவங்களுக்காக......................நல்ல வேலை தான் செஞ்சி இருக்காங்க...........

கவிதை எப்படி இருக்குன்னு நான் சொல்லணுமா? ஆமா அப்படினா ........அந்த மிச்சம் சொச்சம் டீராப்ட் ல இருக்கற கவிதைகள் வர இப்போ இருந்தே அடம் பிடிக்க வேண்டியது தான்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

்ம்ம்ம்!

இது எதும் கட்டாயக் காத்திருப்பு இல்லையே!?

TKB காந்தி said...

1-ஒகே.
2-வது வாரமலர்-ல வர மாதிரி இருக்கு.

RaGhaV said...

நல்லா இருக்கு ஸ்ரீ.. :-)

கோபிநாத் said...

\\அடம்பிடிச்சு கேட்டவங்களுக்காக\\

யாரு அவுங்க எல்லாம்...எல்லோரும் லைன்ல வாங்க...இருக்கு உங்களுக்கு எல்லாம்....! ;)

தமிழன்-கறுப்பி... said...

ok...

பிரியமுடன்...வசந்த் said...

முதல் கவிதை அட்டகாசம்

இரண்டாவது கவிதை எழுதச்சொன்னவங்க அட்ரஸ் குடுக்க முடியுமா?

Divyapriya said...

2nd kavidhai chance less...

T.V.Radhakrishnan said...

கவிதை அருமை

எம்.எம்.அப்துல்லா said...

//காத்திருக்கும் நேரம் நீ ன்னு யாரையோ நினைச்சு போட்ட மாதிரி இருக்கு :)

//

வேறயாரு...எல்லாம் அந்த பெங்களூர்கார்தான்

:)

PITTHAN said...

கவிதையின் முதல் பகுதி ரொம்ப பிடித்தது,அனால் வாழ்க்கை முலுதும் காத்து இருப்பது ரொம்ப கஸ்டம்

நாணல் said...

:))

☀நான் ஆதவன்☀ said...

:))

butterfly Surya said...

நண்பர் அப்துல்லாவை வழி மொழிகிறேன்..

butterfly Surya said...

கவிதை அருமை..

Draft ல வேற என்ன இருக்கோ அதையும் போடவும்...

தமிழ் பிரியன் said...

nalla velai naan padikkalai.. ;-))

ரௌத்ரன் said...

ஏன் தாயீ இந்த கொலவெறி :)

Karthik said...

:))))

என்ன சொல்றது?

ஸ்ரீமதி said...

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றிகள் :))

வெ.இராதாகிருஷ்ணன் said...

நன்றாகத்தான் இருந்தது. இருப்பினும் இன்னும் பல காலங்கள் இது போன்ற கவிதைகளுக்காக காத்திருக்கலாம் என்பதில் தவறே இல்லை.

maha said...

very nice..........really very very beautyful

maha said...

very nice...........

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது