கந்தசாமி - ஷங்கர் ஃபார்முலா??


முன் குறிப்பு அல்லது முக்கிய குறிப்பு: நக்கீரர்களின் கவனத்திற்கு, இது கண்டிப்பாக கந்தசாமி படத்தின் விமர்சனம் இல்ல. படத்த பார்த்து நொந்த என் போல் சிலரின் ஆதங்கமே. ஏற்கனவே சொல்லிருக்கேன் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு படம் பார்க்கும் அந்த மூன்று மணி நேரம் மட்டுமே. அதுக்கப்பறம் கதை கூட ஞாபகம் இருக்காது. ஆனா, இந்த படத்தப் பார்த்து நொந்ததினால் மட்டுமே இந்த போஸ்ட். இத படிச்சிட்டு படம் பார்க்கிறதும் படம் பார்க்காததும் உங்க இஷ்டம். பார்க்காதீங்கன்னு நான் சொல்ல மாட்டேன்.

கதை (அப்படின்னா?!) பணக்கார வில்லன், போலிஸ் ஹீரோ அப்பறம் என்ன நடக்கும்ன்னு உங்களால யூகிக்க முடியலேன்னா, ஒன்னு நீங்க வேற்று நாட்டுக்காரரா இருக்கனும், இல்ல என்ன மாதிரி சினிமா பார்க்காத ஆசாமியா இருக்கனும். இந்த படத்துல கதை இல்லன்னு எவன் சொன்னது?? எத்தனை படத்தோட கதை இருக்கு தெரியுமா? அவ்வ்வ்வ்வ்வ்.... "விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார், திருட்டு பயலே எடுத்த சுசி கணேசன் என்கிற தமிழ் பட இயக்குனரை காணவில்லை"ன்னு விளம்பரமே தரலாம். மாஸ் ஹீரோவ வெச்சு படம் பண்ற பதட்டமா என்னன்னு தெரியல. அப்படி ஒரு சறுக்கல் மனுஷனுக்கு. தயவு செய்து நீங்க மார்க்கெட் போன, அல்லது புது முகம் இப்படி பட்ட ஹீரோக்களையே ட்ரை பண்ணுங்க ப்ளீஸ் மாஸ் ஹீரோ மார்க்கெட்டாவது மிஞ்சும்.

ஹீரோ விக்ரம் மனுஷன் செம்ம ஸ்மார்ட், செம்ம ட்ரிம்மா ஒரு யங் CBI ஆஃபிஸர் காரெக்டர்ல பொருந்தி போறாரு. நல்லா நடிக்கவும் செஞ்சிருக்காரு. பில்லா அஜித்துக்கு போட்டியா மனுஷன் நடக்கராரு நடக்கராரு நடந்துகிட்டே இருக்காரு. பாடல்கள்ல சரத்குமாருக்கு போட்டியா நடனம் ஆடிருக்காரு( அதாவது நான் நிக்கிறேன், நான் நிக்கிறேன் தான்). ரொம்ப அழகா தெரிஞ்சாலும் தாடியோட வர சீன்ஸ் அவர் வயச காட்டிக்கொடுத்துடுது (தாடிக்கு டை அடிக்க முடியாதா??). மத்தபடி இப்படி ஒரு நடிகர டைரக்டருக்கு பயன்படுத்தத் தெரியலன்னு தான் சொல்லனும். இனியும் இப்படி படங்கள் தேர்ந்தெடுத்து நடிச்சா அந்த பாலாவால கூட உங்கள காப்பாத்த முடியாது.

ஈரோயின் சாரி ஹீரோயின் ஷ்ரேயா அவ்வ்வ்வ் அல்ரெடி சிவாஜில இதோட க்ளோஸப் காட்சிகள பார்த்து பயம் தெளியாம இருக்கற எனக்கு இங்கயும் பயங்கற அதிச்சியா நிறைய க்ளோஸப் காட்சிகள். கோடி கோடியா கொட்டி படம் எடுக்கறாங்க இந்த புள்ளைக்கு ஒரு பாவாட தெச்சிப் போடப்படாதோ?? பாவம் என்ன அவசரமோ தெரியல படம் பூரா பாதி ட்ரெஸோடவே வருது. மீதி போடறதுக்குள்ள டைரக்டர் ஸ்டார்ட், கேமரா சொல்லிட்டாரு போலருக்கு... இதுக்கு ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடின முமைத் கானவே ஹீரோயினா போட்ருக்கலாம். அது காட்டின அளவுக்கு எக்ஃஸ்ப்ரஷன்ஸ் கூட இவங்க முகத்துல இல்ல. கன்னாபின்னான்னு இது வாயசைக்க இதுக்கு பின்னனி குரல் அட்சர சுத்த தமிழோட சுச்சி. படம் பூரா உதட்ட சுழிக்குது, சுழிக்குது எல்லாரும் மூஞ்சிய சுழிக்கிற வரைக்கும் சுழிக்குது. "என் அழகப்பார்த்து நொந்தசாமி... "- கண்டிப்பா அவரில்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்... அப்பறம்... இன்னும் என்ன அப்பறம்... இவங்கள பத்தி இவ்ளோ எழுதினதே பெரிசு...

படத்துல வடிவேலுவும் இருக்காரு(!?!) அவ்ளோ தான் சொல்ல முடியும்.

பாடல்கள் கேட்கறத விட பார்க்க படு மோசமா இருக்கறதால FMல கேட்கறதோட நிறுத்திக்கோங்க. பாத்துட்டு, அதனால் வர விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்ல.. இதுவரைக்கும் வந்த திருடன் போலிஸ் படங்கள யாராவது பார்க்காம மிஸ் பண்ணிருந்தா கண்டிப்பா போய் படம் பாருங்க. அத்தன படத்தோட கதையும் இருக்கு நம்புங்க. ரெய்டு வந்ததும் ஸ்டோர்க் வரது எத்தன படத்துல பார்க்கறது செல்லமே? மணி லாண்டரி(இததான் ஜிவாஜில நல்லா விம் பார் போட்டு விளக்கிட்டாங்கல்ல??), ப்ளாக் மணி, இருக்கரவங்கக்கிட்ட இருந்து எடுத்து இல்லாதவங்களுக்குக் கொடுக்கறது... அட போங்கப்பா... இன்னும் எத்தன படம் இதே ஃபார்முலால வருமோ?? அவ்வ்வ்வ்...

கந்தசாமி - Nothing Special

பின் குறிப்பு: கோடி கோடியா கொட்டி படம் எடுக்கறோம் திருட்டு விசிடி-ல பார்க்காதீங்கன்னு சொல்றாங்க. ஆனா, படம் பார்க்க நாம ஆயிரம் ஆயிரமா செலவு பண்றோம் அதுமட்டும் என்ன மரத்துலயா காய்க்கிது??

-அன்புடன்,
ஸ்ரீமதி.

41 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

அடி ஆத்தி என்னல இது? பட விமர்சனமெல்லாம் இந்த ப்ளாக்க்ல வருது !!!!

ஆயில்யன் said...

சோகமெல்லாம் சொல்லும் இடமா - கரையோரம்???

யாசவி said...

u r writing movie review?

anyway susi disappointed all of us

:-)

ஆயில்யன் said...

//கோடி கோடியா கொட்டி படம் எடுக்கறோம் திருட்டு விசிடி-ல பார்க்காதீங்கன்னு சொல்றாங்க. ஆனா, படம் பார்க்க நாம ஆயிரம் ஆயிரமா செலவு பண்றோம் அதுமட்டும் என்ன மரத்துலயா காய்க்கிது??///

குட் கொஸ்டீன்!

வண்ணத்துபூச்சியார் said...

இந்த மாத தமிழ் சினிமா பட்ஜெட் “கந்தசாமிக்காக வைத்திருந்தேன். நல்லவேளை நொந்தசாமியாயிருப்பேன். நண்பர்கள் அனைவரும் பதிவிட்டு காப்பாற்றி விட்டார்கள்.

நன்றி..

Muthusamy P said...

(தாடிக்கு டை அடிக்க முடியாதா??) - Superahhhh....

ஆனா, படம் பார்க்க நாம ஆயிரம் ஆயிரமா செலவு பண்றோம் அதுமட்டும் என்ன மரத்துலயா காய்க்கிது?? -- i think u can write reviews like this...

intha review padichittu evannavathu padam paarthaan therinchuthu...apdiye kondepuduven...

அனுஜன்யா said...

ம்ம், ரைட்டு. நீயும் சினிமாவில் இறங்கியாச்சா?. சுசி ஆட்டோ அனுப்பப் போறாரு :)

அனுஜன்யா

☀நான் ஆதவன்☀ said...

ஒய் ப்ளெட்? சேம் ப்ளெட்..

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ் நீயுமா ஸ்ரீ? ஓக்கே உன்னோட ஆதங்கம் எனக்கு புரியுது..

ஸ்ரேயாவுக்கு பாவாடை தைச்சு அப்புறமா போடலாம். முதல்ல அதுக்கு சோறு போட சொல்லனும். பாவம் எலும்பெல்லாம் தெரியுது....

இளவட்டம் said...

ரொம்ப நொந்துபோயிருக்கிற மாதிரி தெரியிது...

///தயவு செய்து நீங்க மார்க்கெட் போன, அல்லது புது முகம் இப்படி பட்ட ஹீரோக்களையே ட்ரை பண்ணுங்க///

உண்மைதான் ஸ்ரீ.நைட் 11.30க்கு படம் பார்க்க போயிட்டு நொந்து பொய் வந்தோம்.

நாடோடி இலக்கியன் said...

//எத்தனை படத்தோட கதை இருக்கு தெரியுமா//

//தாடிக்கு டை அடிக்க முடியாதா??).//

//சுழிக்குது எல்லாரும் மூஞ்சிய சுழிக்கிற வரைக்கும் சுழிக்குது//

//படம் பார்க்க நாம ஆயிரம் ஆயிரமா செலவு பண்றோம் அதுமட்டும் என்ன மரத்துலயா காய்க்கிது??//

பின்னிட்டீங்க ஸ்ரீமதி .

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

அடி ஆத்தி என்னல இது? பட விமர்சனமெல்லாம் இந்த ப்ளாக்க்ல வருது !!!!////

அண்ணே! முதன் முதலா ஜோடியா பார்த்த படமா இருக்கும்.. அதான் ஃபீலிங் போல.. ;-)))

வெயிலான் said...

இதான் பெரிய பதிவா? :)

நட்புடன் ஜமால் said...

நொந்ஜாமி இங்கேயுமா ...

Muthusamy P said...

படம் பூரா உதட்ட சுழிக்குது, சுழிக்குது எல்லாரும் மூஞ்சிய சுழிக்கிற வரைக்கும் சுழிக்குது...suparuu...

Tamil Priyan said, "அண்ணே! முதன் முதலா ஜோடியா பார்த்த படமா இருக்கும்.. அதான் ஃபீலிங் போல.. ;-)))"

intha kummy nalla irukku

RaGhaV said...

அடியாத்தி.. புள்ள சினிமா விமர்சனமெல்லாம் எழுதுது..? :-)

படிக்க படிக்க சிரிப்பு வருது ஸ்ரீ..

பதிவு நல்லாயிருந்தது.. உங்கள நினைச்சு பரிதாபமாகவும் இருந்தது.. :-)))

கார்க்கி said...

அப்படி போடு... ரொம்ப அடியோ?

சின்ன அம்மிணி said...

பின்குறிப்புல இருக்கு வயத்தெரிச்சல் . :)

Karthik said...

//பில்லா அஜித்துக்கு போட்டியா மனுஷன் நடக்கராரு நடக்கராரு நடந்துகிட்டே இருக்காரு.

அது போஸ்ட் மாடர்ன் பிலிம் மேக்கிங். பின்நவீன கவிதை மட்டும் எழுதலாம். படம் எடுக்கப்படதோ??

(தல யவா கலாய்க்கிறீங்க? உங்களுக்கு இருக்கு.)

Karthik said...

//முன் குறிப்பு அல்லது முக்கிய குறிப்பு:

டாஸ் போட்டு முடிவு செய்து கொள்ளவும். ஹெட்ஸ் முன் குறிப்பு. டெய்ல்ஸ் முக்கிய குறிப்பு.

Karthik said...

//இந்த படத்துல கதை இல்லன்னு எவன் சொன்னது??

எவன் அல்ல.

நாலு வரிக்கு முன்னாடி நீங்கதான் சொல்லியிருக்கீங்க. :)

Karthik said...

//தாடியோட வர சீன்ஸ் அவர் வயச காட்டிக்கொடுத்துடுது

அவர் வயசென்ன சொல்லுங்க? கூகிளைக் கேக்காம சொல்லனும். ;)

Karthik said...

//FMல கேட்கறதோட நிறுத்திக்கோங்க.

கூட பாடக்கூடாதா?

Karthik said...

//அதுமட்டும் என்ன மரத்துலயா காய்க்கிது??

பணம் காய்க்கிறது மரத்துல இல்லைனா, வங்கிகளுக்கு கிளைகள் எப்படி இருக்கு?

Karthik said...

//-அன்புடன்,
ஸ்ரீமதி.

மைனஸ் அன்புடன் ஸ்ரீமதி?

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்களையே விமர்சனம் எழுத வச்சிட்டானுங்கள்னா படத்தோட லட்சணம் என்னாங்குறது பிரியுது..

அப்புறம்//கோடி கோடியா கொட்டி படம் எடுக்கறாங்க இந்த புள்ளைக்கு ஒரு பாவாட தெச்சிப் போடப்படாதோ?? // இன்னும் சிரிச்சுகிட்டிருக்கேன்.. ஆதவனின் கமெண்டுக்கும்.!

Muthusamy P said...

@karthik:

//அதுமட்டும் என்ன மரத்துலயா காய்க்கிது??

பணம் காய்க்கிறது மரத்துல இல்லைனா,
""வங்கிகளுக்கு கிளைகள் எப்படி இருக்கு?""

yen yethukku ippdaiyellam...ennala thaanga mudiyala..

கார்ல்ஸ்பெர்க் said...

//பில்லா அஜித்துக்கு போட்டியா மனுஷன் நடக்கராரு நடக்கராரு நடந்துகிட்டே இருக்காரு//

-ஏங்க, என்னதான் படம் நல்ல இல்லனாலும் இந்த அளவுக்கு Compare பண்ணி இருக்கக் கூடாதுங்க..
விக்ரம்'க்கு இத விட ஒரு Worst Feedback யாரும் குடுக்க முடியாது :)

நாணல் said...

//தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

அடி ஆத்தி என்னல இது? பட விமர்சனமெல்லாம் இந்த ப்ளாக்க்ல வருது !!!!////

அண்ணே! முதன் முதலா ஜோடியா பார்த்த படமா இருக்கும்.. அதான் ஃபீலிங் போல.. ;-)))//

இருக்கும் இருக்கும்... ;)))

குடுகுடுப்பை said...

வாழ்க ஹரிணி, என் பொண்ணு எந்த சினிமாவும் பார்க்க எனக்கு அனுமதி தருவதில்லை.

புனிதா||Punitha said...

:-))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

புனிதா||Punitha said...
:-))
//
ரிப்பீட்டு!

Maddy said...

ரொம்ப லயிச்சு சினிமா பார்த்து இருக்கறது தெரியுது. ஒரு பிரேம் விடாம சுஷி( அட நம்ப கணேசன் தான்) ஸ்ரீ ய படம் பார்க்க வச்சிருக்கறது தெரியுது....தியேட்டர்-ல மூட்டை பூச்சி எல்லாம் கிடையாதா?

விக்னேஷ்வரி said...

படம் பூரா உதட்ட சுழிக்குது, சுழிக்குது எல்லாரும் மூஞ்சிய சுழிக்கிற வரைக்கும் சுழிக்குது. //

அதே தான்.

படம் பார்க்க நாம ஆயிரம் ஆயிரமா செலவு பண்றோம் அதுமட்டும் என்ன மரத்துலயா காய்க்கிது?? //

வாஸ்தவமான பேச்சு. உங்களைப் போல நானும் நொந்து போய் வந்தேன். அதிசயமா அவர் தமிழ் படம் கூட்டிட்டுப் போனார். முடிஞ்சு வரும் போது இனி நோ தமிழ் மூவீஸ் னு சொல்லிட்டார். :(

காளிராஜ் said...

சும்மஸ் சொல்லக் கூடாது...

கந்தசாமிய பத்தி நல்லாவே கடஞ்சிருக்கீங்க.....

ஸ்ரீமதி said...

நன்றி ஆயில்யன் அண்ணா. (சோகம் இங்க சொன்னதே இல்லயா? அவ்வ்வ்வ்வ்..)

நன்றி யாசவி. (No am not.. :)))

நன்றி வண்ணத்துபூச்சியார்.

நன்றி முத்துசாமி.

நன்றி அனுஜன்யா அண்ணா.

நன்றி நான் ஆதவன் அண்ணா. :))

நன்றி இளவட்டம்.

நன்றி இலக்கியன் அண்ணா.

நன்றி தமிழ் அண்ணா.

நன்றி வெயிலான் அண்ணா. (அப்படிதான் நினைச்சேன். இல்லயா?? அவ்வ்வ்வ்வ்வ்)

நன்றி ஜமால் அண்ணா.

நன்றி ராகவ்.

நன்றி கார்க்கி. (லைட்டா.. ;))

நன்றி சின்ன அம்மணி அக்கா.

நன்றி கார்த்திக். (இப்போ சந்தோஷமா??)

நன்றி ஆதி அண்ணா. (நீங்க எஸ்கேப்பா??)

நன்றி கார்ல்ஸ்பெர்க். (என்ன பேரு இது?? நாலு தடவ பார்த்து பார்த்து டைப்பினேன்.. ;))

நன்றி நாணல் அக்கா.

நன்றி குடுகுடுப்பை அண்ணா. (அத்தை மாதிரி போல ஹரிணி ;))

நன்றி புனிதா அக்கா. :))

நன்றி ஜோதி அண்ணா.

நன்றி மேடி அண்ணா.

நன்றி விக்னேஷ்வரி அக்கா. (இனிமே தமிழ் படம் கிடையாதா?? நல்லதா போச்சுன்னு நினைங்க அக்கா)

நன்றி காளிராஜ். (என்ன பண்றது? அவ்ளோ நொந்திருக்கேன் :( )

தமிழ் பிரியன் said...

/// ஸ்ரீமதி said...

நன்றி ஆயில்யன் அண்ணா. (சோகம் இங்க சொன்னதே இல்லயா? அவ்வ்வ்வ்வ்..)

நன்றி யாசவி. (No am not.. :)))

நன்றி வண்ணத்துபூச்சியார்.

நன்றி முத்துசாமி.

நன்றி அனுஜன்யா அண்ணா.

நன்றி நான் ஆதவன் அண்ணா. :))

நன்றி இளவட்டம்.

நன்றி இலக்கியன் அண்ணா.

நன்றி தமிழ் அண்ணா.

நன்றி வெயிலான் அண்ணா. (அப்படிதான் நினைச்சேன். இல்லயா?? அவ்வ்வ்வ்வ்வ்)

நன்றி ஜமால் அண்ணா.

நன்றி ராகவ்.

நன்றி கார்க்கி. (லைட்டா.. ;))

நன்றி சின்ன அம்மணி அக்கா.

நன்றி கார்த்திக். (இப்போ சந்தோஷமா??)

நன்றி ஆதி அண்ணா. (நீங்க எஸ்கேப்பா??)

நன்றி கார்ல்ஸ்பெர்க். (என்ன பேரு இது?? நாலு தடவ பார்த்து பார்த்து டைப்பினேன்.. ;))

நன்றி நாணல் அக்கா.

நன்றி குடுகுடுப்பை அண்ணா. (அத்தை மாதிரி போல ஹரிணி ;))

நன்றி புனிதா அக்கா. :))

நன்றி ஜோதி அண்ணா.

நன்றி மேடி அண்ணா.

நன்றி விக்னேஷ்வரி அக்கா. (இனிமே தமிழ் படம் கிடையாதா?? நல்லதா போச்சுன்னு நினைங்க அக்கா)

நன்றி காளிராஜ். (என்ன பண்றது? அவ்ளோ நொந்திருக்கேன் :( )///

சோடா ப்ளீஸ்... ;-)

தமிழ் பிரியன் said...

/// ஸ்ரீமதி said...
நன்றி நாணல் அக்கா.
நன்றி விக்னேஷ்வரி அக்கா. ///

முடியல....
ஓவரா இல்லியாக்கா.. ;-))

சுரேகா.. said...

//கோடி கோடியா கொட்டி படம் எடுக்கறோம் திருட்டு விசிடி-ல பார்க்காதீங்கன்னு சொல்றாங்க. ஆனா, படம் பார்க்க நாம ஆயிரம் ஆயிரமா செலவு பண்றோம் அதுமட்டும் என்ன மரத்துலயா காய்க்கிது??//

சூப்பரு!

எப்படிம்மா இப்படியெல்லாம் யோசிக்கிற?

சுரேகா.. said...

இந்தப்படத்தின்
பாடல் காட்சி ஒன்றின்
படப்பிடிப்புக்கு
போட்கிளப்
போயிருந்தபோது..
ஒரு
சினிமா
ஜாம்பவான்
சொன்னார்...
தம்பி..
கவலையே படாதீங்க!.....
ஊத்திக்கும்!

சுரேகா.. said...

போட்ட கமெண்ட்டெல்லாம் என்னம்மா ஆச்சூ!?
:)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது