வீணை


மடியில் சிறிதும்,
மனதில் பெரிதும்
கனத்தபடி இன்று
வடதெற்கு மூலையில்
சாய்ந்து வைக்கப்பட்டிருந்த,
அதனின் காலை நேரத்து
ஆராதனைகளும், அர்ச்சனைகளும்
நிறுத்தப்பட்டிருந்தது....
விரல்களின் மரத்துப்போன பகுதிகளில்
நரம்புகளின் சீண்டல்கள்
இன்னும் ஓய்ந்தப்பாடில்லை...
தன்னை அதனுள் செலுத்தி
மாயப் புல்லாங்குழலாக்க
காற்று முயன்று
கானங்களை அலைக்கழித்தது...
எனினும்,
எழுந்து நடக்கத் தொடங்கியிருந்த
காலங்களால்,
காயங்கள் சிறிது ஆறிவிட்டிருந்தது,
என்றோ அறுந்த வீணையிலிருந்து
தெறித்த நரம்புகள்
எங்கோ ஆரோகணத்தில்
இன்னும்
சுருதி சேர்த்துக்கொண்டிருந்தன....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

36 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்ட்டூ !

ஆயில்யன் said...

//விரல்களின் மரத்துப்போன பகுதிகளில்
நரம்புகளின் சீண்டல்கள்
இன்னும் ஓய்ந்தப்பாடில்லை...
தன்னை அதனுள் செலுத்தி
மாயப் புல்லாங்குழலாக்க
காற்று முயன்று
கானங்களை அலைக்கழித்தது...
எனினும்,எழுந்து நடக்கத் தொடங்கியிருந்த
காலங்களால்,
காயங்கள் சிறிது ஆறிவிட்டிருந்தது,//

நல்லா இருக்கு!

G3 said...

me the secondu :D

G3 said...

Supera irukku :)))

கார்க்கி said...

ம்ம்..

நட்புடன் ஜமால் said...

என்றோ அறுந்த வீணையிலிருந்து
தெறித்த நரம்புகள்
எங்கோ ஆரோகணத்தில்
இன்னும்
சுருதி சேர்த்துக்கொண்டிருந்தன.... ]]


என்ன சொல்றதுன்னு தெரியலை தங்கச்சி.

தமிழ் பிரியன் said...

Pechu pecha thane irunthathu... Athukulla en intha kola veri??

தமிழ் பிரியன் said...

Kavithai super!

தமிழ் பிரியன் said...

Kayam ariducha? Good!

தமிழ் பிரியன் said...

Me tha 10 th

தமிழ் பிரியன் said...

Karaiyora Kanavukalil thilaithu irungal.

எம்.எம்.அப்துல்லா said...

நல்ல நாதம் :)

அனுஜன்யா said...

நல்லா இருக்கு ஸ்ரீ.

அனுஜன்யா

புனிதா||Punitha said...

வாட் இஸ் ஆரோகணம்..ஏதாவது இராகமா? கவிதை அருமை டா!!!

ஹேமா said...

அருமை ஸ்ரீ.பாவிக்கப்படாத ஒரு வீணையை வாழ்வியலோடு பொருத்திப் பார்த்திருக்கிறீர்கள்.அற்புதம்.

புனிதா||Punitha said...

//ஆரோகணம் என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு...// நன்றி விக்கிபீடியா

சின்ன அம்மிணி said...

அறுந்த வீணையில் இருந்து இசை வராவிட்டாலும், கவிதை வந்திருக்கிறது. அருமை

sakthi said...

அருமையான வரிகள்

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் எளிமையான சிறப்பான கவிதை. நன்றாக இருக்கிறது. அவரோகணத்தில் தானே அமைந்து இருக்க வேண்டும்! நம்பிக்கை வெல்லட்டும்.

ஜெனோவா said...

//என்றோ அறுந்த வீணையிலிருந்து
தெறித்த நரம்புகள்
எங்கோ ஆரோகணத்தில்
இன்னும்
சுருதி சேர்த்துக்கொண்டிருந்தன//

meaningful lines.. superb

Jenova

நாணல் said...

//எனினும்,
எழுந்து நடக்கத் தொடங்கியிருந்த
காலங்களால்,
காயங்கள் சிறிது ஆறிவிட்டிருந்தது,//

nalla varigal... :)

சி.கருணாகரசு said...

கவிதை, அறுபடாத வீனை நரப்புகளை தென்றலாய் உரசி செல்கின்றன. நன்று.

சென்ஷி said...

நல்லாருக்கு ஸ்ரீமதி!

Karthik said...

1. Wow super. Amazing.

2. Eppadi ungalaala mattum ippadi mudiyudhu?

3. Ippadi oru kavithaiya en life la padichadhilla.

4. Enakku purinjidichu..

Ippadi evlovo irukku solla! ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்களுக்கு மீஜிக் கூட வருமா.. சொல்லவேயில்ல.?

Muthusamy P said...

good one

TKB காந்தி said...

நல்லா இருக்கு ஸ்ரீ.

குடுகுடுப்பை said...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

--------
இந்த கடைசி இரண்டு வரியும் எனக்கு நல்லா புரிஞ்சிடுஞ்சு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்!

Raghavendran D said...

//..இன்னும்
சுருதி சேர்த்துக்கொண்டிருந்தன....//

ஆழமான வரிகள்.. :-(

கவிதை அருமையா இருக்கு ஸ்ரீ..

Divyapriya said...

romba aazhamaa irukku...paathaale theriyudhu, srimadhi eludhinadhunnu :) too good...

குடுகுடுப்பை said...

யம்மா சிரிமதி , ஜோக்கர் எப்படி இருக்காரு.

ஸ்ரீமதி said...

நன்றி ஆயில்யன் அண்ணா.

நன்றி காயத்ரி அக்கா.

நன்றி கார்க்கி.(என்ன ம்ம்??)

நன்றி ஜமால் அண்ணா.(எதாவது சொல்லுங்க அண்ணா ;) )

நன்றி தமிழ் அண்ணா.

நன்றி அப்துல்லா அண்ணா.

நன்றி அனுஜன்யா அண்ணா.

நன்றி புனிதா அக்கா.(விக்கிபீடியால எல்லாம் தேடி... அவ்வ்வ்வ்வ்வ்)

நன்றி ஹேமா அக்கா.

நன்றி சின்ன அம்மணி அக்கா.

நன்றி சக்தி அக்கா.

நன்றி இராதாகிருஷ்ணன் அண்ணா.

நன்றி ஜோ.

நன்றி நாணல் அக்கா.

நன்றி கருணா அண்ணா.

நன்றி சென்ஷி அண்ணா.

நன்றி கார்த்திக். (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

நன்றி ஆதி அண்ணா.(போதும் வாய மூடுன்னு மத்தவங்க சொல்ற அளவுக்கு வரும்.. ;)))

நன்றி முத்து அண்ணா.

நன்றி TKB காந்தி.

நன்றி குடுகுடுப்பை அண்ணா. (அந்த ரெண்டு வரிதான் உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே புரியும் என்பது எனக்கு தெரியும்.. ;) எப்புடீ?? ;) நலம் :))

நன்றி ஜோதி அண்ணா.

நன்றி ராகவ்.

நன்றி திவ்யா அக்கா.

ரௌத்ரன் said...

அழகா இருக்குங்க கவிதை..

SanjaiGandhi said...

எப்டி தான் என் தங்கச்சி இப்டி கலக்கறாளோ? என் கண்ணே பட்றும் போல இருக்கே.. வரிகள் அனைத்தும் வைரம் திருமதி ஸ்ரீமதி.. :)

☀நான் ஆதவன்☀ said...

சூப்பரா இருக்கு ஸ்ரீ.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது