
தனக்குள்ளே போட்டியிட்டு
நாட்கள் தன்னைத் தானே
நீட்டித்துக்கொண்டன...
காலம் கடந்து பழுப்பேறிய நினைவுகள்
கிழிந்த புத்தகத்தின்
ஒட்டா பக்கங்களென
மனதை நெருடி,
உறுத்தி நின்றது...
உன்னிலிருந்து பிய்த்து எடுத்து வந்த பிறகும்,
இன்னும் சில நாள்
சுவாசம் தாங்கவும்,
ரத்தம் சிந்தவும்,
உடன்பட்டிருந்தது இதயம்...
பேச நினைத்தவைகளும், பேசியவைகளும்,
கண்கள் வழி வெந்நீராய் வழிந்து,
கொஞ்சம் கன்னம் கரித்தது...
எனினும், பழகிய இருளின்
கரிய கோட்டோவியமென..
இன்றும் உன் வசமாயிருப்பவை,
என் பரிமாறமுடிந்த
புன்னகைகள் மட்டுமே...
இனியேனும் விட்டுப் பிரிகையில்
விடுபட வழி சொல்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
20 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
எதிலிருந்து
ஏன் / எதற்கு ...
//பரிமாறமுடிந்த
புன்னகைகள்//
//கன்னம் கரித்தது//
அருமையான வரிகள்..
கவிதை சூப்பர் ஸ்ரீ.. :-))
ஏனோ.. மனதை உருகவைக்கும் சோகம்.. :-(
உன்னிலிருந்து பிய்த்து எடுத்து வந்த பிறகும்,
இன்னும் சில நாள்
சுவாசம் தாங்கவும்,
ரத்தம் சிந்தவும்,
உடன்பட்டிருந்தது இதயம்...]]
அருமை
நல்லாயிருக்கு ஸ்ரீமதி!
good one
//இனியேனும் விட்டுப் பிரிகையில்
விடுபட வழி சொல்..//
அடிக்கடி தேவைப்படுமோ..
உருக்கம்..
nice :( ?
நல்லாயிருக்கு ஸ்ரீமதி
எனக்கு முழுசும் புரியலைனு நினைக்கிறேன்.
whatever be the reason, cheer up!
ம்ம்ம் ...
என்ன சொல்ல... :(
Nice one... romba alaga piriva solli irukeenga
Nice...sri :-)
orea allugai alugaiya varuthupaaaaaaaaaaaa chumma comedy pannula pa serious aavea unga kavithaiyellam eannai allvaikkuthupaaaaaaaa
ரொம்ப நல்லாயிருக்கு....
கார்க்கி said...
//இனியேனும் விட்டுப் பிரிகையில்
விடுபட வழி சொல்..//
அடிக்கடி தேவைப்படுமோ..//
தேவைப்படும்.!
நல்லாயிருக்கு ஸ்ரீ!
manathai thottu thirumbukirathu ungal varikal... thodarnthu eluthunkal..
Joe
சரி சரி...!
me too got the kavithai fever
ok fine...
Post a Comment