நினைவுகள்...


காலை நேரத் தூரல்,
காற்றுக் கடத்தும் குரல்கள்,
கறுப்புக் கூந்தலில் குடிபுகுந்து
கவனம் திருடும் வாசனைப் பூ,
கால் கடுக்கும் காத்திருப்புகள்,
கவிதை வரிகளுக்கானத் தேடல்,
கட்டிடக் கட்டுமானங்களின்
காதைத் துளைக்கும் இரைச்சல்கள்,
இவைக் கடந்து
அலுவலகம் நுழைந்த
அடுத்த நொடி,
உன்னின் பதினேழு மணி நேர பயணத்தில்
எத்தனை முறை எனை நினைத்தாய்
எனக் கணக்கிடும்
என் பாழாய் போன மனது...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

29 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

G3 said...

//எத்தனை முறை எனை நினைத்தாய்
எனக் கணக்கிடும்
என் பாழாய் போன மனது...//

Rommmmmmba paavam dhaan avaru :)))

சி. கருணாகரசு said...

கவிதை நச்! எல்லோர் மனதும் அப்படித்தான்.

ஜகதீஸ்வரன் said...

கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

நன்றி...

நர்சிம் said...

ரைட்டு.

நாடோடி இலக்கியன் said...

ம்.

துபாய் ராஜா said...

அருமை.அருமை.

17மணி நேரபயணம் என்பது தூக்கத்தை தவிர்த்த நாள் பொழுதா??

அபுஅஃப்ஸர் said...

ரொம்ப தவித்திருப்பார்லே..

நல்லாவந்திருக்கு வரிகள்

நாணல் said...

:)) கவிதை நல்லா இருக்கு ஸ்ரீ...

//உன்னின் பதினேழு மணி நேர பயணத்தில்எத்தனை முறை எனை நினைத்தாய்எனக் கணக்கிடும்என் பாழாய் போன மனது...//

:))

sakthi said...

அழகான நினைவுகள்

தமிழன்-கறுப்பி... said...

ok...

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாக இருக்கிறது. பல விசயங்களை நாம் செய்யும்போது நமக்கே நமக்கான நினைவுகளைத் தொலைத்துவிடும் நிலை உண்டுதான். நல்லதொரு நினைவுகள். மிக்க நன்றி.

TKB காந்தி said...

:)

தமிழ் பிரியன் said...

ரைட்டேய்ய்ய்ய்ய்!

நான் said...

உங்கள் கணக்கு சரியாய் இருந்ததா?
அழகான அருமையான காதல்
வாழ்த்துகள்

அ.மு.செய்யது said...

Wovvvvv !!!!!!! அழகு !!!

கோபிநாத் said...

வாழ்க! ;)

புனிதா||Punitha said...

:-)))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா...!

Raghavendran D said...

அருமை.. :-))))

logu.. said...

LINES SUMMA GIRRRUNU IRUKKUNGA SRI..

Karthik said...

:))

நிஜமா நல்லவன் said...

:))

Karthik said...

before you go mad for my previous comment(ok, smiley), check this out.. i have given you an award.

http://rainbowstreet-karthik.blogspot.com/2009/07/blog-post_28.html

Divyapriya said...

ரொம்ப அருமையா வந்திருக்கு...

//எத்தனை முறை எனை நினைத்தாய்
எனக் கணக்கிடும்
என் பாழாய் போன மனது...//

பாவம் தான் ;)

ஸ்ரீமதி said...

நன்றி G3 அக்கா :))

நன்றி சி.கருணாகரசு.

நன்றி ஜகதீஸ்வரன்.

நன்றி நர்சிம் அண்ணா :)

நன்றி நாடோடி இலக்கியன் அண்ணா :)

நன்றி துபாய் ராஜா

நன்றி அபுஅஃப்ஸர் அண்ணா.

நன்றி நாணல் அக்கா.

நன்றி சக்தி :)

நன்றி தமிழன் கறுப்பி அண்ணா. :)

நன்றி வெ.இராதாகிருஷ்ணன் அண்ணா. :)

நன்றி TKB காந்தி.

நன்றி தமிழ் பிரியன் அண்ணா. :)

நன்றி நான். :)

நன்றி அ.மு.செய்யது அண்ணா.

நன்றி கோபிநாத் :)

நன்றி புனிதா அக்கா :)

நன்றி ஜோதி அண்ணா. :)

நன்றி ராகவ் :)

நன்றி லோகு.

நன்றி கார்த்திக். :)

நன்றி நிஜம்ஸ் அண்ணா. :) (ஸ்மைலிய மட்டும் மாடரேட் பண்ற மாதிரி ஒரு சாஃப்ட்வேர் கண்டுபிடிக்கனும்.. ;)))

நன்றி திவ்யா அக்கா.. :))

நிஜமா நல்லவன் said...

/
நன்றி நிஜம்ஸ் அண்ணா. :) (ஸ்மைலிய மட்டும் மாடரேட் பண்ற மாதிரி ஒரு சாஃப்ட்வேர் கண்டுபிடிக்கனும்.. ;)))/


ஹா...ஹா...ஹா.

Suresh K said...

இப்ப தான் உங்க பிளாக் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன்... முதல்ல படிச்ச 4-5 போஸ்ட்ல, இது தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... Will read your blog regularly hereafter

PITTHAN said...

17 hours journey??????????????

athu enna ellarum america pora paiyana love pannaranga??????????

local maps ellam povam illaiya?????

பிரியமுடன்...வசந்த் said...

நச்

எல்லோரின் மனதிலும் அப்படித்தான் இருக்கின்றன......

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது