நிலா முற்றம்...


வகிட்டில் வந்து
ஒட்டிக்கொண்ட குங்குமம்,
வார்த்தைகளில் புதிதாக
சேர்ந்துக்கொண்ட நாணம்,
கழுத்தில் காற்றில் ஆடும்
மஞ்சள் தாலி,
கால்களிலே தங்கிவிட்ட மிஞ்சி,
என என்னை எனக்கு
பெண்ணாய் காட்டும்
இவைத்தவிர,
நிலா முற்றத்தின்
கனவுகள் சுமந்த
தனிமையின் இரவுகள்
உனக்கும் பொதுவானவை
என்பதில் மகிழ்கிறேன்....
-அன்புடன்,
ஸ்ரீமதி.

54 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

பிரியமுடன்.........வசந்த் said...

மேடம்
திருமண வாழ்த்துக்கள் நேர்ல சொல்ல முடியல.......

எப்படி இருக்குங்க மேரேஜ் லைஃப்?

சென்ஷி said...

திருமண வாழ்த்துக்கள்... :)

சென்ஷி said...

கவிதை நல்லாயிருக்கு ஸ்ரீமதி!

நட்புடன் ஜமால் said...

திருமண வாழ்த்துகள் தங்கச்சி.

கவிதை அழகு.

ஜீவா said...

தோழிக்கு
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ,கனவுகள் மலரட்டும் நிஜங்களிலும்.

தோழமையுடன்
ஜீவா

எம்.எம்.அப்துல்லா said...

அடடா :)

sakthi said...

திருமண நல் வாழ்த்துக்கள்

sakthi said...

கனவுகள் சுமந்த தனிமையின் இரவுகள் உனக்கும் பொதுவானவை என்பதில் மகிழ்கிறேன்..

அருமை மா

sakthi said...

வகிட்டில் வந்து ஒட்டிக்கொண்ட குங்குமம், வார்த்தைகளில் புதிதாக சேர்ந்துக்கொண்ட நாணம், கழுத்தில் காற்றில் ஆடும் மஞ்சள் தாலி, கால்களிலே தங்கிவிட்ட மிஞ்சி,

என்றும் எல்லா மங்கலங்களும் நிறைந்திருக்கட்டும்

ஜீவன் said...

///வார்த்தைகளில் புதிதாக
சேர்ந்துக்கொண்ட நாணம், ///

அடடா!! ;;)

வாழ்த்துக்கள் தங்கச்சி!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

திருமண வாழ்த்துக்கள்

கவிதை கொள்ளை அழகு - படிக்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு ஸ்ரீமா

கானா பிரபா said...

ஆகா வந்துட்டியாம்மா தங்கச்சி ;)

Muthusamy said...

Happy married life

அ.மு.செய்யது said...

உங்கள் கவிதைகளை போலவே வாழ்க்கையும் அழகுற இறைவனை வேண்டுகிறோம்.

திருமண வாழ்த்துக்கள்.

உங்க கவிதையெல்லாத்தையும் காமிச்சிட்டீங்களா ??

என்ன சொன்னாங்க ??

கார்க்கி said...

தேங்க்ஸ்

G3 said...

Cute :)))))))))))))

நாடோடி இலக்கியன் said...

திருமண வாழ்த்துக்கள்.

Raghavendran D said...

அட..!

வாழ்த்துக்கள் ஸ்ரீ.. :-)

TKB காந்தி said...

உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் என் திருமண நல்வாழ்த்துக்கள். உங்கள் கனவுகள் வெகு விரைவில் நிறைவேறவும், மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கைக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீ.

- TKB காந்தி

gayathri said...

Happy married life

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்!

பாலா said...

super (happy married life )

தமிழ் பிரியன் said...

மகிழ்ச்சியா இருக்குடா.. வாழ்த்துக்கள்!
ஆனாலும் இந்த இடைப் பிரிவு கொஞ்சம் கஷ்டம் தான்.. :( ஆனாலும் அதுவும் நல்ல புரிந்துணர்வுக்கு உதவும்..;-))

நிஜமா நல்லவன் said...

ஆகா வந்துட்டியாம்மா தங்கச்சி ;)

கானா பிரபா said...

நிஜமா நல்லவன் said...

ஆகா வந்துட்டியாம்மா தங்கச்சி ;)
//

என் பின்னூட்டங்களை தொடர்ந்து காப்பியடிக்கும் நல்லவரை கண்டிக்கிறேன் :)

நாணல் said...

thirumana vaazhkai eppadi irukku sri... :) kavithai kalakkals.... :)
vaazthukkal...

நிஜமா நல்லவன் said...

/
கானா பிரபா said...

நிஜமா நல்லவன் said...

ஆகா வந்துட்டியாம்மா தங்கச்சி ;)
//

என் பின்னூட்டங்களை தொடர்ந்து காப்பியடிக்கும் நல்லவரை கண்டிக்கிறேன் :)/


நீங்களே ஆடிக்கொரு பின்னூட்டம் போடுவீங்க....இதிலே தொடர்ந்து காப்பியடிக்கும்னு பெருமை வேற:))

Maddy said...

என என்னை எனக்கு
பெண்ணாய் காட்டும்
இவைத்தவிர,
நிலா முற்றத்தின்
கனவுகள் சுமந்த
தனிமையின் இரவுகள்
உனக்கும் பொதுவானவை
என்பதில் மகிழ்கிறேன்....
.
.
.
இரு மனங்கள் இணைந்து இனிமையாக இல்லறம் தொடங்கியத்தை இதை விட
அருமையாக படிக்கவில்லை. புறா வீடு தூது காலம் போய் ஈ-மெயில் காலம் வந்தாலும்,
காதலை சொல்லவும் தூது விடவும் நிலா எப்போதும் இருக்கும் என்பது விளங்குகிறது.


வளமான பெரு வாழ்வும்
வாஞ்சையுடன் புன்சிரியும்
வாரிசுகளும் வாழ்த்துக்களும்
வழி வழியாய் வரட்டும்.
.
வாழ்த்துக்கள்
கைத்தலம் பற்றிய
மங்கைக்கும்
அவள் மனதில்
மகுடம் சூடிய மணாளனுக்கும்

கலையரசன் said...

வாழ்க நிவிர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!

இங்கனம்,
பதிவுலக நட்புகள்!

Karthik said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு. முக்கியமா சந்தோஷமா இருக்கு. நன்றிகள். :)

அபுஅஃப்ஸர் said...

புது வாழ்க்கையில் அடியெடுத்த வைத்த திருமதிக்கு என் வாழ்த்துக்கள்

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான கவிதை. கனவுகள் சாத்தியப்படலாம் திருமணத்தில் என இரண்டு மனங்களின் மனதை படம் பிடித்து இருக்கும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது. மிக்க நன்றி ஸ்ரீமதி.

ஆயில்யன் said...

//கானா பிரபா said...

ஆகா வந்துட்டியாம்மா தங்கச்சி ;)//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!!!!

(பெ.பா உங்களோட இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப்ப புச்சிருக்கு!!!!)

:))

ஆயில்யன் said...

// கானா பிரபா said...

நிஜமா நல்லவன் said...

ஆகா வந்துட்டியாம்மா தங்கச்சி ;)
//

என் பின்னூட்டங்களை தொடர்ந்து காப்பியடிக்கும் நல்லவரை கண்டிக்கிறேன் :)///

நான் கெட்டவன் அதான் ரிப்பிட்டேய்ய்ய்ய் மட்டும் பாஸ் :)

ஆயில்யன் said...

//நீங்களே ஆடிக்கொரு பின்னூட்டம் போடுவீங்க....இதிலே தொடர்ந்து காப்பியடிக்கும்னு பெருமை வேற:))//


என்ன நல்லவரே எதிர்த்து எதிர்த்து பேசுற மாதிரி ஒரு டோன் தெரியுது சிங்கை வரணுமா?????

வியா (Viyaa) said...

dont forget to come and visit my blogger..i got a award for you

Saravana Kumar MSK said...

கவிதை நல்லா இருக்கு ஸ்ரீ..

கவிதை போலவே திருமண வாழ்க்கையும் கவித்துவமாய் இனிமையாய் இருந்திட வாழ்த்துக்கள்.. :)

கோபிநாத் said...

மீண்டும் வாழ்த்துக்கள் ;))

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா வாங்க வாங்க..!

:)

நான் யாரோட பின்னூட்டத்தையும் ரிப்பீட் பண்ணலைங்கிறதை சொல்லிக்கொள்ள விரும்புறேன்..

எப்புடீ?!

;)

kartin said...

Qte lines!!

best wishes!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்று...

புதுப் பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள்!

அனுஜன்யா said...

ஸ்ரீ,

Welcome back. மகிழ்ச்சிக் கவிதையுடன் துவங்கும் நீங்கள் எப்போதும் மகிழ்வாக இருக்க வாழ்த்துகிறேன்.

உன் பின்னால் இப்படி ஒரு பாசக்கார கும்பல் இருப்பது 'அவருக்குத்' தெரியுமா :)

அனுஜன்யா

Divyapriya said...

சொல்லவே இல்லை? தங்கச்சிக்கு கல்யாணமாமே? :))
உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
கவிதையை பத்தி சொல்லவும் வேணுமா? வழக்கம் போல கவிதை அழகோ, அழகு...

//நிலா முற்றத்தின் கனவுகள் சுமந்த தனிமையின் இரவுகள் //

அட அட!!!

dharshini said...

happy married life..

anbudan vaalu said...

திருமண வாழ்த்துக்கள் ஸ்ரீ...

அருள் said...

திருமண வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

SanjaiGandhi said...

:))

புனிதா||Punitha said...

:-)

ஸ்ரீமதி said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் :))

Vijay said...

கல்யாணத்திற்குப் பிறகு உங்கள் முதல் கவிதையா??? வெகு ஜோர்.

வாழ்த்துக்கள் !!!

சின்ன அம்மிணி said...

திருமண வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

கவிதை அருமை

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

அமுதா said...

திருமண வாழ்த்துக்கள்!!!
கவிதை அழகு

ராமலக்ஷ்மி said...

அழகுக் கவிதை.

அன்பான வாழ்த்துக்கள்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

Wow.. அழகியல் கவிதை.!

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது