சிரிக்கவா?அழவா??


முத்தங்களுடன் முடிவுற்ற
நன் நேசங்களின்
வெறுமைப் படர்ந்த அந்த
கடைசி நாள் இரவின் விளிம்பில்
என் மணிக்கட்டு வழி விடுபட்டு
அறை முழுவதும் வியாபித்திருந்தது
நம் காதல்
அறியாதவர்கள் அதை
'சிவப்புத் திரவமென்றும்'
என்னை
'இறந்துவிட்டது' என்றும்
முனகினர்...
முட்டாள்கள் முணுமுணுக்கட்டும்
நீ சொல்
இருமுறை இறந்திருக்கிறேன்...
சிரிக்கவா? அழவா??

-அன்புடன்,
ஸ்ரீமதி.

30 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

அ.மு.செய்யது said...

// இருமுறை இறந்திருக்கிறேன்...
சிரிக்கவா? அழவா??//

நல்லா இருக்குங்க கவிதை.

பேக்ரவுண்டில் லேசாக கசங்கியிருக்கும் காகிதம் கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

ஹவ் சிம்பாலிக் !!

எம்.எம்.அப்துல்லா said...

ஃபர்ஷ்ட்டூ
:)

எம்.எம்.அப்துல்லா said...

ஆஹா செகண்டா??? வட போச்சே

:(((

எம்.எம்.அப்துல்லா said...

அழகு :)

Muthusamy said...

எனக்கு புரியவில்லை

பிரியமுடன் பிரபு said...

கதால் தோல்வியால் கை நரம்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டவரின் வரிகள் - சரிதேனே

அழகாயிருக்கு

சென்ஷி said...

//நன் நேசங்களின் வெறுமை//

நல்ல வரி சாதுர்யம்.

(இல்லை ஷ்பெல்லிங்க் மிஸ்டேக் ஆகிடுச்சா :-) )

ஆயில்யன் said...

////நன் நேசங்களின் வெறுமை//

நல்ல வரி சாதுர்யம். //


ஆமாங்க நல்லா இருக்கு !

நாணல் said...

//மணிக்கட்டு வழி விடுபட்டு//

valiyai azhaga solli irukkenga...vaarthiaglin prayogam arumai....

☀நான் ஆதவன்☀ said...

//சிரிக்கவா? அழவா??//

இந்த கவிதையை படிச்சுட்டு அதை நாங்க கேட்கனும் ஸ்ரீமதி :)

☀நான் ஆதவன்☀ said...

வழக்கம் போல கவிதை நல்லாயிருக்குது

நாகை சிவா said...

சிரிக்க தான் வேண்டும். இரண்டாம் முறை இறந்தற்க்கு.... லூசத்தனமா இருக்கே என்பதற்க்காக! ( என் தனிப்பட்ட கருத்து மட்டுமே )

Raghavendran D said...

எத்தனை முறையானாலும் சரி.. இறப்பதற்கு காதல் காரணமாக இருந்தால்.. நிச்சயம் சிரிக்கதான் வேண்டும்.. :-)

கவிதை அருமை.. :-)

தமிழ் பிரியன் said...

வலிக்குதே... ;-)

வண்ணத்துபூச்சியார் said...

அருமை ஸ்ரீ..

ramesh said...

அழகு..!

Karthik said...

சிரிக்கவா?அழவா??
:S

sakthi said...

அருமை

gayathri said...

nallairuku pa kavithai

dharshini said...

கவிதை அழகு.
சிரிக்க மட்டும் சிரி, அழாதே sri..

நேசமித்ரன் said...

//நன் நேசம் //
நல்ல சொற்கோர்வை ....!
தன்னை வதைத்தேனும் பிரியத்தை
நிரூபித்துக் கொள்ள எத்தனிக்கும் வலி
விரவி இருக்கிறது வரிகளுக்கிடையிலான மௌனங்களில்...

kanagu said...

அழகான கவிதை ஸ்ரீமதி :)

சூரியன் said...

கவிதை அழகு .. ஆனால் ஏன் பொதுவா

நிறைய கவிதை தோல்வியில் வருது . உற்சாக கவிதை வராதோ ?

நான் கவிதை படிப்பதில்லை , படித்தாலும் புரிவதில்லை .. புரிந்ததால் உங்களிடம் இந்த வினா..

அகில் பூங்குன்றன் said...

கவிதை வழக்கம் போல நல்லா இருக்குங்க. வாழ்த்துகள் மணமுடிப்பிற்கு.

திகழ்மிளிர் said...

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்

புதியவன் said...

சிந்திக்க வைக்கும் கவிதை!

மங்கள வாழ்த்துக்கள்! (போட்டோஸ் போடுங்க )

Arangaperumal said...

நான் என்னமோ சிரிக்கனும்ன்னு நினைக்கிறேன்.அருமை

வெ.இராதாகிருஷ்ணன் said...

சோகம் சொல்லும் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.

நளன் said...

:) slight sad tone. quite nice.

vivek said...

your writings getting mature day by day ..
congrts ..
vivek

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது