மழை... கதம்பம்ன்னும் சொல்லலாம்...

ஊர்ல கொஞ்சமா மழை பெய்ய ஆரம்பிசிருக்கு. ஏதோ நம்மலால எல்லாரும் நல்லா இருந்தா சரி. அக்கா தான் சொன்னா நீ இப்போல்லாம் சீக்கிரம் எழுந்துக்கற, ஒழுங்கா சாப்பிடற, மழை வரும்ன்னு. நாலு பேர் நல்லா இருப்பாங்கன்னா எதுவுமே தப்பில்ல. ;-)

இது நாயகன் பட வசனம் தானே.. ம்ம் அந்தப்படத்துல கமல் பொண்ணா நடிச்சிருக்குற நடிகை பேர் என்ன? :-( ரொம்ப நாளா நானும் அவங்க பேர தெரிஞ்சிக்க ட்ரை பண்றேன் ம்ஹீம் தெரியல...

பேர்.. இது எனக்கு ஒரு பெரிய தொல்லை.. பேர மறந்து தொலைகிறேன். அப்பறம் அந்த பொண்ணு எதிர்ல வரும்போது தெரியாத மாதிரி போலாம்னாலும் முடியல.

"ஹாய் ஸ்ரீ, எப்படி இருக்க?"

"ஓ... நல்லா இருக்கேனே... தாங்க்ஸ்"

இனிதான் பிரச்சனையே அவங்க என்ன நல்லா இருக்கியான்னு கேட்டாங்கல்ல வித் பேரோட? இப்போ நான் கேட்கனும் வித் பேரோட... :-(( நீ எப்படி இருக்கன்னு கேட்டாலும் பிரச்சனை, நீங்க எப்படி இருக்கீங்கன்னாலும் பிரச்சனை.. ஏன்னா அவங்கள முதல்ல பார்த்த போது என்ன சொன்னேனோ அத தானே மெயின்டெயின் பண்ணனும்? நாம பாட்டுக்கு மரியாதைக் கொடுத்து பழக்கிட்டா அப்பறம் கஷ்டம்... அதனால கஷ்ட்டப்பட்டு மூளைய கசக்கி,

"Then, How do u do?"

அப்படின்னு கேட்டுடுவேன்... ஹி ஹி ஹி ஆங்கிலம் அந்த அரை நொடி மட்டும் வாழ்க.. ;-)))

வாழ்க... ம்ம்ம் இந்த வாழ்க கோஷம் போடறவங்கள பார்த்தாலே எனக்கு தலையே வெடிக்குது.

தலை... ம்ம்ம் அஜித் படம் ஒன்னும் வரலியா இப்போதைக்கு? கார்க்கிக்கு சந்தோஷமாவும், கொஞ்சம் கவலையாவும் இருக்கும். சந்தோஷம்- படம் வராததுக்கு, கவலையும்- படம் வராததுக்கு தான். கிண்டல் பண்ண ஆள் கிடைக்காதே. கார்த்திக்கு தெரியும்.

கார்த்திக்... அக்னி நட்சத்திரம் படத்துல கார்த்திக், நிரோஷா டூயட் "வாவா அன்பே, அன்பே" ரொம்ப பிடிச்ச பாட்டு... பாட்டு கேட்டே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.. என் டீம் லீடுக்கு பாட்டு கேட்டாலே பிடிக்காது. அவர்கிட்ட நான் பொங்கலுக்கு(இப்போ இல்ல...) ஊருக்கு போக லீவ் கேட்டதுக்கு(லீவுக்கே லீவ் கேட்டது நானா தான் இருப்பேன்) சொல்றார்,

"பொங்கலுக்கு லீவா? வாட் ஈஸ் திஸ் மா? எனக்கும் தான் பொங்கல் இருக்கு, நான் வொர்க் பண்ணல?".

இதே ஆளு என் ஃப்ரெண்ட் தலைவலிக்குது கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போகனும்ன்னு சொன்னதுக்கு, " எனக்கும் தான் தலை வலிக்குது"-ன்னு சொல்லிருக்கு. அடுத்த ஃப்ரெண்ட் லீவ் கேட்கப்போறான். உனக்கு எய்ட்ஸ்-ன்னு சொல்லுடான்னு சொல்லிருக்கோம். பார்க்கலாம் என்ன சொல்றார்ன்னு.

இவர சொல்லி ப்ரயோஜனமே இல்ல. இப்போ எல்லாருமே இப்படிதான், எல்லாமே இப்படிதான்... ஒரு பிசின்ஸ் மைண்டடா மாறிகிட்டே வராங்க. மனித நேயமே குறைஞ்சு போச்சோ? மனிதர்களுக்கே மதிப்பில்லாம போச்சோன்னு தோணுது... பெரியவங்க தான் இப்படி இருக்காங்க, சரி குழந்தைங்கள்ல இருந்து ஆரம்பிக்கலாம்னா, அவங்களையும் Read/ Write CD மாதிரி மாத்தி வெச்சிருக்காங்க. புக்ல இருக்கறதத்தவிர ஒன்னும் தெரிய மாட்டேங்குது... :-(( சகோதரத்துவம், சமத்துவம் எல்லாம் எங்கயோ தொல் பொருள் மாதிரி மறைஞ்சு போச்சு.

சமத்துவம்... ஷேர் ஆட்டோக்கள்லயும், Software companies-லயும் மட்டும் தான் இருக்கோன்னு தோணுது... பெண்கள் சம உரிமையும் அங்க தான்.

"நைட் 12 வரைக்குமெல்லாம் இருக்க முடியாது. எனக்கு ரெண்டு குழந்தை இருக்கு..."

"Well Miss, எனக்கும் தான் குழந்தை இருக்கு". என்னமோ இவர் தான் அந்த குழந்தைக்கு அம்மா மாதிரி... ம்ம்ம் என்ன சொல்ல? நாட்கள் இப்படியே போச்சு... ஆனா, இதுவும் நல்லாதான் இருந்தது.. :-))) இடையில் வலைச்சர ஆசிரியரா இருந்ததும் நல்ல மாறதலா இருந்தது. இன்னும் முழுதாக வெளிவரவில்லைன்னாலும், இப்போதைக்கு கொஞ்சம் தெளிவாக உணர்கிறேன். வெகு சீக்கிரம் வருகை வாடிக்கையாகும். :-))) அதுவரை கடைய பார்த்துக்கிட்ட எல்லாருக்கும் நன்றி... :-)))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

23 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

வெ.இராதாகிருஷ்ணன் said...

பெயரை மறக்கும் விதமும், வேலையிடத்தில் விடுப்பு தர மறுக்கப்படும் விதமும் மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.

மிகவும் நன்றாக எழுதப்பட்டு உள்ளது. மிக்க நன்றி.

Raghav said...

நல்லதொரு கதம்பம்.. ரசித்தேன்.

ஜீவன் said...

///பொண்ணா நடிச்சிருக்குற நடிகை பேர் என்ன? :-( ரொம்ப நாளா நானும் அவங்க பேர தெரிஞ்சிக்க ட்ரை பண்றேன் ம்ஹீம் தெரியல...//


அந்த அக்கா பேரு கார்த்திகா!!!

நல்ல பதிவு !! துள்ளல் தான் கொஞ்சம் கம்மியா இருக்கு !!!

ஆயில்யன் said...

//அதுவரை கடைய பார்த்துக்கிட்ட எல்லாருக்கும் நன்றி... :-)))//

ஓ!

இது கடையை பார்த்துகிட்டவங்க நிக்கிறாங்களா இல்ல ஓடிப்போய்ட்டாங்களானு செக் பண்ண வந்த பதிவா !

ரைட்டு!

ஆயில்யன் said...

//அடுத்த ஃப்ரெண்ட் லீவ் கேட்கப்போறான். உனக்கு எய்ட்ஸ்-ன்னு சொல்லுடான்னு சொல்லிருக்கோம். பார்க்கலாம் என்ன சொல்றார்ன்னு.//


அப்பிடியெல்லாம் கேக்கப்புடாது!

அப்பிடியெல்லாம் சொல்றதாலத்தான் அவுரு லீட் ஆ இருக்காரு நீங்க அவுருக்கு பின் பீடு நடை போட்டு போய்க்கிட்டிருக்கீங்க புரிஞ்சுதா!

(அந்த லீட் எந்த பேர்ல பிளாக்ல கும்மியடிச்சுக்கிட்டிருக்காரோ!)

Raghav said...

ம்.. உடனடி பதில் பின்னூட்டமா :) சூப்பர்.. இப்போ தான் உங்க பதிவுகளை பார்க்கிறேன்.. படிச்சுட்டு சொல்றேன். :)

தமிழ் பிரியன் said...

நல்ல ரசனை.. கலக்கல்!
அடிக்கடி வந்து போய்க்கிட்டு இருக்கனும்டா.. ;-)

அன்புடன் அருணா said...

ம்ம்ம் மழை எப்போ அடிச்சுப் பெய்யும்னு காத்திருக்கோம்...

Raghavendran D said...

அருமையான கதம்பம்.. :-))

கோபிநாத் said...

ஆகா..எல்லோரும் சூப்பருன்னு சொல்றாங்க...ஆனா எனக்கு மண்டை காயுது...முடியல அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்...

ஆனா ஒன்னு

\\அதுவரை கடைய பார்த்துக்கிட்ட எல்லாருக்கும் நன்றி... :-)))\\

ரொம்ப சந்தோஷமாக இருக்கு ;)

இரா.சிவக்குமரன் said...

///"நைட் 12 வரைக்குமெல்லாம் இருக்க முடியாது. எனக்கு ரெண்டு குழந்தை இருக்கு..."

"Well Miss, எனக்கும் தான் குழந்தை இருக்கு".///

எப்பிடிங்க miss?

Muthusamy said...

இத பூவுன்னும் சொல்லலாம் புய்பம் ன்னு சொல்லலாம்..நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்..

And thanks for giving a tip that when I ask leave for the next time I would use it (same replies from the management here too)

Good one.

நசரேயன் said...

//அதுவரை கடைய பார்த்துக்கிட்ட எல்லாருக்கும் நன்றி... :-)))//

கண்டிப்பா

நாகை சிவா said...

:)

நல்ல மணம்.

கடை சாவிய கொடுத்தா இன்னும் நல்லா பாத்துப்போம் ;)

கார்க்கி said...

rightu..madam formkku vanthuttanga pola

சென்ஷி said...

:)

நாணல் said...

:) நல்ல பதிவு.. வேடிக்கையா ஆரம்பிச்சு சம்த்துவம்னு நடைமுறைக்கு ஏற்ற விஷயத்தோட முடிச்சிருக்கீங்க... கதம்பம் நல்லா இருக்கு.... :)

ஆ! இதழ்கள் said...

ஒரு பிசின்ஸ் மைண்டடா மாறிகிட்டே வராங்க. மனித நேயமே குறைஞ்சு போச்சோ? மனிதர்களுக்கே மதிப்பில்லாம போச்சோன்னு தோணுது... //

லீவு கிடைக்கலைனா அப்படித்தான் தோன்றும்.

Karthik said...

உங்களை கவிதை ஏதாவது எழுதச் சொன்னா, உக்காந்து இப்படியா பின்நவீனத்துவமா சிந்திக்கிறது? அவ்வ்!!

இந்த பதிவில் எனக்கு ப்ரெஞ்ச் ரெவலூஷன், கம்யூனிஸம்லாம் ஞாபகம் வருது. ;)

Karthik said...

//வெகு சீக்கிரம் வருகை வாடிக்கையாகும்.

:)

Maddy said...

வெகு சீக்கிரம் வருகை வாடிக்கையாகும். :-)))

இந்த பதிவின் ஹை லைட்!!! பல்ப் எறியுது!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

வெல்கம் பேக்.!

ரௌத்ரன் said...

//அடுத்த ஃப்ரெண்ட் லீவ் கேட்கப்போறான். உனக்கு எய்ட்ஸ்-ன்னு சொல்லுடான்னு சொல்லிருக்கோம். பார்க்கலாம் என்ன சொல்றார்ன்னு.//


முடியலடா சாமி :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது