நீளட்டும்....


இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
அடங்கியிருந்தது காலம்,
காலுக்கடியில் நகரக்
காத்திருந்தது பூமி,
காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது
நாசித் துளைக்கும் காற்று,
நிசப்தங்கள் சப்தங்களாக
முடிச்சவிழ்ந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது அனைத்தும்..
எனினும் நினைத்தேன்,
அவன் இதழ்வழி
என் கரம் புகுந்து
உயிர்க்குடித்த
அந்த முதல் முத்தம்
இன்னும் கொஞ்சம்
நீண்டிருக்கலாமென‌...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

34 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

சுபா said...

அருமை ஸ்ரீ..:) ரொம்ப ஏக்கமோ :)

ஆயில்யன் said...

மீ த உள்ளேன் அய்யா!

கானா பிரபா said...

அருமையா சொல்லியிருக்கீங்க அய்யா ஸ்ரீ

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
அருமையா சொல்லியிருக்கீங்க அய்யா ஸ்ரீ
//

கானாவின் கமெண்ட்டால் பெருமை அடைந்திருக்கிறீர்கள்

G3 said...

:))))))))))))))

G3 said...

// ஆயில்யன் said...

//கானா பிரபா said...
அருமையா சொல்லியிருக்கீங்க அய்யா ஸ்ரீ
//

கானாவின் கமெண்ட்டால் பெருமை அடைந்திருக்கிறீர்கள்//

Repeatae :)))))

நிஜமா நல்லவன் said...

:)

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

சென்ஷி said...

:-)

Karthik said...

S.U.P.E.R.B. :)

புதியவன் said...

//எனினும் நினைத்தேன்,
அவன் இதழ்வழி
என் கரம் புகுந்து
உயிர்க்குடித்த
அந்த முதல் முத்தம்
இன்னும் கொஞ்சம்
நீண்டிருக்கலாமென‌...//


அழகு...

Raghavendran D said...

:-))

தமிழ் பிரியன் said...

கலக்கல் ஸ்ரீமதி!

ஆதிமூலகிருஷ்ணன் said...

கிளாஸ்.!

எதிர்கவுஜகள் விள்ளையாடிக்கொண்டிருக்கின்றன.. போங்கள்.!

ஜோதிபாரதி said...

:)

sakthi said...

அவன் இதழ்வழி
என் கரம் புகுந்து
உயிர்க்குடித்த
அந்த முதல் முத்தம்
இன்னும் கொஞ்சம்
நீண்டிருக்கலாமென‌...


அருமை

நாணல் said...

:) அழகா இருக்கு ஸ்ரீ...

yathra said...

அழகு.

kanagu said...

அருமையான் கவிதை :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல அனுபவம்(!!!???)

புனிதா || Punitha said...

:-) அழகு

" உழவன் " " Uzhavan " said...

அழகு ஸ்ரீ..

//அவன் இதழ்வழி
என் கரம் புகுந்து//

என் இதழ் புகுந்து என்று இருந்திருக்கலாமே???

Saravana Kumar MSK said...

ரொம்ப நாளாளாளாளாளாளாளா ஆளையே காணோம்.... எப்படி இருக்க?

Saravana Kumar MSK said...

கவிதை கலக்கல்.. கொஞ்சம் பொறாமையா இருக்கும் போதிலும்..

vivek said...

கவிதை..கவிதை ..

வெண்பூ said...

இன்று வலைச்சரத்தில் உங்களைக் குறித்து எழுதியிருக்கிறேன். நன்றி.

மயாதி said...

போகிற போக்கை பார்த்தால் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஆண்களை விட கூடி விடும் போல இருக்கே....
அதுவும் நல்லது தானே

நல்ல கவிதை ,
வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

சென்ற வாரம் வலைச்சரத்தினில் மறுபடியும் அறிமுகம் - காதல் கவிதைகள் எழுதும் கவியரசி ஸ்ரீமதி - இக்கவிதை நன்று நன்று

இதழ் வழி கரம் புகும் ( இதழ் அல்ல - நாகரீகம் ) உயிர் குடிக்கும் முதல் முத்தம் நீள ஆசைப்படுவதற்குள் முடிந்து விட்டதே !

நல்வாழ்த்துகள் ஸ்ரீமதி

Raghavendran D said...

நன்றி ஸ்ரீமதி..
வலைசரத்தில் எனது வலைபூ பற்றிய வரிகள் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி..!

நன்றிகள் கூற வார்த்தைகளின்றி கிடக்கிறேன்..

அளவில்லாத அன்பும், நன்றிகளும்..

:-))))))))))))

நேசமித்ரன் said...

கவிதை
நல்லா வந்திருக்கு..!

தினேஷ் said...

மென்மையான கவிதை...

தினேஷ்

ஜீவா said...

மணநாள் காணவிருக்கும் ஸ்ரீமதிக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்க!!

சதிஷ் குமார் said...

அட அட அட!!!

வெ.இராதாகிருஷ்ணன் said...

இன்ப நினைவுகளின் நேரம் முடிந்துவிடக்கூடாதுதான், நல்ல கவிதை.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது