கேள்விகள் கார்த்திக்... பதில் மட்டும் நான்...

ரொம்ப நாள் கழிச்சு கரையோரம் வந்துருக்கேன் டேக் போஸ்ட்டோட.. அகநானூறு, அவுட் ஆஃப் சிலபஸ் கேள்விகளைத் தவிர மத்ததுக்கெல்லாம் பதில் மாதிரி ஏதோ ஒன்ன சொல்ல ட்ரை பண்ணிருக்கேன்...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அப்பா அம்மா வெச்சதுனால... ரொம்ப பிடிக்கும் அது என்னமோ என்ன மாயமோ தெரியல என் பேர சொன்ன அடுத்த நிமிஷம் யாரா இருந்தாலும் ஸ்ரீ ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க ரொம்ப ஃ ப்ரென்ட்லியா இருக்கும்..

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சோகமா இருக்கும்போது அழறத எல்லாம் ஞாபகம் வெச்சிக்கறதில்ல... சந்தோஷத்துக்கு எதுக்கு அழனும்

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் எல்லா மதியமும் தயிர் சாதம் தான் நிறைய முறை அம்மா கிட்ட இதுக்காக சண்ட போட்ருக்கேன் பட் இப்போ அது தான் என் பேவரிட் டிஷ்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
ம்ஹும் மாட்டேன். ஏன்னா நான் நல்லா பேசினாலும் கோவம் கொஞ்சம் அதிகம் நானா போய் யார் கிட்டயும் பேசமாட்டேன்.. சோ நான் என்னோட நட்ப என்னோட வெச்சிக்க மாட்டேன்.. ஒரே எண்ணம் கொண்ட ரெண்டுபேர் நிச்சயம் ரொம்ப நாள் சேர்ந்து இருக்க முடியாதுங்கறது என் எண்ணம்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
சாரி எனக்கு ரெண்டுமே பார்க்க மட்டும் தான் பிடிக்கும்.


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள். அவர் எப்படிப்பட்டவர்ங்கறத ஈசியா தெரிஞ்சிக்கலாம் அதோட கண்ண பார்த்து பேசறதுதான் மேனர்ஸ்ன்னு எனக்கு சொல்லி தந்துருக்காங்க.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் தான் பிடிக்காத விஷயமும். எல்லார்கிட்டயும் ஈசியா ஃ ப்ரென்ட் ஆகிடரதுனால அவ்ளோ பேரையும் ஹேண்டில் பண்ண முடியாம தவிக்கிறேன்.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பாஸ்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பாஸ்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கிரே வித் ஆரஞ்சு (ரொம்ப முக்கியம்)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என் சிஸ்டம் பார்த்துகிட்டு. ஒரு கல் ஒரு கண்ணாடி கேட்டுட்டு இருக்கேன்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ரெட்.

14. பிடித்த மணம்?
நிறைய. பெட்ரோல் வாசனை புது புத்தகத்தின் நடுப்பக்க வாசனை நெயில் பாலிஷ் வாசனை இன்னும் நிறைய அதுவும் நேரத்துக்கு தகுந்தார் போல மாறும்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
பிடிக்காத விஷயம்ன்னு பெரிசா எதுவும் இல்ல, அது தான் பிடிச்ச விஷயமே.. ;-)) காரணம் வேற என்ன "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்" தான்..

நாணல்.
புதியவன்.
ஜி3.
காயத்ரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நிறைய இருக்கு. ரொம்ப ரசிச்சு சிரிக்க வெச்சது இந்த பதிவு தான்.

17. பிடித்த விளையாட்டு?
பார்க்க கிரிக்கெட்.. விளையாட ஷெட்டில்கார்க்.. ;-))

18. கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ம்ம்ம்ம் அது திரைப்படம்ன்னு பிரிச்சு பார்க்கமுடியாத யதார்த்தமான படங்கள் ரொம்ப பிடிக்கும்..

20. கடைசியாகப் பார்த்த படம்?
அயன்.

21. பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஸ்ரீரங்கத்து தேவதைகள்-சுஜாதா
விழுந்த நட்சத்திரம்-சுஜாதா

(கார்த்திக் சேம் ஸ்வீட் நீ படிக்கற A Thousand Splendid Suns நானும் படிச்சிட்டு இருக்கேன்.. பட் ரெண்டு பெரும் அத சொல்ல வேண்டாம்ன்னு தான் வேற புக் சொல்லிருக்கேன். :-) )

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போ எனக்கு பிடிக்காம போகுதோ அப்போ மாத்திடுவேன் நாள் கணக்கெல்லாம் இல்ல.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
ம்ம்ம் பஞ்சு மிட்டாய், குல்பி ஐஸ் வரும்போது வருமே அந்த குட்டி மணி சத்தம் அது ரொம்ப பிடிக்கும். வாங்கறேனோ, இல்லையோ கேட்டதும் ஓடி வந்து பார்ப்பேன்.
பிடிக்காதது டிவி சத்தம்.. எப்பவுமே எனக்கு ரொம்ப அமைதியா இருக்கற சூழல் தான் பிடிக்கும். நான் சத்தத்திற்கு எதிரி.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஹைதிராபாத் (எத்தன கிலோ மீட்டர் கார்க்கி? )

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படின்னா??

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பொய் சொல்றது. உண்மை சொல்றதுனால வர விளைவுகள கூட தாங்க தயாரில்லாதவன், வாழ தகுதி இல்லாதவன் அப்படிங்கறது என் எண்ணம்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோவம்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கேரளா (வாழ விருப்பப்பட்ட இடம்). மற்றபடி, மலையில் இருக்கும் எல்லா இடங்களும் எனக்கு பிடிக்கும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே எப்பவும்....

31.கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
பாஸ்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரியில் விளக்க முடியாதது தான் வாழ்க்கை. வாழ்ந்துதான் பார்க்கணும்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

34 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

சென்ஷி said...

மீ த ஃபஷ்டு :)

கார்க்கி said...

770 KMS...

Karthik said...

me the 3rd!

Karthik said...

என்னோட பேவரைட்டும் தயிர் சாதம்தான். :)

//எல்லார்கிட்டயும் ஈசியா ஃ ப்ரென்ட் ஆகிடரதுனால அவ்ளோ பேரையும் ஹேண்டில் பண்ண முடியாம தவிக்கிறேன்.

:)

//A Thousand Splendid Suns

இது மட்டும் இல்லை. நானும் ஸ்ரீரங்கத்து கதைகள் படிச்சிட்டிருக்கேன். ஸோ, 2/3 புக்ஸ் ஸேம்! ஆச்சர்யமா இருக்கு. :))

//ஒரு வரியில் விளக்க முடியாதது தான் வாழ்க்கை.

வெரி நைஸ்! :)

அன்புடன் அருணா said...

நிறைய பாஸ் பண்னியிருக்கீங்க!!!

vivek said...

nice post ..

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படின்னா??

neenga nalla poetry eluthreengalay ..
vivek

ஆயில்யன் said...

மீ த அட்டெண்டன்ஸ் போட்டிக்கிட்டேன் !

ஆயில்யன் said...

//உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் தான் பிடிக்காத விஷயமும். எல்லார்கிட்டயும் ஈசியா ஃ ப்ரென்ட் ஆகிடரதுனால அவ்ளோ பேரையும் ஹேண்டில் பண்ண முடியாம தவிக்கிறேன்.///

நிசமாவே ரொம்ப கஷ்டமா விசயம்தாங்க :(

தமிழ் பிரியன் said...

1. ஆமா... ஸ்ரீ சூப்பர் பெயர் .. ஆனா ஏற்கனவே ஒற்றை அன்றில் இருப்பதால் கஷ்டப்பட்டு ஸ்ரீமதின்னு கூப்பிட வேண்டி வருது.
2. ம்ம்ம்ம் இனி வெங்காயம் வெட்டும் போது மட்டும் அழுதா போதும் போல
3. ஹைய்யா... அப்ப நல்ல எழுத்தாளினின்னு சொல்லுங்க
4.அட.. தயிர் சாதம்.. நானும் அதைத் தான் சொன்னேன்..ஆனா இன்னும் கொஞ்சம் சேர்த்துஹிஹிஹி
5. அவ்வ்வ்வ்வ் கோவக்காரப் புள்ளயா நீ.. இனி அதை எல்லாம் கண்ட்ரோல் பண்ணிக்கோனும்..செரியா?

தமிழ் பிரியன் said...

6. அவ்வ்வ்வ்வ்வ்வ் தள்ளி நில்லும்மா..
7. குட் பாலிஸி!
8. உண்மைதான்.. :(
9. இனி தெரிஞ்சப் பிறகு பதிவா போடுங்க.. :))
10. பாஸ்.. யார் அந்த பாஸ்???.. ;-))

தமிழ் பிரியன் said...

11.. ஆமா என்ன கேள்வி இதெல்லாம்...
12. குட் குட் குட் ஆன்சர்
13. யம்மாடியோவ்...
14. அய்ய... செம டெரரா இருக்கும் போல இருக்கே
15. நல்ல பாலிஸி.. ;-))

தமிழ் பிரியன் said...

16. ஓக்கே
17. அட வீராங்கணையை கணிணி படிக்க வச்சிட்டாங்களே
18. ஹைய்யா... என்னை மாதிரி தான் தங்கச்சியும்
19. யதார்த்தமான படங்கள்.. வெரிகுட்.. ஜிகினா உலகம் வேண்டாம் தான்.
20 டூ 32 .. பரவாயில்லை... ஆர்வமில்லாம சொல்ல்லிட்டீங்க

நாடோடி இலக்கியன் said...

//உண்மை சொல்றதுனால வர விளைவுகள கூட தாங்க தயாரில்லாதவன், வாழ தகுதி இல்லாதவன் அப்படிங்கறது என் எண்ணம். //

பொய்யை உண்மை மாதிரி பேசுபவர்களை நம்புவதற்கு ஒரு கூட்டம்,அந்த கூட்டத்திடம் உண்மையை பேசி பொய்யன் ஆன கதையும் உண்டு,ஆனாலும் யார் என்ன நினைத்தால் என்ன உண்மையை பேசிவிட்டால் குற்ற உணர்ச்சி இல்லாமல் ஒரு நிம்மதி கிடைக்கும்.

ஏதாவது புரியுதா சகோ?

நாணல் said...

//அது என்னமோ என்ன மாயமோ தெரியல என் பேர சொன்ன அடுத்த நிமிஷம் யாரா இருந்தாலும் ஸ்ரீ ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க ரொம்ப ஃ ப்ரென்ட்லியா இருக்கும்..//

:)


//பெட்ரோல் வாசனை புது புத்தகத்தின் நடுப்பக்க வாசனை நெயில் பாலிஷ் வாசனை//

:) ஆமா ஆமா எனக்கும் பிடிக்கும் , ஆனால் கொஞ்ச நேரம் தான்..


//ஒரு வரியில் விளக்க முடியாதது தான் வாழ்க்கை. வாழ்ந்துதான் பார்க்கணும்.//

நச்சுன்னு சொல்லிட்டீங்க... :)

நட்புடன் ஜமால் said...

வாழ்க்கை பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க ...

‘’பாஸ்’’ நலம் தானே!

Divyapriya said...

இது வரைக்கும் படிச்சதுலையே வாழ்க்கை பத்தின உங்க answer தான் எனக்கு பிடிச்சிருக்கு :)

ஜீவன் said...

என்ன தங்கச்சி ஆளையே காணோம் ? கரையோர கனவுகளா?

kanagu said...

/*ஸ்ரீரங்கத்து தேவதைகள்-சுஜாதா*/

எல்லாரும் இத தான் படிக்கிறீங்க போல :)

நல்லா இருந்துதுங்க டாக்... ரசித்தேன் :)

Muthusamy said...

good way to explore oneself (depending on the accuracy of the data provided) :-)

ஆகாய நதி said...

சூப்பர் பதில்கள் :)

நிஜமா நல்லவன் said...

:))

தமிழன்-கறுப்பி... said...

இயல்பா சாதாரணமா பதில் சொல்லிருகிங்க ஸ்ரீ...

தமிழன்-கறுப்பி... said...

ஆமா இந்த இரண்டாம் நம்பர்காரர் இப்படித்தான்னு பேசிக்கிறாங்களே உண்மையா (பதில்கள் அப்படித்தான் தெரியுது)

;)

ஜோதிபாரதி said...

ஐ டூ பாஸ் பை யோர் கம்மென்ட்

Me the 24th!

ஜோசப் பால்ராஜ் said...

பதில்கள் நேர்மையா அலங்காரமில்லாம இருந்துச்சு.

பலபேரோட பதில்கள படிச்சதுல இருந்து ஒரு விசயம் நல்லாத் தெரிஞ்சது என்னான்னா, நிறையா பேருக்கு தயிர்சாதம் புடிக்குது.

தமிழர்களின் தேசிய உணவா தயிர்சாதத்தையே அறிவிச்சுடலாம்.

gayathri said...

//ஒரு வரியில் விளக்க முடியாதது தான் வாழ்க்கை. வாழ்ந்துதான் பார்க்கணும்.//


azaka solli iruka da

புதியவன் said...

அனைத்தும் யதார்த்தமான பதில்கள்...

//ஒரு வரியில் விளக்க முடியாதது தான் வாழ்க்கை. வாழ்ந்துதான் பார்க்கணும்.//

அழகான விளக்கம்...

புதியவன் said...

//"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்" //

நல்ல கொள்கை...

நசரேயன் said...

பரிச்சையிலே பிட்டு அடிச்சி பாஸ் ஆனா மாதிரி இருக்கு

ஆதிமூலகிருஷ்ணன் said...

நைஸ் அட்டெம்ட்.!

anbudan vaalu said...

// பெட்ரோல் வாசனை புது புத்தகத்தின் நடுப்பக்க வாசனை நெயில் பாலிஷ் வாசனை இன்னும் நிறைய அதுவும் நேரத்துக்கு தகுந்தார் போல மாறும்.//

same pinch ஸ்ரீ.....

தினேஷ் said...

//பொய் சொல்றது. உண்மை சொல்றதுனால வர விளைவுகள கூட தாங்க தயாரில்லாதவன், வாழ தகுதி இல்லாதவன் அப்படிங்கறது என் எண்ணம்.//

பதில்கள் அருமை...

தினேஷ்

வெ.இராதாகிருஷ்ணன் said...

யதார்த்தமான எளிமையான பதில்கள்.

பிரியமுடன் பிரபு said...

////
பொய் சொல்றது. உண்மை சொல்றதுனால வர விளைவுகள கூட தாங்க தயாரில்லாதவன், வாழ தகுதி இல்லாதவன் அப்படிங்கறது என் எண்ணம்.
///

அழகான ,உண்மையான வரிகள்

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது