ஜூன் ஜூலை மாதத்தில்...

வாழ்க்கை எனக்கான நன்மைகள் எல்லாத்தையும் தரும் பொழுது ஜூன் மாதத்தில மட்டும் கொஞ்சம் அதிகமாவே தூவிவிட்டதா என்று எனக்கு எப்பவும் தோணும். ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது இந்த மாதத்தில் தான் புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க... எல்லாருக்கும் இது பொதுதான்னாலும் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்... ஏன்னா, எதிர்பாரா இடத்திலிருந்து பணவரவு வரும்ன்னு சொல்ற மாதிரி... நான் எதிர்ப்பார்க்காதவங்க கிட்டயிருந்தெல்லாம் நட்பு கிடைக்கும்... அதாவது, ஸ்கூல் ஆனாலும் காலேஜ் ஆனாலும் சீனியர்ஸ் எல்லாரும் என் ஃப்ரெண்ட்ஸா இருப்பாங்க... வேலைக்கு வந்த பிறகும் அப்படி தான்... அதேமாதிரியான ஒரு ஃபைன் டே ஜூன்ல(June 5th) தான் என் இந்த வலைப்பூவையும் ஆரம்பிச்சேன்.. (இத சொல்லதான் இவ்ளோ பில்டப்பா??) இப்போ ஒரு வயசாயாச்சு...
Happy Birthday to you... Sorry Belated Birthday wishes to you.. ;-))

வலைப்பூக்கு வராத இந்த நாட்கள்ல உருப்படியா எதுவும் செய்யல, படிக்கல வேலை மற்றும் எக்ஸாம்க்கு படிச்சத தவிர.... பிடிச்ச விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்ன்னு எதையும் யோசிச்சு செய்ய நேரம் இல்லாம இந்த நாட்கள் ஓடினது கூட நல்லா தான் இருந்தது.... இரவு 12:00 மணி சென்னை எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சிகிட்டேன்.... ஹைவே சோடியம் லாம்ப் வெளிச்சம் பிடிச்சிருந்தது... ஒரு நாள் விடுமுறையா ட்ரைன்ல போனது ரொம்ப பிடிச்சிருந்தது.... ஏதோ ஒரு பூஜாவுக்கு அவளின் காதலன் சொல்லால் சொல்ல முடியாத காதலையோ அல்லது சொன்ன காதலையோ எண்களால் எழுதிவைத்த அந்த ஜன்னல்... அவ்வளவு நெரிசல்லயும் யார்மேலையும் இடிக்காம காபி வித்துட்டு போன அந்த பையன்... ஏதோ ஒரு காதலிகிட்ட நொடிக்கு ஒருதரம் தாமதத்துக்காக மன்னிப்பு கேட்ட காதலன்... வழி பூரா திட்டிக்கிட்டே வந்த குடும்ப தலைவி....... இவ்வளவு கும்பல்லயும் அண்ணா கிட்ட டிரஸ் கலர்க்காக சேம் ஸ்வீட் கேட்ட குட்டி பொண்ணு.... எங்குமே சத்தமாக மட்டுமே பேசும் கறைத் துண்டை கழுத்தில் போட்டிருக்கும் வெள்ளை வெட்டி மனிதர்... எல்லாத்துக்கும் மேல தனக்கு வந்த காத்த எனக்கு வழி அனுப்பி ஊர் வந்து சேரும் வரைக்கும் கைக்குள்ளயே வெச்சு பாதுக்காத்து பத்திரமா கொண்டுவந்து சேர்த்த என் அண்ணாவுடனான அந்த அன்ரிசர்வ்ட் ரயில் பயணமும் கூட மஞ்சள் வானமும் ஆரஞ்சு சூரியனும் முடி கலைக்கும் ஜன்னல் காற்றும் இல்லேன்னாலுமே நல்லா தான் இருந்தது...

டிஸ்கி: யாரோட பதிவுகளையும் படிக்கல.. யார்கிட்டயும் பேசவும் முடியல.. "அச்சச்சோ என்னம்மா ஆச்சு??"-ன்னு பதறாம... "என்ன ஆச்சு? ஏன் எழுதல?"-ன்னு கேட்டு மெயில் பண்ண, கால் பண்ண எல்லாருக்கும் நன்றிகள். இப்பவும் கடமை என்னை வா வான்னு அழைக்கறதுனால தொடர்ந்து எழுத முடியும்ன்னு தோணல.. :-(( (ரொம்ப சந்தோஷம்).... அப்பறம் வரும்போதே டேக் போஸ்ட் தான் எழுதபோறேன்.... (கார்த்திக் பண்ண வேலை) சீக்கிரம் எழுதறேன்... இப்போதைக்கு பை..! பை..!

-அன்புடன்,
ஸ்ரீமதி.

34 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

பை!

பை!!

ஆயில்யன் said...

ஒரு வருசம் ஆனதுக்கு வாழ்த்துக்களோட...


மீண்டும் ஒருமுறை

பை

பை!

:)))

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்! :-)

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் கலக்குங்க...

G3 said...

Belated bday wishes for blog :)))

Happy vacation ungalukku :)

G3 said...

Vaazhthukkal :))) [Idhu edhukkunu ungalukkae theriyum ;) ]

தமிழன்-கறுப்பி... said...

தொடர்ந்து மொக்கை போடணுங்கிறது அயில்யன் அண்னோட வேண்டுகோள்,
அதை ஆமோதிப்பது தல தமிழ்பிரியன் அதற்கு சாட்சியாயிருந்தது வேற யாரு நாந்தான் :))

G3 said...

//ஒரு நாள் விடுமுறையா ட்ரைன்ல போனது ரொம்ப பிடிச்சிருந்தது.... ஏதோ ஒரு பூஜாவுக்கு அவளின் காதலன் சொல்லால் சொல்ல முடியாத காதலையோ அல்லது சொன்ன காதலையோ எண்களால் எழுதிவைத்த அந்த ஜன்னல்... அவ்வளவு நெரிசல்லயும் யார்மேலையும் இடிக்காம காபி வித்துட்டு போன அந்த பையன்... ஏதோ ஒரு காதலிகிட்ட நொடிக்கு ஒருதரம் தாமதத்துக்காக மன்னிப்பு கேட்ட காதலன்... வழி பூரா திட்டிக்கிட்டே வந்த குடும்ப தலைவி....... இவ்வளவு கும்பல்லயும் அண்ணா கிட்ட டிரஸ் கலர்க்காக சேம் ஸ்வீட் கேட்ட குட்டி பொண்ணு.... எங்குமே சத்தமாக மட்டுமே பேசும் கறைத் துண்டை கழுத்தில் போட்டிருக்கும் வெள்ளை வெட்டி மனிதர்... எல்லாத்துக்கும் மேல தனக்கு வந்த காத்த எனக்கு வழி அனுப்பி ஊர் வந்து சேரும் வரைக்கும் கைக்குள்ளயே வெச்சு பாதுக்காத்து பத்திரமா கொண்டுவந்து சேர்த்த என் அண்ணாவுடனான அந்த அன்ரிசர்வ்ட் ரயில் பயணமும் கூட மஞ்சள் வானமும் ஆரஞ்சு சூரியனும் முடி கலைக்கும் ஜன்னல் காற்றும் இல்லேன்னாலுமே நல்லா தான் இருந்தது...//


HATS OFF !!! Kalakki rasichu rasikka vechiteenga :))))))))))))

G3 said...

//Kalakki rasichu rasikka vechiteenga//

Kalakkala rasichu nu solla vandhen.. typo error aayiduchu ;)

ஆயில்யன் said...

//Blogger G3 said...

//ஒரு நாள் விடுமுறையா ட்ரைன்ல போனது ரொம்ப பிடிச்சிருந்தது.... ஏதோ ஒரு பூஜாவுக்கு அவளின் காதலன் சொல்லால் சொல்ல முடியாத காதலையோ அல்லது சொன்ன காதலையோ எண்களால் எழுதிவைத்த அந்த ஜன்னல்... அவ்வளவு நெரிசல்லயும் யார்மேலையும் இடிக்காம காபி வித்துட்டு போன அந்த பையன்... ஏதோ ஒரு காதலிகிட்ட நொடிக்கு ஒருதரம் தாமதத்துக்காக மன்னிப்பு கேட்ட காதலன்... வழி பூரா திட்டிக்கிட்டே வந்த குடும்ப தலைவி....... இவ்வளவு கும்பல்லயும் அண்ணா கிட்ட டிரஸ் கலர்க்காக சேம் ஸ்வீட் கேட்ட குட்டி பொண்ணு.... எங்குமே சத்தமாக மட்டுமே பேசும் கறைத் துண்டை கழுத்தில் போட்டிருக்கும் வெள்ளை வெட்டி மனிதர்... எல்லாத்துக்கும் மேல தனக்கு வந்த காத்த எனக்கு வழி அனுப்பி ஊர் வந்து சேரும் வரைக்கும் கைக்குள்ளயே வெச்சு பாதுக்காத்து பத்திரமா கொண்டுவந்து சேர்த்த என் அண்ணாவுடனான அந்த அன்ரிசர்வ்ட் ரயில் பயணமும் கூட மஞ்சள் வானமும் ஆரஞ்சு சூரியனும் முடி கலைக்கும் ஜன்னல் காற்றும் இல்லேன்னாலுமே நல்லா தான் இருந்தது.../////


ரைட்டு ! ரசிச்சு ரசிக்க வைச்சுட்டீங்க

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ! ஜூன்.. ஜூலை மாதத்தில்...ம்ம்ம்... எல்லா கொண்டாட்டங்களும் முடிந்ததும் நேரா வந்து கும்மிக்கு ஆஜராகி கொண்டாட்டத்தை இன்னும் கலக்கலா ஆக்கிக்கங்க...சொல்லிப்புட்டோம்.

Karthik said...

இந்த போஸ்ட் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. :)

வாழ்த்துக்கள்!! :)))

//அப்பறம் வரும்போதே டேக் போஸ்ட் தான் எழுதபோறேன்....

ஐம் வெயிட்டிங்!!

புதியவன் said...

//இவ்வளவு கும்பல்லயும் அண்ணா கிட்ட டிரஸ் கலர்க்காக சேம் ஸ்வீட் கேட்ட குட்டி பொண்ணு.... //

அழகு...

வாழ்த்துக்கள்...

புதுகைத் தென்றல் said...

இப்பத்தான் படிச்சேன்.

தாமதமான வாழ்த்துக்கள். ஆனந்தமா விடுமுறையை அனுபவிங்க

நிலா said...

வாழ்த்துகள்!

vivek said...

wishing happy holidays...

vivek

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாம்மா மின்னல்.

வாழ்த்துக்கள் ஜூனுக்கும், ஜூலைக்கும் சேர்த்து. :)-

கோபிநாத் said...

\\அமிர்தவர்ஷினி அம்மா said...
வாம்மா மின்னல்.\\

சொல்லனுமுன்னு நினைச்சிக்கிட்டே வந்தேன் சொல்லிட்டிங்க ;))

வேற வழி ரீப்பிட்டே தான் ;))

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;))

நாகை சிவா said...

1 - வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

வாம்மா மின்னல்.

வாழ்த்துக்கள் ஜூனுக்கும், ஜூலைக்கும் சேர்த்து. :)-
//

ரிப்பீட்டே :))

நாடோடி இலக்கியன் said...

//சீக்கிரம் எழுதறேன்... //


மறக்காம வந்திடுங்க .

வாழ்த்துகள் ..!

Gowripriya said...

belated birthday wishes to your blog

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்.

anbudan vaalu said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ...

Divyapriya said...

oru varusham aanadhukku wishes sri...

ஆளவந்தான் said...

//
G3 said...

Vaazhthukkal :))) [Idhu edhukkunu ungalukkae theriyum ;) ]
//
எங்களுக்கு தெரியாதே :)

நசரேயன் said...

வாழ்த்துகள்!

Poornima Saravana kumar said...

1 வயதான உங்கள் வலைப்பூவிற்க்கு வாழ்த்துகள்:))

புனிதா || Punitha said...

வாழ்த்துகள்! :-)

நாணல் said...

வாழ்துக்கள் ஸ்ரீ... :)

வெண்பூ said...

பிறந்தநாள் வாழ்த்துகள்.. நீங்களும் ஜீன்தானா?

தமிழர்ஸ் - Tamilers said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

அனுஜன்யா said...

All the best

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது