
கோடைக்கால
மழை மேகத்தையோ,
பன்னீரால் பரவசப்படுத்தும்
சிறு பூவையோ,
ஞாபகப்படுத்தி சென்றது
கொடியில் காயும் அம்மாவின்
பருத்திப் புடவை ஈரம்...
மழையின் ஈரம்
காயாத இலைகள்
ஞாபகப்படுத்திச் சென்றன
நேற்றைய
உன் முத்தத்தை...
குளித்து தலைத்துவட்டி
நீர் தெளிப்பதற்குள்
அவசரமாக வரையப்பட்டிருந்தது
வாசலில் கோலம்.
அதிகாலை மழை...
குடைக் கொண்டவர்கள்
நனையத் தயாரில்லை...
அவர்களுக்கெனப் பெய்ய
மழையும் தயாரில்லை...
நீ கவிழ்த்த கோப்பையில்
இன்னும்
மிதந்துக்கொண்டிருந்தது
எனக்கான வானம்...
முதல்ல எல்லாரோட அன்புக்கும் நன்றி எழுதலன்னு சொன்னதும் பதறிபோய் வந்து திரும்பக்கூப்ட்டதுக்கு... :-) நான் கொஞ்ச நாள் லீவ் தான் கேட்டேன் மத்தபடி எழுதவே மாட்டேன்னு சொல்லல... இப்பவும் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல தான் வந்தேன்.. நிறைய புதிய ப்லோக்கேர்ஸ் வந்திருந்தீங்க முந்தைய பதிவுக்கு அவங்களுக்கும் நன்றி.. :-) இப்பவும் புதிய இடம், நிறைய வேலை, எக்ஸாம்ஸ் வேறன்னு பிஸியா இருக்கேன். கூடிய சீக்கிரம் உங்கள சந்திக்கிறேன்.. பை பை..!!
-அன்புடன்,
ஸ்ரீமதி.
33 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
/சஞ்சய் அண்ணா: உனக்கு வெக்கம் மானம் சூடு சொரண எதுவுமே இல்லையா?? வரமாட்டேன்னு சொன்ன..
நான்: அண்ணா நான் உங்க தங்கை.. :-)
சஞ்சய் அண்ணா: த்தூ... //
என்ன சஞ்சய் துப்பறதுக்கு பதிலா வாந்தியே எடுத்து வச்சிருக்கே.. என் மானிட்டரே நாசமா போச்சு :-(
:))))...
//கூடிய சீக்கிரம் உங்கள சந்திக்கிறேன்.. பை பை..!! ///
ஒ.கே சீ யூ பை பை
டாட்டா
(அப்புறம் வேற எதுனாச்சும் இருக்காப்பா எனக்கு இங்கீலிசுல தெரிஞ்சு இம்புட்டுதான்!)
//சஞ்சய் அண்ணா: த்தூ... //
நல்ல அண்ணன் !
தலைப்பு ஈரம்ன்னு போட்டிருக்கியே அது சஞ்சய் துப்புனதாலதானா!
கவிதை ரொம்ப அழகு. இப்பவெல்லாம் அம்மா நிறைய வருகிறார்கள் :)
//புதிய இடம், நிறைய வேலை, எக்ஸாம்ஸ் வேறன்னு பிஸியா இருக்கேன்.//
அவ்வளவுதானா இல்ல மேலதிகத் தகவல்கள் உண்டா? :)))
சஞ்சய் - :)))))))))
அனுஜன்யா
//கவிதை ரொம்ப அழகு. இப்பவெல்லாம் அம்மா நிறைய வருகிறார்கள் :)/
இல்ல தல. எட்டு இடத்திலதான் வந்து இருக்காங்க.. கலைஞர்தான் நிறைய ஜெயித்தார்.
//சஞ்சய் அண்ணா: உனக்கு வெக்கம் மானம் சூடு சொரண எதுவுமே இல்லையா?? வரமாட்டேன்னு சொன்ன..
சஞ்சய் அண்ணா: த்தூ... //
நீ பதிவு போட்டிருக்கன்னு தெரிஞ்சதும் இப்டி தான் கமெண்ட் போடலாம்னு வந்தேன். என் வேலையை நீயே செஞ்சிட்ட. இப்டியும் ஒரு மானங்கெட்ட தங்கச்சி. த்தூ.. :))
//என்ன சஞ்சய் துப்பறதுக்கு பதிலா வாந்தியே எடுத்து வச்சிருக்கே.. என் மானிட்டரே நாசமா போச்சு :-(//
வேற ஒன்னும் இல்ல சென்ஷி.. ஸ்ரீ செஞ்ச உப்புமா சாப்ட்டேன். அதான் அப்டி. :(
// சென்ஷி said...
தலைப்பு ஈரம்ன்னு போட்டிருக்கியே அது சஞ்சய் துப்புனதாலதானா!//
:)))))))))))))))))))
அப்டி பார்த்தா ஸ்ரீ பேரையே ஈரம்னு தான் வைக்கனும். :)
//அவ்வளவுதானா இல்ல மேலதிகத் தகவல்கள் உண்டா? :)))//
அதெல்லாம் மங்களகரமா உண்டு மாமோய்.. :))
அழகான கவிதைகள்.. விரைந்து திரும்புங்கள் ஸ்ரீ.!
:-)..
Beautiful .
Whenever you find time, could you please have a look at my poems in http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks
;-)
:(
me too gonna take a leave! come back soon!
//எக்ஸாம்ஸ் வேறன்னு
all the best!! :)
very nice sree... al the best for exams
/குடைக் கொண்டவர்கள்
நனையத் தயாரில்லை...
அவர்களுக்கெனப் பெய்ய
மழையும் தயாரில்லை.../
சாபம்..........
ச்சோ...........
கவிதை
மிகவும் அருமையாக இருக்கிறது.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
Good one
:):)
//மழையின் ஈரம்
காயாத இலைகள்
ஞாபகப்படுத்திச் சென்றன
நேற்றைய
உன் முத்தத்தை//
பிடிச்சிருக்கு :-)
super kavidhai nga,... nalla irundhu.. athuvum andham vaanam matter bale bale :D
ungalathu vazhkkai payangal vetrikaramaga amaya vaazhthukkal :)
//மழையின் ஈரம்
காயாத இலைகள்
ஞாபகப்படுத்திச் சென்றன
நேற்றைய
உன் முத்தத்தை...//
அழகு...
azagaana kavithai srimathi
//குடைக் கொண்டவர்கள்
நனையத் தயாரில்லை...
அவர்களுக்கெனப் பெய்ய
மழையும் தயாரில்லை... //
It is different!!!
:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் பதிவுகளுக்கு விடுமுறை கிடையாது
பதிவு நன்று
வாழ்த்துக்கள்
விரைவில் திரும்ப வாழ்த்துகள் ஸ்ரீ...
நல்லா இருக்கு ஸ்ரீமதி.
பரிட்ச்சை எல்லாம் நல்ல படியா முடிச்சிட்டு சீக்கிறம் பதிவு உலகத்திற்கு வர வாழ்த்துக்கள்...
குடைக் கொண்டவர்கள்
நனையத் தயாரில்லை...
அவர்களுக்கெனப் பெய்ய
மழையும் தயாரில்லை...
///
நல்லாயிருக்கு
Post a Comment