கருக்கப்பட்ட கனவுகள்...

கால் வரைத் தாழ்ந்து
காதல் சொல்லாத கணங்களிலும்...,
சுவாசிக்கும் காற்று
வடிகட்டப்படும் நேரங்களிலும்,
என்மேலான என்னுரிமைகள்
உன்னால் பறிக்கப்பட்ட பொழுதுகளிலும்
என,
என் கருக்கப்பட்ட
கனவுகளனைத்தும்...
கருப்புப்பூசி
கவிதைகளாய்
கடைவீதிகளில் உலாவரலாம்....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

28 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

உவகையோடு கவிதை படித்து
உலா வரலாம் என்று குதித்தோடி, மீ த பர்ஸ்ட்டாய் வந்த என் கனவும் கருக்கப்பட்டுவிட்டது :(

சரி நான் போறேன்

கார்க்கி said...

ம்ம்... வர வ்ர உன் கவிதைய படிச்சா என்னவோ போல இருக்கு.. சந்தோஷமாத்தான் எழுதேன்

தமிழ் பிரியன் said...

ஏனிப்படி.. தலைப்பும் உட்பொருளும்.. :(

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
உவகையோடு கவிதை படித்து
உலா வரலாம் என்று குதித்தோடி, மீ த பர்ஸ்ட்டாய் வந்த என் கனவும் கருக்கப்பட்டுவிட்டது :(
சரி நான் போறேன்///
அண்ணே! கலங்காதீங்க... இது வேறு யாருக்கோ எழுதிக் கொடுத்த மாதிரி இருக்கு.. அப்படியே மாத்தி யோசிங்க.. கெக்கே பிக்கேன்னு சிரிங்க.. ;-)

நட்புடன் ஜமால் said...

கருப்பில்

வெளிச்சமாய் வருவதே

கனவுகள்

--------------------

ஏன் என்னாச்சு ...

ஆயில்யன் said...

ஹப்பாடா....!


நான் சொன்னமாதிரியேதான் எல்லாருமே ஃபீல் பண்ணுறாங்க போல...!

ஆயில்யன் said...

// தமிழ் பிரியன் said...
கெக்கே பிக்கேன்னு சிரிங்க.. ;-)//


நான் நார்மலா சிரிச்சாலே அப்படித்தானே தம்பி இருக்கு !

என்னமோ போங்க நீங்க சொல்லுறீங்கன்னு இன்னொரு வாட்டி படிச்சுட்டு சிரிச்சு பார்க்குறேன்!

சென்ஷி said...

//கருப்புப்பூசி
கவிதைகளாய்
கடைவீதிகளில் உலாவரலாம்.... //

பேப்பர்ல கவிதை எழுதற கஷ்டம் இதுதான். காதல் வேணாம்னதும் கவிதை எழுதுற பேப்பர உடனே பழைய்ய பேப்பர்கடைக்காரன் கிட்ட போட்டுடறாங்கய்யா..... :))

Maddy said...

கொஞ்ச நாளா உன்னோட கவிதைகளை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சா தான் எதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் ரொம்ப புரியாத மாதிரியும் இருக்கு. மூளைக்கு ரொம்ப வேலை குடுக்காதே......எங்களுக்கு தலைக்கு மேல புகை வந்திட்டு இருக்கு

sakthi said...

Maddy said...

கொஞ்ச நாளா உன்னோட கவிதைகளை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சா தான் எதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் ரொம்ப புரியாத மாதிரியும் இருக்கு. மூளைக்கு ரொம்ப வேலை குடுக்காதே......எங்களுக்கு தலைக்கு மேல புகை வந்திட்டு இருக்கு

athuku per than pinnaveenam maddy

sakthi said...

அழகான வித்தியாசமான வலியுடன் கூடிய படைப்பு

வாழ்த்துக்கள்
ஸ்ரீ

ஆயில்யன் said...

// sakthi said...

அழகான வித்தியாசமான வலியுடன் கூடிய படைப்பு

வாழ்த்துக்கள்
ஸ்ரீ//

ஏனுங்க...!
அவுங்கள சோகத்துலேர்ந்து தூக்கி வெளியில எறிய வேண்டியது நம்ம கடமையாச்சே :)

புதியவன் said...

கரையோரத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி சோகக் கனவுகள் வருது...

//என் கருக்கப்பட்ட
கனவுகளனைத்தும்...
கருப்புப்பூசி
கவிதைகளாய்
கடைவீதிகளில் உலாவரலாம்.... //

வித்தியாசமா நல்லா இருக்கு ஸ்ரீமதி...

Raghavendran D said...

யாருங்க உங்கள இப்படி கொடுமைபடுத்துறது..? :-)

The flow is cool.. it keeps on flowing.. :-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி said...
ம்ம்... வர வ்ர உன் கவிதைய படிச்சா என்னவோ போல இருக்கு.. சந்தோஷமாத்தான் எழுதேன்
//
Rippeetu..

அபுஅஃப்ஸர் said...

வித்தியாசமான வார்த்தைபோர் உங்க வரிகளில்

நல்லயிருக்கு

Divyapriya said...

ரொம்ப வித்யாசமான மிரட்டலா இருக்கே ;) நல்லா இருக்கு :))

Karthik said...

கவிதை சூப்பர்ப்பா இருக்கு. :))

ஆகாய நதி said...

கவிதை நல்லாருக்கு! :)

ஆகாய நதி said...

கவிதை நல்லாருக்கு! :)

நெல்லைத்தமிழ் said...

என் கருக்கப்பட்ட
கனவுகளனைத்தும்...
கருப்புப்பூசி
கவிதைகளாய்
கடைவீதிகளில் உலாவரலாம்....

உணர்வுகள் மரத்துப்போய், விட்டத்தை வெறித்து பார்க்கும் ஒரு பெண்ணின் எண்ணங்களை கவிதையாக்கி கொடுத்திருக்கிறீர்கள். உண்மையில், இந்த கவிதையில் இழையோடும் சோகம்... ஆண்களையும் அழவைக்கும்.

Muthusamy said...

Good one

Muthusamy said...

but where is the picture for this post? oh I see, got in fire?

தமிழ்ப்பறவை said...

ஓ.கே...
//கடைவீதிகளில்//
தேவையில்லையென என் எண்ணம்...

நசரேயன் said...

//கனவுகளனைத்தும்...
கருப்புப்பூசி
கவிதைகளாய்
கடைவீதிகளில் உலாவரலாம்.... //

டீ கடை பெட்டிக் கடையிலே பொட்டலம் மடிக்கவாது உதவுதே

அனுஜன்யா said...

நல்லா இருக்கு. யோசிக்க வைக்கிறது. நல்லா எழுதுற ஸ்ரீ.

அனுஜன்யா

வண்ணத்துபூச்சியார் said...

அருமை ஸ்ரீ...

யப்பா எத்தனை விதமான கருத்துரைகள் என் தங்கைக்கு மட்டும்.

வாழ்த்துகள்.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது