உப்புமா செய்வது எப்படி?? (அப்படின்னா??)

உலகத்துலேயே ரொம்ப கஷ்டமான சமையல் சமாச்சாரம் உப்புமா தான்... யார் சொன்னா?? நான் தான் சொல்றேன்... ஏன்னா தண்ணி கம்மியா போனாலும் பிரச்சனை, தண்ணி அதிகமா ஆனாலும் டம்ப்ளர்ல ஊத்தி குடிக்கிறமாதிரி ஆகிடும்... இவ்ளோ கஷ்டமான இந்த உப்புமா செய்யறது எப்படின்னு உங்களுக்கு நான் சொல்லப்போறேன்னு நினைசீங்கன்னா அதுதான் தப்பு... ஏன்னா என்னைவிட நல்லா சமைக்கிற நிறைய பேர் இங்க இருக்கீங்க எனக்கு தெரியும்... அதனால இத்தகைய வரலாற்று புகழ் மிக்க உப்புமாவ நான் எப்படி செஞ்சேன்னு தான் சொல்லப்போறேன் வித் டிப்ஸோட... (என்ன கொடும சரவணா??)

தேவையான பொருட்கள்லாம் உங்களுக்கே தெரியும்.. ஆனா, முதல் முதல்ல சமைக்கரவங்களுக்கு அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி அவசரமா சமையல் கத்துக்கரவங்களுக்கு அவசியமான பொருட்கள் என்னென்னன்னு சொல்றேன்...

1.முதல்ல ஒரு செல்போன். நிஜமா தாங்க... அதுல எந்நேரமும் மெசேஜோ, காலோ வந்துகிட்டே இருக்கணும்... அதுவும் அவரோடதா இருந்தா டபுள் ஓகே... இது பின்னாளில்.. அதாவது, கல்யாணத்துக்கு பிறகு ஏன் உப்புமா ஒழுங்கா செய்யலைன்னு அவர் கேள்வி கேட்கும் போது, நான் கலைய கத்துக்கும் போது உங்களோடு தொலைபேசியதால் தான் முழுமையா கத்துக்க முடியலன்னு பழி போட வசதியா இருக்கும்... (இந்த ரகசியமெல்லாம் உங்களுக்கு மட்டும் அவர்கிட்ட அனாவசியமா சொல்லி உஷார் பண்ணிடாதீங்க)...

2.அப்பறம் ஒரு அண்ணன். (அதுவும் எனக்கு (இளிச்ச) வாய்..ச்ச மாதிரி... எதுக்குன்னா வெங்காயம் கட் பண்ணி கொடுக்க.. அப்பறம் உப்பு சரி பார்த்து சொல்ல... இதுவும் ஏன்னு சொல்றேன்.. சப்போஸ் நீங்க பண்ண உப்புமா கன்றாவியா இருந்துதுனா (கண்டிப்பா அப்படிதான் இருக்கும்) அதுக்கு கண்டிப்பா திட்டு விழும்.. அப்போ, நாம தப்பிக்க நல்ல வழி இது தான்... உடனே நீ வெங்காயம் கட் பண்ணி கொடுத்ததுதான் சரி இல்ல... அதான் உப்புமா இப்படி ஆயிடிச்சின்னோ... அல்லது, நீ போட்ட உப்பு பத்தல இல்லன்னா என் உப்புமா தேவாமிர்தம் (த்தூ...) மாதிரி இருக்கும்ன்னோ வாதாடலாம்.... )

3.அப்பறம் இன்னுமொரு ஜீவன் இருக்கட்டும்.. அதுவும் உங்களைவிட சின்னவனா.. (எதுக்கா?? நாம செஞ்சத ருசி பார்க்க தான்.... :-(( கண்டிப்பா நாம செய்யறத பக்கத்துல இருந்து பார்த்த அண்ணனுக்கு அதை சாப்ட்டு பார்க்கும் துணிவு இருக்காது... அதனால வேற ஒரு ஜீவன தான் இதுக்கு தேடனும்... அதுவும் கிடைச்சாச்சுன்னா உப்புமா ரெடி... )

4. இன்னுமொரு முக்கியமான விஷயம் தவறி கூட அந்த உப்புமாவ நீங்க சாப்டுடாதீங்க ஏன்னா தற்கொலையும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே...!!

டிஸ்கி1: பதிவு முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல.

டிஸ்கி2:உண்மைக்கதையோ, சொந்தக்கதையோ அல்ல.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

51 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஜீவா said...

:)

கார்க்கி said...

முதல் பாய்ண்ட்.. கிகிகி

லோகு said...

அக்கா என்ன கொடுமை இது...

ராஜ நடராஜன் said...

இப்படியும் கூட உப்புமா செய்யலாமா:)

வரக் குப்புஸ் தின்னு பார்த்தா தெரியும் உப்புமாவோட மகிமை:)தண்ணீர் நிறையவோ கம்மியாவோ போனா டிப்ஸ்க்கு நன்றி.

G3 said...

//டிஸ்கி2:உண்மைக்கதையோ, சொந்தக்கதையோ அல்ல. //

அப்ப சுட்ட கதையா.. ச்சே.. (உப்புமா) கிண்டின கதையா??? ;-)))

ஆயில்யன் said...

கொலைகார பாவிகளா :((

இனியவள் புனிதா said...

//தற்கொலையும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே...!!//

அப்போ இந்தப் பதிவுக்கு என்ன அர்த்தமாம்??????

தற்பெருமையும் தற்கொலைக்குச் சமமாமே..காந்திபனிடம் கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்காறே?

இனியவள் புனிதா said...

//முதல்ல ஒரு செல்போன். நிஜமா தாங்க... அதுல எந்நேரமும் மெசேஜோ, காலோ வந்துகிட்டே இருக்கணும்... அதுவும் அவரோடதா இருந்தா டபுள் ஓகே... //

Points noted for future references :-))

சென்ஷி said...

வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன்இந்த பதிவில் உங்களைப் போன்றவர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி என்று எங்கள் குருநாதர் பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து அமைதியாக ஷார்ஜாவில் தியானத்தில் இருக்கின்றார் :-))

ஆயில்யன் said...

//சென்ஷி said...

வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன்இந்த பதிவில் உங்களைப் போன்றவர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி என்று எங்கள் குருநாதர் பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து அமைதியாக ஷார்ஜாவில் தியானத்தில் இருக்கின்றார் :-))///

அண்ணே நீ சிங்கம்ணே :)

ஆயில்யன் said...

//வரக் குப்புஸ் தின்னு பார்த்தா தெரியும் உப்புமாவோட மகிமை:)//

:((

Subha said...

//முதல்ல ஒரு செல்போன். நிஜமா தாங்க... அதுல எந்நேரமும் மெசேஜோ, காலோ வந்துகிட்டே இருக்கணும்...//

அது யாரோட கால் தங்கையே ? :)

சென்ஷி said...

// Subha said...

//முதல்ல ஒரு செல்போன். நிஜமா தாங்க... அதுல எந்நேரமும் மெசேஜோ, காலோ வந்துகிட்டே இருக்கணும்...//

அது யாரோட கால் தங்கையே ? :)//

அது சைவ உப்புமாவா இருந்தா பந்தக்காலுங்க

அசைவமா இருந்தா ஆட்டுக்கால் போடுங்க :)

Subha said...

//இன்னுமொரு முக்கியமான விஷயம் தவறி கூட அந்த உப்புமாவ நீங்க சாப்டுடாதீங்க ஏன்னா தற்கொலையும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே...!!//

ம்ம்...உப்ப சாப்டுட்டு தண்ணீ குடிக்காதனா எப்டிப்பா?

Subha said...

//சென்ஷி said...
// Subha said...

//முதல்ல ஒரு செல்போன். நிஜமா தாங்க... அதுல எந்நேரமும் மெசேஜோ, காலோ வந்துகிட்டே இருக்கணும்...//

அது யாரோட கால் தங்கையே ? :)//

அது சைவ உப்புமாவா இருந்தா பந்தக்காலுங்க

அசைவமா இருந்தா ஆட்டுக்கால் போடுங்க :)//

ஜீனியஷ் சென்ஷி நீங்க..எப்படி இப்படியெல்லாம் வருது உங்களுக்கு? :)

Subha said...

முதலில் உப்புமானு பெயர் எப்படி வந்ததுனு சொல்ல முடியுமா ஸ்ரீ?

உப்பு மட்டும் போட்டு கிண்டினாதானே உப்புமா னு சொல்லனும்? ரொம்ப நாள் சந்தேகம்!

J said...

"வரக் குப்புஸ் தின்னு பார்த்தா தெரியும் உப்புமாவோட மகிமை"

அதெல்லாம் கரெக்ட் தான்

ஆனா களி மாதிரி (எத்தனை தடவை செஞ்சாலும் இப்படிதான் )
குப்புஸே தேவலாம் தோனுது

J said...

இன்னுமொரு முக்கியமான விஷயம் தவறி கூட அந்த உப்புமாவ நீங்க சாப்டுடாதீங்க ஏன்னா தற்கொலையும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே...

ஆமா தற்கொலைக்கு தூண்டுறது
பெரிய குற்றமாமே

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//என்ன கொடும சரவணா??) //

என்னக் கொடும மாப்ள? :(

5 நிமிடங்களில் சுவையான உப்மா செய்றது எப்டின்னு இந்த அண்ணன் கிட்ட கேட்டிருக்கலாம். :)

sakthi said...

superb ideas

thanthamaiku valthukkal sri

நிஜமா நல்லவன் said...

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கு அண்ணன் இல்ல ஆனா தம்பி இருக்கான்.. :)நான் சமைக்க கத்துக்கும் போது அவன் தான் சாப்பிட்டுப் பார்த்து உதவினான்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

உப்புமாவுக்கே இந்த லட்........

பாவம் உனக்கு வரப்போற அந்தப் புண்ணியாத்மா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துல........

இந்தப் பதிவ படிச்ச யாரும் இனிமே இப்படி சொல்லவே மாட்டாங்க.

ராஜ நடராஜன் said...

//ஆனா களி மாதிரி (எத்தனை தடவை செஞ்சாலும் இப்படிதான் )
குப்புஸே தேவலாம் தோனுது//

களியா?அப்படியில்லீங்க.அதென்னமோ கைப்பதமோ,பொருள் பதமோ வீட்ல நான் உப்புமா கிண்டினாத்தான் எல்லாரும் ருசிக்கிறாங்க:)

புதியவன் said...

//அப்பறம் இன்னுமொரு ஜீவன் இருக்கட்டும்.. அதுவும் உங்களைவிட சின்னவனா.. (எதுக்கா?? நாம செஞ்சத ருசி பார்க்க தான்....//

கொலை செய்வதும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே...

ஜீவன் said...

///அப்பறம் இன்னுமொரு ஜீவன் இருக்கட்டும்.. அதுவும் உங்களைவிட சின்னவனா.. (எதுக்கா?? நாம செஞ்சத ருசி பார்க்க தான்.... :-(( கண்டிப்பா நாம செய்யறத பக்கத்துல இருந்து பார்த்த அண்ணனுக்கு அதை சாப்ட்டு பார்க்கும் துணிவு இருக்காது... அதனால வேற ஒரு ஜீவன தான் இதுக்கு தேடனும்... அதுவும் கிடைச்சாச்சுன்னா உப்புமா ரெடி... ///;;))

கோபிநாத் said...

:-)))

முடியல...

தமிழ் பிரியன் said...

எனக்கு அந்த வருங்கால மச்சானை நினைச்சா தான் பாவமா இருக்கு...ம்ம்ம் தங்கச்சியோட லேபில் எலி மாதிரி மாறப் போறாரேன்னு.. ;-))

Maddy said...

ஏன்னா என்னைவிட நல்லா சமைக்கிற நிறைய பேர் இங்க இருக்கீங்க எனக்கு தெரியும்...


ஒ! என்ன பத்தின ரகசியம் யாரோ உன்கிட்ட சொல்லிட்டாங்க!!! சரி வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்

Maddy said...

கல்யாணத்துக்கு பிறகு ஏன் உப்புமா ஒழுங்கா செய்யலைன்னு அவர் கேள்வி கேட்கும் போது, நான் கலைய கத்துக்கும் போது உங்களோடு தொலைபேசியதால் தான் முழுமையா கத்துக்க முடியலன்னு பழி போட வசதியா இருக்கும்...(இந்த ரகசியமெல்லாம் உங்களுக்கு மட்டும் அவர்கிட்ட அனாவசியமா சொல்லி உஷார் பண்ணிடாதீங்க)...

Dialing 910910910000

Maddy said...

அப்போ, நாம தப்பிக்க நல்ல வழி இது தான்... உடனே நீ வெங்காயம் கட் பண்ணி கொடுத்ததுதான் சரி இல்ல... அதான் உப்புமா இப்படி ஆயிடிச்சின்னோ... அல்லது, நீ போட்ட உப்பு பத்தல இல்லன்னா என் உப்புமா தேவாமிர்தம் (த்தூ...) மாதிரி இருக்கும்ன்னோ வாதாடலாம்.... )

சொல்லிட்ட இல்லே..........இனி கிச்சன் எந்த பக்கம் இருந்தாலும் தலையை திருப்பற ஐடியா இல்லை, எங்க வீட்டையும் சேர்த்து

Maddy said...

கட்டிக்க போற அந்த ஆதமாவை நினச்சு பரிதாப படணுமா இல்லை இப்படி முன்னெச்சரிக்கை கொடுத்ததுக்கு நன்றி சொல்லனுமான்னு தெரியலை!! எதுக்கும் ஒரு கோடி ரூபா இன்சூரன்ஸ் எடுத்துட்டு சாப்பிட வர்றேன்

விஜய் said...

\\டிஸ்கி2:உண்மைக்கதையோ, சொந்தக்கதையோ அல்ல. \\
நம்பிட்டோம் :-)

SUBBU said...

என்ன கொடும சரவணா??

ஆதிமூலகிருஷ்ணன் said...

பாவம் ஸ்ரீ, வரப்போறவர்.. கொஞ்சம் சீரியஸாகவே சமையல் கத்துக்கிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.. எனது 'எச்சரிக்கை : பாக‍ம் 25' படிச்சீங்கதானே.. அவ்வ்வ்வ்வ்..

நசரேயன் said...

உங்க ஆராய்ச்சிகளை தாக்குற அளவுக்கு ஒரு பலசாலி வந்தா சரிதான்

Kathir said...

:))

நாணல் said...

:) unmaik kadhai maathiri irukke sri.. ;)

Divyapriya said...

ஹா ஹா :D
எல்லாரும் ஈ.ஸியா செய்யற தேசிய பலகாரம் உப்புமா...அதுக்கே இந்த போடா? ஆனாலும் செம நக்கல் தான் தங்கச்சி :))
நான் வேணா உப்புமா பண்றது எப்படின்னு ஒரு மெயில் அனுப்பட்டுமா?

ஆளவந்தான் said...

எதாவது பொட்டி தட்டுற கம்பெனியில போயி டேமேஜர் வேலைக்கு எழுதி போடுங்க.. இந்த பதிவையும் சேத்து அனுப்புங்க.. வேலை வீடு தேடி வரும்.. வீட்டுல இருந்தே வேலை பாக்க சொன்னாலும் ஆச்சர்ய படுறதுக்கில்லே..

அப்படி ”ஒருவேளை” உங்களுக்கு ”ஒரு வேலை” கிடைச்சா எனக்கு கொஞ்சம் போட்டு குடுங்க :)

Karthik said...

தலைப்பே கவிதை சொல்லுதே (அப்படின்னா?) ... இருங்க மேலே படிக்கிறேன்.

1. என்ன கொடுமை தெய்வ மச்சான் இது! ;)

2. அடிப்பாவி..! (இது என் தங்கைக்கு. ஸாரி பார் த லாங்குவேஜ்)

3. சின்னவனா யாரும் சிக்கலைனா, அப்பா இருக்காறே! ;)

4. survival instincts? LOL. :))

Muthusamy said...

"அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி அவசரமா சமையல் கத்துக்கரவங்களுக்கு அவசியமான பொருட்கள் என்னென்னன்னு சொல்றேன்..."

Have you added this line for yourself???

Good one indeed!

ஸ்ரீமதி said...

நன்றி ஜீவா அண்ணா

நன்றி கார்க்கி

நன்றி லோகு

நன்றி ராஜ நடராஜன் அண்ணா

நன்றி G3

நன்றி ஆயில்யன் அண்ணா.. யாரு?

நன்றி புனிதா அக்கா.. இது தற்பெருமையா?? என்னக் கொடும சரவணா?? :((

நன்றி சென்ஷி அண்ணா.. தியானத்திலேயே இருக்கக் கடவது.. ;)))

நன்றி சுபா அக்கா.. எங்கண்ணா எப்பவும் ஜீனியஸ் தான் அக்கா.. ;)) உப்புமா பெயர் காரணம் தெரியல அக்கா... :((

நன்றி ஜெ.. தற்கொலைக்கு தூண்டறேனா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :((

நன்றி சஞ்சய் அண்ணா.. ம்ம்ம் கேட்ருக்கலாம்... :((

நன்றி சக்தி

நன்றி நிஜம்ஸ் அண்ணா

நன்றி முத்து அக்கா.. நான் சாப்ட சொன்னா மாதவன் கொலைவெறியோட பார்க்கிறான்.. கொஞ்சம் புத்திமதி சொல்றது.. ;))

நன்றி அமித்து அம்மா

நன்றி புதியவன்

நன்றி ஜீவன் அண்ணா.. உங்களையும் சேர்த்துத்தான் சொன்னேன்.. சாப்ட வந்துடுங்க அண்ணா.. ;))

நன்றி கோபிநாத்... படிச்ச உங்களுக்கேன்னா.. செஞ்ச எனக்கு?? சாப்ட்ட மாதவனுக்கு?? ஹய்யோ ஹய்யோ.. ;))

நன்றி தமிழ் அண்ணா... ஹா ஹா ஹா... :))

நன்றி மேடி அண்ணா.. நெனப்பு தான்.. :P

நன்றி விஜய் அண்ணா நம்பினதுக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

நன்றி சுப்பு

நன்றி ஆதி அண்ணா... நான் மாட்டேனா சொல்றேன்?? கத்துக்கணும்.. :((

நன்றி நசரேயன்

நன்றி கதிர்

நன்றி நாணல் அக்கா.. உஷ்ஷ்ஷ்ஷ்.. ;)))

நன்றி திவ்யப்ரியா அக்கா.. மெயிலா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. :))

நன்றி ஆளவந்தான் அண்ணா.. இங்க போடவேண்டிய பின்னூட்டம் தானா??

நன்றி கார்த்திக்.. தலைப்பு கவிதை சொல்லுதா?? ஓய் என்ன ஆச்சு மேன் உனக்கு?? :)) அப்பா பாவம்.. :((

நன்றி முத்துசாமி அண்ணா.. :))

biskothupayal said...

நிஜமான உப்புமா பதிவு !

நட்புடன் ஜமால் said...

\\(என்ன கொடும சரவணா??) \\

அவர் என்னா பன்னினாரு ...

பட்டாம்பூச்சி said...

:)

Saravana Kumar MSK said...

கொலையை நான் வார்த்தையில் மட்டும்தான் செய்யறேன்.. நீ வீட்டில் தினம் தினம் செய்கிறாய் போலும்..
உங்க அண்ணன் மற்றும் குடும்பத்தாரை நெனச்சா எனக்கு பாவமா இருக்கு.. :(

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நான் எஸ்கேப்...

Saravana Kumar MSK said...

// நட்புடன் ஜமால் said...
\\(என்ன கொடும சரவணா??) \\
அவர் என்னா பன்னினாரு ...//

அண்ணே.. நான் ஒண்ணும் பண்ணலே.. எல்லாமே இந்த பொண்ணுதான் பண்ணுது..
உப்புமா என்ற பெயரில் ஒரு ஆந்த்ராக்ஸ்..

Saravana Kumar MSK said...

50 ;)

முனைவர் சே.கல்பனா said...

நல்ல கற்பனை

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது