நெய்விளக்கு


காலைத்துயிலெழ,
காட்டுமல்லி பூக்க,
கடிதங்கள் வந்து சேர,
கனவுகளில் கூட நான் சிரிக்க,
தாலியையும்,
தன் கணவனையும் காப்பாற்ற,
பண்டிகைகள் முதல்
பலகாரங்கள் வரை சிறக்க,
தன்னைவருத்தும் தன்னிலிருந்து
என்னைப்பிரிக்கும் திருமணம்
என எல்லாவற்றிற்கும் நம்புவாள்
குளத்தங்கரை அய்யனாருக்கு வாங்கி ஏற்றும்,
இரண்டு ரூபாய் நெய்விளக்கை...
தன் பெருமை தானறியாத,
என் அம்மா....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

31 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

அமிர்தவர்ஷினி அம்மா said...

super srimaa

தன்னைவருத்தும் தன்னிலிருந்து
என்னைப்பிரிக்கும் திருமணம்
என எல்லாவற்றிற்கும் நம்புவாள் //

excellent

வியா (Viyaa) said...

nice poem

sakthi said...

குளத்தங்கரை அய்யனாருக்கு வாங்கி ஏற்றும்,
இரண்டு ரூபாய் நெய்விளக்கை...
தன் பெருமை தானறியாத,
என் அம்மா....

really superb sri

புதியவன் said...

//தன்னைவருத்தும் தன்னிலிருந்து
என்னைப்பிரிக்கும் திருமணம்
என எல்லாவற்றிற்கும் நம்புவாள்//

வார்த்தைகள் கோர்த்த விதம் அருமை...

புதியவன் said...

//குளத்தங்கரை அய்யனாருக்கு வாங்கி ஏற்றும்,
இரண்டு ரூபாய் நெய்விளக்கை...
தன் பெருமை தானறியாத,
என் அம்மா....//

இப்படித்தான் நிறைய பேர் தன் பெருமை தானறியாமலேயே இருக்கிறாங்க...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமதி...

கார்க்கி said...

:))

இய‌ற்கை said...

very nice:-)

ஆயில்யன் said...

//தன்னைவருத்தும் தன்னிலிருந்து
என்னைப்பிரிக்கும் திருமணம்
என எல்லாவற்றிற்கும் நம்புவாள்
குளத்தங்கரை அய்யனாருக்கு வாங்கி ஏற்றும்,
இரண்டு ரூபாய் நெய்விளக்கை...///

உள்ளத்து வெளிப்பாடு மிக அழகாய் இருக்கிறது

ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள்

ஆயில்யன் said...

போட்டோ எங்க ஊரு துர்க்கையம்மன் கோவிலையும்,நெய்விளக்கு பீடத்தினையும் ஞாபகப்படுத்துகிறது !

நிஜமா நல்லவன் said...

superb!

ஆதிமூலகிருஷ்ணன் said...

பிரமாதம்.. உயிரோசையில் இது வரை எத்தனை கவிதைகள் வெளியாயிருக்கின்றன ஸ்ரீ.? இன்று பலவற்றை பின்னோக்கிச்சென்று வாசித்தேன். அனைத்தும் அற்புதங்கள். இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள்..

G3 said...

:))))))))))))))

Raghavendran D said...

நச்சென்றொரு முடிவு..! :-)

கோபிநாத் said...

அம்மாவை பத்தி எப்படி எழுதினாலும் அது அழுகு தான்..;)

ரொம்ப நல்லாயிருக்கு...படமும் அட்டகாசம் ;)

நசரேயன் said...

யதார்த்தம்.. நல்லா இருக்கு

தமிழ் பிரியன் said...

இந்த தடவை படத்தைப் போல் கவிதையும் அழகா இருக்கு!

ஆளவந்தான் said...

//
கனவு காண: கவிதை, கவிதை மாதிரி
//

இதுல எது உண்மை???

ஆளவந்தான் said...

//
இரண்டு ரூபாய் நெய்விளக்கை...
தன் பெருமை தானறியாத,
என் அம்மா....
//
அவங்க தான் அம்மா :) அருமை :)

உலகத்தின் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே.. பிறப்புக்கும் இறப்புக்குமிடையே வழிநடத்தி சென்றாயே.. உனக்கே ஒர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்...
படம்: ராம், பாடல் :ஆராரிராரோ

நேத்து கேட்டு ரொம்ப லயித்துபோயிருந்த சமயத்தில் இன்றைக்கு இப்படி ஒரு கவிதை. அருமை

இதை டைமிங்’னு சொல்றதா இல்லா.. கோ-இன்சிடெண்டுனு சொல்றதா..

தாரணி பிரியா said...

super nice excellent ellam ungalukkuthan sri eduthukonga. :)

Muthusamy said...

good one

Saravana Kumar MSK said...

கவிதை செமையா இருக்கு ஸ்ரீ.. அட்டகாசம்..

VIKNESHWARAN said...

இந்த கவிதை முழுக்க ஒரு வாக்கியமா?

நல்லா இருக்குங்க...

இனியவள் புனிதா said...

//தன் பெருமை தானறியாத,
என் அம்மா.... //

Mothers day special..??but excellent!!

ஆ.முத்துராமலிங்கம் said...

கவிதை நல்லா இருக்கு

ஸ்ரீமதி said...

நன்றி அமித்து அம்மா

நன்றி வியா

நன்றி சக்தி

நன்றி புதியவன்

நன்றி கார்க்கி

நன்றி இயற்கை

நன்றி ஆயில்யன் அண்ணா. போட்டோ எனக்கு மெயில்ல வந்தது அண்ணா.. :))

நன்றி நிஜம்ஸ் அண்ணா

நன்றி ஆதி அண்ணா. உயிரோசைக் கவிதைகளை எண்ணவில்லை அண்ணா...

நன்றி G3

நன்றி ராகவ்

நன்றி கோபிநாத்

நன்றி நசரேயன்

நன்றி தமிழ்பிரியன் அண்ணா

நன்றி ஆளவந்தான் அண்ணா. ரெண்டுமே தான்.. உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி எடுத்துக்கோங்க.. :)) கோ இன்சிடெண்ட்.. ;))

நன்றி தாரணி அக்கா எவ்ளோ நல்ல மனசு

நன்றி முத்துசாமி

நன்றி சரவணா

நன்றி விக்னேஷ்வரன். இது கவிதையா அப்படின்னு நேராவே கேட்டிருக்களாம் நான் கோவிச்சிக்கவே மாட்டேன் அண்ணா.. ;))

நன்றி புனிதா அக்கா

நன்றி ஆ.முத்துராமலிங்கம்

Maddy said...

தாயிற்சிறந்த கோவிலுமில்லை பாட்டு தான் ஞாபகம் வருது!!

நாணல் said...

hmmm nijam thaan....

ஸ்ரீமதி said...

நன்றி மேடி அண்ணா

நன்றி நாணல் அக்கா

reena said...

அழகான கவிதை ஸ்ரீமதி.வாழ்த்துக்கள்

அனுஜன்யா said...

அம்மா பத்தி யார் எழுதினாலுமே அழகு. ஸ்ரீ எழுதினால் ....கேக்கணுமா!

Getting ready?

அனுஜன்யா

Kirpal A V said...

எல்லா அம்மாக்களும் இப்படித்தானோ!!! நன்று

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது