கனவுகள் விற்பனைக்கல்ல...


கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்...
வருகையை வாடிக்கையாக்க
முயலும்....
வாழ்வின் துவக்கப்புள்ளியினின்று
தள்ளியிருக்கிறேன்...
விடுபட வரமளி...
இன்றைய எந்நிலை உணர்த்த
எனக்கும் வாய்ப்பளி...
ஏனெனில்,
உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு
உடன்பட்டிருக்கிறேன்....
என்னில்,
உனக்கான விதிமுறைகள்
இன்னும் தளர்ந்தப்பாடில்லை....
எனினும்,
மனதில் மட்டும்
மாட்டிவைத்துள்ளேன்,
என் கனவுகள் எதுவும்
விற்பனைக்கல்லவென்று...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

32 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

அபுஅஃப்ஸர் said...

//கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்...
வருகையை வாடிக்கையாக்க
முயலும்//

வித்தியாசமான கற்பனை ரசித்த வரி

அபுஅஃப்ஸர் said...

//உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு உடன்பட்டிருக்கிறேன்....//


நல்லாயிருக்குங்க‌

அபுஅஃப்ஸர் said...

//மனதில் மட்டும் மாட்டிவைத்துள்ளேன், என் கனவுகள் எதுவும் விற்பனைக்கல்லவென்று...
//

நல்ல முடிவு

அழகான வரிகள்

வாழ்த்துக்கள்

தமிழ் விரும்பி said...

//உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு உடன்பட்டிருக்கிறேன்..//

உன்னிடம் இருந்து வந்த,
வார்த்தைகள் உனது அல்ல,
ஆனால் உன்னுடையதே..

ரொம்ப யோசிக்கிறீங்க போங்க...

ஆயில்யன் said...

good one !

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

sakthi said...

கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்...
வருகையை வாடிக்கையாக்க
முயலும்....

hey startinge superb

sakthi said...

உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு உடன்பட்டிருக்கிறேன்....என்னில், உனக்கான விதிமுறைகள் இன்னும் தளர்ந்தப்பாடில்லை...

arumai :)))))

Muthusamy said...

Good one

கோபிநாத் said...

;-))

Suresh said...

சும்மா சூப்பர்

ஜி said...

moonu kavithaiyaiyum ippathaan vaasichen... ellaam nalla irunthathu... intha kavithaiya vida maththa rendum romba pudichirunthathu...

இனியவள் புனிதா said...

:-) Nice dear!!!

லோகு said...

வழக்கம் போல அருமை..

எல்லா வரியிலும் உங்க பாணி தனித்து தெரிகிறது..

SUBBU said...

:))

கார்க்கி said...

எதுவும் சொல்லல.. அப்புறம் சொல்றேன்

நான் ஆதவன் said...

;))

புதியவன் said...

//உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு
உடன்பட்டிருக்கிறேன்....
//

வித்தியாசமான உடன் படிக்கை அருமை...

புதியவன் said...

//கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்... //

விற்பனைக்கில்லாத கனவுகளில் இந்த உவமை அழகு...

Karthik said...

//வருகையை வாடிக்கையாக்க முயலும்....

ஹ்ம்.. சான்ஸே இல்லை.

vinu said...

great divya very sweet dreams urs butttttttt i am unlukky to a orphan wt shall i dooooooooo.

KADUVETTI said...

கரையோரக் கனவுகள்

கடைக்குட்டி said...

நன்று.. :-)

மண்குதிரை said...

புரிகிறது ஸ்ரீமதி. ஆனால் குழப்பம். தொனியில் என்று நினைக்கிறேன் ஸ்ரீமதி.

" உழவன் " " Uzhavan " said...

யப்பா.. இந்த பெண்டுலத்தப் பாத்து எவ்வளவு நாளாச்சு.. நன்றி ஸ்ரீமதி :-)

dharshini said...

//மனதில் மட்டும் மாட்டிவைத்துள்ளேன், என் கனவுகள் எதுவும் விற்பனைக்கல்லவென்று...
//
super lines.
:)

இய‌ற்கை said...

வித்தியாசமான வரிகள்:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜி said...
moonu kavithaiyaiyum ippathaan vaasichen... ellaam nalla irunthathu... intha kavithaiya vida maththa rendum romba pudichirunthathu...

அப்படியே ரிப்பீட்டிக்கிறேன்....

ஸ்ரீமதி said...

நன்றி அபுஅஃப்ஸர் அண்ணா

நன்றி தமிழ்விரும்பி

நன்றி ஆயில்யன் அண்ணா

நன்றி ஆதி அண்ணா

நன்றி சக்தி

நன்றி முத்துசாமி அண்ணா

நன்றி கோபிநாத்

நன்றி சுரேஷ்

நன்றி ஜி அண்ணா

நன்றி புனிதா அக்கா

நன்றி லோகு

நன்றி சுப்பு

நன்றி கார்க்கி

நன்றி ஆதவன் அண்ணா

நன்றி புதியவன்

நன்றி கார்த்திக்

நன்றி வினு

நன்றி காடுவெட்டி. ப்ளாக் பேர சொல்லிப்பார்க்கறீங்களா?? இல்ல கவிதைக்கான பின்னூட்டமா??

நன்றி கடைக்குட்டி

நன்றி மண்குதிரை. இன்னும் கொஞ்சம் புரியறாமாதிரி எழுதிருக்கனுமோ அண்ணா??

நன்றி "உழவன்""Uzhavan"

நன்றி தர்ஷினி

நன்றி இயற்கை

நன்றி அமித்து அம்மா

நிஜமா நல்லவன் said...

Nice!

Maddy said...

One of your best poems Sri!

ஸ்ரீமதி said...

Thank you Nijams anna and Maddy anna.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது