கவிதை தூண்டும் வரிகள்

கவிதை தூண்ட வரிகள்;
வரிகள் கோர்க்க வார்த்தை;
வார்த்தை தோன்ற வாழ்க்கை;
வாழ்க்கை சிறக்க காதல்;
காதல் பருக சிறு ஊடல்;
ஊடல் முடிக்குமொரு மௌனம்;
மௌனம் கலைக்கும் ஒரு கவிதை;
கவிதைத் தூண்ட வரிகள்
வேண்டும்.............

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வேறு

பேசினோம்
கேட்காமல் கடந்தது
காலம்...
~*~
ஆளுக்கொரு வார்த்தை
வாழ்க்கை...
~*~
மனப்போராட்டம்
டிவியில் கிரிக்கெட்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

28 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

மண்குதிரை said...

mudhal kavithai nalla vanthirukku srimathi.

mankuthirai.

புதியவன் said...

முதல் கவிதை அழகு

இரண்டாவது யதார்த்தம்...

ஆ.முத்துராமலிங்கம் said...

முதல் கவிதை புதுசா இருக்கு
படிக்க அழகு.

இரண்டாமவது யதார்த்தம்.

இரண்டும் நல்லா இருக்கு.

G3 said...

//கவிதைத் தூண்ட வரிகள்;
வரிகள் கோர்க்க வார்த்தை;
வார்த்தை தோன்ற வாழ்க்கை;
வாழ்க்கைச் சிறக்க காதல்;
காதல் பருக சிறு ஊடல்;
ஊடல் முடிக்குமொரு மௌனம்;
மௌனம் கலைக்கும் ஒரு கவிதை;
கவிதைத் தூண்ட வரிகள்
வேண்டும்.............//

Idhu Deadlocka illa infinite loopa ??? ;))))

Sasirekha Ramachandran said...

//மனப்போராட்டம்
டிவியில் கிரிக்கெட்//

:((

கார்க்கி said...

rightu..

left

front

back

top

bottom


ellaa thisaiyum un kavithaikal pugaz parava vazththukal

Karthik said...

ரெண்டும் சூப்பர். ரெண்டாவது வாவ்..!

ஆயில்யன் said...

டூ ஜி3


கவிதையில காதல் வந்திருக்கு ஸோ

டெட் லாக்!


காதல் சொல்ல தொடர்ந்து கவிதைகளே வருவதால் இது இன்பினிட்டிவ் லூப் :)))))

வண்ணத்துபூச்சியார் said...

இரண்டுமே சூப்பர்.

சுரேகா.. said...

வார்த்தைகள் வரிகளாகி
வரிகளும் வாழ்க்கை சொல்லும்
உங்கள் கவித்திறன் மென்மேலும்
வளரட்டும்!

dharshini said...

அனைத்தும் சூப்பர்....
வாழ்த்துக்கள் sri.

Maddy said...

நவீன அந்தாதி கவிதை அருமை. சுழல்ன்று கொண்டே இருப்பதே வாழ்க்கை என்றே சொன்னது போல இருக்கிறது ஆரம்பமும் முடிவிக்கு முதல் வரியான "கவிதைத் தூண்ட வரிகள்"

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு ஸ்ரீ!!!
அன்புடன் அருணா

சென்ஷி said...

//ஆளுக்கொரு வார்த்தை
வாழ்க்கை...
//

:))

அழகான ஜென் கவிதை வெளிப்பாடு!

தமிழ் பிரியன் said...

எல்லாரும் என்னஎன்னமோ சொல்லி இருக்கீங்க...
அழகா இருக்கு!

ஜி said...

//மனப்போராட்டம்
டிவியில் கிரிக்கெட்...//

I liked this one... :))

//Idhu Deadlocka illa infinite loopa ??? ;))))//

Nallathoru question...

Muthusamy said...

Good one. But remove the கவிதை"த்"
வாழ்க்கை"ச்". Unnecessary press is not feeling good.

Divyapriya said...

good one srimadhi...

///Idhu Deadlocka illa infinite loopa ??? ;)))//

sema question g3...ayilyan ans um topu :)

yathra said...

நல்லா இருக்குங்க கவிதைகள்

D.R.Ashok said...

என்ன ஆச்சிரியம்!
நான் சொல்ல வந்தத..
first மூனு பேர் சொல்லிடாங்க....

gayathri said...

nalla iruku srimathi

Subash said...

really nice

Subash said...

puthu style la irukku
vaalthukal

kavi said...

ore word la sollatuma ??

nenga pakkathula iruntha moochu mutta katti pidichu muttham koduthirupen... avloo arumai onga yella poems

அபுஅஃப்ஸர் said...

SIMPLE but SUPER

KALAKKAL VARIHAL

நாணல் said...

வேண்டியது கிடைக்க வாழ்த்துக்கள் ஸ்ரீ... ;)

VASAGAN said...

இரண்டு கவிதைகளும் அழகு

ஸ்ரீமதி said...

நன்றி மண்குதிரை

நன்றி புதியவன்

நன்றி ஆ.முத்துராமலிங்கம்

நன்றி G3 ஆயில்யன் அண்ணா உங்களுக்கு பதில் சொல்லிருக்கார்.. :))

நன்றி சசி அக்கா

நன்றி கார்க்கி

நன்றி Karthik

நன்றி ஆயில்யன் அண்ணா..பதிவு பத்தி எப்பவுமே ஒன்னும் சொல்ற‌தில்லன்னு முடிவு பண்ணியாச்சு?? :((

நன்றி வண்ணத்துபூச்சியார்

நன்றி சுரேகா அண்ணா

நன்றி Dharshini

நன்றி Maddy அண்ணா இதுக்கு பேர்தான் அந்தாதியா?? சொல்லவே இல்ல‌?? ;))

நன்றி அருணா அக்கா

நன்றி சென்ஷி அண்ணா ஜென் கவிதையா?? :O

நன்றி தமிழ் பிரியன் அண்ணா.. எது அண்ணா அழகா இருக்கு?? பின்னூட்டமெல்லாமா?? :)))


நன்றி ஜி அண்ணா

நன்றி முத்துசாமி அண்ணா மாத்திட்டேன்..

நன்றி Divyapriya அக்கா

நன்றி yathra

நன்றி D.R.Ashok

நன்றி gayathri

நன்றி Subash

நன்றி Subash

நன்றி kavi நீங்க ரொம்ப ஃபீல் பண்றீங்க‌ :))

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி நாணல் அக்கா

நன்றி VASAGAN

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது