வட்டத்திற்குள் பெண்..[எச்சரிக்கை: தொடர் பதிவு]

முன் குறிப்பு: இது என்னோட வழக்கமான பதிவு இல்ல... கவிதை வேண்டுவோர் நேற்று போட்ட இடுகையை படித்துக்கொள்ளவும்.

'வட்டத்திற்குள் பெண்' தலைப்பே எனக்கு புரியல... அதென்ன வட்டத்திற்குள் பெண்?? ஏன் சதுரத்திற்குள் பெண்ணுன்னு இருக்கக்கூடாதான்னு ரொம்ப யோசிச்சு.... அப்பறம் கண்டுபிடிச்சேன் சதுரத்திற்கு மூலை (மூளை) இருக்கு... வட்டத்திற்கு தான் இல்லைன்னு... இப்படி தான் பல தேவையில்லாத, இன்னும் சொல்லப்போனா வட்டம் போல மூலை (மூளை) இல்லாத பல விஷயங்கள்ல தன்னை மாட்ட வெச்சிகிட்டு வெளிவரத் தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்காங்க, இல்ல தவிக்கவிடறாங்க...

பெண்கள் விடுதலை, 33% இட ஒதுக்கீடு இந்த வார்த்தையெல்லாம் கேட்டா கோவம் தான் வருது... அதென்ன இட ஒதுக்கீடு?? பெண்களெல்லாம் வேற்றுகிரகத்துல இருந்து வந்த ஏலியன்ஸ்சா?? அவங்களுக்கு வாழ வழிப்பண்ணித் தரப்போறாங்களா?? எனக்கு ஒண்ணுமே புரியல...

அவங்களும் நம்ம கூட நம்மள மாதிரி பிறந்தவங்கதான்னு நினைச்சாலே போதும்.... ஆனா, பெண்களே அப்படி நினைக்கிறதில்ல... என்னவோ தான் ஒரு தனிப்பிறவின்னும், தியாகத்தின் மறுஉருவம்னும் நினைப்பு... பழைய சாதத்துலையும், ஆறு முழம் புடைவைலையும் தன்னோட ஆசைகளையும், ஆயுளையும் முடிச்சிக்கிறதுதான் அல்லது முடியறதுதான் தனக்கு பெருமை... அப்பதான் இந்த உலகம் தலைல வெச்சுக்கொண்டாடும்ன்னு நினைப்பு....

இன்னமும் பல பெண்களுக்கு கல்யாணம் செஞ்சுக்கரதுதான் வாழ்க்கைல செட்டில் ஆனதுக்கு அர்த்தம்ன்னு நினைச்சுக்கறது வேதனையான உண்மை... 'கணவன் கிரிக்கெட்ல ஜெயிச்சா காலர துவைச்சது நாந்தான்'ன்னு பெருமைப்பட்டுக்கற பெண்கள் தான் அதிகம் நாட்டுல... அவங்கள சொல்லி தப்பில்ல... பெண்கள மகள்களாகவே வளர்க்கப்படுவதில்லை.... ஏதோ ஜல்லிக்கட்டுக்கு காளைய ரெடி பண்ற மாதிரி கல்யாணத்துக்கு ரெடி பண்றாங்க.....

எனக்கு இந்த தலைப்பிலேயே உடன்பாடில்ல... ஏன் பெண்ணுன்னு பிரிச்சி பேசனும்ன்னு தோணுது?? அதான் இப்படி... இந்த பதிவ நான் யாரையும் புண்படுத்தறதுக்காக எழுதல... இந்த பதிவு எதுக்கு ஆரம்பிச்சாங்க?? இதுவரைக்கும் இதுல என்ன எழுதினாங்க?? எதுவுமே எனக்கு தெரியாது... இந்த தலைப்புல எனக்கு என்ன தோணித்தோ, அத இங்க எழுதிருக்கேன்... அதுத் தவிர யார் மனசையாவது புண்படுத்தியிருந்தேனா... தயவு செய்து மருந்து வாங்கி தடவிக்கோங்க.... இந்த தொடர் பதிவுக்கு அழைத்த பாவத்துக்காக சரவணன்கிட்ட காசு வாங்கிக்கோங்க...

சரவணனுக்கு:- சரவணா! நீ இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நாளிலிருந்து நானும் யோசிக்கிறேன்... யோசிக்கிறேன்... யோசிச்சிகிட்டே இருக்கேன்.... எனக்கு இதத் தவிர வேற எதுவும் தோணல... மன்னிக்கவும்.. :-((

கவிதை இருக்கும்ன்னு நினைச்சு வந்தவங்களுக்கு:- நல்ல தலைப்ப கொடுத்து எழுத சொன்னா... அத வெச்சு பெண் பூ போன்றவள்... பிரிட்ஜ்ல வெச்சிருந்தா ரெண்டுநாள் கழிச்சுக்கூட யூஸ் பண்ணிக்கலாம்ன்னு கவிதைங்கற பேர்ல பூசி மெழுக எனக்கு விருப்பமில்ல... சாரி...

யாரையும் இத தொடர கூப்பிடவும் ஆசையில்ல... சாரி...

டிஸ்கி: லேபிள்ல 'பதிவர் சதுரம்'ன்னு போட்ருக்கேன்... வட்டத்துக்கு மூளை இல்லன்னு சொல்லிட்டு, நானே பதிவர் வட்டம்ன்னு போட்டா தேவையில்லாத ஆட்டோக்களை சந்திக்கவேண்டியிருக்கும்கற காரணத்தால்....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

43 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

கார்க்கி said...

onnum puriyala..

அப்பாவி முரு said...

//இந்த தொடர் பதிவுக்கு அழைத்த பாவத்துக்காக சரவணன்கிட்ட காசு வாங்கிக்கோங்க...//

இந்ததொடர் உங்ககிட்ட வந்த்தே தப்பு.

தொடரின் கட்டளைகளில் முக்கியமானது, தொடரை ஆண் பதிவர்கள் தான் எழுத வேண்டுமென்பது.

சரி பார்த்துக்கொள்ளுங்கள்

சென்ஷி said...

கலக்கிட்ட...!!!! :-))

புதியவன் said...

//பெண் பூ போன்றவள்... பிரிட்ஜ்ல வெச்சிருந்தா ரெண்டுநாள் கழிச்சுக்கூட யூஸ் பண்ணிக்கலாம்ன்னு கவிதைங்கற பேர்ல பூசி மெழுக எனக்கு விருப்பமில்ல... சாரி...//

ரொம்ப சரி...

சென்ஷி said...

அடுத்த பெண்ணியவாதி ரெடியாயிட்டாங்கோன்னு போஸ்டர் ஒட்டப்போறாங்க. சாக்கிரத! :-))

J J Reegan said...

என்னமா ஏன் தங்கச்சி ... சமுதாய கருத்தெல்லாம் இருக்கும் போல இருக்கு...

// பெண்கள் விடுதலை, 33% இட ஒதுக்கீடு இந்த வார்த்தையெல்லாம் கேட்டா கோவம் தான் வருது... அதென்ன இட ஒதுக்கீடு?? பெண்களெல்லாம் வேற்றுகிரகத்துல இருந்து வந்த ஏலியன்ஸ்சா?? அவங்களுக்கு வாழ வழிப்பண்ணித் தரப்போறாங்களா?? //

நானும் நிறைய டைம் யோசிச்சிருக்கேன்...

நீ ரொம்ப கோவமா இருப்ப போலருக்கு... நான் நாளைக்கி வரேன்...

அபுஅஃப்ஸர் said...

அடுத்து ஒரு புரட்சிப்பெண்..!

உங்க பதிவு யோசிக்கவெச்சது

Saravana Kumar MSK said...

சூப்பர்..
நான் ஒரு வரியில இந்த தலைப்பில் உடன்பாடு இல்லையென்று சொன்னேன்.. அதன் முழுவிளக்கம் உன் பதிவில் இருக்கு..

G3 said...

//இந்த பதிவு எதுக்கு ஆரம்பிச்சாங்க?? இதுவரைக்கும் இதுல என்ன எழுதினாங்க?? எதுவுமே எனக்கு தெரியாது... //

:)))))))) Ippavum enakku theriyalae :D

Saravana Kumar MSK said...

//அதுத் தவிர யார் மனசையாவது புண்படுத்தியிருந்தேனா... தயவு செய்து மருந்து வாங்கி தடவிக்கோங்க.... இந்த தொடர் பதிவுக்கு அழைத்த பாவத்துக்காக சரவணன்கிட்ட காசு வாங்கிக்கோங்க... //

நீ ரொம்ப நல்லவ.. :((

டக்ளஸ்....... said...

\\பெண்கள் விடுதலை, 33% இட ஒதுக்கீடு இந்த வார்த்தையெல்லாம் கேட்டா கோவம் தான் வருது... அதென்ன இட ஒதுக்கீடு?? பெண்களெல்லாம் வேற்றுகிரகத்துல இருந்து வந்த ஏலியன்ஸ்சா?? அவங்களுக்கு வாழ வழிப்பண்ணித் தரப்போறாங்களா?? எனக்கு ஒண்ணுமே புரியல...\\

சரியான சாட்டையடி...!

கே.ரவிஷங்கர் said...

ஒரு கரையோரப் பூ ஒன்று புயலானது?

இனியவள் புனிதா said...

:-)

Karthik said...

கலக்கல்ஸ்..! :))))

Karthik said...

//டிஸ்கி: லேபிள்ல 'பதிவர் சதுரம்'ன்னு போட்ருக்கேன்...

LOL. :))))))))))))))

மோனிபுவன் அம்மா said...

//கலக்கல் பெண்னே
கலக்கல் பெண்னே//

இனியவள் புனிதா said...

பூவுக்குள் பூகம்பமா??

மோனிபுவன் அம்மா said...

\பெண்கள் விடுதலை, 33% இட ஒதுக்கீடு இந்த வார்த்தையெல்லாம் கேட்டா கோவம் தான் வருது... அதென்ன இட ஒதுக்கீடு?? பெண்களெல்லாம் வேற்றுகிரகத்துல இருந்து வந்த ஏலியன்ஸ்சா?? அவங்களுக்கு வாழ வழிப்பண்ணித் தரப்போறாங்களா?? எனக்கு ஒண்ணுமே புரியல...\\


ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க

ஆயில்யன் said...

எச்சரிக்கை டைட்டில் உள்ள பதிவுகளுக்கு எப்பவுமே எண்ட்ரீ போடறது கிடையாது !

பட் ஒரு பாசத்துல இங்கன வந்துட்ட்டேன்!

இத்தோட எண்ட் கார்ட் போட்டு எஸ்ஸாகிக்கிறேன் !

Suresh said...

\\பெண்கள் விடுதலை, 33% இட ஒதுக்கீடு இந்த வார்த்தையெல்லாம் கேட்டா கோவம் தான் வருது... அதென்ன இட ஒதுக்கீடு?? பெண்களெல்லாம் வேற்றுகிரகத்துல இருந்து வந்த ஏலியன்ஸ்சா?? அவங்களுக்கு வாழ வழிப்பண்ணித் தரப்போறாங்களா?? எனக்கு ஒண்ணுமே புரியல...\\

நச் அது என்ன கொடுக்கிறது அவங்களுக்கும் 50 % சம் உரிமை உண்டு

நிஜமா நல்லவன் said...

:)

இனியவள் புனிதா said...

வெண்ணிலவு(மதி) சுடுவதென்ன???

narsim said...

ம். நல்லா எழுதி இருக்கீங்க ஸ்ரீமதி..

விவாதிக்க நிறைய இருக்கு..

சில மேட்டர்கள் இல்லைன்னு சொன்னாலும் உண்மைன்னு ஒன்னு இருக்கு..

கோபம் நியாயமானதே

vaasal said...

கனவுகளும், கற்பனைகளும், கருத்துக்களும் மேலும் எழிலுற வாழ்த்துக்கள்.

dharshini said...

நல்ல அலசல்....

dharshini said...

// கார்க்கி said...

onnum puriyala..//

அண்ணா இன்னுமா தெளியல?!

Muthusamy said...

yetho romba naal kobam pola..ippidi kumuri kottiteengale...ana ellame unnmai..paavam unarnthu nadapparillai

ஜீவன் said...

''தங்கச்சிக்கு ஜில்லுன்னு ஒரு கோவம்''

நிஜமாவே கலக்கிட்ட தங்கச்சி!!!

கோபிநாத் said...

எ.கொ.சரவணா!!!

ஏன் எதுக்கு எப்படி....யப்பா சாமி ஒன்னுமே புரியல..

\\சென்ஷி said...
கலக்கிட்ட...!!!! :-))
\\

டேய் உனக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி பதிவு எல்லாம் புரியுது!!!?? உண்மையிலேயே படிச்சியாடா!!??

நாணல் said...

ரொம்ப சரியா சொல்லி இருக்க்கீங்க ஸ்ரீ.... பார்ப்போம் இனி வரும் நாட்களிளாவது பெண்களை பெண்களாய் மதிப்பார்களா என்று...

ஆ.முத்துராமலிங்கம் said...

வட்டத்துக்கும் சதுரத்துக்கும் இவ்வளவு வேறுபாடா..!!!
நல்லா யோசிச்சிருங்கீங்க.
உங்கள் ஆதங்கம் சரின்னே படுது.

லதானந்த் said...

கரையோரக் கனவுகள்

நான் ஆதவன் said...

//Suresh said...

\\பெண்கள் விடுதலை, 33% இட ஒதுக்கீடு இந்த வார்த்தையெல்லாம் கேட்டா கோவம் தான் வருது... அதென்ன இட ஒதுக்கீடு?? பெண்களெல்லாம் வேற்றுகிரகத்துல இருந்து வந்த ஏலியன்ஸ்சா?? அவங்களுக்கு வாழ வழிப்பண்ணித் தரப்போறாங்களா?? எனக்கு ஒண்ணுமே புரியல...\\

நச் அது என்ன கொடுக்கிறது அவங்களுக்கும் 50 % சம் உரிமை உண்டு
//

கிழிஞ்சுது....அந்தம்மா கோவமே இந்த மாதிரி என்ன ஏன் சதவிகதம் போட்டு பிரிக்கிறீங்கன்னு தான்!!!

ஆமா அதென்ன 50% சம உரிமை?

அப்புறம் பதிவ பத்தி....ஒன்னியிம் புரியல...

ஸாவரியா said...

கலக்குறீங்க ஸ்ரீ

நாகை சிவா said...

சூப்பரா சொன்னீங்க ஸ்ரீமதி!

நான் சொன்ன பட்டம் தான் மிஞ்சும்!

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்கலாம்.!

Maddy said...

""அவங்களும் நம்ம கூட நம்மள மாதிரி பிறந்தவங்கதான்னு நினைச்சாலே போதும்.... ஆனா, பெண்களே அப்படி நினைக்கிறதில்ல...........""
பெண்ணுக்கு பெண்ணே எதிரியா என்ற சந்தேகம் இதில் எனக்கு எழாமல் இல்லை.
......
""பழைய சாதத்துலையும், ஆறு முழம் புடைவைலையும் தன்னோட ஆசைகளையும், ஆயுளையும் முடிச்சிக்கிறதுதான் அல்லது முடியறதுதான் தனக்கு பெருமை...""
ஒரு பெண் அப்படி நினைத்தால் அதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. தன் குடும்பம் தன் மக்கள் அவர்களின் நலனில் அவள் அக்கறை செய்கிறாள் என்ற தான் எனக்கு தெரிகிறது, இப்படி தான் இருப்பதாக புலம்பாத வரை.

"" என்னவோ தான் ஒரு தனிப்பிறவின்னும், தியாகத்தின் மறுஉருவம்னும் நினைப்பு...
அப்பதான் இந்த உலகம் தலைல வெச்சுக்கொண்டாடும்ன்னு நினைப்பு.... ""
இப்படி எந்த பெண்ணும் நினைப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு பெண், தாயாக,தமக்கையாக,தோழியாக தனக்கு விருப்பப்பட்டு செய்வது தியாகமாக கருதுவதாக தெரியவில்லை. மேலும் உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாக ஒரு பெண்ணே சொல்வதால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

வட்டத்துக்குள் பெண் மற்றுமல்ல ஆணும் இருக்க வேண்டும் என்பதே என் கருது. வட்டம் என்பது இங்கே நான் restriction , குறுகிய எண்ணங்கள் என்று எடுக்காமல், தனி மனித ஒழுக்கம் என்றே எண்ணுகிறேன். அது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொருந்தும்.

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//onnum puriyala..//

Innumaa puriyala??? :O

@ அப்பாவி முரு
//இந்ததொடர் உங்ககிட்ட வந்த்தே தப்பு.

தொடரின் கட்டளைகளில் முக்கியமானது, தொடரை ஆண் பதிவர்கள் தான் எழுத வேண்டுமென்பது.

சரி பார்த்துக்கொள்ளுங்கள்//

இல்லை அண்ணா.. நான் ஏற்கனவே பதிவுல சொன்ன மாதிரி இந்த பதிவின் ஆதி தெரியாது.. ஆனா, என்கிட்டே வந்ததே தப்புன்னா என்ன அர்த்தம்??

@ சென்ஷி
//கலக்கிட்ட...!!!! :-))//

நன்றி அண்ணா :))

//அடுத்த பெண்ணியவாதி ரெடியாயிட்டாங்கோன்னு போஸ்டர் ஒட்டப்போறாங்க. சாக்கிரத! :-))//

அய்யய்யோ ஏன் அண்ணா பயமுறுத்துறீங்க?? ;)))

@ புதியவன்
//ரொம்ப சரி...//

நன்றி புதியவன் :))


@ J J Reegan
//என்னமா ஏன் தங்கச்சி ... சமுதாய கருத்தெல்லாம் இருக்கும் போல இருக்கு...

நானும் நிறைய டைம் யோசிச்சிருக்கேன்...

நீ ரொம்ப கோவமா இருப்ப போலருக்கு... நான் நாளைக்கி வரேன்...//

இது ரொம்ப நாளைய கோவம் அண்ணா இன்னைக்கு தான் சந்தர்பம் கிடைச்சது.. :)) எங்க அண்ணா ரொம்ப நாளா ஆள காணோம்??

@ அபுஅஃப்ஸர்
//அடுத்து ஒரு புரட்சிப்பெண்..!

உங்க பதிவு யோசிக்கவெச்சது//

புரட்சி எல்லாம் இல்ல அண்ணா.. சும்மா எனக்கு தோணினத சொன்னேன் அவ்ளோ தான்... அது உங்கள யோசிக்க வெச்சா அது என் பாக்கியம்.. :)))

@ Saravana Kumar MSK
//சூப்பர்..
நான் ஒரு வரியில இந்த தலைப்பில் உடன்பாடு இல்லையென்று சொன்னேன்.. அதன் முழுவிளக்கம் உன் பதிவில் இருக்கு..//

அதையும் பார்த்தேன் சரவணா :)) ஆனா, அதுக்கப்பறம் ஒன்னும் சொல்லாம விட்டுட்டியே ஏன்?? ஏதாவது கொலை, தற்கொலைன்னு உன் பாஷைல சொல்லலாம்ல?? பயந்துருவாங்கல்ல?? ;))

//நீ ரொம்ப நல்லவ.. :((//

Too late.. ;))

@ G3
//:)))))))) Ippavum enakku theriyalae :D//

Mmm theriyaadhu.. ;))

@ டக்ளஸ்.......
//சரியான சாட்டையடி...!//

நன்றி அண்ணா முதல் வருகைக்கு :))

@ கே.ரவிஷங்கர்
//ஒரு கரையோரப் பூ ஒன்று புயலானது?//

ரொம்ப ரசிச்சேன் அண்ணா உங்க இந்த பின்னூட்டத்த.. :)) இதுல நான் சொன்னது பாதி தான்... சொல்லாத கோவங்கள் தான் அதிகம்.. :)))

@ இனியவள் புனிதா
//:-)
பூவுக்குள் பூகம்பமா??
வெண்ணிலவு(மதி) சுடுவதென்ன???//

ம்ம்ம்ம் சும்மா தான் அக்கா :))))

@ Karthik
//கலக்கல்ஸ்..! :))))//

Thanks a lot Karthik. :))

@ மோனிபுவன் அம்மா
//கலக்கல் பெண்னே
கலக்கல் பெண்னே//

மிக்க நன்றி அக்கா :)))

@ ஆயில்யன்
//எச்சரிக்கை டைட்டில் உள்ள பதிவுகளுக்கு எப்பவுமே எண்ட்ரீ போடறது கிடையாது !

பட் ஒரு பாசத்துல இங்கன வந்துட்ட்டேன்!

இத்தோட எண்ட் கார்ட் போட்டு எஸ்ஸாகிக்கிறேன் !//

தெரிஞ்சிருந்தா போட்ருக்க மாட்டேன் எச்சரிக்கைன்னு :))

@ Suresh
//நச் அது என்ன கொடுக்கிறது அவங்களுக்கும் 50 % சம் உரிமை உண்டு//

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் மறுபடியும் முதல்ல இருந்தா?? அண்ணா முடியல.. :(((

@ நிஜமா நல்லவன்
//:)//

இந்த கலவரத்துலயும்?????? முடியல அண்ணா.. :((((

@ narsim
//ம். நல்லா எழுதி இருக்கீங்க ஸ்ரீமதி..

விவாதிக்க நிறைய இருக்கு..

சில மேட்டர்கள் இல்லைன்னு சொன்னாலும் உண்மைன்னு ஒன்னு இருக்கு..

கோபம் நியாயமானதே//

நானும் விவாதம் எதிர்ப்பார்த்தே போட்டேன்... ஒன்னும் நடக்கல... :((

@ vaasal
//கனவுகளும், கற்பனைகளும், கருத்துக்களும் மேலும் எழிலுற வாழ்த்துக்கள்.//

நன்றி வாசல் :))

@ dharshini
//நல்ல அலசல்....//

நன்றி தர்ஷினி :)))

@ Muthusamy
//yetho romba naal kobam pola..ippidi kumuri kottiteengale...ana ellame unnmai..paavam unarnthu nadapparillai//

உண்மை தான் அண்ணா.. ரொம்ப நாள் கோவம் தான்.. :)))

@ ஜீவன்
//''தங்கச்சிக்கு ஜில்லுன்னு ஒரு கோவம்''

நிஜமாவே கலக்கிட்ட தங்கச்சி!!!//

இப்படி பதிவு போட்டாதான் வருவீங்களா அண்ணா?? :)) நன்றி.. :))


@ கோபிநாத்
//எ.கொ.சரவணா!!!

ஏன் எதுக்கு எப்படி....யப்பா சாமி ஒன்னுமே புரியல..

\\சென்ஷி said...
கலக்கிட்ட...!!!! :-))
\\

டேய் உனக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி பதிவு எல்லாம் புரியுது!!!?? உண்மையிலேயே படிச்சியாடா!!??//

உங்களுக்கு புரியலையா?? பரவால்ல அப்படியே இருக்கட்டும்.. புரிஞ்சுதுன்னா வெறும் ஸ்மைலி போட்டு எஸ் ஆவீங்க.. இப்ப பொலம்பவாவது பெரிய பின்னூட்டம் போடறீங்க... ;)))

@ நாணல்
//ரொம்ப சரியா சொல்லி இருக்க்கீங்க ஸ்ரீ.... பார்ப்போம் இனி வரும் நாட்களிளாவது பெண்களை பெண்களாய் மதிப்பார்களா என்று...//

ம்ம்ம் மனிதர்களாய் மதித்தால் போதும் அக்கா :)))

@ ஆ.முத்துராமலிங்கம்
//வட்டத்துக்கும் சதுரத்துக்கும் இவ்வளவு வேறுபாடா..!!!
நல்லா யோசிச்சிருங்கீங்க.
உங்கள் ஆதங்கம் சரின்னே படுது.//

நன்றி அண்ணா :))

@ லதானந்த்
//கரையோரக் கனவுகள்//

க் விட்டுட்டேனா அண்ணா?? :)))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//கிழிஞ்சுது....அந்தம்மா கோவமே இந்த மாதிரி என்ன ஏன் சதவிகதம் போட்டு பிரிக்கிறீங்கன்னு தான்!!!

ஆமா அதென்ன 50% சம உரிமை?

அப்புறம் பதிவ பத்தி....ஒன்னியிம் புரியல...//

ஒரு பின்னூட்டத்துக்கு பதில் சொல்ற அளவுக்கு புரிஞ்சிருக்கே.. அது போதும் அண்ணா.. :)) (சும்மா தானே சொல்றீங்க புரியலைன்னு??)

@ ஸாவரியா
//கலக்குறீங்க ஸ்ரீ//

நன்றி ஸாவரியா :))

@ நாகை சிவா
//சூப்பரா சொன்னீங்க ஸ்ரீமதி!

நான் சொன்ன பட்டம் தான் மிஞ்சும்!

:)//

என்ன பட்டம் அண்ணா?? :((

@ ஆதிமூலகிருஷ்ணன்
//இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்கலாம்.!//

இன்னும் என்ன அண்ணா சொல்ல?? :((

ஸ்ரீமதி said...

@ Maddy
//பெண்ணுக்கு பெண்ணே எதிரியா என்ற சந்தேகம் இதில் எனக்கு எழாமல் இல்லை.//

பெண் என்கிற பதமே வேண்டாம்ன்னு தான் நான் சொல்றேன் :))

//ஒரு பெண் அப்படி நினைத்தால் அதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. தன் குடும்பம் தன் மக்கள் அவர்களின் நலனில் அவள் அக்கறை செய்கிறாள் என்ற தான் எனக்கு தெரிகிறது, இப்படி தான் இருப்பதாக புலம்பாத வரை. //

இப்படி எல்லாம் இருந்தாதான் குடும்ப அக்கறைன்னு அர்த்தமா?? எத்தன பேர் இத விரும்பி செய்யறாங்க?? ஒரு பொண்ணா நான் சொல்றேன் இத கொஞ்சம் கூட நான் அனுமதிக்க மாட்டேன்....

//இப்படி எந்த பெண்ணும் நினைப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு பெண், தாயாக,தமக்கையாக,தோழியாக தனக்கு விருப்பப்பட்டு செய்வது தியாகமாக கருதுவதாக தெரியவில்லை. மேலும் உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாக ஒரு பெண்ணே சொல்வதால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. //

அதுதான் உண்மை எந்த ஒரு செயலுமே ஒரு சராசரி மனுஷன் பாராட்டுகளை எதிப்பார்க்காமல் செய்ய மாட்டான்... இதுவும் ஒருவகையான பாராட்டுகளை எதிப்பார்த்தே செய்யற செயல் தான்....

//வட்டத்துக்குள் பெண் மற்றுமல்ல ஆணும் இருக்க வேண்டும் என்பதே என் கருது. வட்டம் என்பது இங்கே நான் restriction , குறுகிய எண்ணங்கள் என்று எடுக்காமல், தனி மனித ஒழுக்கம் என்றே எண்ணுகிறேன். அது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொருந்தும்.//

தனிமனித ஒழுக்கத்துக்கும்... நான் சொன்ன கருத்துகளுக்கும் சம்பந்தம் இல்லன்னு நினைக்கிறேன்... நான் இங்க சொல்லவந்தது பெண்களும் ஆறறிவு,வலி,ஆசை,மனம்,மூளை,இரத்தம்,சதை உடைய ஒரு மனித இனம் தான்.. அப்படின்னு.... நன்றி அண்ணா :)))

ஜி said...

//ஏதாவது கொலை, தற்கொலைன்னு உன் பாஷைல சொல்லலாம்ல?? பயந்துருவாங்கல்ல?? ;))//

LOL!!

ஜி said...

:)))))))

For more info: புரிஞ்சுதுன்னா வெறும் ஸ்மைலி போட்டு எஸ் ஆவீங்க..

ஸ்ரீமதி said...

@ ஜி

இதுதான் சொந்த காசுல சூனியம் வெச்சிக்கறது போல :((

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது