ரசிக்கத் தெரியாதவனின் கவிதை

கவிதை ரசிக்கத் தெரியாதவனின்
கண்களிலிருந்து கவிதையைக் காண
எத்தனித்தேன்
சில வார்த்தைகள்
என்னையும் அறியாமல்
கவிதைக்குள் இழுக்க
பெரும் பாடுடன் நான் வெளிவருவதும்,
உள்ளிழுப்பதும் தொடர்ந்தது
இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....-அன்புடன்,
ஸ்ரீமதி.

41 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

சென்ஷி said...

நல்லாயிருக்கு ஸ்ரீமதி!!!

சென்ஷி said...

//இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//

மிக சிக்கலான விசயத்தின் ஆரம்ப பொறி இதுதான்.

ஒருத்தவங்களைப்பத்தின அளவீடுகளை நமக்குள்ள குறிச்சுக்கிட்டு இல்லைன்னா நம்மோட ஒப்பிட்டுத்தான் பேசத்தொடங்குறோம்.

என்னளவுல இந்த கவிதை ரொம்ப நல்லா வந்திருக்குது.

வாழ்த்துக்கள்

புதியவன் said...

ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை வித்தியாசமா இருக்கு...

G3 said...

:))))))))))

ரசனையுள்ளவர்களுக்கு சற்று சிரமமான விஷயம் தான் ;)

கவிதை அருமை :))

G3 said...

ரசிக்க தெரியாதவன்?? or ரசிக்க விரும்பாதவன்?? ;)

Suresh said...

//இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//


மிக அருமை தோழா

Suresh said...

//சில வார்த்தைகள்
என்னையும் அறியாமல்
கவிதைக்குள் இழுக்க
பெரும் பாடுடன் நான் வெளிவருவதும்,/

நல்ல வார்த்தைகளை அருமையாய் கையாண்டு இருக்கிறீர்கள் தோழி

அ.மு.செய்யது said...

நல்லா இருக்க மாதிரி இருக்கு..ஆனா மூணு வாட்டி படிச்சிட்டேன்.

இன்னும் மேக மூட்டமாவே இருக்கு...

//ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//

இந்த வரிகள் புரிஞ்சுது..

க‌விதையின் உள்ளுறை பொருள் அருமை.

இனியவள் புனிதா said...

:-)

இனியவள் புனிதா said...

me the 10th

ஆயில்யன் said...

//ரசனையுள்ளவர்களுக்கு சற்று சிரமமான விஷயம் தான் ;) //

ரசனையில்லாதவர்களும் ரொம்ப ரொம்ப சிரமமான விசயம்தான்..!

நாகை சிவா said...

:)))

அபுஅஃப்ஸர் said...

//கவிதை ரசிக்கத் தெரியாதவனின்
கண்களிலிருந்து கவிதையைக் காண
எத்தனித்தேன்//

அது உங்க தப்புங்க‌

அருமையான வரிகள்

ஆ.முத்துராமலிங்கம் said...

//பெரும் பாடுடன் நான் வெளிவருவதும்,
உள்ளிழுப்பதும் தொடர்ந்தது
இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//

வார்த்தை அழகு
நல்லா இருக்கு.

Muthusamy said...

Good one...very different from other posts

Azeez said...

ரொம்ப அழாக இருக்கு ஸ்ரீமதி

yathra said...

நல்லா இருக்குங்க கவிதை

yathra said...

நல்லா இருக்குங்க கவிதை

ஆதிமூலகிருஷ்ணன் said...

அய்யய்யோ.. வரவர கொஞ்சம் டஃப் குடுக்குறீங்க..

Muthusamy said...

But who's that ரசிக்கத் தெரியாதவன்?
athuvum unga kavithaigalai!

Sasirekha Ramachandran said...

////இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//
NICE!

Divyapriya said...

ஹ்ம்ம்…ரசிக்கத் தெரியாதவனின் கவிதை ரசிக்கற மாதிரி தான் இருக்கு :)

Kanna said...

// ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//

அசத்தல் வரிகள்....அருமை..

இந்த இரண்டு வரிகள் விளக்கும் விஷயம் அபாரம்....

வித்தியாசமான கோணம்...

எங்கயோ போய்ட்டீங்க...........


தொடருங்கள்.....

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//

மிக சிக்கலான விசயத்தின் ஆரம்ப பொறி இதுதான்.

ஒருத்தவங்களைப்பத்தின அளவீடுகளை நமக்குள்ள குறிச்சுக்கிட்டு இல்லைன்னா நம்மோட ஒப்பிட்டுத்தான் பேசத்தொடங்குறோம்.

என்னளவுல இந்த கவிதை ரொம்ப நல்லா வந்திருக்குது.

வாழ்த்துக்கள்
\\

அடங்கொக்காமக்கா...இதுக்கு இப்படியா!!!! ;)

TKB காந்தி said...

ரசிக்கத் தெரியாதவங்க ரசனைய கூட ரசிச்சு எழுதுவீங்க போல... :)

ஜி said...

Rightu...
- rasika theriyaathavan

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//மிக சிக்கலான விசயத்தின் ஆரம்ப பொறி இதுதான்.

ஒருத்தவங்களைப்பத்தின அளவீடுகளை நமக்குள்ள குறிச்சுக்கிட்டு இல்லைன்னா நம்மோட ஒப்பிட்டுத்தான் பேசத்தொடங்குறோம்.

என்னளவுல இந்த கவிதை ரொம்ப நல்லா வந்திருக்குது.

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை வித்தியாசமா இருக்கு...//

நிஜமாவா?? ஆனாலும், அதை முழுதாக இந்த கவிதைல கொண்டுவந்தேனா தெரியல.. நன்றி புதியவன் :))))

ஸ்ரீமதி said...

@ G3
//:))))))))))

ரசனையுள்ளவர்களுக்கு சற்று சிரமமான விஷயம் தான் ;)

கவிதை அருமை :))//

ஆமா G3.. நன்றி :)))

ஸ்ரீமதி said...

நன்றி சுரேஷ் :)))

//இன்னும் மேக மூட்டமாவே இருக்கு...//

சீக்கிரம் மழை வரும் கவலைப்படாதீங்க செய்யது அண்ணா.. ;))))

புனிதா அக்கா ஏன் இந்த கொலைவெறி?? உங்க பதிவுக்கான கமெண்ட்ட விட மீ த 10th பெரிசா இருக்கு... :))

//ரசனையில்லாதவர்களும் ரொம்ப ரொம்ப சிரமமான விசயம்தான்..!//

நீங்க சொன்ன சரிதான் ஆயில்யன் அண்ணா ;))))

நன்றி நாகை சிவா அண்ணா :))

//அது உங்க தப்புங்க‌//

:((( அப்படியா??
நன்றி அபுஅஃப்ஸர் அண்ணா :)))

நன்றி ஆ.முத்துராமலிங்கம் :)))

//Good one...very different from other posts//

Thank you Muthusamy anna :)))

//Azeez said...
ரொம்ப அழாக இருக்கு ஸ்ரீமதி//

Thank you Azeez for ur first visit :))

Thank you yathra :)))

//அய்யய்யோ.. வரவர கொஞ்சம் டஃப் குடுக்குறீங்க..//

அச்சச்சோ அப்படியா அண்ணா?? :((

//But who's that ரசிக்கத் தெரியாதவன்?
athuvum unga kavithaigalai!//

Hahaha.. :)) my own bro.. ;)))

Thank you Sasirekha Ramachandran for sharing ur thoughts with me.. :)))

நன்றி திவ்ய பிரியா அக்கா :))))

நன்றி கண்ணா :))))))

//அடங்கொக்காமக்கா...இதுக்கு இப்படியா!!!! ;)//

எதுக்கு எப்படியா?? ;)))

//ரசிக்கத் தெரியாதவங்க ரசனைய கூட ரசிச்சு எழுதுவீங்க போல... :)//

நான் ரசிச்சத எழுதினேன்.. அது நீங்க ரசிக்கிற மாதிரி இருக்கான்னு சொல்லவே இல்லையே?? ;)) நன்றி காந்தி.. :)))

//Rightu...
- rasika theriyaathavan//

ரைட்டு..
- கமெண்ட் புரியாதவள் ;)))
நன்றி ஜி அண்ணா :))

TKB காந்தி said...

//நான் ரசிச்சத எழுதினேன்.. அது நீங்க ரசிக்கிற மாதிரி இருக்கான்னு சொல்லவே இல்லையே??//சொல்ல மறந்துட்டேன், ரொம்பவே ரசிச்சேங்க ;)

பரிசல்காரன் said...

ப்ப்பா! வாய்ப்பே இல்லை தோழி. கலக்கற!

நல்ல கரு. அளவான வார்த்தைகள்.

நான் ஆதவன் said...

\சென்ஷி said...
//இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//

மிக சிக்கலான விசயத்தின் ஆரம்ப பொறி இதுதான்.

ஒருத்தவங்களைப்பத்தின அளவீடுகளை நமக்குள்ள குறிச்சுக்கிட்டு இல்லைன்னா நம்மோட ஒப்பிட்டுத்தான் பேசத்தொடங்குறோம்.

என்னளவுல இந்த கவிதை ரொம்ப நல்லா வந்திருக்குது.

வாழ்த்துக்கள்
\\


கவிதை கூட ஈஸியா புரியும் போலயே!!!!

ஸ்ரீமதி said...

@ TKB காந்தி
////நான் ரசிச்சத எழுதினேன்.. அது நீங்க ரசிக்கிற மாதிரி இருக்கான்னு சொல்லவே இல்லையே??//சொல்ல மறந்துட்டேன், ரொம்பவே ரசிச்சேங்க ;)//

நன்றி காந்தி :))

@ பரிசல்காரன்
//ப்ப்பா! வாய்ப்பே இல்லை தோழி. கலக்கற!

நல்ல கரு. அளவான வார்த்தைகள்.//

நன்றி அண்ணா

@ நான் ஆதவன்
//\சென்ஷி said...
//இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//

மிக சிக்கலான விசயத்தின் ஆரம்ப பொறி இதுதான்.

ஒருத்தவங்களைப்பத்தின அளவீடுகளை நமக்குள்ள குறிச்சுக்கிட்டு இல்லைன்னா நம்மோட ஒப்பிட்டுத்தான் பேசத்தொடங்குறோம்.

என்னளவுல இந்த கவிதை ரொம்ப நல்லா வந்திருக்குது.

வாழ்த்துக்கள்
\\


கவிதை கூட ஈஸியா புரியும் போலயே!!!!//

ஹா ஹா ஹா நல்லா வேணும் :)))

" உழவன் " " Uzhavan " said...

நல்லாதான் எத்தனிச்சிருக்கீங்க :-)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\
//இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//

மிக சிக்கலான விசயத்தின் ஆரம்ப பொறி இதுதான்.

ஒருத்தவங்களைப்பத்தின அளவீடுகளை நமக்குள்ள குறிச்சுக்கிட்டு இல்லைன்னா நம்மோட ஒப்பிட்டுத்தான் பேசத்தொடங்குறோம்.

என்னளவுல இந்த கவிதை ரொம்ப நல்லா வந்திருக்குது.

வாழ்த்துக்கள்
\\

இந்த எளக்கியவாதிங்க தொல்லை தாங்க முடியலைப்பா... ;)

நல்லாருக்கு ஸ்ரீமதி..!

இனியவள் புனிதா said...

//புனிதா அக்கா ஏன் இந்த கொலைவெறி?? உங்க பதிவுக்கான கமெண்ட்ட விட மீ த 10th பெரிசா இருக்கு... :)) //

ஹ்ம்ம்..நானும் இந்த லிஸ்டில் இருப்பதை எப்படி வெளியே சொல்றதுன்னு நினைச்சு விட்டுட்டேன்:-(

ஸ்ரீமதி said...

@ " உழவன் " " Uzhavan "
//நல்லாதான் எத்தனிச்சிருக்கீங்க :-)//

அப்படியா?? நன்றி அண்ணா :)))

@ தமிழன்-கறுப்பி...
//சென்ஷி said...
\\
//இன்றுவரை கைக்கூடவில்லை
ரசிக்கத் தெரியாதவனின்
கவிதை ரசனை....//

மிக சிக்கலான விசயத்தின் ஆரம்ப பொறி இதுதான்.

ஒருத்தவங்களைப்பத்தின அளவீடுகளை நமக்குள்ள குறிச்சுக்கிட்டு இல்லைன்னா நம்மோட ஒப்பிட்டுத்தான் பேசத்தொடங்குறோம்.

என்னளவுல இந்த கவிதை ரொம்ப நல்லா வந்திருக்குது.

வாழ்த்துக்கள்
\\

இந்த எளக்கியவாதிங்க தொல்லை தாங்க முடியலைப்பா... ;)

நல்லாருக்கு ஸ்ரீமதி..!//

நன்றி அண்ணா :)))


@ இனியவள் புனிதா
////புனிதா அக்கா ஏன் இந்த கொலைவெறி?? உங்க பதிவுக்கான கமெண்ட்ட விட மீ த 10th பெரிசா இருக்கு... :)) //

ஹ்ம்ம்..நானும் இந்த லிஸ்டில் இருப்பதை எப்படி வெளியே சொல்றதுன்னு நினைச்சு விட்டுட்டேன்:-(//

எந்த லிஸ்ட்ல?? கவிதை ரசிக்க தெரியாத லிஸ்ட்லயா?? இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஆமா.. :)))))))

தமிழ் விரும்பி said...

காதல் குஷ்டமப்பா..!!
சாரி கஷ்டமப்பா....!!!

பழூர் கார்த்தி said...

:-))

ஸ்ரீமதி said...

@ தமிழ் விரும்பி
//காதல் குஷ்டமப்பா..!!
சாரி கஷ்டமப்பா....!!!//

இதுல காதல் எங்க வந்தது?? :))

@ பழூர் கார்த்தி
//:-))//

:)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது