சந்திப்புகள்


கலைந்துவிட்ட கேசத்தை
சரி செய்ய சொல்லியிருக்கலாம்...
நெற்றி திலகத்தை
நேர்ப்படுத்த மொழிந்திருக்கலாம்...
தொலைந்துவிட்ட குங்குமத்திற்கான
காரணம் வினவியிருக்கலாம்....
வளர்ந்துவிட்ட நகங்களை சீர்ப்படுத்த
வழிமுறைகள் பகன்றிருக்கலாம்....
அங்கு,
அவளின் மடியில் அழும்
அந்த குழந்தையின் உச்சி முகர்ந்து
வேடிக்கைக்காட்டியிருக்கலாம்...
என் துறையினை சார்ந்து
எங்கோ ஓர் மூலையில்
இருக்கும் காதலனிடம்
கேட்ட பெண்ணின்
சந்தேகம் தீர்த்திருக்கலாம்...
முன்பின் முகமறியாத எங்களின்,
எதிர்ப்பாராமல் ஒன்றாக அமைந்துவிட
இந்த பயணத்தில்,
எதுவும் செய்யயியலவில்லை என்னால்...
எல்லாவற்றிற்குமாய்
ஒரு சிறு புன்னகையும்,
இந்த கவிதையும் தவிர...


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வணக்கம்..! உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்... 'சந்திப்புகள்' என்னுடைய 100-வது பதிவு. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு (எப்படி இவ்ளோ பதிவு போட்டேன்னு இல்ல ;-)) இவ்ளோ சீக்கிரம் எப்படி உங்க மனசுல எல்லாம் இடம் பிடிச்சேன்னு தான்... சாதாரணமா வலையுலகத்துக்கு வரவங்க எல்லாம் சொல்ற டையலாக் தான்... "நான் அதிகம் யார்கூடயும் பேசமாட்டேன்... இங்க வந்ததுக்கு அப்பறம் தான் பேச கத்துக்கிட்டேன்"-னு.. ஆனா நான் அப்படி இல்லைன்னாலும் நல்லா பேச, பழக இங்க வந்துதான் கத்துகிட்டேன். அந்த பெருமை எல்லாம் உங்களையே சாரும். ரொம்ப சீக்கிரம் பல நல்ல உள்ளங்கள சம்பாதிச்சிருக்கேன்.. :-)) ம்ம்ம் அப்பறம் இவ்ளோ நாள் நான் போட்ட மொக்கை எல்லாம் தாங்கிகிட்டு இவளும் ரொம்ப நல்லவன்னு நம்பி வந்து படிச்சிட்டு கமெண்ட்டிட்டு போனவங்களும், முதல் முதல்ல நான் தமிழ்மணத்துல சேர ரொம்ப உதவியா இருந்த நிஜம்ஸ் அண்ணா, தமிழ்ப்ரியன் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா அவர்களுக்கும் (இப்போல்லாம் ஏன்னு தெரியல நிஜம்ஸ் அண்ணா வெறும் ஸ்மைலியோட போயிடுறார்.. :-(( ) இவ்ளோ நாள் நான் எழுத ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் என் நன்றி! நன்றி! நன்றி!

வெறும் நன்றி மட்டும் சொல்லி உங்களை எல்லாம் பிரிக்க விரும்பல.. சோ கூடிய சீக்கிரம் உங்களுக்கெல்லாம் ட்ரீட் வெக்கிறேன்.. இடம், மெனு, நாள் எல்லாம் நாந்தான் முடிவு பண்ணுவேன் சொல்லிட்டேன்... ;-))) ஒவ்வொருத்தர் பேரோடவும் நன்றி சொல்லனும்ன்னு தான் ஆசை... அப்பறம் பதிவு பெரிசா போச்சுன்னு அடிக்க வந்துடுவீங்க.. :-(( அதனால இதோட இந்த நன்றி நவிலல் படலத்த முடிச்சிக்கிறேன்... பை..! :-)


-அன்புடன்,
ஸ்ரீமதி.

83 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

இனியவள் புனிதா said...

1st

இனியவள் புனிதா said...

நீங்க ரொம்ப நல்லவங்க...உடன் பயணித்த சக பயணிக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ஆனாலும் எடுத்துக் கொண்ட களம் நன்று :-)

பிரேம்குமார் said...

அதையெல்லாம் செய்யுறத விட இந்த கவிதையை எப்படி எழுதலாம்னு தான் உங்களுக்குள்ள வலைப்பூ எழுத்தாளர் யோசிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க ?!! :)

கார்க்கி said...

100வது பதிவா?

வாவ்..

கவிதை ரொம்ம்ம்ம்ப அழகு..

என்னைப் போலவே..

Subash said...

மிக அருமை

அதிகமாக 4 / 5 வரி வரியாக எழுதுவீங்கலியா. அப்ப எல்லா லைனும் மனதில் பதியறமாதிரி இருக்கும். இப்படி ஒரயடியாக மூச்சுப்பிடித்து படிப்பதில் என்னமோ மாதிரி இருக்கு. கொஞ்சம் கவனிக்கலாமே!!!

இனியவள் புனிதா said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்..

தங்களின் கரையோர கனவுகளின் சக பயணியாய் புனிதா :-)

தமிழ் பிரியன் said...

தங்கச்ச்ச்ச்ச்ச்ச்ச்சீ... வாழ்த்துக்கள்ம்மா... :)
சதமடித்த ஸ்ரீமதி என்று இனி அழைக்கப்படுவாய்!

தமிழ் பிரியன் said...

இடம், நாள் எல்லாம் நீங்க முடிவு பண்ணுங்க.. ஹிஹிஹிஹி மெனு மட்டும் நாங்க சொல்றோம்.. ;-))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அட.. தங்கச்சி சென்சுரி போட்டுட்டியா? வாழ்த்துக்கள் கண்ணா.

ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தா தொடர்ந்து நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடக்கும்னு பெரியவங்க சொல்வாங்க. நிஜம் தான் போல.. :))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//சோ கூடிய சீக்கிரம் உங்களுக்கெல்லாம் ட்ரீட் வெக்கிறேன்..//
கமெண்ட் போடறது நாங்க. நீ எதுக்கு சோ வுக்கு ட்ரீட் வைக்கனும்? :(

//இடம், மெனு, நாள் எல்லாம் நாந்தான் முடிவு பண்ணுவேன் சொல்லிட்டேன்... ;-)))//

இதை எங்க கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம், சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லு. :))

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் தோழி. நல்ல கவிதை..

கோபிநாத் said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;-)

அருமையான கவிதை ;)

புதியவன் said...

100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...

புதியவன் said...

//முன்பின் முகமறியாத எங்களின்,
எதிர்ப்பாராமல் ஒன்றாக அமைந்துவிட
இந்த பயணத்தில்,
எதுவும் செய்யயியலவில்லை என்னால்...
எல்லாவற்றிற்குமாய்
ஒரு சிறு புன்னகையும்,
இந்த கவிதையும் தவிர...//

நல்லா இருக்கு இந்த வரிகள்...

புதியவன் said...

//வெறும் நன்றி மட்டும் சொல்லி உங்களை எல்லாம் பிரிக்க விரும்பல.. சோ கூடிய சீக்கிரம் உங்களுக்கெல்லாம் ட்ரீட் வெக்கிறேன்.. இடம், மெனு, நாள் எல்லாம் நாந்தான் முடிவு பண்ணுவேன் சொல்லிட்டேன்... ;-))) //

என்னவோ சொல்ல வந்து சொல்லாதது மாதிரி
தோணுது...எதுவாக இருந்தாலும் வாழ்த்துக்கள்
ஸ்ரீமதி...

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை நல்லா இருக்கு

100க்கு வாழ்த்துக்கள்

ட்ரீட் 100க்காகவா....? இல்ல................................

ஆயில்யன் said...

மிக்க மகிழ்ச்சியா இருக்கும்மா !

தொடர்ந்து பதிவுகளில் முன்னிலை வகிக்க வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

//இடம், மெனு, நாள் எல்லாம் நாந்தான் முடிவு பண்ணுவேன் சொல்லிட்டேன்... ;-))) //


ரொம்ப சந்தோஷம்!

வாழ்த்துக்கள்

இது டீரிட்க்கு

அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் :))

sakthi said...

100 vathu pathivuku valthukkal

arumai arumai mikka arumai

narsim said...

100க்கு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி.

Karthik said...

a big BIG congtras for 100.

poem is terrific. like hitting a six for a century.

sehwag style well, srimathi style!

Kanna said...

100வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்....

// Subash said...
மிக அருமை

அதிகமாக 4 / 5 வரி வரியாக எழுதுவீங்கலியா. அப்ப எல்லா லைனும் மனதில் பதியறமாதிரி இருக்கும். இப்படி ஒரயடியாக மூச்சுப்பிடித்து படிப்பதில் என்னமோ மாதிரி இருக்கு. கொஞ்சம் கவனிக்கலாமே!!! //

வழிமொழிகிறேன்..

logu.. said...

1000 adikka vazhthugal sree..

நான் ஆதவன் said...

100ஆஆஆஆஆஆஆ இனி அக்கான்னு தான் கூப்பிடனும்.

வாழ்த்துகள்

கவிதை வழக்கம்போல் அழகு

gayathri said...

100வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்....

எம்.எம்.அப்துல்லா said...

// ம்ம்ம் அப்பறம் இவ்ளோ நாள் நான் போட்ட மொக்கை எல்லாம் தாங்கிகிட்டு //


இதே இப்பிடின்னா என்னையெல்லாம் எந்த லிஸ்டில் சேக்குறது??


வாழ்த்துகள் சகோதரி.

(அட டிரீட் தேதி இதுவரைக்கும் எனக்கு மட்டும்தான் சொல்லி இருக்கியா??)

:))

G3 said...

100-vadhu padhivukku vaazhthukkal :))

//எல்லாவற்றிற்குமாய்
ஒரு சிறு புன்னகையும்,//

:)))))))))))))))))))))))))

Kavithai ellam ippodhaikku nammala ezhudha mudiyaadhu.. so punnagai mattum ungalukku tharren :D

ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் ஸ்ரீமதி!
தொடரட்டும் உங்கள்
தமிழ்ப் பணி!

நாகை சிவா said...

சதம் போட்டாச்சா

வாழ்த்துக்கள்!

சீக்கிரம் டீரிட் தேதி சொல்லிடுங்க... நோட் பண்ணி வைக்கனும். ;)))

//முதல் முதல்ல நான் தமிழ்மணத்துல சேர ரொம்ப உதவியா இருந்த நிஜம்ஸ் அண்ணா, தமிழ்ப்ரியன் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா அவர்களுக்கும் //

ஆயில்யா! நீயும் அந்த கூட்டத்தில் ஒருத்தனா.. துரோகீஈஈஈஈஈஇ ஒரு கூட்டமே உம்மை நோக்கி வர போகுது பாரு!

TKB காந்தி said...

100 பதிவுகள், Wow! வாழ்த்துக்கள் ஸ்ரீ. புதுசு புதுசா கவிதைகள்ல கலக்குறீங்க. இந்த கவிதை அட்டகாசம்.

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//நீங்க ரொம்ப நல்லவங்க...//

பாத்துக்குங்கப்பா நானும் நல்லவதான்.. நானும் நல்லவதான்.. ;)) நன்றி அக்கா :)))

@ பிரேம்குமார்

வலைப்பூ எழுத்தாளரா?? ஹா ஹா ஹா.. :)) நன்றி அண்ணா :))

@ கார்க்கி
//கவிதை ரொம்ம்ம்ம்ப அழகு..

என்னைப் போலவே..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. ;)) நன்றி :)))

@ Subash

கொஞ்சம் ஸ்டைல் மாத்தி பார்க்கலாம்ன்னு நினைச்சேன்.. நல்லா இல்லையா?? ஓகே அண்ணா அப்படியும் எழுதறேன்.. :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா

நன்றி அக்கா :))

@ தமிழ் பிரியன்

மெனு மட்டும் தானே?? ஓகே அண்ணா.. :)))நன்றி :))

@ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
//கமெண்ட் போடறது நாங்க. நீ எதுக்கு சோ வுக்கு ட்ரீட் வைக்கனும்? :(//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடங்கவேமாட்டியா அண்ணா நீ?? சீக்கிரமேவ விவாக பிராப்திரஸ்து.. ;))

@ பரிசல்காரன்

நன்றி அண்ணா :)))

@ கோபிநாத்

நன்றிஸ் :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்

நன்றி புதியவன் :))))

@ அமிர்தவர்ஷினி அம்மா

ட்ரீட் எல்லாத்துக்கும் தான் ;))

@ ஆயில்யன்

நன்றி அண்ணா :))

@ sakthi

நன்றி சக்தி அக்கா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் :))

@ narsim

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ Karthik
//poem is terrific. like hitting a six for a century.

sehwag style well, srimathi style!//

Hahaha :)) Thank you Karthik.. :))

@ Kanna

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))) கண்டிப்பா அது மாதிரியும் எழுதறேன்.. :)))

@ logu..

நன்றி லோகநாதன் :)))

@ நான் ஆதவன்
//100ஆஆஆஆஆஆஆ இனி அக்கான்னு தான் கூப்பிடனும்.//

அண்ணா பதிவு எண்ணிக்கை தான் நூறு ;))))

ஸ்ரீமதி said...

@ gayathri

நன்றி காயத்ரி :)))

@ எம்.எம்.அப்துல்லா

உங்களுதெல்லாம் காவியம் அண்ணா :)))

@ G3

Kavithai edhukku akka... unga smile pothum.. ;))))))

@ ஜோதிபாரதி

மிக்க நன்றி அண்ணா :)))

@ நாகை சிவா
//ஆயில்யா! நீயும் அந்த கூட்டத்தில் ஒருத்தனா.. //

ஆமா அவர் தான் அண்ணா முக்கிய காரணம் ;))))

@ TKB காந்தி
//100 பதிவுகள், Wow! வாழ்த்துக்கள் ஸ்ரீ. புதுசு புதுசா கவிதைகள்ல கலக்குறீங்க. இந்த கவிதை அட்டகாசம்.//

நன்றி காந்தி உங்க பிஸி schedule-லையும் எனக்கு கமெண்ட்டினதுக்கு.. :)) மற்றும் உங்க புகைப்படங்களுக்கும் நன்றி.. :)))

ஆயில்யன் said...

////முதல் முதல்ல நான் தமிழ்மணத்துல சேர ரொம்ப உதவியா இருந்த நிஜம்ஸ் அண்ணா, தமிழ்ப்ரியன் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா அவர்களுக்கும் //

ஆயில்யா! நீயும் அந்த கூட்டத்தில் ஒருத்தனா.. துரோகீஈஈஈஈஈஇ ஒரு கூட்டமே உம்மை நோக்கி வர போகுது பாரு!//


தெய்வமே....!

நான் இன்னா டப்பு செஞ்சேன்????

அப்பாவி முகத்துடன்
ஆயில்யன்

ஆயில்யன் said...

//(இப்போல்லாம் ஏன்னு தெரியல நிஜம்ஸ் அண்ணா வெறும் ஸ்மைலியோட போயிடுறார்.. :-(( )/

ஃபுல் கண்ட்ரோல் @ நிஜம்ஸ் தங்க்ஸுக்கிட்ட இருக்கு!

ஏதோ வீட்ல செய்யமுடியாத விசயங்களை வெளியில செய்யுறாரேன்னு நினைச்சு சந்தோஷப்படும்மா!
:))))))

மோனிபுவன் அம்மா said...

உங்கள் பதிவை நான் இப்ப தான்
படித்தேன்

100வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்

உங்கள கவிதைகள் மிகவும் அருமை.

மோனிபுவன் அம்மா said...

உங்களைப் பற்றி நான் அமித்து அம்மா மூலம் அறிந்தேன்.

வாழ்த்துக்கள் சகோதரியே
வாழ்த்துக்கள் சகோதரியே
வாழ்த்துக்கள் சகோதரியே.........

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாவ்.. கவிதை.! அதற்காக நூறு வாழ்த்துகள்.!

சென்ஷி said...

வாழ்த்துக்கள் :‍))

பதிவுக்ளில் மேன்மேலும் சதமடிக்க என் ப்ரார்த்தனைகள்!!

dharshini said...

// 100வது பதிவா?

வாவ்..

கவிதை ரொம்ம்ம்ம்ப அழகு..

என்னைப் போலவே..//
அண்ணா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல.. :)
பரவாயில்லை sriஇதுக்கெல்லாம் வருத்தப்படாத.

நூறாவது பதிவுக்கு எனது 100 வாழ்த்துக்கள்.

Muthusamy said...

Great go ahead

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி.. :)

Divyapriya said...

100th post??? கலக்குமா...வாழ்த்துக்கள்...100 வது பதிவுக்கு சீக்கரமே வந்துட்ட மாதிரி இருக்கு...பெரிய ஆள் ஆயிட்டீங்க :)

anbudan vaalu said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ....
அப்படியே டபுள் சென்சுரியும் சீக்கிரம் போட்ருங்க.... :)))

நாணல் said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ... :))
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ...:))

ஜி said...

Rightu!!

Vaazththukkal.. Treatukkuthaan ;))

Saravana Kumar MSK said...

49 ;)

Saravana Kumar MSK said...

Me the 50 ;)

Saravana Kumar MSK said...

50 க்கு வாழ்த்துக்கள்..

(நான் எனக்கு சொன்னேன்..)

Saravana Kumar MSK said...

கவிதை செமையா இருக்கு ஸ்ரீ..

Saravana Kumar MSK said...

நூறுக்கு வாழ்த்துக்கள்.

(இது உனக்கு தான்..)

Saravana Kumar MSK said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//சோ கூடிய சீக்கிரம் உங்களுக்கெல்லாம் ட்ரீட் வெக்கிறேன்..//

கமெண்ட் போடறது நாங்க. நீ எதுக்கு சோ வுக்கு ட்ரீட் வைக்கனும்? :(//

அதானே.. "சோ" வுக்கு எதுக்கு ட்ரீட் வைக்கனும்?

Saravana Kumar MSK said...

//Divyapriya said...
100th post??? கலக்குமா...வாழ்த்துக்கள்...100 வது பதிவுக்கு சீக்கரமே வந்துட்ட மாதிரி இருக்கு...பெரிய ஆள் ஆயிட்டீங்க :)//

ரொம்ப பெரிய ஆளு.. 100+ followers இருக்கிற, ஒரே பெண் பதிவர் எனக்கு தெரிந்து ஸ்ரீமதிதான்..

great sri..

அபுஅஃப்ஸர் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

Maddy said...

ஸ்ரீமதி
தன் பெருமை தானறியாதவள்..

இந்த வலை உலகம் உன் பெருமையே கொஞ்சமாவது உனக்கு உணர்த்தி இருக்குமென நம்புகிறேன். எப்பொழுதும் உன் எழுத்தை எழுதிக்கொண்டே இரு.
கவிதைகள் ஒரு தொகுப்பாக புத்தக வடிவில் வெளிவர வாழ்த்துக்கள்.

இடம், மெனு, நாள் எல்லாம் நாந்தான் முடிவு பண்ணுவேன் சொல்லிட்டேன்... ;-)))
......அப்படியே எந்த ஏர்லைன்ஸ்-ல டிக்கெட் எனக்கு எடுக்கிற உத்தேசம்ன்னு தெரிஞ்சிக்கவா?

ஆயில்யன் said...

// Maddy said...
ஸ்ரீமதி

இடம், மெனு, நாள் எல்லாம் நாந்தான் முடிவு பண்ணுவேன் சொல்லிட்டேன்... ;-)))
......அப்படியே எந்த ஏர்லைன்ஸ்-ல டிக்கெட் எனக்கு எடுக்கிற உத்தேசம்ன்னு தெரிஞ்சிக்கவா?//


அப்ப.. எனக்கும் டிக்கெட் எடுத்து அனுப்பணும்


இல்லாட்டி நான் அழுதுடுவேன்!

வியா (Viyaa) said...

60 : )

வியா (Viyaa) said...

valthukkal..
kavithai super

ஷீ-நிசி said...

வாழ்த்துக்கள்!! 100 பதிவுக்கு..

ட்ரீட்டா.... ஹைய்யா நான் ரெடி!!! :)

சென்ஷி said...

63?!

அருள் said...

மிக்க மகிழ்ச்சியா இருக்கு
100வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்....

அருள் said...

கவிதை அழகா வந்திருக்கு ஸ்ரீ
இயல்பான உணர்வுக்கு வர்ணம் பூசிய விதம் அழகு...

admin said...

nice posts,

check my blog too

http://nakku-mukka.blogspot.com/

Ramya Ramani said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி

Ramya Ramani said...

Template is Cool :)

இனியவள் புனிதா said...

69th

இனியவள் புனிதா said...

70!!

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஏதோ வீட்ல செய்யமுடியாத விசயங்களை வெளியில செய்யுறாரேன்னு நினைச்சு சந்தோஷப்படும்மா!//

சரி அண்ணா :)))

@ மோனிபுவன் அம்மா
//உங்களைப் பற்றி நான் அமித்து அம்மா மூலம் அறிந்தேன்.

வாழ்த்துக்கள் சகோதரியே//

நன்றி அக்கா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் :)))

@ ஆதிமூலகிருஷ்ணன்
//வாவ்.. கவிதை.! அதற்காக நூறு வாழ்த்துகள்.!//

நன்றி அண்ணா :)))

@ சென்ஷி
//வாழ்த்துக்கள் :‍))

பதிவுக்ளில் மேன்மேலும் சதமடிக்க என் ப்ரார்த்தனைகள்!!//

நன்றி அண்ணா :))))

@ dharshini
//பரவாயில்லை sriஇதுக்கெல்லாம் வருத்தப்படாத.//

சரி அக்கா நீங்க சொல்றதால வருத்தப்படல.. ;)) வாழ்த்துகளுக்கு நன்றி தர்ஷினி :))))

@ Muthusamy
//Great go ahead//

Thank you anna.. :))

ஸ்ரீமதி said...

@ முத்துலெட்சுமி-கயல்விழி
//வாழ்த்துக்கள் ஸ்ரீமதி.. :)//

நன்றி அக்கா :)))

@ Divyapriya
//100th post??? கலக்குமா...வாழ்த்துக்கள்...100 வது பதிவுக்கு சீக்கரமே வந்துட்ட மாதிரி இருக்கு...பெரிய ஆள் ஆயிட்டீங்க :)//

பெரிய ஆள் நான் இல்ல அக்கா நீங்க தான்.. :)) இவ்ளோ மொக்கையையும் தாங்கிக்கறீங்களே அதனால சொன்னேன் ;))

@ anbudan vaalu
//வாழ்த்துக்கள் ஸ்ரீ....
அப்படியே டபுள் சென்சுரியும் சீக்கிரம் போட்ருங்க.... :)))//

டபுள் செஞ்சுரி தானே?? போட்டுட்டா போச்சு.. :)) நன்றி வாலு :))

@ நாணல்
//வாழ்த்துக்கள் ஸ்ரீ... :))
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ...:))//

நன்றி அக்கா :))

@ ஜி
//Rightu!!

Vaazththukkal.. Treatukkuthaan ;))//

நன்றி அண்ணா :))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கவிதை செமையா இருக்கு ஸ்ரீ..//

நன்றி சரவணா.. இவ்ளோ கலவரத்துலையும் கவிதைய படிச்சி வாழ்த்தினதுக்கு.. :)))

//நூறுக்கு வாழ்த்துக்கள்.

(இது உனக்கு தான்..)//

நன்றி சரவணா :))

//அதானே.. "சோ" வுக்கு எதுக்கு ட்ரீட் வைக்கனும்?//

இவ்ளோ பேருக்கு கொடுக்கும் போது, பாவம் அவர்.. ஒரு பெரியவர் வந்து சாப்டுட்டு போகட்டுமே...

//ரொம்ப பெரிய ஆளு.. 100+ followers இருக்கிற, ஒரே பெண் பதிவர் எனக்கு தெரிந்து ஸ்ரீமதிதான்..

great sri..//

நன்றி சரவணா :)))

@ அபுஅஃப்ஸர்
//100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி//

நன்றி அண்ணா வாழ்த்துக்கு :)))

@ Maddy
//ஸ்ரீமதி
தன் பெருமை தானறியாதவள்..

இந்த வலை உலகம் உன் பெருமையே கொஞ்சமாவது உனக்கு உணர்த்தி இருக்குமென நம்புகிறேன். எப்பொழுதும் உன் எழுத்தை எழுதிக்கொண்டே இரு.
கவிதைகள் ஒரு தொகுப்பாக புத்தக வடிவில் வெளிவர வாழ்த்துக்கள்.//

:))))நன்றி அண்ணா.. இத புத்தகமா வேற போடவா?? சரிதான் ;)))

//......அப்படியே எந்த ஏர்லைன்ஸ்-ல டிக்கெட் எனக்கு எடுக்கிற உத்தேசம்ன்னு தெரிஞ்சிக்கவா?//

அதெல்லாம் முடியாது... இப்போ இருந்தே நடக்க ஆரம்பிச்சிடுங்க அண்ணா கரெக்ட் தேதிக்கு வந்துடலாம் இங்க.. ;))))))))))

@ ஆயில்யன்
//அப்ப.. எனக்கும் டிக்கெட் எடுத்து அனுப்பணும்
இல்லாட்டி நான் அழுதுடுவேன்!//

அச்சச்சோ மேடி அண்ணா தனியா தான் நடந்து வருவார்.. அவருக்கு துணையா நீங்களும் வந்துடுங்க அண்ணா.. ;))))

ஸ்ரீமதி said...

@ வியா (Viyaa)
//valthukkal..
kavithai super//

நன்றி வியா :)))

@ ஷீ-நிசி
//வாழ்த்துக்கள்!! 100 பதிவுக்கு..

ட்ரீட்டா.... ஹைய்யா நான் ரெடி!!! :)//

நன்றி ஷீ-நிசி :))

@ சென்ஷி
//63?!//

இதென்ன அண்ணா சின்னப்புள்ளத்தனமா விளையாட்டு?? ;))

@ அருள்
//மிக்க மகிழ்ச்சியா இருக்கு
100வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்....//

வாழ்த்துகளுக்கு நன்றி அருள் :))

//கவிதை அழகா வந்திருக்கு ஸ்ரீ
இயல்பான உணர்வுக்கு வர்ணம் பூசிய விதம் அழகு...//

நன்றி அருள் :)) எங்க ரொம்ப நாளா ஆள காணோம்?? ரொம்ப பிஸியா??

@ admin
//nice posts,//

Thank you admin :))

@ Ramya Ramani
//வாழ்த்துக்கள் ஸ்ரீமதி//

நன்றி ரம்யா :)))

//Template is Cool :)//

Thank you :))

@ இனியவள் புனிதா
//69th

70!!//

நல்லாருக்கு அக்கா ;))))))))

தமிழன்-கறுப்பி... said...

75

தமிழன்-கறுப்பி... said...

76

தமிழன்-கறுப்பி... said...

77

தமிழன்-கறுப்பி... said...

78

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப வேகமா அடுத்த கட்ட கவிதைகளுக்கு வந்திட்டிங்க...

தமிழன்-கறுப்பி... said...

இப்படி,
நிறைய பேச இருக்கு ஆனா இல்லை :)

நிஜமா நல்லவன் said...

ஆஹா....100-வது பதிவா......தாமதமான வாழ்த்துக்கள்!

ஸ்ரீமதி said...

நன்றி தமிழன்-கறுப்பி... :))

நன்றி நிஜமா நல்லவன் அண்ணா :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது