வேலிப் பூக்கள்

(புகைப்படம்: TKB காந்தி)

சாலை இருமருங்கிலும்
கிளை விரித்து பரவியிருந்தது..
ஆரஞ்சும், சிவப்பும் கலந்திருக்க
அந்திவேளை ஞாயிறை ஞாபகப்படுத்தியது...
பொம்மை இழந்து
கண்மை கலைய
அம்மா பின் சென்ற பிஞ்சுக்கும்,
காதல் இழந்து
தனியாய் தவிக்கும் அவளுக்கும்,
மல்லிகை மட்டுமே
கூந்தலில் சூடும்
வழக்கம் கொண்ட என் அம்மாவுக்கும்,
கணவன் இழந்த
அடுத்த வீட்டு பெண்ணுக்கும் என,
எல்லாம் ஓய்ந்துவிட்ட
இந்த வேளையில் பூத்திருக்க வேண்டாம்
சாலையோர வேலிப் பூக்கள்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

29 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

\\ஆரஞ்சும், சிவப்பும் கலந்திருக்க
அந்திவேளை ஞாயிறை ஞாபகப்படுத்தியது...\\

வெறும் அந்தி வேளை என்று சொல்லாமல்

ஞாயிறை சேர்த்து சொல்லி சந்தோஷத்தின் நிலை


(சரியாத்தானே சொல்லியிருக்கேன்)

புதியவன் said...

//பொம்மை இழந்து
கண்மை களைய
அம்மா பின் சென்ற பிஞ்சுக்கும்,
காதல் இழந்து
தனியாய் தவிக்கும் அவளுக்கும்,//

உவமை அருமை...

புதியவன் said...

//எல்லாம் ஓய்ந்துவிட்ட
இந்த வேளையில் பூத்திருக்க வேண்டாம்
சாலையோர வேலிப் பூக்கள்...//

பூக்களிலும் சோகம்...ம்...நல்லா இருக்கு...

அனுஜன்யா said...

நல்லா வந்திருக்கு ஸ்ரீ. 'அந்திவேளை ஞாயிறு' - :))

அனுஜன்யா

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

சென்ஷி said...

:-))))

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு.

//எல்லாம் ஓய்ந்துவிட்ட
இந்த வேளையில்//

இந்த வரிகள் தேவையில்லை என்பது என் எண்ணம்.

நீங்க “"வேலிப் பூக்கள்". நான் “
"அண்ணாநகர் அவென்யூ பூக்கள்” எழுதியிருக்கேன் படிச்சீங்களா?

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது
வாழ்த்துக்கள்..........
சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடலை நினைவுபடுத்துவதாகத் தங்கள் படைப்பு உள்ளது.

242. முல்லையும் பூத்தியோ?
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?


என்பது அப்பாடல்.
இதன் பொருள்
எங்கள் அரசன் இறந்து விட்டான்.இந்த நேரத்தில் முல்லை மலரே நீ ஏன் மலர்ந்தாய் ?

உன்னை இளைய சிறுவர்கள் பறித்து விளையாடமாட்டார்கள்,மகளிர் அணியமாட்டார்கள்,போர் வீரர்களும் அணியமாட்டார்கள் .....
ஏ முல்லையே ஏன் மலர்ந்தாய் என தன் அரசனின் இறப்புக்காக கையற்றுப் புலம்புவதாக அமைவது அப்பாடல் ...

பதிவுக்கு வாழ்த்துக்கள்

ரிஷி (கடைசி பக்கம்) said...

:-))

ஜோதிபாரதி said...

Nantru Srimathi!

அபுஅஃப்ஸர் said...

நல்ல வரிகளின் சங்கமம்

வரிகல் ஏதார்த்தம்

ஆதிமூலகிருஷ்ணன் said...

சூப்பர்.!

(அது 'கண்மை கலைய' என்றிருக்கவேண்டுமோ?)

தமிழரசி said...

வாடா மலர் பற்றி கேட்டு இருக்க இங்கு சூடா மலராய் இக்கவிதை...வலை பூக்களுக்கு வாசம் வீசி எங்களை வாழ்த்து சொல்ல வரவைத்தது இந்த வலைப்பூவின் இக்கவிமலர்.....

gayathri said...

நல்லாயிருக்கு ஸ்ரீ.

ஆ.ஞானசேகரன் said...

:-))

Joe said...

ஜப்பானில் பூக்கும் சகுரா பூக்களைப் போல் உள்ளதே?

கவிதையும் அருமை.

Joe said...

Check out my post on Ceasefire in Srilanka.
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_16.html

dharshini said...

:)

கார்க்கி said...

:)))

ஷீ-நிசி said...

வேலிப்பூக்களின் மீது குற்றமில்லை.. சந்தர்ப்ப சூழ்நிலைகள் பூக்களை குற்றபடுத்துகின்றன!

நல்ல கவி! வாழ்த்துக்கள்!

தாரணி பிரியா said...

ஹேய் கலக்கிட்ட ஸ்ரீ.

இனியவள் புனிதா said...

நல்லாயிருக்கு ஸ்ரீ :-)

TKB காந்தி said...

//கிளை விரித்து பரவியிருந்தது..
ஆரஞ்சும், சிவப்பும் கலந்திருக்க
அந்திவேளை ஞாயிறை ஞாபகப்படுத்தியது...
//

அழகான வரிகள். இந்த பூக்கள் நிஜமானவொரு வேலியோர மரத்தில் பூத்ததுதான். உங்க கவிதையுன் இன்னும் அழகா தெரியுது.

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//வெறும் அந்தி வேளை என்று சொல்லாமல்

ஞாயிறை சேர்த்து சொல்லி சந்தோஷத்தின் நிலை
(சரியாத்தானே சொல்லியிருக்கேன்)//

சரியா தான் அண்ணா சொல்லிருக்கீங்க :))

@ புதியவன்
//உவமை அருமை...

பூக்களிலும் சோகம்...ம்...நல்லா இருக்கு...//

நன்றி புதியவன் :))

@ அனுஜன்யா
//நல்லா வந்திருக்கு ஸ்ரீ. 'அந்திவேளை ஞாயிறு' - :))

அனுஜன்யா//

நன்றி அண்ணா :))

@ கோபிநாத்
நல்லாயிருக்கு ;)

நன்றிஸ் :))

@ சென்ஷி
//:-))))//

:)))))))))))))

@ கே.ரவிஷங்கர்
//நல்லா இருக்கு.

//எல்லாம் ஓய்ந்துவிட்ட
இந்த வேளையில்//

இந்த வரிகள் தேவையில்லை என்பது என் எண்ணம்.

நீங்க “"வேலிப் பூக்கள்". நான் “
"அண்ணாநகர் அவென்யூ பூக்கள்” எழுதியிருக்கேன் படிச்சீங்களா?//

உங்க கவிதை படிச்சேன்.. நல்லா இருந்தது... :))) அந்த வரிகள் இல்லாமையும் நல்லா தான் இருக்கு... நன்றி அண்ணா கருத்திற்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ முனைவர்.இரா.குணசீலன்
//நன்றாகவுள்ளது
வாழ்த்துக்கள்..........
சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடலை நினைவுபடுத்துவதாகத் தங்கள் படைப்பு உள்ளது.//

முதல் வருகைக்கும் புறநானூறு பாடல் அறிமுகத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா :)))

@ ரிஷி (கடைசி பக்கம்)
//:-))//

:)))))))))))


@ ஜோதிபாரதி
Nantru Srimathi!

நன்றி அண்ணா :)))

@ அபுஅஃப்ஸர்
//நல்ல வரிகளின் சங்கமம்

வரிகல் ஏதார்த்தம்//

நன்றி அண்ணா :)))

@ ஆதிமூலகிருஷ்ணன்
//சூப்பர்.!

(அது 'கண்மை கலைய' என்றிருக்கவேண்டுமோ?)//

மாற்றிவிட்டேன் நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ தமிழரசி
//வாடா மலர் பற்றி கேட்டு இருக்க இங்கு சூடா மலராய் இக்கவிதை...வலை பூக்களுக்கு வாசம் வீசி எங்களை வாழ்த்து சொல்ல வரவைத்தது இந்த வலைப்பூவின் இக்கவிமலர்.....//

மிக்க நன்றி தமிழரசி முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் :))

@ gayathri
//நல்லாயிருக்கு ஸ்ரீ.//

Thanks Gayathri :))

@ ஆ.ஞானசேகரன்
//:-))//

:))))))))

@ Joe
//ஜப்பானில் பூக்கும் சகுரா பூக்களைப் போல் உள்ளதே?

கவிதையும் அருமை.//

புகைப்படம் TKB காந்தி எடுத்தார்..:)) அவர்கிட்ட தான் கேட்கணும்.. ஆனா அவர் இருப்பது ஜப்பானில் இல்ல.. ;)))

@ dharshini
//:)//

:)))))))

@ கார்க்கி
//:)))//

:@

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
//வேலிப்பூக்களின் மீது குற்றமில்லை.. சந்தர்ப்ப சூழ்நிலைகள் பூக்களை குற்றபடுத்துகின்றன!

நல்ல கவி! வாழ்த்துக்கள்!//

உண்மை தான் ஷீ-நிசி.. :)) நன்றி வருகைக்கும், கருத்திற்கும் :))

@ தாரணி பிரியா
//ஹேய் கலக்கிட்ட ஸ்ரீ.//

நிஜமாவா?? ;)) நன்றி அக்கா :))

@ இனியவள் புனிதா
//நல்லாயிருக்கு ஸ்ரீ :-)//

நன்றி அக்கா :))

@ TKB காந்தி
////கிளை விரித்து பரவியிருந்தது..
ஆரஞ்சும், சிவப்பும் கலந்திருக்க
அந்திவேளை ஞாயிறை ஞாபகப்படுத்தியது...//

அழகான வரிகள். இந்த பூக்கள் நிஜமானவொரு வேலியோர மரத்தில் பூத்ததுதான். உங்க கவிதையுன் இன்னும் அழகா தெரியுது.//

நன்றி காந்தி :))))

kavi said...

ayooda yennama varthaigal azha meaning oda kotturenga.... mela irunthu " velip pookkal"
vara than padichen. ayooda varikku vari piramichu poiten. wow wonderful

ஸ்ரீமதி said...

@ kavi
//ayooda yennama varthaigal azha meaning oda kotturenga.... mela irunthu " velip pookkal"
vara than padichen. ayooda varikku vari piramichu poiten. wow wonderful//

Thanks Kavi.. :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது