காதல் தோய்ந்து


(புகைப்பட உதவி: TKB காந்தி)

தனித்து நின்ற தனிமையை
எரித்துவிட்டு போனது
உன் பிரிவு;
சாம்பல் மட்டும்
சாயம் போகா
உன் நினைவுகளாக
என்னில்.....

போட்டதும் கலைந்த
படுக்கையும்,
கேட்டதும் கிடைக்கும்
முத்தங்களும்,
சுவாரஸ்யமற்றதாக்கி விடுகின்றன
இரவுகளை....

உன்னை நினைத்து
உறங்கிவிட்ட இரவுகளில்
கவிதைகளெதுவும் கைவரவில்லை...
மைதோய்ந்த காகிதங்களும்,
கொஞ்சம் மையும்
மட்டும் கோலமிட்டிருந்தது,
உன் காதலை
என்னைச் சுற்றி....

தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்
பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்
வளர்த்துவிட்டிருந்தது
பிரிந்துவிட்ட நம் காதலின்
காயத்தை....

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வேறு

நள்ளிரவு நேரத்தில்
கைப்பேசி வெளிச்சத்தில்
கைவலிக்க எழுதிய
நலம் குறித்த
அம்மாவுக்கான கடிதத்தை
கிழித்தெறிகிறேன்
அறைத்தோழியின்
"சுகந்தன்னே?"-வில்...


காடு, மலைகளையும்
காட்டருவிகளையும்
இன்னப்பிற
இயற்கை நிகழ்வுகளையும்
நட்சத்திர, வெண்ணிலவுகளையும்
ரசிக்க முடிந்தது
மின்சாரம் தடைபடாத
முழு இரவின்
கனவில்....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

29 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

\\தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்
பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்
வளர்த்துவிட்டிருந்தது
பிரிந்துவிட்ட நம் காதலின்
காயத்தை....\\

கற்பனைக்காக்த்தானே

குடுகுடுப்பை said...

கனவு காண கரண்டு வேணுமா?

கார்க்கி said...

மீண்டும் பிரிவா??????????????????

//அரைத்தோழியி//

அது அறைத்தோழி..

புதியவன் said...

//போட்டதும் கலைந்த
படுக்கையும்,
கேட்டதும் கிடைக்கும்
முத்தங்களும்,
சுவாரஸ்யமற்றதாக்கி விடுகின்றன
இரவுகளை....//

அருமையான வரிகள்...எதிர்ப்பு இல்லாமல்
கேட்ட உடன் எதுவும் கிடைத்துவிட்டால்
சுவாரஸ்யம் குறைவாகத்தான் இருக்கும்...

புதியவன் said...

//தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்
பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்
வளர்த்துவிட்டிருந்தது
பிரிந்துவிட்ட நம் காதலின்
காயத்தை....//

ம்...அழகான சோகம்...

புதியவன் said...

//மின்சாரம் தடைபடாத
முழு இரவின்
கனவில்....//

ஹா...ரசித்தேன்...

அபுஅஃப்ஸர் said...

வரிகள் அழகு

எதை சொல்வது எப்படி சொல்லி பாராட்டுவது...

ஒரு பிரிவு + சோகம் தெரிகிறது உங்கள் வரிகளில்

Poornima Saravana kumar said...

காடு, மலைகளையும்
காட்டருவிகளையும்
இன்னப்பிற
இயற்கை நிகழ்வுகளையும்
நட்சத்திர, வெண்ணிலவுகளையும்
ரசிக்க முடிந்தது
மின்சாரம் தடைபடாத
முழு இரவின்
கனவில்....

//

அழகு:))

தமிழ் பிரியன் said...

அழகு!

Karthik said...

me the 10. :)

//உன்னை நினைத்து
உறங்கிவிட்ட இரவுகளில்
கவிதைகளெதுவும் கைவரவில்லை...
மைதோய்ந்த காகிதங்களும்,
கொஞ்சம் மையும்
மட்டும் கோலமிட்டிருந்தது,
உன் காதலை
என்னைச் சுற்றி....

SOOOOPER STUFF. :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

Beautiful.! இருப்பினும் உங்கள் உச்சம் வேறு.

dharshini said...

\\தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்
பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்
வளர்த்துவிட்டிருந்தது
பிரிந்துவிட்ட நம் காதலின்
காயத்தை....\\

பிரிவை விளக்கிய விதம் அருமை...
முக்கியமா சாவிதான் அடிக்கடி தொலைந்துபோகும் அதை விட்டுட்டியேsri..

நாணல் said...

புதியவன் said...

//போட்டதும் கலைந்த
படுக்கையும்,
கேட்டதும் கிடைக்கும்
முத்தங்களும்,
சுவாரஸ்யமற்றதாக்கி விடுகின்றன
இரவுகளை....//

அருமையான வரிகள்...எதிர்ப்பு இல்லாமல்
கேட்ட உடன் எதுவும் கிடைத்துவிட்டால்
சுவாரஸ்யம் குறைவாகத்தான் இருக்கும்...
நானும் இதையே ஆமோதிக்கிறேன்.... :)

anbudan vaalu said...

அழகு கவிதை ஸ்ரீ...
:))

தாரணி பிரியா said...

நல்லா இருக்கு ஸ்ரீ. ஆனாலும் வழக்கமான ஏதோ குறையறது போல இருக்கு

நான் ஆதவன் said...

// தாரணி பிரியா said...

நல்லா இருக்கு ஸ்ரீ. ஆனாலும் வழக்கமான ஏதோ குறையறது போல இருக்கு//

ஏன் தாயீ இந்த கொல வெறி???? இத்தனை கவிதை எழுதியும் பத்தலயா??

நான் ஆதவன் said...

//அறைத்தோழியின்
"சுகந்தன்னே?"-வில்...//

அய்ய்ய் கேரளநாட்டு பைங்கிளி

நான் ஆதவன் said...

நான் வேற தனியா கவிதைகள் நல்லாயிருக்குன்னு சொன்னா நல்லாவாயிருக்கும்..இல்ல நல்லாயில்லைன்னு சொன்னா மட்டும் நல்லாயிருக்குறது நல்லாயில்லாம போயிடுமா??

Suresh said...

அருமையான பிரிவு கவிதை

இனியவள் புனிதா said...

//தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்
பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்
வளர்த்துவிட்டிருந்தது
பிரிந்துவிட்ட நம் காதலின்
காயத்தை....//

பிடிச்சிருக்கு :-)

" உழவன் " " Uzhavan " said...

//போட்டதும் கலைந்த
படுக்கையும்,
கேட்டதும் கிடைக்கும்
முத்தங்களும்,
சுவாரஸ்யமற்றதாக்கி விடுகின்றன
இரவுகளை....//

அருமையான வரிகள்.
சுவாரஸ்யமற்றதாக்கி - இதனைக் கொஞ்சம் தமிழ்ப்படுத்த முயலுங்களேன். :-)

//காடு, மலைகளையும்
காட்டருவிகளையும்
இன்னப்பிற
இயற்கை நிகழ்வுகளையும்
நட்சத்திர, வெண்ணிலவுகளையும்
ரசிக்க முடிந்தது
மின்சாரம் தடைபடாத
முழு இரவின்
கனவில்.... //

நல்ல ஆழ்ந்த தூக்கமோ??

Divyapriya said...

இனிய கவிதைகள் ஸ்ரீமதி...

Kanna said...

// தொலைந்துவிட்ட
பேனாவின் மூடியும்
பறந்துவிட்ட கிளியின்
இறந்தகால கூண்டும்
வளர்த்துவிட்டிருந்தது
பிரிந்துவிட்ட நம் காதலின்
காயத்தை.... //

அன்பு தோழியே....

அழகான வரிகள்..

பிரிவின் ஆழத்தை அழகாக எடுத்துரைத்தது...

மிகவும் ரசித்தேன்....

ஏன் இன்னும் தமிழிஷ்ல் பதிவிடவில்லை...

உடனே செய்யவும்...

அழகான வரிகள்.. இன்னும் பல பேரை ரசிக்க செய்யட்டும்..

வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//கற்பனைக்காக்த்தானே//

கற்பனைதான் அண்ணா :))

@ குடுகுடுப்பை
//கனவு காண கரண்டு வேணுமா?//

இல்லைனா கொசுக்கடில யாருக்கு தூக்கம் வரும் அண்ணா??

@ கார்க்கி
//மீண்டும் பிரிவா??????????????????//

ஏன் இப்படி??

////அரைத்தோழியி//

அது அறைத்தோழி..//

மாத்திட்டேன்.. நன்றி :))

@ புதியவன்
//அருமையான வரிகள்...எதிர்ப்பு இல்லாமல்
கேட்ட உடன் எதுவும் கிடைத்துவிட்டால்
சுவாரஸ்யம் குறைவாகத்தான் இருக்கும்...//

உண்மைதான் புதியவன் :)))

@ அபுஅஃப்ஸர்
//வரிகள் அழகு

எதை சொல்வது எப்படி சொல்லி பாராட்டுவது...

ஒரு பிரிவு + சோகம் தெரிகிறது உங்கள் வரிகளில்//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Poornima Saravana kumar
//அழகு:))//

நன்றி அக்கா :))

@ தமிழ் பிரியன்
//அழகு!//

நன்றி அண்ணா :)))

@ Karthik
//me the 10. :)

//உன்னை நினைத்து
உறங்கிவிட்ட இரவுகளில்
கவிதைகளெதுவும் கைவரவில்லை...
மைதோய்ந்த காகிதங்களும்,
கொஞ்சம் மையும்
மட்டும் கோலமிட்டிருந்தது,
உன் காதலை
என்னைச் சுற்றி....

SOOOOPER STUFF. :)//

இதுதான் பிடிச்சிருக்கா?? :)) நன்றி கார்த்திக் :))

@ ஆதிமூலகிருஷ்ணன்
//Beautiful.! இருப்பினும் உங்கள் உச்சம் வேறு.//

முயற்சிக்கிறேன் அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ dharshini
//பிரிவை விளக்கிய விதம் அருமை...
முக்கியமா சாவிதான் அடிக்கடி தொலைந்துபோகும் அதை விட்டுட்டியேsri..//

எந்த சாவியும் இதுவரைக்கும் என்ன நம்பி தந்ததில்ல... அதான் தெரியல.. ;)))

@ நாணல்
//புதியவன் said...

//போட்டதும் கலைந்த
படுக்கையும்,
கேட்டதும் கிடைக்கும்
முத்தங்களும்,
சுவாரஸ்யமற்றதாக்கி விடுகின்றன
இரவுகளை....//

அருமையான வரிகள்...எதிர்ப்பு இல்லாமல்
கேட்ட உடன் எதுவும் கிடைத்துவிட்டால்
சுவாரஸ்யம் குறைவாகத்தான் இருக்கும்... நானும் இதையே ஆமோதிக்கிறேன்.... :)//

ம்ம்ம்ம் நன்றி அக்கா :)))

@ anbudan vaalu
//அழகு கவிதை ஸ்ரீ...
:))//

நன்றி வாலு :)))

@ தாரணி பிரியா
//நல்லா இருக்கு ஸ்ரீ. ஆனாலும் வழக்கமான ஏதோ குறையறது போல இருக்கு//

தெரியலையே அக்கா..:(( சரி செய்ய முயற்சிக்கிறேன்.. :)) நன்றி அக்கா :))

@ நான் ஆதவன்
//ஏன் தாயீ இந்த கொல வெறி???? இத்தனை கவிதை எழுதியும் பத்தலயா??//

:))))))))

//அய்ய்ய் கேரளநாட்டு பைங்கிளி//

கிர்ர்ர்ர்ர்ர்ர் :))

//நான் வேற தனியா கவிதைகள் நல்லாயிருக்குன்னு சொன்னா நல்லாவாயிருக்கும்..இல்ல நல்லாயில்லைன்னு சொன்னா மட்டும் நல்லாயிருக்குறது நல்லாயில்லாம போயிடுமா??//

இப்போ என்னதான் சொல்றீங்க?? நல்லா இருக்கா?? நல்லா இல்லையா?? :)))

@ Suresh
//அருமையான பிரிவு கவிதை//

நன்றி சுரேஷ் :))

@ இனியவள் புனிதா
//பிடிச்சிருக்கு :-)//

நினைச்சேன் ;)))

@ " உழவன் " " Uzhavan "
//அருமையான வரிகள்.
சுவாரஸ்யமற்றதாக்கி - இதனைக் கொஞ்சம் தமிழ்ப்படுத்த முயலுங்களேன். :-)//

சாரி அண்ணா அதுக்கு தமிழ்ல இன்னும் எப்படி எழுதறதுன்னு தெரியல :(((

//நல்ல ஆழ்ந்த தூக்கமோ??//

ம்ம்ம்ம் :)))

@ Divyapriya
//இனிய கவிதைகள் ஸ்ரீமதி...//

நன்றி அக்கா :)))

@ Kanna
//அன்பு தோழியே....

அழகான வரிகள்..

பிரிவின் ஆழத்தை அழகாக எடுத்துரைத்தது...

மிகவும் ரசித்தேன்....

ஏன் இன்னும் தமிழிஷ்ல் பதிவிடவில்லை...

உடனே செய்யவும்...

அழகான வரிகள்.. இன்னும் பல பேரை ரசிக்க செய்யட்டும்..

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி கண்ணா :)))

" உழவன் " " Uzhavan " said...

////@ " உழவன் " " Uzhavan "
//அருமையான வரிகள்.
சுவாரஸ்யமற்றதாக்கி - இதனைக் கொஞ்சம் தமிழ்ப்படுத்த முயலுங்களேன். :-)//
சாரி அண்ணா அதுக்கு தமிழ்ல இன்னும் எப்படி எழுதறதுன்னு தெரியல :((( ////

இனிமையற்றதாக்கி / ருசிகரமற்றதாக்கி என்று வைத்துக்கொள்ளலாமா?
பொருத்தமாக இருந்தால் மாற்றுங்கள். இல்லையேல் அப்படியே விட்டுவிடுங்கள்.

அன்புடன்
உழவன்

ஸ்ரீமதி said...

நன்றி " உழவன் " " Uzhavan " :))

Erode Nagaraj... said...

என் குரல் எனக்கே கேட்டதை
உள் மன விழிப்பென்றே எண்ணியிருந்தேன்.

பாதி இருக்கை மட்டும்
பள்ளமான பைக்,

எப்போது வாங்கினாய்
என்று அணிந்து கொண்டாய்
என எண்ண வைக்காத கொடி,

குறுக்கிலே படுத்தாலும் - வெளியே
கால் தெரியாத கட்டில்,

உபயோகப்படுத்தாத மாற்றுச் சாவி...
அஹ விழிப்பு அல்லடி அது,

பூட்டியே கிடக்கின்றதொரு
எதிர் வீட்டின் கதவைப் போல...

தொடர்பற்றுப் போனாலும் - தொடர்ந்தபடி கழிகின்ற

மற்றுமொரு நாளின்
தனிமை.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது