அம்மாவின் வாசனை


நகம் வெட்டிக்கொள்ளா
ஞாயிற்று கிழமைகளும்..
கலைந்த கூந்தலின்
சீகைக்காய், தேங்காய் எண்ணெய்
நறுமணங்களும்....
உன்னால் முணுமுணுக்கக் கற்றுக்கொண்ட
பழைய பாடல் வரிகளும்...
உள்ளங்கையின் இளஞ்சிவப்பு
மருதாணி நிறமும்...
மார்கழி மாதத்து உதட்டு வெடிப்பின்
நெய் பூசிய பளபளப்பும்...
வெளிச்சம் தொலைத்த இரவு
மெழுகு உருகல்களின்
கைச்சுடும் தீயும்....
புடவை முந்தானையின்
நனைந்துவிட்ட பாகமும்...
என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

51 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

\\நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட..\\

மிக அருமை.

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு.

நாணல் said...

:)) nalla irukku sri...

\\நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட..\\

மிக அருமை.

repeatuu...

கார்க்கி said...

வாய்ப்புகளே இல்லை.. :)))

அமுதா said...

/*என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட... */
அருமை

சென்ஷி said...

கலக்குறே ஸ்ரீமதி :-))

அட்டகாசமா இருக்குது!!!

ஆயில்யன் said...

வாய்ப்பே இல்ல கலக்கல்!


(தமிழ்ல சொல்லணும்னா சான்ஸே இல்ல,தூள்!)

:))

இனியவள் புனிதா said...

\\நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...\\

நிச்சயமாய்.... தாய்மடி ஊஞ்சலைப் போல் தாலாட்டும் சுகமும் அவளைப் பிரியும்போதுதான்...!!!

புதுகைத் தென்றல் said...

அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை.

அம்மாவைப் பற்றி சொல்லிய பிறகும் நிறைய்ய்ய்ய்ய மிச்சம் இருக்கும் இதுதான் அம்மாவின் சிறப்பு.

அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

ரசித்தேன்..;)

தலைப்பை இன்னும் கொஞ்சம் யோசிச்சியிருக்கலாம். கடைசி வரியில் மட்டும் தான் வாசனை வருது.

narsim said...

//கே.ரவிஷங்கர் said...
நல்லா இருக்கு.
//

இதைவிட என்ன வேண்டும் ஸ்ரீ??

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு,

சின்ன வயதில் நான் அவ்வளவா பொறுப்பா இருந்ததில்லை, என்னடா முத்துனா அதுல மூணு எழுத்தை மறந்திட்டேயே ....அப்படின்னு சொல்வா

goma said...

”....மார்கழி மாதத்து உதட்டு வெடிப்பின்
நெய் பூசிய பளபளப்பும்...”
எப்படியெல்லாம் நம் நினைவில் அம்மா இருக்கிறாள் பாருங்கள்...
அவளின் நினைவு தங்கும் இடங்களை எழுதத் தொடங்கினால் வானம்தான் எல்லை

புதியவன் said...

சின்னச் சின்ன நிகழ்வுகளில் எல்லாம்
கலந்திருக்கும் அம்மாவின் வாசனை அழகு...

//நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட...//

முடிதிருக்கும் விதமும் அருமை...

Karthik said...

வாவ், அட்டகாசம்..! :)))

sayrabala said...

புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட..\\


yappa chance illa arputham

konnuteenga

நாகை சிவா said...

கலக்கல் :)

அம்மாவின் கைமணமும் சேர்த்து இருக்கலாம் ;)

அபுஅஃப்ஸர் said...

அம்மாவை நினைவுப்படுத்த எல்லையில்லா நிகழ்வுகளும் செயல்களும் இருக்குங்க‌
இருந்தாலும் ஒரு சில அழகான வரிகளில் உணர்த்தியுள்ளீர்

நல்லாயிருக்கு...

yathra said...

நல்லா இருக்குங்க கவிதை

Poornima Saravana kumar said...

கவிதை அருமை:)

Raghavendran D said...

one among ur bests.. :-)

தமிழ் பிரியன் said...

/*என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட... */
அழகாவும் இருக்கு! சுவையாவும் இருக்கு!

" உழவன் " " Uzhavan " said...

கலக்கல் ஸ்ரீமதி.. வாழ்த்துக்கள் :-)

Maddy said...

தாயின் நினைவுகளை தாக்கத்துடன் கொஞ்சம் ஏக்கத்துடன் நினவு படுத்தும் பொன்னான வரிகள்

அன்புடன் அருணா said...

போங்க உன் பேச்சு கா...நான் இதே மாதிரி எழுதணும்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்....முந்திக்கிட்டியே!!!
அன்புடன் அருணா

dharshini said...

சூப்பரா இருக்கு sri... :)

Subash said...

மிக அருமை.
வழ்த்துக்கள்

அய்யனார் said...

அம்மாவின் வாசனைகளை கனிமொழியோட கருவறை வாசனை கவிதை சரியா பதிவு பண்ணியிருக்கும் இந்த கவிதை இன்னொரு புள்ளில அம்மாவோட வாசனைகளை நினைவுபடுத்துவதா இருக்கு்.

நல்ல கவிதை..

Saravana Kumar MSK said...

செம கலக்கல்..
எங்கயோ போற..

Saravana Kumar MSK said...

// அய்யனார் said...
அம்மாவின் வாசனைகளை கனிமொழியோட கருவறை வாசனை கவிதை சரியா பதிவு பண்ணியிருக்கும் இந்த கவிதை இன்னொரு புள்ளில அம்மாவோட வாசனைகளை நினைவுபடுத்துவதா இருக்கு்.
நல்ல கவிதை..//

அதான் தலயே சொல்லிடீச்சில்ல..

மணிகண்டன் said...

ரொம்ப பிரமாதமா இருக்கு ஸ்ரீமதி. கலக்கி கொடுங்க.

தமிழன்-கறுப்பி... said...

Saravana Kumar MSK said...
// அய்யனார் said...
அம்மாவின் வாசனைகளை கனிமொழியோட கருவறை வாசனை கவிதை சரியா பதிவு பண்ணியிருக்கும் இந்த கவிதை இன்னொரு புள்ளில அம்மாவோட வாசனைகளை நினைவுபடுத்துவதா இருக்கு்.
நல்ல கவிதை..//

அதான் தலயே சொல்லிடீச்சில்ல..
\\

ரிப்பீட்டு...!

Muthusamy said...

Good one

விஜய் said...

கடைசி வரி, செம பன்ச். கல்யாணமாகி புகுந்த வீடு போகும் வரை நிறைய பெண்களுக்கு அம்மாவின் அருமை தெரிவதில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சரி சரி சரி........
புரிஞ்சிடுச்சி

/*என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட...

கலக்கல்...

வாழ்த்துக்கள்

வண்ணத்துபூச்சியார் said...

அருமை.

புத்தாண்டு வாழ்த்துகள்.

Mitr - Friend said...

அற்புதம்...

tamil24.blogspot.com said...

அம்மாவின் வாசம் யாராலும் மறக்க முடியாதது. அம்மாவை நினைவுபடுத்த ஆயிரம் உண்டு.

அருமையான கவிதை.

சாந்தி

ஆதிமூலகிருஷ்ணன் said...

Wonderful..

ஆனா இறுதி வரி தவிர..
புதுத்தாலியின் மஞ்சள் வாசனை அருமையான வார்த்தை விளையாட்டு.. அது எப்படி அம்மாவை நினைவுபடுத்தும், அது புத்தம் புதிது அல்லவா ஒரு பெண்ணுக்கு.?

ஹேமா said...

ஸ்ரீமதி வணக்கம்.
கண்கள் கலங்க...அத்தனை வரிகளைகளையும் ஆமோதிக்கிறேன்.மீண்டும் அந்த வாசனை வேண்டி வரமும் கேட்கிறேன்.

பட்டாம்பூச்சி said...

மிக அருமை.
நெகிழ வைக்கும் கவிதை.

அனுஜன்யா said...

வாவ், ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ. இப்பதான் பார்க்கிறேன். பொறாமையாவும் இருக்கு - அய்ஸ் கூட புகழ்வதைப் பார்க்கையில்.

வாழ்த்துகள் ஸ்ரீ.

அனுஜன்யா

மண்குதிரை said...

அய்யனாரின் கருத்தை வழி மொழிகிறேன்.

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி !

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//மிக அருமை.//

நன்றி அண்ணா :)))

@ கே.ரவிஷங்கர்
//நல்லா இருக்கு.//

மிக்க நன்றி அண்ணா :))

@ நாணல்
//:)) nalla irukku sri...

\\நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட..\\

மிக அருமை.

repeatuu...//

நன்றி அக்கா :)))

@ கார்க்கி
//வாய்ப்புகளே இல்லை.. :)))//

:))))நன்றி

@ அமுதா
///*என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட... */
அருமை//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//கலக்குறே ஸ்ரீமதி :-))

அட்டகாசமா இருக்குது!!!//

நிஜமாவா?? நன்றி அண்ணா :))

@ ஆயில்யன்
//வாய்ப்பே இல்ல கலக்கல்!


(தமிழ்ல சொல்லணும்னா சான்ஸே இல்ல,தூள்!)

:))//

நன்றி அண்ணா :))(தமிழ்ல சொன்னா தேங்க்ஸ் பிரதர்)

@ இனியவள் புனிதா
//\\நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...\\

நிச்சயமாய்.... தாய்மடி ஊஞ்சலைப் போல் தாலாட்டும் சுகமும் அவளைப் பிரியும்போதுதான்...!!!//

நோ ஃபீலிங்க்ஸ் அக்கா :))

@ புதுகைத் தென்றல்
//அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை.

அம்மாவைப் பற்றி சொல்லிய பிறகும் நிறைய்ய்ய்ய்ய மிச்சம் இருக்கும் இதுதான் அம்மாவின் சிறப்பு.

அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்//

உண்மை தான் அக்கா.. :)) நன்றி :))

@ கோபிநாத்
//ரசித்தேன்..;)

தலைப்பை இன்னும் கொஞ்சம் யோசிச்சியிருக்கலாம். கடைசி வரியில் மட்டும் தான் வாசனை வருது.//

எப்பவுமே தலைப்புன்னு தனியா யோசிக்கறதில்ல... அப்படியே என்ன முதல்ல தோணுதோ அத வெச்சிடுவேன்.. அது பல சமயங்கள்ல கவிதைக்கு பொருத்தமா இருக்கறதா நான் பீல் பண்ணதில்ல.. நீங்க இன்னைக்கு தான் கண்டுபிடிச்சிருக்கீங்க.. ;))) நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ narsim
////கே.ரவிஷங்கர் said...
நல்லா இருக்கு.
//

இதைவிட என்ன வேண்டும் ஸ்ரீ??//

:)))ஒரு நூறு ரூபா கைமாத்து... சரி வேண்டாம் விடுங்க... ;))))

@ அது ஒரு கனாக் காலம்
//ரொம்ப நல்லா வந்திருக்கு,

சின்ன வயதில் நான் அவ்வளவா பொறுப்பா இருந்ததில்லை, என்னடா முத்துனா அதுல மூணு எழுத்தை மறந்திட்டேயே ....அப்படின்னு சொல்வா//

ஹை இது நல்லாருக்கே.. :)) இன்னைக்கே போயி நானும் இது மாதிரி மாதவன திட்டி பார்க்கிறேன்.. ;)) நன்றி :)))

@ goma
//”....மார்கழி மாதத்து உதட்டு வெடிப்பின்
நெய் பூசிய பளபளப்பும்...”
எப்படியெல்லாம் நம் நினைவில் அம்மா இருக்கிறாள் பாருங்கள்...
அவளின் நினைவு தங்கும் இடங்களை எழுதத் தொடங்கினால் வானம்தான் எல்லை//

ம்ம்ம்ம் ஆமாம் :)))

@ புதியவன்
//சின்னச் சின்ன நிகழ்வுகளில் எல்லாம்
கலந்திருக்கும் அம்மாவின் வாசனை அழகு...

//நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட...//

முடிதிருக்கும் விதமும் அருமை...//

நன்றி புதியவன் :)))

@ Karthik
//வாவ், அட்டகாசம்..! :)))//

நன்றி கார்த்திக் :))))

ஸ்ரீமதி said...

@ sayrabala
//புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட..\\

yappa chance illa arputham

konnuteenga//

Thanks Sayrabala :)))

@ நாகை சிவா
//கலக்கல் :)

அம்மாவின் கைமணமும் சேர்த்து இருக்கலாம் ;)//

எங்கம்மா கைமணத்த சொல்ல ஆரம்பிச்சா... உனக்கு சமைக்கத் தெரியுமாங்கர தேவையில்லாத கேள்வியெல்லாம் பேஸ் பண்ண வேண்டிவரும்... அதான் அந்த சப்ஜெக்ட்ட தொடாம அடக்கி வாசிக்கிறேன்.. ;)))

@ அபுஅஃப்ஸர்
//அம்மாவை நினைவுப்படுத்த எல்லையில்லா நிகழ்வுகளும் செயல்களும் இருக்குங்க‌
இருந்தாலும் ஒரு சில அழகான வரிகளில் உணர்த்தியுள்ளீர்

நல்லாயிருக்கு...//

நன்றி அபுஅஃப்ஸர் :)))

@ yathra
//நல்லா இருக்குங்க கவிதை//

நன்றி யாத்ரா :)))

@ Poornima Saravana kumar
//கவிதை அருமை:)//

நன்றி அக்கா :)))

@ Raghavendran D
//one among ur bests.. :-)//

Thanks Raghav.. :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
///*என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட... */
அழகாவும் இருக்கு! சுவையாவும் இருக்கு!//

அப்படியா?? நன்றி அண்ணா :)))

@ " உழவன் " " Uzhavan "
//கலக்கல் ஸ்ரீமதி.. வாழ்த்துக்கள் :-)

நன்றி அண்ணா :)))

@ Maddy
//தாயின் நினைவுகளை தாக்கத்துடன் கொஞ்சம் ஏக்கத்துடன் நினவு படுத்தும் பொன்னான வரிகள்//

நன்றி அண்ணா :)))

@ அன்புடன் அருணா
//போங்க உன் பேச்சு கா...நான் இதே மாதிரி எழுதணும்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்....முந்திக்கிட்டியே!!!
அன்புடன் அருணா//

நான் எழுதிட்டா என்ன அக்கா?? நீங்களும் எழுதுங்க... உங்க வரிகள்லயும் அழகா இருக்கும் :)))இதுக்கெல்லாம் யாராவது கா விடுவாங்களா?? :))

@ dharshini
//சூப்பரா இருக்கு sri... :)//

Thanks Dharshini :))

@ Subash
//மிக அருமை.
வழ்த்துக்கள்//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ அய்யனார்
//அம்மாவின் வாசனைகளை கனிமொழியோட கருவறை வாசனை கவிதை சரியா பதிவு பண்ணியிருக்கும் இந்த கவிதை இன்னொரு புள்ளில அம்மாவோட வாசனைகளை நினைவுபடுத்துவதா இருக்கு்.

நல்ல கவிதை..//

முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா :))

@ Saravana Kumar MSK
//செம கலக்கல்..
எங்கயோ போற..

// அய்யனார் said...
அம்மாவின் வாசனைகளை கனிமொழியோட கருவறை வாசனை கவிதை சரியா பதிவு பண்ணியிருக்கும் இந்த கவிதை இன்னொரு புள்ளில அம்மாவோட வாசனைகளை நினைவுபடுத்துவதா இருக்கு்.
நல்ல கவிதை..//

அதான் தலயே சொல்லிடீச்சில்ல..//

:)))நன்றி சரவணா

@ மணிகண்டன்
//ரொம்ப பிரமாதமா இருக்கு ஸ்ரீமதி. கலக்கி கொடுங்க.//

நன்றி அண்ணா :))

@ தமிழன்-கறுப்பி...
//Saravana Kumar MSK said...
// அய்யனார் said...
அம்மாவின் வாசனைகளை கனிமொழியோட கருவறை வாசனை கவிதை சரியா பதிவு பண்ணியிருக்கும் இந்த கவிதை இன்னொரு புள்ளில அம்மாவோட வாசனைகளை நினைவுபடுத்துவதா இருக்கு்.
நல்ல கவிதை..//

அதான் தலயே சொல்லிடீச்சில்ல..
\\

ரிப்பீட்டு...!//

:)))))))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//Good one//

Thank you anna :))

@ விஜய்
//கடைசி வரி, செம பன்ச். கல்யாணமாகி புகுந்த வீடு போகும் வரை நிறைய பெண்களுக்கு அம்மாவின் அருமை தெரிவதில்லை.//

உண்மைதான் அண்ணா :((


@ அமிர்தவர்ஷினி அம்மா
//சரி சரி சரி........
புரிஞ்சிடுச்சி

/*என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட...

கலக்கல்...

வாழ்த்துக்கள்//

நன்றி அக்கா :)))

@ வண்ணத்துபூச்சியார்
//அருமை.

புத்தாண்டு வாழ்த்துகள்.//

நன்றி அண்ணா.. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.. :)) (இது புத்தாண்டு தானே?? நான் எப்பவேணா சொல்வேன்.. சரியா அண்ணா?? ;))

@ Mitr - Friend
//அற்புதம்...//

Thanks Mitr-Friend.

@ tamil24.blogspot.com
//அம்மாவின் வாசம் யாராலும் மறக்க முடியாதது. அம்மாவை நினைவுபடுத்த ஆயிரம் உண்டு.

அருமையான கவிதை.

சாந்தி//

நன்றி சாந்தி :)))

@ ஆதிமூலகிருஷ்ணன்
//Wonderful..

ஆனா இறுதி வரி தவிர..
புதுத்தாலியின் மஞ்சள் வாசனை அருமையான வார்த்தை விளையாட்டு.. அது எப்படி அம்மாவை நினைவுபடுத்தும், அது புத்தம் புதிது அல்லவா ஒரு பெண்ணுக்கு.?//

அந்த பெண்ணுக்கு அந்த தாலி புதிதுதான்.. ஆனால், அம்மாவிடம் அவள் ஏற்கனவே நுகர்ந்த வாசம் தான் அந்த மஞ்சளுடையது.. அதான் சொல்ல வந்தேன்... :))

@ ஹேமா
//ஸ்ரீமதி வணக்கம்.
கண்கள் கலங்க...அத்தனை வரிகளைகளையும் ஆமோதிக்கிறேன்.மீண்டும் அந்த வாசனை வேண்டி வரமும் கேட்கிறேன்.//

நிச்சயம் வரம் கிடைக்கும் ஹேமா.. :)) நன்றி முதல் வருகைக்கு :)))

@ பட்டாம்பூச்சி
//மிக அருமை.
நெகிழ வைக்கும் கவிதை.//

நன்றி பட்டாம்பூச்சி :)))

@ அனுஜன்யா
//வாவ், ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ. இப்பதான் பார்க்கிறேன். பொறாமையாவும் இருக்கு - அய்ஸ் கூட புகழ்வதைப் பார்க்கையில்.

வாழ்த்துகள் ஸ்ரீ.

அனுஜன்யா//

அய்ஸ் அண்ணா என்ன புகழ்ந்தா, அந்த பெருமை உங்களுக்கும் தான் அண்ணா :))))

@ மண்குதிரை
//அய்யனாரின் கருத்தை வழி மொழிகிறேன்.

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி !//

நன்றி மண்குதிரை :))))

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்குங்க ஸ்ரீ!

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது