எனக்கென்று ஒரு வானம்...


எனக்கென்று ஒரு வானம்,
துரோகங்களின் நிழல்கள் படியாமல்...
அங்கு, என்
விண்மீன்களை நாற்றுகளாக்கி,
விளைநிலங்களில்
வெண்ணிலாக்களை ஊடுபயிராக்கியிருந்தேன்...
வானம் தொட்டுப்பறந்த
பறவையின் சிறகுகளில்
கொஞ்சம் சிக்கி
அதன் எச்சங்களில்
கொஞ்சம் பூமி பார்த்தேன்....
கோடை மழை நேரங்களில்
பூக்களுக்குள் வந்திறங்கி
புது உறவு கண்டிருந்தேன்...
அவ்வப்பொழுது
மின்னல் கீற்றுகளை அருவிகளாக்கி,
மலைகளை மாலைகளாக்க
வார்த்தைகளைக் கொஞ்சம் வழியவிட்டேன்...
கவிதை அமைந்தது...
சாகாவரம் பெற்ற கவிதைகளனைத்தும்
இப்பொழுது,
மரங்களாகி நிற்கிறது
மீண்டும் என் வானம் தொட....


-அன்புடன்,
ஸ்ரீமதி.

38 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

கார்க்கி said...

மொத பேஷண்ட் நானா?

நட்புடன் ஜமால் said...

\\கோடை மழை நேரங்களில்
பூக்களுக்குள் வந்திறங்கி
புது உறவு கண்டிருந்தேன்...\

அழகு.

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு.கொஞ்சம் வைரமுத்து
சாயல். கொஞ்சமாதான்!

ஜோதிபாரதி said...

ஸ்ரீமதி, கலக்குங்க!

அபுஅஃப்ஸர் said...

நல்லாயிருக்கு உங்க கற்பனை திறன்

வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

உள்ளேன் அக்கா :)

அனுஜன்யா said...

வித்தியாசமான கவிதை, வழக்கமான மொழியில். நல்லா இருக்கு ஸ்ரீ.

அனுஜன்யா

புதியவன் said...

//சாகாவரம் பெற்ற கவிதைகளனைத்தும்
இப்பொழுது,
மரங்களாகி நிற்கிறது
மீண்டும் என் வானம் தொட....//

கற்பனை வெகு அழகு...

Suresh said...

\\கோடை மழை நேரங்களில்
பூக்களுக்குள் வந்திறங்கி
புது உறவு கண்டிருந்தேன்...\

அருமை

தமிழ் பிரியன் said...

அழகா இருக்கு ஸ்ரீமதி! வானம் தொட்டு விடும் தூரத்தில் தானே இருக்கு!

நிஜமா நல்லவன் said...

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமதி!

கோபிநாத் said...

சூப்பரு ;)

ஆயில்யன் said...

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமதி!

ஆயில்யன் said...

//கோடை மழை நேரங்களில்
பூக்களுக்குள் வந்திறங்கி
புது உறவு கண்டிருந்தேன்...//


இந்த வரிகள் அற்புதம்!

புனிதா said...

;-)

சென்ஷி said...

// கார்க்கி said...

மொத பேஷண்ட் நானா?/

:-))

சத்தியமா கலக்கல் கமெண்ட் :-)

சென்ஷி said...

:-)

நல்லாயிருக்குது ஸ்ரீமதி..

நாணல் said...

நல்லா இருக்கு ஸ்ரீமதி.. :)

நாகை சிவா said...

//வார்த்தைகளைக் கொஞ்சம் வழியவிட்டேன்...
கவிதை அமைந்தது...
சாகாவரம் பெற்ற கவிதைகளனைத்தும்
இப்பொழுது,//

ஆக எங்களை விடவே விடாது உங்க கவிதைகள் னு சொல்லுங்க ;)

நல்லா இருக்கு

G3 said...

என்னமா யோசிக்கறாங்கப்பா :)

கலக்கறீங்க போங்க :)

Muthusamy said...

Thanks but as some one said., I could figure out "Vairamuthu" in your lines. Thought is out of the box!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழகுக்கவிதைகளில் இருந்து மெல்ல நழுவி நைஸாக பின்நவீனத்துவ வாசமடிக்கத்துவங்குகிறது.. கொஞ்ச நாளைக்கு அனுஜன்யா, சரவணாவின் தளங்களுக்குப் போகாமலிருப்பது நல்லது..

தாரணி பிரியா said...

நல்லாயிருக்கு ஸ்ரீமதி :)

நசரேயன் said...

ம்ம்.. பட்டய கிளப்புறீங்க

ஜி said...

//பிரபல பதிவர கேட்டா அதெல்லாம் பின் நவீனத்துவம் உனக்கேதுக்குன்னுட்டார்... :-((
//

Ithai Ninaivu paduththa virumbukiren...

புனிதா said...

//மீண்டும் என் வானம் தொட.... //

தொடுவானம் தொடும் தூரத்தில்தான்.. ;-) வரிகள் அனைத்தும் அருமைடா!!! மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது!!!

ஆதவா said...

ரொம்ப அருமைங்க... வார்த்தத பிரயோகம் பிரமாதம்.. கற்பனை அளவில்லாமல் இருக்கிறது!!

வாழ்த்துகள் ஸ்ரீமதி!

Poornima Saravana kumar said...

கவிதை நல்லா இருக்குங்க:)

Karthik said...

ம், பின்றீங்கபா..! :)

Maddy said...

மீண்டும் மீண்டும் படித்து ரசித்து கொண்டே இருந்ததினால் பின்னூட்டம் இட மறந்து போனேன், இப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. கொஞ்சம் மாறுபட்ட நடை கவிதையில் இருந்தாலும், ஸ்ரீயின் முத்திரை இங்கே இருக்கிறது அழுத்தம் திருத்தமாக. வாழ்வு ஒரு சுழல் பாதை தானே..... கவிதைகள் எப்படி பிறந்தன என்று தெரிந்து கொண்டோம். சாகாவரம் பெற்றவை அவை என்பது தின்னம். வாழ்த்துக்கள், கவிதையும் கனவுகளும் என்றும் தொடர. வானம்பாடியாய் வானத்தில் வட்டமிட

இய‌ற்கை said...

அழகு.

dharshini said...

//விண்மீன்களை நாற்றுகளாக்கி,
விளைநிலங்களில்
வெண்ணிலாக்களை ஊடுபயிராக்கியிருந்தேன்...//
super lines.
nice kavithai :)

நம்பி.பா. said...

கவிதை நல்லா இருக்குங்க!

Saravana Kumar MSK said...

கவிதை செமையா இருக்கு..

//கவிதை அமைந்தது...//
ம்ம்ம்..

Saravana Kumar MSK said...

உன்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. கொஞ்சம் அங்க வந்து பார்க்கவும்..

பிரியமுடன்.........வசந்த் said...

வானம் தொட்டு விடும் தூரத்தில்......

ஸ்ரீமதி said...

நன்றி கார்க்கி

நன்றி ஜமால் அண்ணா

நன்றி கே.ரவிஷங்கர்

நன்றி ஜோதிபாரதி

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி ஆயில்யன் அண்ணா

நன்றி அனுஜன்யா அண்ணா

நன்றி புதியவன்

நன்றி சுரேஷ்

நன்றி தமிழ் பிரியன் அண்ணா

நன்றி நிஜமா நல்லவன் அண்ணா

நன்றி கோபிநாத்

நன்றி புனிதா அக்கா

நன்றி சென்ஷி அண்ணா

நன்றி நாணல் அக்கா

நன்றி நாகை சிவா அண்ணா

நன்றி G3

நன்றி முத்துசாமி

நன்றி ஆதிமூலகிருஷணன்

நன்றி தாரணி பிரியா அக்கா

நன்றி நசரேயன்

நன்றி ஜி

நன்றி ஆதவா

நன்றி பூர்ணிமா அக்கா

நன்றி கார்த்திக்

நன்றி மேடி அண்ணா

நன்றி இயற்கை

நன்றி தர்ஷினி

நன்றி நம்பி.பா

நன்றி சரவணா

நன்றி வசந்த்

மண்குதிரை said...

nalla irukku rasiththeen.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது