நர்சிம் அண்ணாவுக்காக.....

இன்னைக்கு நான் இத எழுத காரணம் நர்சிம் அண்ணா ரெண்டு நாளா போட்ட இந்த பதிவுகள் தான். அதுக்கு என்னன்னு கேட்கறீங்களா? இருக்கு... கடைசில சொல்றேன்.. இப்போ வலையுலகத்துல கொஞ்ச நாளாவே இந்த புத்தகங்கள பத்தின பதிவுகள் அதிகமா இருக்கு. பரிசல் அண்ணா, கார்க்கியோட இந்த பதிவுகள். இது ரொம்ப ஆரோக்கியமான விஷயம் தான். என்னென்ன புத்தகங்கள் படிச்சிருக்காங்க, நாம என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம், எதை எல்லாம் இன்னும் படிக்கல, இப்படி பல விஷயங்கள் தெரிஞ்சிக்க உதவுது. ஓகே., விஷயத்துக்குவா.. அதானே?? இருங்க சொல்றேன். அது வேற ஒன்னும் இல்ல எங்க வீட்லயே அதிகம் படிச்ச படிப்பாளி நான் தான் (சிரிக்கக்கூடாது..). பாட புத்தகங்கள் தவிர்த்து கைல கிடைக்கிற எந்த பேப்பரா இருந்தாலும் படிப்பேன். சக்கர கட்டி வந்த பேப்பர படிக்கிறேன்னு சர்க்கரை கொட்டி, அம்மா தலைல குட்டி... ஓகே விடுங்க...

இந்த படிக்கிற பழக்கம் எப்போ வந்ததுன்னு எனக்கு தெரியல.. என் அம்மாவோ, என் அப்பாவோ, மாதவனோ (அப்போவெல்லாம்) இப்படி புக் வெச்சிகிட்டு படிச்சு நான் பார்த்ததில்ல.. "கழுத வாய பார்த்து நெல்ல கோட்ட விட்ட கத" (இந்த கதை தெரியாதா??)தான் நடக்க போகுது உனக்குன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க.. எப்படி இப்படி ஆனேன்னு தெரியல.. ஆனா, சின்ன வயசுலேயே பாட புத்தகமெல்லாம் வாங்கினதும் முதல் வேலையா என்னோட, அண்ணாவோட நான்-டீட்டெயில் எல்லாத்தையும் படிச்சிட்டு தான் வெப்பேன்.

அப்பறம், ஆறாவது படிக்கும் போதுன்னு நினைக்கிறேன்.. தமிழ் பாட புத்தகத்துல பாரதிதாசனோட 'இருண்ட வீடு' பத்தி படிச்சிட்டு லைப்ரரி மூட இருந்த அவசர அஞ்சு நிமிஷத்துல படிச்சேன். அப்பறம் அந்த லைப்ரரியனுக்கு (ஒரு அக்கா) என்ன பிடிக்காம போச்சு... (பின்ன பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை புக் எடுத்தா??) இப்படி ஆரம்பிச்ச என் பழக்கம் சுஜாதா படைப்புகலால நல்லா வளர்ந்து வந்தது. ஆனாலும், இது வரைக்கும் எல்லாராலையும் பேசப்படற பல பிரபல எழுத்தாளர்களோட படைப்புகள நான் படிச்சதில்ல. ஒரு பதிவுல சென்ஷி அண்ணா கேட்டதா ஞாபகம் பாலகுமாரன் எழுத்துகள் படிப்பீங்களான்னு?? அவர் புத்தகமெல்லாம் பார்த்திருக்கேன் (தாடியோட தானே இருப்பார்?) ரொம்ப பெரிசு பெரிசா இருக்கும்.. வீட்ல ஒத விழும் இவ்ளோ பெரிசா எடுத்துட்டு போனான்னு அதை அப்படியே விட்டுட்டேன்.

எனக்கும் சுஜாதாவுக்குமான பரிச்சயம் (ம்கும்..) அதிகமானது கல்லூரி நாட்கள்ல தான்... அவரோட எல்லா நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாத்தையும் படிச்சிட்டேன்னு சொல்ல முடியாது... ;-)) ஆனா, ஸ்ரீரங்கத்து தேவதைகள், வைர கல், காயத்ரி, நைலான் கயிறு, பத்து செகண்ட் முத்தம், எதையும் ஒரு முறை, ஓரிரு எண்ணங்கள்... இன்னும் பல முதல் அட்டை இல்லாத, சில பெயர் தெரியாத அப்படின்னு படிச்சிருக்கேன்.

அப்பறம் கவிதை புத்தகங்களுக்கு எப்பவும் முதலிடம் உண்டு. சும்மா கலந்து கட்டி படிப்பேன். வைரமுத்து, கவிக்கோ.அப்துல் ரஹ்மான், பா.விஜய்(உடைந்த நிலாக்கள் பாகம்-II), மீரா(கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்) ,தபூ சங்கர், அறிவுமதி (இவரோட 'நட்புகாலங்கள்' மட்டும் ஆயிரம் முறைக்குமேல வாசிச்சிருப்பேன்.) இதெல்லாம் ஓசில படிச்சது.. (மீன்ஸ் லைப்ரரில). ஆனா, எனக்கே எனக்குன்னு வந்த உயர்ந்த பரிசுகளா இன்னைக்கும் நினைக்கறது பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் (இருண்ட வீடு, குடும்ப விளக்கு, எதிர்பாரா முத்தம்), அப்பறம் திருக்குறள்.

கல்லூரி காலத்துல ரமணி சந்திரன் நாவல்கள் என் தோழிகள் மூலம் பழக்கம். சும்மா உளுந்து உளுந்து படிப்பாளுங்க. என்னதான் இருக்குன்னு வாங்கிபார்த்ததுல சத்தியமா சொல்றேன் அதுல உருப்படியா ஒண்ணுமே இல்ல. இப்பவும் பிடிச்ச ஒரே கத "லாவன்யா" (நல்லவேள அந்த ஆன்டி எழுதறதில்ல போல இப்போவெல்லாம்...)


'பொன்னியின் செல்வன்' படிச்ச குஷில 'சோழ நிலா' எடுத்தேன். 'இப்படியே போயிட்டு இருந்தா நீ காலேஜ் முடிக்கமாட்டன்'னு சொல்லி என் தோழிங்க பிடுங்கி வெச்சிட்டாங்க. (அப்போ எனக்கு பைனல் செமஸ்டர்..) அப்பறம் அதை பார்க்கவே முடியல.. :-(( காலேஜ் முடிச்சு வந்து இந்த ரெண்டு வருஷத்துல நான் படிச்ச புத்தகங்கள் கதாவிலாசம்(எஸ்.ரா), கற்றதும் பெற்றதும், வந்தார்கள் வென்றார்கள், சினிமா சினிமா, மால்குடி டேஸ், இப்போ மறுபடியும் ஓரிரு எண்ணங்கள். இவ்ளோ தாங்க நம்ம புத்தக அறிவு.

இப்போ நர்சிம் அண்ணா விஷயத்துக்கு வருவோம்... நானும் இந்த ரெண்டுநாளா அவர் போடற பதிவ படிக்கிறேன்... படிக்கிறேன்.... படிக்கிறேன்... படிச்சிகிட்டே இருக்கேன்... எனக்கு கொஞ்சமும் புரியவே இல்ல... பிரபல பதிவர கேட்டா அதெல்லாம் பின் நவீனத்துவம் உனக்கேதுக்குன்னுட்டார்... :-((

-அன்புடன்,
ஸ்ரீமதி.

46 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

கார்க்கி said...

//பிரபல பதிவர கேட்டா அதெல்லாம் பின் நவீனத்துவம் உனக்கேதுக்குன்னுட்டார்..//

எவன்யா அது? கேட்டா சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே

கார்க்கி said...

ஜீன்ஸ் போடும் பெண் நவீனமாகிறாள்..

என்ன செய்தால் பின்நவீனமாக முடியும்?

கார்க்கி said...

/ பரிசல் அண்ணா, கார்க்கியோட இந்த பதிவுகள். இது ரொம்ப ஆரோக்கியமான விஷயம் தான்.//

ஆவ்வ்வ்.. தெரியாம் சொல்லிடுச்சு.. மன்னிச்சு விட்டுடுங்க

/கைல கிடைக்கிற எந்த பேப்பரா இருந்தாலும் படிப்பேன்.//

அதுக்குன்னு உங்க அண்ணன் எக்சாமுகு வாங்கி வச்ச ஒயிட் பேப்பர்ல அப்படி என்ன அரை மணி நேரம் படிச்ச?

//அண்ணாவோட நான்-டீட்டெயில் எல்லாத்தையும் படிச்சிட்டு தான் வெப்பேன்.//

அதெஇயெல்லாம் கூட வைக்கலாமா? அது தெரியாம நான் என் வாட்ச், கால்குலேட்டர், மோதிரம்னு வச்சேன்

Saravana Kumar MSK said...

Me the second.. :)

கார்க்கி said...

//நல்லவேள அந்த ஆன்டி எழுதறதில்ல போல இப்போவெல்லாம்...)//

ரமணி சந்திரன் உனக்கு ஆண்ட்டியா? அப்போ உங்க வயசு என்னங்க?

//அது வேற ஒன்னும் இல்ல எங்க வீட்லயே அதிகம் படிச்ச படிப்பாளி நான் தான் //

*****^%$#$#$%%^..

Saravana Kumar MSK said...

நீ வாசிச்சு இருக்கிற எந்த புத்தகத்தையும் நான் பார்த்தது கூட கிடையாது.. ;)

நீ மட்டும் இல்ல, பரிசல், கார்க்கி, எந்த பதிவிலும், அவங்க எழுதிய எந்த புத்தகத்தையும் பார்த்ததுகூட கிடையாது..

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் மட்டும் படிச்சிருக்கேன்.. அப்பறம் அவரோட சில கவிதைகள்.. அவ்ளோதான் நம்ம மொத்த வாசிப்பும்..

நாணல் said...

:))

ஆயில்யன் said...

//என் தோழிகள் மூலம் பழக்கம். சும்மா உளுந்து உளுந்து படிப்பாளுங்க///


இது படிச்ச மாதிரியான எபெக்டா தெரியலயே எதோ உளுந்து உருட்டுன கதை சொல்றமாதிரியில்ல இருக்கு !

SK said...

எனக்கும் தான் உங்க கவிதை பாதி புரிய மாட்டேங்குது.. நான் எல்லாம் சைலெண்டா ஸ்மைலி போட்டு எஸ் ஆகலை :) :)

ஆயில்யன் said...

//பிரபல பதிவர கேட்டா அதெல்லாம் பின் நவீனத்துவம் உனக்கேதுக்குன்னுட்டார்... :-((//


கொஞ்ச நாள் கழிச்சு அதாவது பின்னாடி
எல்லாமே புதுசா அதாவது நவீனத்துவமா தெரியும்!

அப்படிங்கறதுதான் பின் நவீனத்துவத்துக்கு எக்ஸ்பிளேனேஷனாம் எனக்கு ஒருத்தரு சொன்னாரு :)))

Saravana Kumar MSK said...

சமீபத்தில் (டேய் உனக்கு அது சமீபமா) கோபியின் - உள்ளே இருந்து சில குரல்கள் புத்தகம் படிச்சேன்..
இப்போ கொஞ்சம் ரமேஷ் பிரேம் புத்தகங்களை புரட்டி புரட்டி பார்க்கிறேன்..
(இது எல்லாம் அய்யனார் பாதிப்பு)

சந்தனமுல்லை said...

நல்லாருக்குப்பா உங்க புத்தகப் பதிவு!எங்க காலேஜ்லயும் ரமணிசந்திரன்னா விழுந்து விழுந்து படிப்பாங்க..அதேமாதிரி m&b! LOL!

ஆயில்யன் said...

//SK said...
எனக்கும் தான் உங்க கவிதை பாதி புரிய மாட்டேங்குது.. நான் எல்லாம் சைலெண்டா ஸ்மைலி போட்டு எஸ் ஆகலை :) :)
//

ஹய்யோ!


ஹய்யோ

இந்த சாருக்கு எப்படி பொய் சொல்றதுன்னே பர்ஷ்ட்டு தெரியல :((

SK said...

//// எவன்யா அது? கேட்டா சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே ///

சகா, எங்கப்பன் குதிர் உள்ள .................. :) :)

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...
நல்லாருக்குப்பா உங்க புத்தகப் பதிவு!எங்க காலேஜ்லயும் ரமணிசந்திரன்னா விழுந்து விழுந்து படிப்பாங்க..அதேமாதிரி m&b! LOL!
//

ம்ம்!

காலேஜ்ல ரமணி சந்திரன்!

ஆபிஸ்ல அவரைப்பத்தி இவுங்க எழுதியிருக்கிற பதிவு
நடக்கட்டும்!
:))

SK said...

ஆயில், பாதின்னு தப்பா சொல்லிட்டேன்னு எப்படி கண்டு புடிச்சீங்க :) :)

ஆயில்யன் said...

//SK said...
ஆயில், பாதின்னு தப்பா சொல்லிட்டேன்னு எப்படி கண்டு புடிச்சீங்க :) :)
//


அதெல்லாம் இஜிதான் :)

எதுவும் எமக்கு தெரியும் & புரியும் :)))))))

ஆயில்யன் said...

//Saravana Kumar MSK said...
சமீபத்தில் (டேய் உனக்கு அது சமீபமா) கோபியின் - உள்ளே இருந்து சில குரல்கள் புத்தகம் படிச்சேன்..
இப்போ கொஞ்சம் ரமேஷ் பிரேம் புத்தகங்களை புரட்டி புரட்டி பார்க்கிறேன்..
(இது எல்லாம் அய்யனார் பாதிப்பு)
//

இந்த புள்ளை எழுதறதுகூடத்தான் எனக்கு டக்குன்னு புரியற மாதிரி இருக்கு ஆனா லேட்டா ஆயிட்டா புரியாத மாதிரி இருக்கு அதுக்காக நான் என்ன கேள்வி கேட்டுக்கிட்டா இருக்கேன் :))))))))

ஆயில்யன் said...

//நாணல் said...
:))
//

ஆபிஸ்லே ஒரே ஆணி போல :))))

SK said...

ஆயில், அப்போ நான் மட்டும் தனி மரம் இல்லை.. என்ன சுத்தி ஒரு தோப்பே இருக்கு :) :) அப்போ சரி :) :)

இந்த கம்பெனி ரகசியம் எனக்கு தெரியாம போச்சே :)

டக்ளஸ்....... said...

நீங்களாச்சும் சொல்லுங்க அக்கா.."பிரபல பதிவர்"ன்னா என்னானு..
தெரியாம மண்ட காஞ்சு போயி இருக்கேன்..பிளீஸ் ஹெல்ப் மீ...

தமிழன்-கறுப்பி... said...

:)

கார்க்கி,ஆயில்யன் பின்னுட்டங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ரிப்பீட்டு...

தமிழன்-கறுப்பி... said...

நாம இப்பத்தான் புத்தகங்கள் பற்றி தெரிஞ்சுகிட்டு வர்றோம் இனிமேதான் வாசிக்க ஆரம்பிக்கணும்...

சென்ஷி said...

:-))

Karthik said...

சூப்பரா எழுதியிருக்கீங்க.

நீங்க படிச்சதில் நான் 'கற்றதும் பெற்றதும்' மட்டும் படிச்சிருக்கேன். கவிதைகள் பக்கமே போனதில்ல.

நானும் ஒரு பதிவு எழுதிடறேன் இதைப்பத்தி. :)

Karthik said...

//எனக்கு கொஞ்சமும் புரியவே இல்ல...

எனக்கும் புரியலைங்க. பின் நவீனத்துவமா? அப்ப சரி. :)

நிஜமா நல்லவன் said...

:)

kanagu said...

நல்ல பதிவு.....

நானும் vandhargal vendrargal padichi இருக்கேன் சூப்பர் book.. அதே மாறி நட்புக்காலம் மும் படிச்சி இருக்கேன்..

ஆனா பாரதியார் மற்றும் பாரதிதாசன் புத்தககங்களை படிச்சது இல்லை :(

அறிவன்#11802717200764379909 said...

யார் அந்தப் பிரபல பதிவர்?

கொஞ்சம் எழுத்துப் பிழைகளைப் பார்த்து சரி செய்தால் படிக்க நன்றாக இருக்கும்.

நன்றி.

ஜி said...

//எனக்கும் தான் உங்க கவிதை பாதி புரிய மாட்டேங்குது.. நான் எல்லாம் சைலெண்டா ஸ்மைலி போட்டு எஸ் ஆகலை :) :)

//

naanum Ithukku repeat pottukuren :))

ஜி said...

Nalla velai intha postukku yaarum sangali thodarnu maatti vidala... Ponniyin selvana thavira vera ethaiyume naan vaasichathu illa :((

Karthik said...

//எனக்கும் தான் உங்க கவிதை பாதி புரிய மாட்டேங்குது.. நான் எல்லாம் சைலெண்டா ஸ்மைலி போட்டு எஸ் ஆகலை :) :)

ha..ha. :)

பரிசல்காரன் said...

இதுக்குத்தான் எஸ்ஸெம்மெஸ் அனுப்பி உங்க பேரை அனுமதியில்லாம எழுதியிருக்கேன்னியா? ம்ஹும்..

நல்ல பதிவு..

சக்கரக்கட்டி..சக்கர கொட்டி... ச்சான்ஸே இல்லப்ப்பா!!

தமிழ் பிரியன் said...

இதுவும் ஒரு பின் நவீனத்துவ பதிவரின் பதிவு தான்.. இதுவே பி.ந. என்றால் அப்ப நர்சிம் பதிவு.. அவ்வ்வ்வ்வ்

மணிகண்டன் said...

***
ஜீன்ஸ் போடும் பெண் நவீனமாகிறாள்..

என்ன செய்தால் பின்நவீனமாக முடியும்?
****

ஜீன்ஸ்ஸ பிச்சிவிட்டு பின்னு போட்டா பின்நவீனத்துவம் ! ஸ்ரீமதி தப்பான பிரபலத்துக்கிட்ட விளக்கம் கேட்டு இருக்காங்க!

பதிவு நல்லா இருக்கு ஸ்ரீமதி.

Muthusamy said...

Good one

நாகை சிவா said...

ஆக உங்களுக்கும் இலக்கியவியாதி ஆகனும் என்று ஆசை வந்துடுச்சுனு சொல்லுங்க....

வருங்கால முதல்வர் said...

பரவாயில்லையே எப்பயுமே அண்ணன் இல்லாத ஒருததருக்கு பதிவும், அண்ணங்களுக்கு பின்னூட்டமும்தான் போடுவீங்க. இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.

வாழ்க பதிவுலகின் தங்கச்சி

அண்ணன்
குடுகுடுப்பை.

வருங்கால முதல்வர் said...

இப்போ நர்சிம் அண்ணா விஷயத்துக்கு வருவோம்... நானும் இந்த ரெண்டுநாளா அவர் போடற பதிவ படிக்கிறேன்... படிக்கிறேன்.... படிக்கிறேன்... படிச்சிகிட்டே இருக்கேன்... எனக்கு கொஞ்சமும் புரியவே இல்ல... பிரபல பதிவர கேட்டா அதெல்லாம் பின் நவீனத்துவம் உனக்கேதுக்குன்னுட்டார்... :-((//

பேசமா என்னுடைய பதிவுகளை படிங்க.நல்லா புரியும்.

நசரேயன் said...

எவ்வளவு புத்தகம் படிச்சி இருக்கீங்க

புதியவன் said...

நல்ல பதிவு ஸ்ரீமதி

//அப்பறம் கவிதை புத்தகங்களுக்கு எப்பவும் முதலிடம் உண்டு. //

என்னிடத்திலும் கவிதை புத்தகங்களுக்குத் தான் எப்போதும் முதலிடம்...

பா.விஜயின் உடைந்த நிலாக்கள் பாகம்-I
நான் அதிகம் விரும்பி வாசிக்கும் புத்தகங்களில்
ஒன்று...

கோபிநாத் said...

பெரிய பெரிய புக் எல்லாம் படிச்சிருக்கிங்க...யப்பா!!!!

reena said...

ஸ்ரீமதி தங்கள் வாசிப்பு வட்டம் மிக பெரியது... சுஜாதாவின் 'எப்போதும் பெண்' படித்திருக்கிறீர்களா? அவரது பல கணேஷ் வசந்த் நாவல் வட்டத்திற்குள் வராத சில சமூக நாவல்களுள் ஒன்று. அருமையான நாவல்...

Poornima Saravana kumar said...

யம்மாடீ இவங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படிப்பாளி!!!!

dharshini said...

:)

ஸ்ரீமதி said...

நன்றி கார்க்கி

நன்றி Saravana Kumar MSK

நன்றி நாணல்

நன்றி ஆயில்யன்

நன்றி சந்தனமுல்லை

நன்றி SK

நன்றி டக்ளஸ்.......

நன்றி தமிழன்-கறுப்பி...

நன்றி சென்ஷி

நன்றி Karthik

நன்றி நிஜமா நல்லவன்

நன்றி kanagu

நன்றி அறிவன்#11802717200764379909

நன்றி ஜி

நன்றி Karthik

நன்றி பரிசல்காரன்

நன்றி தமிழ் பிரியன்

நன்றி மணிகண்டன்

நன்றி Muthusamy

நன்றி நாகை சிவா

நன்றி வருங்கால முதல்வர்

நன்றி நசரேயன்

நன்றி புதியவன்

நன்றி கோபிநாத்

நன்றி reena

நன்றி Poornima Saravana kumar

நன்றி dharshini

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது