பயணங்கள்

"நான் ரொம்ப சாதாரணமான பொண்ணு எல்லார் மாதிரியும் சிரிக்கும் போது சிரிச்சு, அழும்போது அழுது, கோவப்படும் போது கோவப்படறேன் அவ்ளோ தான்... ஒரு வேல நான் கோவப்படற, சிரிக்கிற சூழ்நிலைகள் வேணும்னா என்ன மத்தவங்ககிட்ட இருந்து வித்தியாசமா காட்டலாம்.... கும்பலான ட்ரைன்ல ஏறிட்டு என்ன இடிக்கிராங்கன்னு கோவப்படறது பைத்தியக்காரத்தனம்ன்னு நான் நினைக்கிறேன்", மது பேசினால் இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும். காலை நேர சென்னை ரயிலின் நெரிசலை ரசிக்கும் ஒரே ஜீவன். ரசிக்கத்தான் வாழ்க்கை என வாதிக்கும் அழகான தேவதை.

"சரி விடு டி.. நீ இப்ப அம்மா சொன்ன விஷயத்துக்கு என்ன பதில் சொல்ற?", அழகான பெண்ணுக்கு தோழியாக இருப்பது தொல்லையான வேலை என வாதிடும் அழகான தோழி அல்லது அழகியின் தோழி வித்யா.

"நான் என்ன சொல்லனும்ன்னு எதிர்பார்க்கிற?"

"அப்போ நீ அம்மா சொல்ற பையன நீ கல்யாணம் பண்ணிக்க போறதில்லையா??"

"நான் எப்போ அப்படி சொன்னேன்?"

"குழப்பாம பதில் சொல்லு.... அவன் அழகா இருக்கான்னு நீ தானே சொன்ன?? அப்பறம் ஏன் வேண்டாம்ன்னு சொல்ற??"

"இப்பவும் சொல்றேன் அவன் அழகா இருக்கான்.... ஆனா, அழகா இருந்தா பிடிக்கனும்னு அர்த்தமில்லை... பிடிச்சிருந்தா அழகா தான் இருக்கனும்கற கட்டாயமில்லை..."

"ஹைய்யோ ஆள விடு... இப்போ அம்மா என்ன கேட்டா என்ன சொல்லட்டும்?? அதை மட்டும் சொல்லு..."

"நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லு..." பெரு மூச்சு விட்டாள் வித்யா.

மதுராவிடம் பேசி ஜெயிப்பது சுலபமில்லை. சில நேரம் இவள் பேசினாலே ஒழிய நாள் நன்றாக இருப்பதாக தோன்றாது.

*********************************************************************
"என்ன மதுரா எதுக்கெடுத்தாலும் சிரிக்கற? எப்படி உன்னால இப்படி எல்லா விஷயத்தையும் சிரிச்சு ஏத்துக்க முடியுது?"

"சிம்பிள்... நம்மள சுத்தி இருக்கறவங்க மூக்கு மேல எல்லாம் செர்ரி பழம் இருக்கறதா நினைச்சிக்கோ.. சிரிப்பு தானா வரும்.."

"திமிரு அதிகம் உனக்கு.."

"இந்த ஜோக் கூட ரசிக்க தெரியலேன்னா உனக்கு வயசாகிடிச்சுன்னு அர்த்தம்...", மறுபடியும் சிரித்தாள். கோவத்தோடு அவன் அவளை கடந்துவிட்டிருந்தான்.

***********************************************************************

"என்ன மது? என்ன யோசிச்ச?"

"இதுல யோசிக்க என்ன இருக்கு? அந்த பையனே எனக்கு ஓகே.."

"என்னடி சொல்ற?"

"ஆமா... எப்படியா இருந்தாலும் புது இடம், புது மனுஷங்க, புது விதமான சவால்கள்ன்னு நான்.. இல்ல நாம எங்க போனாலும் சமாளிச்சு தானே ஆகணும்?? அது ஏன் அம்மா, அப்பா இஷ்டப்படி இருக்கக்கூடாது? அதான் முடிவு பண்ணிட்டேன்.. ஓகே சொல்றதுன்னு.."

"உன்ன புரிஞ்சிக்கவே முடியல...".

சிரித்தாள்.

"ஐயோ இந்த ட்ரைன் வேற ஏன் தான் இவ்ளோ லேட் பண்ணுதோ?"

"எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... அப்போவே தெரிஞ்சிக்கலாம் நமக்கு வயசாயிடிச்சின்னு.."

"வித்தியாசமா இருக்க.."

"இல்ல... அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்... நான் ரொம்ப சாதாரணமானவ.."

-அன்புடன்,
ஸ்ரீமதி.

81 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

சந்தனமுல்லை said...

:-) நச்ன்னு இருக்கு!

narsim said...

நல்லா எழுதியிருக்கீங்க.

நட்புடன் ஜமால் said...

ரொம்ப ‘சாதரணமா' சொல்லிட்டீங்க

நல்லாயிருக்கு

அ.மு.செய்யது said...

//எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... அப்போவே தெரிஞ்சிக்கலாம் நமக்கு வயசாயிடிச்சின்னு.."//

அசத்தல் ஸ்ரீமதி !!!!!!!

நீங்க சொல்வது நூத்துக்கு நூறு உண்மை !!!!!

வெகுவாக ரசித்தேன் !!!!!

கார்க்கி said...

ச்சே... நான் ரயிலுக்கு காத்திருக்கும் போது மட்டும் சீக்கிரம் வருவதாக எனக்கு தோன்றுகிறது. அப்படின்னா என வயசு என்ன?

அப்புறம் அந்த மதுரா ஃபோன் நம்பர் கிடைக்குமா?

G3 said...

:)))))))))))

புதியவன் said...

//அழகா இருந்தா பிடிக்கனும்னு அர்த்தமில்லை... பிடிச்சிருந்தா அழகா தான் இருக்கனும்கற கட்டாயமில்லை..."//

இந்த கருத்தில் நான் உடன் படுகிறேன்...

கதை நல்லா இருக்கு ஸ்ரீமதி...

முரளிகண்ணன் said...

படிக்க நல்லாயிருக்கு.

Maddy said...

அசாதரணமான சாதரண பெண் தான் மதுரா!! மூக்கின்மேல் சிவப்பு பழத்தை வைத்து எல்லோரும கோமாளியாக நினைத்து சிரிக்கும் பெண்!!, காத்து இருத்தலை வைத்து வயதை கண்டுபிடிக்க சொல்லும் பெண்.....ம்ம்!!

காத்திருத்தல் பற்றி படிக்கும்போது நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் இந்த பாடல் நினைவிற்கு வருகிறது


What a waiting!! What a waiting!!
Love is but a game of waiting!!
You were watching! you were watching!!

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை
காக்கா வச்சி காக்கா வச்சி
கன்னி அவள் வந்து சேர்ந்தாள்!!

வரிகளும் வார்த்தைகளும் சரியா என்று தெரியவில்லை.

காதல் மனதில் இருந்தால் காத்திருத்தலும் சுகமானதாக தான் இருக்கும்போல!!

ஆயில்யன் said...

//"சிம்பிள்... நம்மள சுத்தி இருக்கறவங்க மூக்கு மேல எல்லாம் செர்ரி பழம் இருக்கறதா நினைச்சிக்கோ.. சிரிப்பு தானா வரும்.."/

அட நல்ல ஐடியாவா இருக்கே!

டாங்க்ஸ் பாஸ் !

ஆயில்யன் said...

//ஆமா... எப்படியா இருந்தாலும் புது இடம், புது மனுஷங்க, புது விதமான சவால்கள்ன்னு நான்.. இல்ல நாம எங்க போனாலும் சமாளிச்சு தானே ஆகணும்?? அது ஏன் அம்மா, அப்பா இஷ்டப்படி இருக்கக்கூடாது? அதான் முடிவு பண்ணிட்டேன்.. ஓகே சொல்றதுன்னு.."//

ரொம்ப சிம்பிளா சொல்லிட்டீங்க பெரிய விசயத்தை !

ஆயில்யன் said...

//அழகான பெண்ணுக்கு தோழியாக இருப்பது தொல்லையான வேலை என வாதிடும் அழகான தோழி அல்லது அழகியின் தோழி வித்யா///

அழகாய் சமாதானப்படுத்தியிருக்கிறீர்கள் தோழியை....!

gayathri said...

கதை நல்லா இருக்கு ஸ்ரீமதி...

சென்ஷி said...

:))

சென்ஷி said...

மீ த 15 :))

குடுகுடுப்பை said...

//எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... அப்போவே தெரிஞ்சிக்கலாம் நமக்கு வயசாயிடிச்சின்னு.."//

நான் ரயிலில் செல்வதில்லை,காத்திருப்பதும் இல்லை அதனால் அலுப்பும் ஏற்படுவதில்லை.
நான் என்ன சொல்ல வர்றேன்னா..

குடுகுடுப்பை said...

நீங்க இதுல ஹீரோயினியா? இல்லை தன் பெருமை தானறியாத தோழியா?

Karthik said...

கவிதை மாதிரி இல்லாம, இது புரியுது...! :)

Superb one!

ஷீ-நிசி said...

ரொம்ப நல்லாருக்கு!
ரொம்பவே நல்லாருக்கு!
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு!

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!!!

நாணல் said...

ஒரு பெரிய விஷயத்தை சாதாரணமா சொல்லிட்டீங்க.. :)

//அழகான பெண்ணுக்கு தோழியாக இருப்பது தொல்லையான வேலை என வாதிடும் அழகான தோழி அல்லது அழகியின் தோழி வித்யா. //

அழகா இருக்கு... :)

//"இப்பவும் சொல்றேன் அவன் அழகா இருக்கான்.... ஆனா, அழகா இருந்தா பிடிக்கனும்னு அர்த்தமில்லை... பிடிச்சிருந்தா அழகா தான் இருக்கனும்கற கட்டாயமில்லை..."//

இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. :)

நல்ல வேளை ஜோக்கு நான் சிரிச்சேன்... ;)

Triumph said...

Ada migavun arumaiyana pathivu.... I remember some dialogues from Vasool Raja MBBS. If the cleaner asks if kamal has any prob; he says "No everything is fine. Thats the problem"..

Poornima Saravana kumar said...

super:)

ஜி said...

சூப்பரா இருக்கு.. :))

Muthusamy said...

Good one

நசரேயன் said...

////எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... அப்போவே தெரிஞ்சிக்கலாம் நமக்கு வயசாயிடிச்சின்னு.."//

நான் ரயிலில் செல்வதில்லை,காத்திருப்பதும் இல்லை அதனால் அலுப்பும் ஏற்படுவதில்லை.
நான் என்ன சொல்ல வர்றேன்னா..//
பல்லு போன கிழம்னா ?

நசரேயன் said...

கதை நல்லா இருக்கு

நிஜமா நல்லவன் said...

:)

இனியவள் புனிதா said...

really nice dear...:-))

தமிழ் பிரியன் said...

Nice!

வண்ணத்துபூச்சியார் said...

Hi Sree.

Xlent.

Keep rocking.

வண்ணத்துபூச்சியார் said...

தமிலிஷ்ல ஒட்டு போட்டாச்சு.

வாழ்துகள்.

குசும்பன் said...

//எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... //

அருமையாக இருக்கு

SK said...

:) :)

கதிரவன் said...

".. நம்மள சுத்தி இருக்கறவங்க மூக்கு மேல எல்லாம் செர்ரி பழம் இருக்கறதா நினைச்சிக்கோ.. சிரிப்பு தானா வரும்.."

இன்னிக்கி அலுவலகத்துல கொஞ்சம் கோபமா இருந்தப்போ, ஏனோ இந்த வரி ஞாபகம் வந்தது..இருக்கற இடத்த மறந்து, சிரிச்சிட்டேன் :-))

நல்லா எழுதியிருக்கீங்க & எழுதறீங்க ஸ்ரீமதி !!

Lucky said...

Very nice

ஆதிமூலகிருஷ்ணன் said...

க்ளாஸ்.!

(கவிதைக்கு ஒரு மாற்று கம்மிதான்)

Saravana Kumar MSK said...

நான் மிக சாதரணமானவன்..

என்னால் மதுராவை ரசிக்க முடியவில்லை.. மிகுந்த சுயநலவாதியாகத்தான் தெரிகிறாள்.. (அப்போ நீ சுயநலவாதி இல்லையா என்று கேட்காதே.. எல்லாரும்தான்.. ஆனால் மதுரா கொஞ்சம் அதிகமாகவே..)

"எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... "
இது ரசிக்கும் படி இருந்தாலும்..

"சிம்பிள்... நம்மள சுத்தி இருக்கறவங்க மூக்கு மேல எல்லாம் செர்ரி பழம் இருக்கறதா நினைச்சிக்கோ.. சிரிப்பு தானா வரும்.."
இது கோபத்தை கிளறியது..
:)


உன் எழுத்துநடை நல்லா இருக்கு..
:)

Saravana Kumar MSK said...

உன் எழுத்துநடை ரொம்பவே நல்லா இருக்கு.. :)

கோபிநாத் said...

;-)))

" உழவன் " " Uzhavan " said...

அருமை. ரயில் பயணமும், வாழ்க்கைப் பயனமும் இருசேர இனிக்கிறது இதைப் படிக்கும்போது. அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் :-))

Suresh said...

:-) அருமை

நான் said...

கதையில் உங்களின் தனித்தன்மை நன்றாக தெரிகிறது
வாழ்த்துகள்

Suresh said...

"ஐயோ இந்த ட்ரைன் வேற ஏன் தான் இவ்ளோ லேட் பண்ணுதோ?" :-)நச்ன்னு இருக்கு!

reena said...

உங்களுக்கு அசாத்தியமான எழுத்துத்திறமை ஸ்ரீமதி! சும்மா பாராட்ட சொல்ல வில்லை... உண்மையாகவே உங்கள் எழுத்துக்கள் வியப்பிற்குரியவை. உங்கள் எழுத்துக்களில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது

ஸ்ரீமதி said...

@ சந்தனமுல்லை
//:-) நச்ன்னு இருக்கு!//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ narsim
//நல்லா எழுதியிருக்கீங்க.//

நன்றி அண்ணா :))))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//ரொம்ப ‘சாதரணமா' சொல்லிட்டீங்க

நல்லாயிருக்கு//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ அ.மு.செய்யது
////எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... அப்போவே தெரிஞ்சிக்கலாம் நமக்கு வயசாயிடிச்சின்னு.."//

அசத்தல் ஸ்ரீமதி !!!!!!!

நீங்க சொல்வது நூத்துக்கு நூறு உண்மை !!!!!

வெகுவாக ரசித்தேன் !!!!!//

நன்றி செய்யது அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//ச்சே... நான் ரயிலுக்கு காத்திருக்கும் போது மட்டும் சீக்கிரம் வருவதாக எனக்கு தோன்றுகிறது. அப்படின்னா என வயசு என்ன?

அப்புறம் அந்த மதுரா ஃபோன் நம்பர் கிடைக்குமா?//

ரொம்ப வயசாயிடிச்சு.. அதனால எங்க பாரு லேட்டா போறீங்கன்னு அர்த்தம்.. :P

9876543210.

ஸ்ரீமதி said...

@ G3
//:)))))))))))//

:)))))))))))))))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////அழகா இருந்தா பிடிக்கனும்னு அர்த்தமில்லை... பிடிச்சிருந்தா அழகா தான் இருக்கனும்கற கட்டாயமில்லை..."//

இந்த கருத்தில் நான் உடன் படுகிறேன்...

கதை நல்லா இருக்கு ஸ்ரீமதி...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//படிக்க நல்லாயிருக்கு.//

மத்தபடி, மதுரா ரொம்ப திமிர் பிடிச்சவ.. அது தானே அண்ணா?? ;)))

ஸ்ரீமதி said...

@ Maddy

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////"சிம்பிள்... நம்மள சுத்தி இருக்கறவங்க மூக்கு மேல எல்லாம் செர்ரி பழம் இருக்கறதா நினைச்சிக்கோ.. சிரிப்பு தானா வரும்.."/

அட நல்ல ஐடியாவா இருக்கே!

டாங்க்ஸ் பாஸ் !//

:))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஆமா... எப்படியா இருந்தாலும் புது இடம், புது மனுஷங்க, புது விதமான சவால்கள்ன்னு நான்.. இல்ல நாம எங்க போனாலும் சமாளிச்சு தானே ஆகணும்?? அது ஏன் அம்மா, அப்பா இஷ்டப்படி இருக்கக்கூடாது? அதான் முடிவு பண்ணிட்டேன்.. ஓகே சொல்றதுன்னு.."//

ரொம்ப சிம்பிளா சொல்லிட்டீங்க பெரிய விசயத்தை !//

ம்ம்ம்ம் :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////அழகான பெண்ணுக்கு தோழியாக இருப்பது தொல்லையான வேலை என வாதிடும் அழகான தோழி அல்லது அழகியின் தோழி வித்யா///

அழகாய் சமாதானப்படுத்தியிருக்கிறீர்கள் தோழியை....!//

இல்லேனா வீட்ல போட்டு குடுத்துடுவாளே.. அதான்.. ;)))

ஸ்ரீமதி said...

@ gayathri
//கதை நல்லா இருக்கு ஸ்ரீமதி...//

நன்றி காயத்ரி :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//:))//

:)))))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//மீ த 15 :))//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
////எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... அப்போவே தெரிஞ்சிக்கலாம் நமக்கு வயசாயிடிச்சின்னு.."//

நான் ரயிலில் செல்வதில்லை,காத்திருப்பதும் இல்லை அதனால் அலுப்பும் ஏற்படுவதில்லை.
நான் என்ன சொல்ல வர்றேன்னா..//

வேண்டாம் அண்ணா.. சொன்ன வரைக்கும் போதும்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//நீங்க இதுல ஹீரோயினியா? இல்லை தன் பெருமை தானறியாத தோழியா?//

நான் கதாசிரியை... ;)) (அவ்வ்வ்வ்வ்வ் ஆறும் ஆட்டோ அனுப்பிடாதீங்க... ;)))

ஸ்ரீமதி said...

@ Karthik
//கவிதை மாதிரி இல்லாம, இது புரியுது...! :)

Superb one!//

கிர்ர்ர்ர்ர்ர்.... நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
//ரொம்ப நல்லாருக்கு!
ரொம்பவே நல்லாருக்கு!
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு!

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!!!//

நன்றி ஷீ-நிசி :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஒரு பெரிய விஷயத்தை சாதாரணமா சொல்லிட்டீங்க.. :) //

அப்படியா?? நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ Triumph
//Ada migavun arumaiyana pathivu.... I remember some dialogues from Vasool Raja MBBS. If the cleaner asks if kamal has any prob; he says "No everything is fine. Thats the problem"..//

Thank you Triumph for sharing ur thoughts.. :)))

ஸ்ரீமதி said...

@ Poornima Saravana kumar
//super:)//

Thank you akka.. :)))

ஸ்ரீமதி said...

@ ஜி
//சூப்பரா இருக்கு.. :))//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நசரேயன்
//////எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... அப்போவே தெரிஞ்சிக்கலாம் நமக்கு வயசாயிடிச்சின்னு.."//

நான் ரயிலில் செல்வதில்லை,காத்திருப்பதும் இல்லை அதனால் அலுப்பும் ஏற்படுவதில்லை.
நான் என்ன சொல்ல வர்றேன்னா..//
பல்லு போன கிழம்னா ?//

ஹா ஹா ஹா பாவம் அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நசரேயன்
//கதை நல்லா இருக்கு//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//:)//

:(((

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//really nice dear...:-))//

Thank you akka.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//Nice!//

Thank you anna :))

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//Hi Sree.

Xlent.

Keep rocking.//

Thank you anna :))

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//தமிலிஷ்ல ஒட்டு போட்டாச்சு.

வாழ்துகள்.//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ குசும்பன்
////எப்போ ரயிலுக்கான காத்திருப்புகள் அலுக்குதோ... //

அருமையாக இருக்கு//

நன்றி அண்ணா :))))

ஸ்ரீமதி said...

@ SK
//:) :)//

:( :(

ஸ்ரீமதி said...

@ கதிரவன்
//".. நம்மள சுத்தி இருக்கறவங்க மூக்கு மேல எல்லாம் செர்ரி பழம் இருக்கறதா நினைச்சிக்கோ.. சிரிப்பு தானா வரும்.."

இன்னிக்கி அலுவலகத்துல கொஞ்சம் கோபமா இருந்தப்போ, ஏனோ இந்த வரி ஞாபகம் வந்தது..இருக்கற இடத்த மறந்து, சிரிச்சிட்டேன் :-))

நல்லா எழுதியிருக்கீங்க & எழுதறீங்க ஸ்ரீமதி !!//

நன்றி கதிரவன் :))

ஸ்ரீமதி said...

@ Lucky
//Very nice//

Thank you Lucky.. :))

ஸ்ரீமதி said...

@ ஆதிமூலகிருஷ்ணன்
//க்ளாஸ்.!

(கவிதைக்கு ஒரு மாற்று கம்மிதான்)//

அப்படியா?? :) நன்றி அண்ணா :)))

dharshini said...

//.. நம்மள சுத்தி இருக்கறவங்க மூக்கு மேல எல்லாம் செர்ரி பழம் இருக்கறதா நினைச்சிக்கோ.. சிரிப்பு தானா வரும்.."//
ஹா ஹா .. :)
சூப்பர் sri.

Cable Sankar said...

உங்கள் எழுத்து நன்றாயிருக்கிறது.. ஆங்காங்கே நச் வசனங்கள்

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது